சங்கத் தமிழில் “பழமொழி”!

பழமொழி= மக்கள் வாழ்வில் இன்றியமையாதவை!
அதற்குள் ஒரு கிராமத்தின் கதையே கூட ஒளிஞ்சிருக்கும்!

எடுப்பாங்கதை -ன்னும் சொல்லுவாங்க; அது புதிர்ப் பழமொழி (விடுகதை)

“அயிரை விட்டு வரால் வாங்குறாப் போல”

= இது என்ன பழமொழி?  2000 வருசமாப் புழங்குது-ன்னா, நம்ப முடியுதா?:)
= சங்க இலக்கியத்திலேயே இப் பழமொழி வருது!

தந்தை பெரியார், தன் எளிய பேச்சுக்களில், பழமொழியே அதிகம் பயன்படுத்துவார்;
கீழ்த் தட்டு மக்களை/ கிராம மக்களை ’நச்’-ன்னு சென்று ஈர்க்கும்!

* உவமையோ, புதிரோ, கிராமச் சேதியோ, தத்துவமோ = பழமொழியில் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்!
* எப்படி உவமை அணி, பொருளுக்கு வலுச் சேர்க்குதோ, அப்படியே பழமொழியும்!

400 பழமொழிகளைத் தொகுத்து வந்த ஒரு நூல் = பழமொழி நானூறு!
வித்தியாசமான சங்க இலக்கியம்;
அதற்கு முன் வரை, தனித்தனி சங்கப் பாட்டில் வருமே தவிர…
பழமொழிகளை, இப்பிடி யாரும் நூலாய்த் தொகுத்தார் இல்லை!

வாங்க பார்க்கலாம், பழமொழி 400!


பழமொழி: அம்பலத்தை அடைச்சாப் போல
(அ)  ஊர் வாயை மூட முடியுமா?..

தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க – பரி(வு)இல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம் தாழ்க்கூட்டு வார்

நூல்: பழமொழி நானூறு (பதினெண் கீழ்க்கணக்கு)
கவிஞர்:  முன்றுறை அரையனார் (முன் துறை)

இதுல வரும் “அம்பலம்” = கிராமத்தில் யாராச்சும் பாத்து இருக்கீங்களா?
பொன்னம்பலம், வெள்ளியம்பலம், சிற்றம்பலம் = இதெல்லாம் என்ன?
ஈசன் சிவபெருமான்;  அவன் “அம்பலத்தைத்”  தீட்சிதர்கள் மட்டுமே அடைக்க முடியாது! ஏன்னா… அது பொது; ஊர்ப் பொது!


காபி உறிஞ்சல்:

தெரியாதவர் தம், திறனில் சொல் கேட்டால் =
அறிவில்லார்க்கு எப்பமே “எள்ளல்”  தான் = திறமை இல்லாததால், எள்ளல்! = “திறனில் சொல்”
“விஷ” எள்ளல்!! = தாய்த் தமிழை, “டுமீல்” -ன்னு எள்ளல்!

பரியாதார் போல இருக்க =
அதற்குப் பரிவு காட்டி, ஒடனே Response காட்டீறாதீக!
அது “வெத்து” எள்ளல்; அதுல “சத்து” இல்லை!
அதுக்கு அசைந்து விடாமல்,  நன்கு பொறுத்திருக்க!

பரிவு இல்லா வம்பலர் =
அவனுங்க கிட்ட ஏன் “எள்ளல்” இருக்கு? = ஏன்-ன்னா “அன்பு” இல்லை!
தமிழ் பால் அன்பில்லை,  அதனால் “டுமீல்” -ன்னே எள்ளுவானுங்க!

வாயை, அவிப்பான் புகுவரே =
அன்பில்லா வம்பன்கள் வாயை அடைக்கப் புகலாமா?
“அவிப்பான்” என்பது அழகிய சொல்; வாய்த்தீ = அவிக்க முடியுமா?

அம்பலம் தாழ்க் கூட்டுவார்
= அம்பலம் என்பது ஊர்ப் பொதுவிடம்; அதைத்  தாழ் போட்டு மூடத் தான் முடியுமா?
= அதே போல் “அன்பில்லா வம்பன்கள்”;  அவனுங்க வாயும் மூட முடியாது!

1) பரிவு-இல்-வம்பலர் 2) திறன்-இல்-சொல்
3) வாயை அவிப்பான் 4) அம்பலம் தாழ்!

dosa 41/365

Comments
11 Responses to “சங்கத் தமிழில் “பழமொழி”!”
  1. அன்பின் கேயாரெஸ் – பழமொழி நானூறு – 56 வது பழமொழி – விளக்கம் நன்று – ஊர் வாயை மூட முடியாது – அது போல வம்பர்களீன் வாயை அடைக்க இயலாது. நல்ல சிந்தனை – நல்வாழ்த்துகல் – நட்புடன் சீனா

    Like

    • மதுரைப் பக்கம் வழங்கும் வித்தியாசமான பழமொழிகள் பத்தி, நீங்க அப்பறம் ஒரு பதிவு போடுங்க சீனா சார்! #வேண்டுகோள்

      Like

  2. ranjani135 says:

    ‘தினம் ஒரு சங்கத் தமிழ்’ போஸ்டரை என் தளத்தில் எப்படி போடுவது? கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள், ப்ளீஸ்!

    பழமொழி பற்றி எழுதாமல்……. என்கிறீர்களா? உங்கள் எழுத்துக்களை படிக்கும் ‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்றுதான்!

    Like

  3. நம்மூரில் கோவில். மலையாள தேசத்தில் எங்கும் அம்பலம் தான்.

    // வாய்த்தீ = அவிக்க முடியுமா?// வம்பு பேசுவதை வாய்த்தி என்று குறிப்பிட்டு இருப்பது அருமை! மற்றவர்களை சொற்களால் சுடும் இந்த நெருப்பை அணைக்க முடியுமா?

    அன்பு என்பது குளிர்ந்த நீர். இந்த வாய்த்தி கொழுந்து விட்டு எரியாமல் இருக்க செய்வது இந்த அன்பு என்னும் அருமருந்து.

    ஊர் வாயை மூட முடியாது என்பது இன்றும் வழக்கில் இருக்கும் ஒரு உண்மை கூற்று தானே!

    ஒரு பெரிய தத்துவத்தை ஒரு சிறிய வரியில் சொல்லக் கூடிய திறன் பழமொழிக்கு உண்டு.

    பைய பைய தின்றால் பனையும் திங்கலாம், மின்னுவதெல்லாம் பொன்னல்ல, ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பன இன்றைய வழக்கில் உள்ள சில பழமொழிகள் :-)

    amas32

    Like

    • ஆமாம்-ம்மா! மலையாளத்தில் நாலம்பலம், தெற்றியம்பலம், அம்பலப்புழா :)

      வாய்த்தீ, தீக்குறளை (கோள் சொல்லல்) ன்னு தோழி கோதை சொல்லுவா!
      அன்பு தான் அருமருந்து – எச்சில்; இல்லீன்னா பாதரசம் போலப் பத்திக்கிட்டே இருக்கும் வாய்:)

      நன்றி-ம்மா இதர பழமொழிகளுக்கு!
      //ஆற்றில் போட்டாலும் அளந்து போடு// = ஏன்?:)

      Like

      • என்ன செய்யறோம்னு தெரிஞ்சு செய்யணம். அது தான்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன தோணுது? ;-)

        amas32

        Like

        • I see it as Waste Mgmt
          ஆற்றில் குப்பை கொட்டுதல்:(

          பொதுவா, செல்வத்தைக் கொண்டு போய் யாரும் ஆத்துல கொட்ட மாட்டாங்க;
          இதுல, “அளந்து கொட்டு”-ன்னா, படி/ஆழாக்குல அளந்து அளந்தாக் கொட்டுவாங்க? இல்ல:)

          ஆற்றில், ஒரு பொருளைப் போடுறது-ன்னா, Wasteஐத் தான் போடுவது வழக்கம்! – வாழைப்பழத் தோல், களிமண் இது போன்ற மக்கும் பொருட்கள்!
          காற்று வாங்கப் போனா, அப்படியே பழம் சாப்பிட்டு, தோலை ஆற்றில் வீசி எறிவது பசங்க வழக்கம் தான்:)
          ஆனா, ஒரு தேர் நிறைய தோலைக் கொண்டு போய்க் கொட்டினா? = அது தப்பு!

          ஆடிப் பெருக்குக்கு விளக்கு விடுவாங்க!
          ஆனா, லட்சார்ச்சனை -ங்கிற பேருல, லட்சம் அகல் விளக்கை, ஆத்துல விட்டா? = தப்பு!

          எது-ன்னாலும் அளவு இருக்கு!
          அதான், “ஆத்தில் கொட்டினாலும், அளவோடு கொட்டணும்”; அதைக் கழிவுக்கு-ன்னே பயன்படுத்தீறக் கூடாது!

          Like

  4. rAguC says:

    பைத்தியன்காரின்கிட்ட விவாதம் பண்ணப்போனா யாரு பைத்தியம்னு தெரியாது – ன்னு எவ்ளோ அழகா சொல்றது இந்த பாட்டு.

    Like

  5. அசோக் says:

    அருமை. நன்றி ஆசானே..

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)