பிள்ளையாரும், பிள்ளை ஆறும்!

அனைவருக்கும் பிள்ளையார் நாள் வாழ்த்துக்கள்!

சங்கத் தமிழில் விநாயகர் கிடையாது:)
இப்படிச் சொல்வதால்,  அது விநாயகரைப் பழிப்பதாகாது!  இலக்கிய-வரலாற்றுக் கூறு; அவ்வளவே!
* இன்றைய நிலைமை வேறு; தொன்மம் வேறு!
* இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்! அந்தப் புரிதலே போதும்!

தமிழ் இலக்கிய உலகில், விநாயகர் முதலில் அறிமுகம் ஆவது = ஞான சம்பந்தர் வழியே தான்!
தளபதி பரஞ்சோதி (எ)  சிறுத்தொண்டர் நாயனார் வாயிலாக = வாதாபி கணபதி தமிழகம் வரினும்,
பல்லவருக்கும் பிற்பட்ட சோழர் காலத்தில் தான், மிக்க பரவல் ஆனது!

சங்கத் தமிழில் “பிள்ளையார்” என்றால் = அது முருகனே!:)
“குன்றம் எறிந்த பிள்ளையார்”, “சூர் தடிந்த பிள்ளையார்” என்றே இலக்கியமும், கல்வெட்டுக்களும்!
பார்க்க: தொல்லியல் அறிஞர்,  டாக்டர் கலைக்கோவன் கட்டுரை;

பின்பு விநாயகர் வடக்கில் இருந்து அறிமுகமானதும்,
* அவரை = மூத்த பிள்ளையார் என்றும்,
* இவனை = இளைய பிள்ளையார் என்றும்
அழைக்கலாயினர்; நாட்பட நாட்பட… பிள்ளையார் = விநாயகரை மட்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!

பரவாயில்லை; சங்கத் தமிழில் பிள்ளையார் இல்லீன்னா என்ன?
“பிள்ளையாருக்குப்” பதிலா,
“பிள்ளை-ஆறைப்” பார்ப்போம் இன்று:)

(குறிப்பு:  யானை முகத்தவன் என்று சொல்லப்படுவதால்,  “யானை” என்ற சொல்லும் வருமாறு, பாட்டைத் தேர்ந்தெடுத்து உள்ளேன்:)


நூல்: குறுந்தொகை (பாடல் 1)
கவிஞர்: திப்புத் தோளார்
திணை: குறிஞ்சி
துறை: தோழி, கையுறை மறுத்தல்

(சூழல்: தலைவியின் துன்பம் சொல்லி, மணம் பேச வந்த தோழியைத் தலைவன் Convince பண்ண நினைக்கிறான்;
கைநிறைய காந்தள் மலர்களைக் கொடுக்க.. “இந்தப் பூ எங்கூருலயும் இருக்கு, வேணாம்” -ன்னு கையுறை மறுத்தது)

செங்களம் படக் கொன்ற அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பில் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே!


காபி உறிஞ்சல்:

செங்களம் படக் கொன்ற அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பில் செங்கோட்டி யானைக்

போர்க்களம், செங்களம் ஆகும் அளவுக்கு, எதிரிகளைத் தேய்த்தவன்;
குருதியால் சிவந்த அம்பு, குருதியால் சிவந்த யானைத் தந்தம்…
பிணிமுகம் என்ற யானையும் = வாகனமாய்க் கொண்ட திருமுருகன்!

கழல் தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே

காலில் வீரக் கழல் இட்டு விளங்குபவன்; சிவந்த காந்தள் பூ உடையவன்!
களம் = சிவப்பு;
அம்பு = சிவப்பு;
யானைத் தந்தம் = சிவப்பு;
பூ = சிவப்பு


… இப்படி எல்லாமே செய்ய (சிவந்து) விளங்கும் = சேயோன்!
அவன் மலை = சேய் குன்றம்!
அங்கே எங்களுக்கும் நிறைய காந்தள் பூ பூக்குது!
அதனால், தலைவா, உன் காந்தள் பூவை, நீயே வச்சிக்கோ!:) எங்க தலைவிக்கு ஒரு வழியைச் சொல்லு!

dosa 42/365

Advertisements
Comments
3 Responses to “பிள்ளையாரும், பிள்ளை ஆறும்!”
 1. எளிமையான பாடலா தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சி :)

  காந்தள் பூ கொடுத்து தலைவிக்கு red signal காட்ட நினைத்தான் போலும் தலைவன்! தோழி புத்திசாலி, சிவப்பு பூவை நீயே வைத்துக் கொள், என் தோழிக்கு பச்சைக் கொடி காட்டி வாழ்வுக்கு வழிகாட்டு என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறாள்.

  முருகன் சேயோன்! அவன் செவ்வாய் கிரகத்துக்கு அதிபதி. அவனை திருப்தி படுத்த சிவப்பு ஆடையையும் சிவப்பு மலர்களையும் சமர்பிப்பது வழக்கம். அவன் சேனாதிபதி. என்றும் வெற்றிவாகை சூடுபவன்.

  முருகனையே சொந்த தெய்வமாகக் கொண்டாடும் தலைவியின் குலத்துக்கு தலைவன் தரும் சிவப்பு மலர்கள் எதற்கு? அது வேண்டும் அளவு அவர்கள் ஊரிலேயே கிடைக்குமே! வேண்டுவது எல்லாம் தலைவனின் அருளை தான்.

  முருகா போற்றி! அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்ததா?

  amas32

  Like

  • Yes, 4 line poem!:)
   Red Signal & Green Flag – Nice Analogy-ma!

   //முருகன் சேயோன்! அவன் செவ்வாய் கிரகத்துக்கு அதிபதி//
   பின்னாளில் அப்படி ஆனது-ம்மா!
   ஆனா, சங்கத் தமிழில் செவ்வாய் கிரக அதிபதி எல்லாம் இல்லை:)
   சிவப்பு மட்டுமே உண்டு!

   //முருகா போற்றி! அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்ததா?//
   :) அந்த முருகன் தான் சொல்லணும்!
   சொல்லுடா… நல்ல வாழ்க்கை குடுப்பியா?

   Like

 2. Krishnan says:

  சங்க காலத்து முருகனை குறிக்கும் ‘படம்’ (வரையப்பட்டது) கிடைத்தால் பகிரவும்.

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: