ஐ ஆல் கு, இன் அது கண்

ஐ ஆல் கு, இன் அது கண்  = ஞாபகம் இருக்கா?:)
இல்ல….நான் ஏதோ Rhymingஆ உளறேன் -ன்னு நினைச்சிட்டீங்களா?:)

Egg – jactly! 2ஆம் வேற்றுமை,  3ஆம் வேற்றுமை -ன்னு எப்பவோ படிச்சோம்-ல்ல?:)
வலி மிகும், வலி மிகாது = போங்கய்யா, ஒரே வலி:))
But, Now when u fight with your girl friend & come back home, boring = What to do?
Take your 6th std physics book/tamizh book & read now…….. u will smilingly enjoy it:)


* கார்க்கி = இது பெயர்ச் சொல்
* மொக்கை = இதுவும் பெயர்ச் சொல்

இரண்டுத்தையும் இணைக்கணும்; எப்பிடிய்யா இணைப்பது?

= கார்க்கி-யின் மொக்கை!
= “இன்” போட்டா, இணையுது-ல்ல? Egg-jactly! இன் = வேற்றுமை உருபு!

* கார்க்கி = இது பெயர்ச் சொல்
* மொத்து = இது வினைச் சொல்

இரண்டுத்தையும் இணைக்கணும்; எப்பிடி?

= கார்க்கியை மொத்து!
” போட்டா, இணையுது-ல்ல? So = வேற்றுமை உருபு!

* இரண்டு வேறு வேறு சொல் = வேற்றுமை!
* அவற்றை இணைப்பது = வேற்றுமை உருபுகள்!

They call it CASE in English Grammar;
* Karki’s Mokkai = ‘s போட்டா இணையுது
* Beat Karki = ஒன்னுமே போடாமலும் இணையுது;
Then, how to differentiate?

But, In தமிழ், it has been very well defined & made easy = ஐ ஆல் கு, இன் அது கண்!

1. கார்க்கி
2. கார்க்கி-யை
3. கார்க்கி-யால்
4. கார்க்கி-க்கு
5. கார்க்கி-யின்
6. கார்க்கி-யது
7. கார்க்கி-கண்

தொல்காப்பியர், 2500+ yrs back, அம்புட்டு அழகாச் சொல்லிக் குடுக்குறாரு, பார்க்கலாமா?:)


தொல்காப்பியம்:
சொல்லதிகாரம்: வேற்றுமை இயல் (62,63,64)

* வேற்றுமை தாமே, ஏழ் என மொழிப
* விளி கொள்வதன் கண், விளியொடு எட்டே
* அவை தாம்:
பெயர், ஐ, ஒடு, கு,
இன், அது, கண், விளி என்னும் ஈற்ற


காபி உறிஞ்சல்:

வேற்றுமை தாமே ஏழ் என மொழிப = மொத்தம் 7 வேற்றுமைகள்
விளி கொள்வதன் கண், விளியொடு எட்டே = விளி (அழைப்பும்) சேத்துக்கிட்டா 8 வேற்றுமைகள்; என்னென்ன?

1. முதல் வேற்றுமை:
= கார்க்கி வாழ்க!
கார்க்கி என்ற பெயர்ச்சொல் தனியா நிக்கும்; எந்த உருபும் சேராது!
எழுவாய் வேற்றுமை ன்னும் சொல்லுவாய்ங்க! (Nominative Case)

2. இரண்டாம் வேற்றுமை (ஐ)
= கார்க்கியைக் குத்து
குத்து வினைச்சொல்;
யாரை?-ன்னு வந்தா 2ஆம் வேற்றுமை

3.  மூன்றாம் வேற்றுமை (ஆல்)
= கார்க்கியால் கலாட்டா
யாரால்/எதனால்? -ன்னு வந்தா 3ஆம் வேற்றுமை

4. நான்காம் வேற்றுமை (கு)
= கார்க்கிக்குக் குடு.. முத்தம்
யாருக்கு? -ன்னு வந்தா 4 ஆம் வேற்றுமை

5. ஐந்தாம் வேற்றுமை (இன்/ இல்)
= மதன் கார்க்கியின் சிறந்தவர் I am கார்க்கி :)
யாரை விட?  -ன்னு வந்தா 5ஆம் வேற்றுமை

இப்பல்லாம், “இன்” உருபு போடுறதில்ல, for comparison;
அதுக்குப் பதிலா, கார்க்கியை “விட” -ன்னு சொல்லுருபையே நேரடியாப் பயன்படுத்தறோம்;

6. ஆறாம் வேற்றுமை (அது)
= கார்க்கியது Girlfriend
யாருடைய?  -ன்னு வந்தா 6ஆம் வேற்றுமை

தற்காலத்தில், கார்க்கி”யது” மாறி, கார்க்கி”யோட” -ன்னு ஆயிருச்சி;
கார்க்கி”யுடைய” என்கிற சொல்லுருபு; உருபு மாறினாலும் பொருள் ஒன்றே!

7. ஏழாம் வேற்றுமை (கண்)
= கார்க்கி கண் உள்ள bike
Bike எங்கு இருக்கு? கார்க்கி கிட்ட (கண்) இருக்கு!
எங்கு? -ன்னு வந்தா 7ஆம் வேற்றுமை;

“கண்” என்ற உருபுக்குப் பதிலா…
கார்க்கி “கிட்ட”/ கார்க்கி”யிடம்” ன்னு “சொல்லுருபு” பயன்படுத்த ஆரம்பிச்சிட்டோம்;

8. எட்டாம் வேற்றுமை (விளி)
= கார்க்கி வா!
= கார்க்கி சொல்
= கார்க்கி ஜொள்!:)

விளி(அழைப்பு), ஏவும் பொருளில் வந்தா.. 8ஆம் வேற்றுமை; இதுக்கு உருபு தேவையில்லை!


ஐ ஆல் கு, இன் அது கண் – A memory tip again…

1. கார்க்கி
2. கார்க்கி-யை
3. கார்க்கி-யால்
4. கார்க்கி-க்கு
5. கார்க்கி-யின் (விட)
6. கார்க்கி-யது (யுடைய)
7. கார்க்கி-கண் (யிடம்)

dosa 18/365

Advertisements
Comments
9 Responses to “ஐ ஆல் கு, இன் அது கண்”
 1. amas32 says:

  I was waiting for a lesson like this only, thank you KRS :-) இந்த தளத்திற்கு வரும் மற்ற தமிழ் ஆர்வலர்களுக்கு இதெல்லாம் சுசுபி (ஜுஜுபி) :-) ஆனால் எனக்கு ரொம்ப தேவையானது.

  உதாரண புருஷனாக கார்க்கியை எடுத்துக்கொண்டது வகுப்பிற்கு மேலும் சுவையை கூடியிருக்கிறது :-)

  amas32

  Like

  • //சுசுபி//
   ஒங்க கிரந்தம் தவிர் பாத்து எனக்கே பயமா இருக்கு-ம்மா:))

   //உதாரண புருஷனாக கார்க்கியை//
   கிழிஞ்சிது:)
   உதார் விடுற புருசனா வேணும்-ன்னா இருக்கலாம்!:))

   Like

 2. சொ.வினைதீர்த்தான் says:

  நல்ஆசிரியர்!
  கற்றலில் மூன்று நிலை சொல்வார்கள் Registration, Retention, Recall – வாசிப்பு, சிந்திப்பு, படைப்பு என்று நான் மொழிபெயர்ப்பதுண்டு.
  வாசிப்பு – ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்திப் படித்தால் மனதில் நிற்கும் என்று கூறுவதுண்டு. நீங்கள் கார்க்கியுடன் இணைத்துக்காட்டுவது போல. (எல்லோரும் எடுத்துக்காட்டுக்கு இராமன்,சோமு இப்படித்தானே சொல்வார்கள். நீங்கள் ஏன் பாவம் கார்க்கியைக் குத்தச் சொல்கிறீகள்.)
  அடுத்து சிந்திப்பு ஒன்றிலிருந்து பிறிதொன்று கிளைக்க வேண்டுமாம். தேனீரில்”ஈ” கிடந்து வாடிக்கையாளர் கோபித்துக்கொண்டால் “ நீ” கொடுக்கிற ஆறு ரூபாய்க்கு பெருச்சாளியா போடமுடியும் என்ற துணுக்கில் ஆரம்பித்து நூறு வகையாகத் துணுக்கை விரிவுபடுத்த முடியுமாம். DOSA காபியாக இருந்தால் இரண்டு ஈ கிடந்திருக்கும! விரிவுபடுத்தல் நெஞ்சில் நிறுத்தவும் சிந்தனை விரிவுக்கும் உதவும்.
  Recall – தெரிந்திருந்தும் சரியான நேரத்தில் அதனை சொல்ல முடியாமல் நின்றால் நன்மரம் – Typical tree – என்று சொல்லிவைத்தார்கள்.
  தாங்கள் நூற்பா கொடுத்து எடுத்துக்காட்டுச் சொல்லி கடைசியில் Recap கொடுத்திருப்பது இலக்கணத்தை, மொழியின் ஆணிவேரை எப்படிக் கற்பிக்க வேண்டும், புரிந்துகொள்ள வைக்கக்கூடும் என்பதற்குச் சான்று.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  Like

  • amas32 says:

   your summarisation is simply superb, So.Vi :)

   amas32

   Like

  • //எல்லோரும் எடுத்துக்காட்டுக்கு இராமன்,சோமு இப்படித்தானே சொல்வார்கள். நீங்கள் ஏன் பாவம் கார்க்கியைக் குத்தச் சொல்கிறீகள்//
   :))
   கார்க்கி – மொக்கை = புகழ்பெற்ற இணைய உடன்பிறப்புக்கள்
   இவுங்களை மொத்தினா, எல்லாரும் சீக்கிரம் இலக்கணம் கத்துக்கலாம்! அதுக்குத் தான்:)))

   நன்றி வினைதீர்த்தான்!
   பிரபலங்களைக் கலாய்த்துச் சொல்லித் தருவது, நெஞ்சில் நிலைக்கும்! அதற்கே இப்படி!

   Like

 3. அன்பின் கேயாரெஸ் – வேற்றுமை உருபுகளை விளக்கிய விதமே தனி – தமிழாசிரியர்கள் அழகாக விளக்குவதை – கேயாரெஸ் நகைச்சுவையுடன் விளக்குகிறார். இது சட்டென மனதில் பதியும் – நன்று நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 4. Manipandi says:

  கண்ணா நலமா, மாதவி பந்ந்தலில் உன்னை பார்த்தது, வெகு காலத்திற்கு பிறகு உன்னை சந்திக்கிறேன்

  சமீபத்தில் ல் சங்க தமிழ் கற்க வேண்டிய அவசியத்தை ஒரு நண்பர் விளக்கியிருந்தார் அதிலிருந்து சங்கத்தமிழ் படிக்க வேண்டும் ஆர்வம் மனதில் இருந்தது,
  இது உனது வலைதளம் படிக்க ஆரம்பித்தவுடன் மனதில் சற்று நம்பிக்கை வந்துவிட்டது.

  நன்றி

  Like

 5. pandian says:

  அருமை…!

  “பெயர், ஐ, ஒடு, கு,
  இன், அது, கண், விளி என்னும் ஈற்ற”

  இதில் “ஆல்” எங்கே வருகிறது?
  “ஒடு” என்றால் என்ன?

  Like

Trackbacks
Check out what others are saying...
 1. […] -ன்னா என்ன? -ன்னு பாத்துருக்கோம்! ஐ-ஆல்-கு; இல்-அது-கண் கார்க்கியை – கார்க்கியால் – […]

  LikeLeave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: