முதல் வணக்கம்! முதல் காபி!

சங்கத் தமிழ் – சுவையான காபி போல!
ஒரு வாய் காபி, நாக்கில் பட்டா?.. ன்னு நினைப்பிலேயே ஏங்குபவர்கள் உண்டு!

* காபியில், எது இன்பம்? = சுவையா? சூடா? மணமா? நுரையா? குவளை-டபராவா?
* எதுன்னு சொல்ல முடியாது! ஆனா சரியான கலவை!
* குடிக்கக் குடிக்க இன்பம்… ஏன்-னா அது ஓர் “உணர்ச்சி”!

அதே போல் தான் சங்கத் தமிழும்!

* சங்கத் தமிழில் எது இன்பம்? = காதலா? காமமா? அகமா? புறமா? இலக்கிய-இலக்கணமா? தமிழ் வரலாறா?
* எதுன்னு சொல்ல முடியாது! ஆனா சரியான கலவை!
* பயிலப் பயில இன்பம்… ஏன்-னா அது ஓர் “உணர்ச்சி”!

தினம் ஒரு காபி குடிப்போம் வாருங்கள்!

காபின்னு சொல்லிட்டு அதென்னா “தோசா”?
Dosa=Dhinam Oru SAngatamizh

எளிய நடையில் பார்க்கப் போகிறோம்!  எதை?
வழக்கமான மனப்பாடச் செய்யுள் அல்ல!  அதை விட “மெல்ல்லிய”  உணர்ச்சிகள்…

* மான்களின் கலவிக்கு இடைஞ்சல் வரக் கூடாதே ன்னு, கொலுசைக் கழட்டும் காதலி!
* நட்புக்காக,  ஒவ்வொரு சபையிலும் அசிங்கப்பட்ட கவிஞன்…?

* பரத்தை -ன்னா பெண் மட்டும் தானா? சங்க காலப் “பரத்தன்” தெரியுமா?
* Disaster Recovery (DR), Mgmt Techniques – சங்கத் தமிழில் உண்டா?

* சங்க கால அரசாங்கச் சம்பளம் = Hourly, Monthly or காந்திக் கணக்கு?:)
* இப்படி இன்னும் பல…

ஒரு வகையில்….. இது நமக்கே தெரியாத, நம் அந்தரங்க வாழ்க்கையின் காட்சிப்படுத்தல்!
* இதை, அசை பிரிக்க முடியாது! அசை போடத் தான்  முடியும்!
* அசை போட்டுக்கிட்டே,  உங்கள் முன்  = “தினம் ஒரு சங்கத்தமிழ்”!


பி.கு:
 1)  dosa365 போலவே… வாரமொரு ஒரு கம்பனும் (kamban52) உண்டு
2)  நடுநடுவே சில பயிற்சி &  விளையாட்டும் உண்டு

3) DOSA என்று பெயர் சூட்டிய, எழுத்தாளர் என். சொக்கன் -க்குத் “தோசைக் கடன்” பட்டுள்ளேன்:)
4) இத்தளத்தின் பட்டையும் வடிவமைப்பும் உதவிய @thamiziniyan க்கு இனிய நன்றி:)

5) நான் வெறும் பூந்தோட்டக்காரன் மட்டுமே!  என் தமிழறிவு சிற்றறிவே!
இச்சோலையின் உண்மையான இன்பம் = வண்டுகள் நீங்களும், சங்கப் பூக்களும்!

dosa 0/365

Advertisements
Comments
15 Responses to “முதல் வணக்கம்! முதல் காபி!”
 1. amas32 says:

  மன மகிழ்ச்சியுடனும், கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் KRSன் இந்த முயற்சியை அன்புடன் வரவேற்கிறேன் :-)

  இத்தொடரை மிகவும் வெற்றிகரமாக நடத்திக்கொடுக்க முப்பத்துமுக்கோடி தேவர்களும் அணிவகுத்து நிற்கின்றனர். புலவர் பெருமான்கள் பூமாரி பொழிகின்றனர் :-)

  amas32

  Like

 2. ranjani135 says:

  ‘தொடர்ந்தேலோ ரெம்பாவாய்’ , ‘எல்லே இளங்கிளியே, இன்னும் COMMENT-லயோ’ நன்றாக இருக்கிறது…… பாராட்டுகள், வாழ்த்துக்கள்! உங்களைத் தொடர்கிறேன்……

  Like

 3. cheenakay says:

  அன்பின் கேயாரெஸ் = முதல் காபி – காபியிலும் சங்கத் தமிழிலும் எது இன்பம் – குடிக்கக் குடிக்க, பயிலப் பயில இன்பம் – தோசாவின் விரிவாக்கம் நன்று. நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

 4. P.Pandiyaraja says:

  மிகவும் நல்ல முயற்சி. அருமையான படைப்புகள். நன்கு வளர, நல்லபடி பரவ, அனைவரும் அறிய, அரு முயற்சி பலன் தர – வாழ்த்துக்கள். ஆமாம், அதென்ன DOSA ? கொஞ்சம் வட நாட்டு வாடை அடிக்கிற மாதிரி – இட்லி, வடா, தோசா தான் நினைவுக்கு வருகிறது. Dinam Oru Sanga Ilakkiyam என்று கொண்டால் DOSAI கிடைக்கிறது. நம்ம தோசையும் ஆகிறது. ஒரு suggestion தான். What is in a name? A rose is a rose by whatever name it is called. நீங்களும் ஒரு மணம்வீசும் மலர்தான்.
  மீண்டும் வாழ்த்துக்கள்.
  ப.பாண்டியராஜா

  Like

  • நன்றி ஐயா
   Dosai -ன்னு வச்சிருக்கலாம் தான்; ஆனா அப்போ தோனலை;
   இந்தப் பெயர் எழுத்தாளர் என்.சொக்கன் குடுத்தது
   இனிமே மாத்தினா, தளத்தின் முகவரி (url) மாறீரும்! அதனால் இப்படியே தொடரட்டு்ம்
   பாடல் தரும் முறைகளில், உங்கள் ஆலோசனைகளை அவசியம் சொல்லவும்!

   Like

 5. gopalan1937 says:

  மாதவி பந்தலில் ” சுப்ரபாதம் ” அளித்த பேரின்பம் தோசைலும் கிடைக்கும் என்ற நம்பிகையும் ,
  மகிழ்சியும் . வாழ்த்துகள் .
  கோபாலன்

  Like

 6. chakraraj says:

  intha skanthan kanthan aanatha kooda ok nu solidalam, kumaran allathu murukan eppadi kanthan, shanmukan, subramaniya swami aanar ? thirumurukatru padai enna solluthu ? avar appa amma, sivar, paarvathi nu than sollutha ?

  then, thiruneeru poosum palakkam eppadi vanthathu ? sanga kalathil thiruneer poosuvathai patri enna solluthu ? sivan patriya kurippu, agathiya muni pathi ethavathu kurippu ellam sanga kala ilakiyathula iruka ? intha then naadudaiya sivane potri ellam epadi vanthuchu ?

  therefore northla kumbidura karthik allathu shanmukanukkum , unga kaathalan murukanukkum murukarukum entha sambanthamum illai thane, ellame etrap pattavai thaane. samaskirutha noolil shanmugan valarnthu tamil desathuku vanthu valli theivanaiyai thirumanam seithu kondatha pathi ethavathu irukka ? as i have heard that ” shanmuga was a yogi with 6 extremely different ( or rarely possible ) combinations of characters ( usually depicted with 6 faces and therefore 12 hands ),He was the only yogi who left his body in standing posture in a mount called shanmuga parvatha in western ghats. please let me know !!

  Like

  • சக்ரராஜ்
   வேறு இடுகையில் வாசித்து விட்டு இங்கு கேட்கிறீர்களா என்ன?:)
   உங்கள் கேள்வியைச் சற்றே மாற்றி அமைக்கிறேன்; ஸ்கந்தன் -> கந்தன் ஆகவில்லை; கந்தனே -> ஸ்கந்தன் ஆகி வடக்கில் சென்றான்;
   (கந்து = முன்னோர் நினைவுத் தூண்; கந்து+அன்=கந்தன)

   சுப்ரமணியன், ஷண்முகன்=இதெல்லாம் வடநெறிக் “கதைகள்”; தொல் தமிழில் இவை இல்லை;
   தமிழில், முருக வழிபாடு = நடுகல்/ இயற்கை வழிபாடே!

   திருமுருகாற்றுப்படை = கடைச்சங்க நூல்; கலப்பு நிகழ்ந்து விட்ட காலம்; அதனால் “புராணம்” கலந்தே பேசுகிறது;
   எனினும், பழமுதிர் சோலை முதலான குறிஞ்சி நிலங்களில், ஆட்டுப் பலி குடுத்து, பூர்வகுடி மக்கள் முருகனை வழிபடுவதையும் மறைக்காமல் காட்டுகிறது;

   திருநீறு = பஸ்மம்; வேள்வித் தொடர்பு உடையது;
   பூர்வ குடித் தமிழர்கள், பூத் தூவி வழிபாடு தானே தவிர, நெருப்பு வைத்து வழிபாடு அல்ல!

   அகத்தியர் தான் தமிழை உருவாக்கினார் என்பதெல்லாம் வெறும் “புராணங்களே”!
   ஒரு மொழி அப்படி ஒருவராலேயே உருவாவதில்லை; அது பரிணாம வளர்ச்சி;
   சிவபெருமான் உடுக்கை அடித்து, ஒரு புறம் சம்ஸ்கிருதம்/ மறு புறம் தமிழ் -ன்னு உருவாகி, அகஸ்தியர் தமிழை codify செய்தார் என்பதெல்லாம் சமயப் “பொய்களே”!
   அ முதல் ஹ வரை 48 சம்ஸ்கிருத எழுத்துக்களும் 48 சங்கப் புலவர்களாக ஆச்சு; 49ஆவதா சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு என்ற திருவிளையாடற் புராணக் கட்டுக் கதைகளே!

   அந்தணர்கள் ஒரு புறம், சைவ-வேளாளர்கள் ஒரு புறம் -ன்னு, சமூகத் தட்டிலே ஒருவரையொருவர் மிஞ்சியும், கூட்டுச் சேர்ந்தும், இப்படியான “கதைகளை”, பலகாலமாகப் பரப்பினார்கள் – மதம்/ இலக்கியத்தின் வாயிலாக…
   இதற்கெல்லாம், தொல்காப்பியம் முதலான இடைச் சங்க/ முதற் சங்க நூல்களில், கிஞ்சித்தும் ஆதாரம் கிடையாது; பலவும் பின்னாள் கதைகளே! சமய நிறுவனப்படுத்தலுக்கு இதெல்லாம் ஒரு உத்தி:(

   //have heard that ” shanmuga was a yogi with 6 extremely different ( or rarely possible ) combinations of characters//
   :))
   No proof, Nor supported by any of the tamil literature
   ஆனால் ஸ்கந்தனை = சனத் குமாரர் என்னும் யோகியாக வடமொழிப் புராணங்கள் காட்டும்;
   ஞான சம்பந்தரே = ஸ்கந்தன் தான் என்று “நம்புவோரும்” உண்டு;
   ஆனால், மொழியியலில்/ தொன்மவியலில் = இது போல “நம்பிக்கை”/”கதை”/”புருடாணங்கள்” போன்றவற்றைக் கொள்வதில்லை; ஆய்வு மனப்பான்மையும்/ உண்மையுமே நிற்க வல்லது;

   //unga kaathalan murukanukkum//
   யார் சொன்னாங்க ஒங்களுக்கு?:)

   Like

   • chakraraj says:

    Hey buddy, thanks for the reply bro !!!

    nice, yeah, neenga pakattume nu than inga munnadi post panninen !!
    and the bakyatha lakshmi barammi tamil version is incredibly awesome, atha ketathukapram than unga valai poova parka nernthathu,

    neenga than unga murukana varni varni nu varnichu eluthareenga illa, pinna avar ungalvan illama veru yaram ?? mm ? :) and shiva valipadu tamil natula arambamanathu eppo ? wiki pedia la theliva illa, intha thennadudaiya sivane potri ellam how come how come ? is that before vedic period ( as wiki says ) ? intha nayan markalukku munnadi shiva valipadu tamil nadu la eppadi vanthuthu ? any proof ?

    Like

 7. Ananda kumar says:

  Arumai nanba…
  unna unna thigattaadhaa DOSA’I’.
  Orae oru kaelvi… ‘VALLALAR’ ai padithirukkireergala?

  Like

 8. செ . பெரியசாமி says:

  தொடர்ந்து புதிய பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: