சங்கத் தமிழ் For Dummies:)

தமிழ் என்னும் ஆறு, இன்னிக்கும் ஓடிக்கிட்டுத் தான் இருக்கு…
* சங்க இலக்கியம் = அந்த ஆற்றின் அடியில் உள்ள ஊற்று;
* சில நேரங்களில், ஆற்றில் தண்ணி இல்லீன்னாலும், ஊற்று சுரக்கும்!

சங்கத் தமிழ் = 2500+ கவிதைகள்; 700+ கவிஞர்கள்;
மன்னன் x கள்வன், தலைவி x பரத்தை, பெண்-ஆண் = அனைவரின் எழுத்தும் அவையேறும்!
= பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்!
சங்கத் தமிழாற்றில் குளிக்கணும்-ன்னா… என்ன தேவை?
ஒன்னுமே தேவையில்லை!
உங்க டாம்பீக “உடுப்பைக்” கழட்டிட்டுக் குதிக்கணும்! அவ்ளோ தான்:))

யாப்பு-சோப்பு, Life Jacket – ஒன்னும் தேவையில்லை:)
மனசுக்குள் காதல் இருந்தாப் போதும் – சில்லுனு இறங்கி, சிலு சிலு ன்னு குளிக்கலாம்!

* காதல்-காமம், அன்பு-பகை,
* குடும்பம்-அலுவல், போர்-அமைதி,
* ஆட்சி-வணிகம், இன்னும் பலப்பல..
சங்க இலக்கியம் = இது ஒரு வாழ்வு! = தொல் தமிழ் வாழ்வு!


சங்கத் தமிழ் “வாசிக்க”, இலக்கணம் தேவையா?
= இல்லை;

இலக்கியம்-இலக்கணம் = ஒன்றொக்கொன்று தொடர்புள்ளவை;
* இலக்கியத்தில் இருந்து தான் இலக்கணம் கிளைக்கும் = Standards;
* இலக்கணத்தை ஒட்டி, மற்ற இலக்கியங்கள் நடக்கும் = Life!
As Life Progresses, New Standards evolve = இது ஒரு தொடர் ஓட்டம்!

* இலக்கு + இயம் =  இலக்கை இயம்புவது
* இலக்கு + அணம் =  இலக்கை அடைய வழி (அணம்) அமைப்பது
எடுத்துக் காட்டு ஒன்னைப் பார்த்தா, Simple-ஆப் புரிஞ்சீரும்;

நான் ஒரு இலக்கியம் எழுதணும்… என் இலக்கு என்னா?
1) புகழ்சால் பத்தினி உலகம் போற்றும்
2) அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்
3) ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
இதான் இலக்கு! அதை இயம்பியாச்சு = இலக்கு + இயம்

இந்த இலக்கை எப்படி அடைவது?
* என்ன மாதிரி நாடகம்? என்ன காட்சிகள்?
* கதை மாந்தர்கள் = கண்ணகி, பாண்டியன், கோவலன், கவுந்தி…
* எங்கெல்லாம் இசை, பண் வரணும்?
* சீற்றத்தை எப்படி வல்லின ஓசையில் காட்டுவது? காதலை எப்படி மெல்லின ஓசையில் காட்டுவது?
எதையெல்லாம் சேர்த்துக் கட்டினா, இலக்கை அடைய வழி கிடைக்கும்? = இலக்கு + அணம்

இலக்கு + இயம், இலக்கு + அணம்; இப்போ புரியுதா?:)

தமிழில் மிகப் பழமையான இலக்கியங்கள் = முதுகுருகு, முதுநாரை
இவை இன்று கிடைக்கவில்லை!
கைக்குக் கிடைக்கும் மிகத் தொன்மையான நூல் = தொல்காப்பியம் (700 BCE க்கும் முன்னால்)

பேரில் காப்பியம் -ன்னு இருந்தாலும், இது ஓர் “இலக்கணக் காப்பியம்”;
தொல்காப்பியமே = தமிழ் மொழிக்கு ஒரு செவ்விய அடித்தளம்! = Unix OS (Operating System) for Tamizh Language


சங்க இலக்கியம் -ன்னு இன்னிக்கி நாம் காண்பது….

* “பெரும்பாலும்” கடைச்சங்க காலம்! (300 BCE – 300 CE)
* தொல்காப்பியம் = இடைச் சங்கம்! (700 BCE)
* அதற்கும் முன்பே தலைச் சங்கம் (முதற் சங்கம்)

சங்கம் என்பதே வடசொல்லோ? என்றொரு ஐயம் கூட எழுப்பப்பட்டதுண்டு;
வடசொல் “ஸங்கமம்” வேறு ; தமிழில் “சங்கம்” வேறு;

ஸ்கந்தன் – கந்தன் போலத் தான் இதுவும்:) பின்னாள் புராணத்தால், இரு பெயர்களும் முருகனையே குறிக்கத் துவங்கி விட்டாலும், இரு பெயர்களும் வேறு; பொருளும் வேறு!

எப்படி விளக்கு ->விளக்கமோ, அதே போல் சங்கு ->சங்கம்!
* விளக்கின் ஒளியில் பெறுவது = விளக்கம் (தெளிவு);
* அதே போல், சங்கு ஒலித்து ஒழுங்கு பெறும் அவை = சங்கம்;
தலைச்”சங்க” நாண் மதியம் என்றே ஒரு கடலோரப் பட்டினம் (திருமால் கோயில்) உண்டு!சங்க இலக்கியம் = 2 பெரும் பிரிவுகள்
= மேல் கணக்கு, கீழ்க் கணக்கு

கீழ்க் கணக்கு ன்னாலே “கீழ்மை” -ன்னு தொபுக் -ன்னு முடிவு கட்டீறக் கூடாது:)
ஆனானப்பட்ட திருக்குறளே = “கீழ்க் கணக்கு” தான்!
குறைந்த அடியுள்ள பாடல்கள் கீழ்க் கணக்கு (<= 4 lines); அதற்கும் “மேல்” உள்ள அடிகள் = மேல் கணக்கு!

* 18 மேல் கணக்கு = எட்டுத் தொகை & பத்துப் பாட்டு
* 18 கீழ்க் கணக்கு = குறள் முதலான பல நூல்கள்

இப்படி வகைப்படுத்தி வைச்சது எல்லாம் பிற்பாடு தான்;
தமிழ் மன்னர்கள்/ பெருங் கவிஞர்களின் ஆர்வத்தால், இப்படித் திரட்டித் திரட்டி வைக்கப் பட்டன!

ஓர் ஒழுங்கு முறையை ஒட்டியே, இப்படி வரிசைப் படுத்தப் பட்டன;
பாட்டின் Number-ஐ வைச்சே, குறிஞ்சியா? முல்லையா? ன்னு கூடச் சொல்லீறலாம்:)

ஆனா, இந்த வரிசை = கால வரிசையில் அல்ல!
பல்வேறு காலம், பல்வேறு கவிஞர்களின் சிதறல்; ஓவியத்தில் வண்ணச் சிதறல் போல!
இந்த வண்ணத் திரட்டியே = சங்க இலக்கியம்!


* எட்டுத் தொகை = காலத்தால் முந்தி
* பத்துப் பாட்டு = சற்றுப் பிந்தி
* கீழ்க் கணக்கு = இன்னும் பிந்தி, சங்கம் மருவிய காலம்

சங்க இலக்கியத்தின் அடிப்படைக் கூறு = திணை
1) அகம் = of the self (internal)
2) புறம் = of the world (external)

திணை -ன்னா “ஒழுக்கம்” -ன்னு பொருள் = அக ஒழுக்கம், புற ஒழுக்கம்!
திணை -யின் உட்பகுதி = துறை

* அகத் திணை: 5+2
(முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை/ கைக்கிளை-பெருந்திணை)
* புறத் திணை: 10+
(வெட்சி-கரந்தை, வஞ்சி-காஞ்சி, உழிஞை-நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல் etc)

திணைப் பெயர்களைப் பாருங்க; பலவும் பூக்களின் பெயர்கள்;
தமிழ் இலக்கியக் கூறுகள் = இயற்கையை ஒட்டியே! Fully Nature! 
பத்துத் தலை அசுரன், பன்னிரெண்டு கை சாமி… ன்னு எல்லாம்…இருக்காது;
இயற்கைக்கு மாறான “புராண – unbelievables”, ஆதித்தமிழில் இல்லை! பின்னாள் சேர்க்கையேஎட்டுத் தொகை:

இதில், மொத்தம் எத்தனை நூல்கள்?
எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால்? -ன்னு கேக்குறாப் போலத் தான்!:) For a Change, Spiderman-க்கு எத்தனை கால்? -ன்னு மாத்திக் கேட்போமா?:)

1. நற்றிணை
2. குறுந்தொகை – ’கொங்கு தேர் வாழ்க்கை’ இதில் தான்;
3. ஐங்குறு நூறு
4. பதிற்றுப்பத்து – மிக்க பழமையானது

5. பரிபாடல் – கலப்புகள் நடு நடுவே எனினும், இது அழகிய இசை நூல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு

எட்டுத் தொகையின் சிறப்பே = “தொகுப்பு” (Team Work)
ஒருவராலேயே எழுதப்பட்டு விடவில்லை! பலரின் தொகுப்பு! = எனவே ஒருதலைச் சார்பு (bias) இல்லை!
சில பாடல்கள் இடைச் சங்கம் (BCE); மற்ற பலவும் கடைச் சங்கம்;

இசையும் உண்டு!
* பரி-பாடல் = பரிந்து வருதல் (Melody);
* கலி-தொகை = கலி-வல்லோசை (Rock);

ஒரே பாட்டுக்கு ரெண்டு பேரும் உண்டு; கவிஞர் + பாணர்
கவிஞர் = கண்ணதாசன்; பாணர் = எம்.எஸ்.வி என்றால் எளிதில் புரியும்:)

* பாட்டை எழுதுபவர் = கவிஞர்;
* பாட்டுக்கு இசை அமைப்பவர் = பாணர்;
* ஆடுபவர் = விறலி
தூக்கு/ வண்ணம் போன்ற இசைக் கூறுகளையும் காணலாம்;பத்துப் பாட்டு:
இவை BCE (Before Common Era) அல்ல; CE (Common Era – AD) க்குச் சற்று பின்னால்;
அனைத்தும் தனிப்பட்ட கவிஞர்களே; குழு-Team/ தொகை நூல்கள் அல்ல!

1. திருமுருகாற்றுப்படை (8th CE விக்கியில்; ஆனா அது தவறு; 2nd-4th CE;
The Last book of 10, but is placed 1st, bcoz it is sung on the Lord)

2. பொருநர் ஆற்றுப்படை
3. சிறுபாண்
4. பெரும்பாண்
5. மலை படு கடாம்

மேலே சொன்னவை: ஆற்றுப்படை நூல்கள்; இந்த மன்னனை நோக்கி போனா, இந்தப் பரிசில் பெறலாம்; அங்கு செல்லும் வழி இப்படி -ன்னு பொருள் கொண்டவை;
ஆறு = வழி;
(எவ்’வாறு’ வந்தாய் = எந்த வழியில் வந்தாய்?) அப்படி வழிப்படுத்தும் நூல் = ஆற்றுப்படை

6. குறிஞ்சிப் பாட்டு
7. முல்லைப் பாட்டு
இவை அகத் திணை; இயற்கைப் பாடல்கள்

8. மதுரைக் காஞ்சி (நெடுஞ்செழியன் மீது)
9. பட்டினப் பாலை (கரிகாற் சோழன் மேல்)
10. நெடுநல் வாடை (நெடுஞ்செழியன் மீது)
இவை புறத் திணை; மன்னர்களின் வெற்றியைப் பாடுபவை; ஊர்களின் தகவலும் உண்டு

முக்கியமான குறிப்பு: நல்லாக் கவனிங்க;
* இயற்கை/ அகம் என்றே பெரும்பாலும் இருந்த காலம் = எட்டுத் தொகை;
* ஆனால், கால மாற்றத்தால், மன்னர்கள்/ புறம் -ன்னு மிகுந்து விட்டது = பத்துப் பாட்டில்:)கீழ்க் கணக்கு:
இவை பெரும்பாலும் “நீதி நூல்கள்” (Moral Science)

* முதலில் இயற்கையான சமூகம்
* பின்னர் பேரரசுச் சமுகம்/ புராணக் கலப்புகள்…
* அதன் பின்னர் “நீதி போதனை” துவங்கியாச்சி – ஏன்னா புராணம் வந்த பின் அறம் குறையுது:) – வாழ்வியல் மாற்றங்கள்:)

இதுவே சங்கம் “மருவிய” காலம்!
இந்த நூல்களும் தனிப்பட்டவர்கள் எழுதியதே; Team Work/ தொகை அல்ல!

நீதி நூல்கள்:
1. திருக்குறள் – தமிழின் தலையாய சிறப்பு
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4. இன்னா நாற்பது
5. இனியவை நாற்பது

6. திரிகடுகம்
7. ஆசாரக்கோவை
8. பழமொழி நானூறு
9. சிறுபஞ்சமூலம்
10. ஏலாதி
11. முதுமொழிக்காஞ்சி

அகத்திணை:
12. ஐந்திணை ஐம்பது
13. திணைமொழி ஐம்பது
14. ஐந்திணை எழுபது

15. திணைமாலை நூற்றைம்பது
16. கைந்நிலை (இன்னிலை என்னும் கட்சியும் உண்டு)
17. கார் நாற்பது

புறத்திணை:

18. களவழி நாற்பதுஎனக்கு மிகவும் பிடிச்ச = சில “அழகியல்” – சங்க இலக்கிய வரிகள்:

* கொங்கு தேர் வாழ்க்கை – அஞ்சிறைத் தும்பி = குறுந்தொகை
* யாதும் ஊரே, யாவரும் கேளிர் = புறநானூறு

* எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே = தொல்காப்பியம்
* பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் = திருக்குறள்

* இம்மை மாறி, மறுமை ஆயினும்
நீ ஆகியர் என் கணவனை; நான் ஆகியர் உன் நெஞ்சு நேர்பவளே
= குறுந்தொகை

* அகர முதல எழுத்தெல்லாம் = திருக்குறள்
* பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே
= புறநானூறு

* ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவல்;
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகல்; 
= கலித்தொகை


தனிப்பட்ட அளவில், எனக்கு மிகவும் தொல்லை தருபவை,  கீழ்க்கண்ட வரிகள்
(ஆங்கில ஊடாடல்களுக்கு மன்னிக்கவும்:)

* My laptop wallpaper = one special photo!
But whenever screensaver bubbles come & slightly hide that face… ஒடனே bubbles விலக்க, கை துடிக்குது
= பூவிடைப் படினும் ஆண்டு கழிந்தன்ன..
பூ கூட எங்க இடையில் வரக்கூடாது = குறுந்தொகை

* Alarm Clock டொக்டொக்-ன்னு இரவெல்லாம் சத்தம்; தூக்கம்?
= கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே

* One NGO woman telling me: you are so soft:)
dunno what shd i reply, but that softness is going waste..
= கன்றும் உணாது கலத்திலும் புகாது,
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது….

* some friends or brothers advise me not to think of her/ believe her..what shd i do?
கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேரேன், அவர் பொய் வழங்கலரே

* if i read some old emails… அச்சோ my honey, என்னைப் புரிஞ்சிக்கவே மாட்டீயா? என்னால வெளீல சொல்லவும் முடியல; என் மனசைக் காப்பாத்திக்கவும் தெரியலையே!
= கையில் ஊமன் கண்ணின் காக்கும்,
வெண்ணெய் உணங்கல் போல..

* sometimes, avoiding certain food, coz that special person has allergies
= பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

* அடுத்து, நாம எப்ப பார்ப்போமோ? When my next trip to India?-ன்னு இருக்கும்
= வைகல் வைகல் வைகவும் வாரார்!
நோம் என் நெஞ்சே; நோம் என் நெஞ்சே!

அவரவர் வாழ்வில், சங்க இலக்கிய வரிகள், பலப்பல தாக்கங்களை ஏற்படுத்தும்; ஏற்படுத்தட்டும்:)
சங்கச் சித்திரங்கள்…

= வெறுமனே வாசிப்புக்கு அல்ல… சு-வாசிப்புக்கு!மற்ற நொறுக்குத் தீனிகள்:)

1. சங்கப் பாடல்களுக்குக், “கடவுள் வாழ்த்து” என்பது பின்னாள் சேர்க்கையே!
= இலக்கியத்தில் மத அரசியல்;
அவை சங்கப் பாடல்கள் ஆகா!  காதல் நற்றிணைக்கும், குறுந்தொகைக்குக்கும் என்னய்யா “கடவுள் வாழ்த்து”?:)

2. இன்றைய சமய நிலைமை வேறு! = இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!
இன்றைய நிலையை ஈடு கட்ட, தொன்மத்தில் கை வைக்கக் கூடாது!
சமயம் கடந்து, தமிழைத் தமிழாகவே அணுகும், திரு. வி. க போன்ற மனசு, “அறிஞர்”களுக்கு வரவேணும்!
———————————————————————————————————————-


3. நற்றிணை/ குறுந்தொகையில் = திருமால்/ முருகன் பற்றிய பலப்பல குறிப்புக்கள் வரும்;
ஆனால் அவை “பக்திப் பாடல்” அல்ல:)
அவை வெறுமனே அகப் பாடல்கள் = மக்கள் வாழ்வியலைக் காட்சிப் படுத்தும்…
காதலன் தன் காதலை நிரூபிக்க, நிலத்தின் தொன்மம் திருமால் மேல் சூள் (சத்தியம்) செய்தான் -ன்னு வரும்! அவ்வளவே!

நடுகல் – தொன்மங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன
= திருமால், முருகன், கொற்றவை;
= நிலத்தின் தலைமக்கள்; பூர்வ குடி வழிபாடு

இங்கு காட்டப்பெறும் திருமால்/ முருகன் = விஷ்ணு/ ஸ்கந்தன் அல்லர்
இவர்கள் பூர்வகுடி-இயற்கை வடிவினர்;
பலமுகம்-மாயாஜால வடிவினர் அல்லர்:)

ஏற்கனவே இருந்த தமிழ்த் தொன்மங்களின் மேலேயே, புராணக் கதையும் ஏற்றி விட்டதால் வந்த வினை = எது இருந்தது?-எது வந்தது? -ன்னே தெரியாது பாருங்க:(

வேந்தன் என்று தொல்காப்பியம் குறித்தது;
ஆனால் பின்னாள் உரையாசிரியர்கள் “இந்திரன்” ஆக்கி விட்டனர்:(

வேந்தன் = மருத நில மன்னன்;
வருணன் = கடற் காற்று
– இவை மாறிக் கொண்டே இருப்பவை;

மாயோன்/ சேயோன்/ கொற்றவை போல் தனித்த அடையாளமாய் இல்லை; அதனால், மக்கள் வாழ்வியலில் இந்த வேந்தன்-வருணன் அதிகம் இல்லை; ஒரு கூத்தோ, ஆலயமோ, துறையோ இவர்கட்கு அமையவில்லை;
———————————————————————————————————————-

4. யாகம், உடன்கட்டை ஏறல் = புறநானூற்றில் சில இடங்களில் வரும்;
உடனே…… ஹோமம்/ உடன்கட்டை
= தொல் தமிழ்ப் பண்பாடு -ன்னு “முடிவு” கட்டீறக் கூடாது:)

அவை = கடைச் சங்க காலம்/ புராணக் கலப்புக்குப் பின், என்று உணர்ந்து படிக்க வேணும்!
அவை = தொல்காப்பியம், முதல்/இடைச் சங்க நூல்களில் வாராது!

5. வடமொழி/ வடநெறி போலவே…. சமணமும், பெளத்தமும் கூடத் தென்னகம் வந்தன;
தமிழ்த் தொன்மத்தை ஊடாடிச் சிதைக்காமல், சமண-பெளத்தம், தன் நெறியைப் “புதுசு” என்றே சொல்லியது!

இயற்கை வழிபாட்டு முருகனை -> 12 Handed ஸ்கந்தன் -ன்னு ஆக்கியது போல்,
தமிழ்த் திருமாலை/ முருகனை -> “தீர்த்தங்கரர்” -ன்னு ஆக்கவில்லை சமண-பெளத்தம்!

தமிழ் இலக்கியத்துக்குச் சமணம் ஆற்றிய தொண்டு அதிகம்;
ஆனால் இதன் பங்கு, சற்று அடக்கியே பேசப்படுகின்றது;
இலக்கியத்தில் “பெரும்பான்மை மத ஆதிக்கம்” தான் காரணம்:(
(சிறுபான்மைச் சமூகம், மரபுச் சிறப்பில் “அடக்கியே வாசிக்கணும்” என்ற ஆழ்மனப் போக்கு; இந்நிலை மாற வேணும்!)

———————————————————————————————————————-

6. சங்க காலப் பெண் கவிஞர்கள் = 30+
மிகவும் அதிகம் பாடியவர்கள் = ஒளவையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார்
சங்க கால ஒளவை வேறு; ஆத்திசூடி/ பிற்கால 4 ஒளவையார்கள் வேறு!

7. மன்னர்கள் = சேர, சோழ, பாண்டியர் மட்டுமல்லர்;
வள்ளல்கள் 7 பேர் உண்டு; Also,தொண்டை, பரதவர், பூழியர், வேளிர், மழவர் போன்றவர்களும் உண்டு

8. ஐம் பெருங் காப்பியங்கள் =
* சிலப்பதிகாரம் & மணிமேகலை = முந்தியவை (300 CE)
* சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி = மிக மிகப் பிந்தியவை! (900 CE);

ஆழ்வார்/ நாயன்மாருக்குப் பிந்தியவை தான் சீவக சிந்தாமணி;
ஐம்பெரும் காப்பியங்கள் போல், ஐஞ்சிறுங் காப்பியங்களும் உண்டு!
———————————————————–———————————————————–


9. திணைகள்:

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பதே சரியான வரிசை (தொல்காப்பியம்);
இந்த நிலங்கள் இயல்பில் திரிந்து விட்டால் = பாலை!

* முல்லை = காடு
* குறிஞ்சி = மலை
* மருதம் = வயல்
* நெய்தல் = கடல்
ஒரே ஊரில் முல்லையும் இருக்கலாம், குறிஞ்சியும் இருக்கலாம்; மலையும் காடும் ஒரு சேர இருத்தல் இயல்பு தானே?

10. பொருள் = 3 in number
முதற் பொருள், உரிப் பொருள், கருப் பொருள்

a) முதற் பொருள் = நிலம் & பொழுது
* நிலம் = மேலே பார்த்துட்டோம்;
* பெரும் பொழுது = கார், குளிர் / முன்பனி, பின்பனி / இளவேனில், முதுவேனில் காலங்கள்;
* சிறு பொழுது = மாலை, யாமம் / வைகறை, விடியல் / முற்பகல், பிற்பகல்

b) உரிப் பொருள்
* முல்லை = (காத்து) இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
* குறிஞ்சி = புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
* மருதம் = ஊடல்
* நெய்தல் = (துன்பத்தில்) இரங்கல் 
* பாலை = பிரிதல்

c) கருப் பொருள்
அந்தந்த நிலத்துக்கு உரிய…. தெய்வம், குடிமக்கள்,
பறவை, விலங்கு,
ஊர், நீர், பூ,
யாழ், பறை, பண்… போன்றவை
———————————————————————————————————————-


11. சங்க இலக்கிய உரைகள்:

உரைகளின் காலம் = பின்னாளில் (after 10th CE)
அன்றைய அரசியல் – சமயத் தாக்கங்கள், உரைகளில் ஆங்காங்கே தெறிக்கும்;

So, அதையே முடிந்த முடிபாகக் கொள்ளாமல்…
உரைகளை, அவற்றின் அழகியல்/ஒப்பு நோக்குக்கு வாசிக்கணும்;
மற்றபடி, “to the roots” = மூலப் பாடலையே அணுகுதல் நன்மை பயக்கும்!

* தொல்காப்பிய உரை = நச்சினார்க்கினியர், இளம்பூரணர், சேனாவரையர்…
* கலித் தொகை, குறுந் தொகை, பத்துப் பாட்டு உரைகள் = நச்சினார்க்கினியர்

* திருக்குறள் = Lots of people… பரிமேலழகர், மணக்குடவர் etc etc
* சிலப்பதிகாரம் = அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார்

12. “உலகம்” என்பதை முதலில் வைத்துப் பாடுதல் = சங்கத் தமிழ் மரபு
(உலகம், வையம், நிலம் etc etc)

* ஆதி பகவன் முதற்றே உலகு – திருக்குறள்
* நனந்தலை உலகம் வளைஇ நேமி – முல்லைப்பாட்டு

* உலகம் உவப்ப வலனேர்பு திரிதரும் – திருமுருகாற்றுப்படை
* வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇ – நெடுநல்வாடை
* மண் திணிந்த நிலனும் – புறநானூறு

* கண் அகல் ஞாலம் – திரிகடுகம்
* திங்களைப் போற்றுதும்.. உலகு அளித்தலான் – சிலப்பதிகாரம்
* உலகம் திரியா ஓங்குயர் விழுச் சீர் – மணிமேகலை

The cause of the World (உலகம்) is more dear to Sanga Tamizh, than the cause of Religion or God!
Our own agam & puRam, than heaven or hell – Thatz Sanga Tamizh for you!


இக்கட்டுரை, சங்கத் தமிழுக்கு ஓர் எளிய அறிமுகமே!
நுண்ணிய தகவல்கள் அதிகம் தரலை; Just a Quick “Map” of Sangam Landscape!
ஒரு வரைபடமே(map), நிலத்தின் அழகியல் இன்பத்தை ஈந்து விடாது; அதுக்குப் பயணம் செய்யணும்:)

சங்கத் தமிழ்ப் பயணம் = ஒரு வாழ்க்கைப் பயணம்;
சேரும் இடத்தை விடப் பயணமே சுவை மிக்கது;
So, பயணம் செய்வீர்; இன்பத் தமிழில் பயணம் செய்வீர்!


உசாத் துணை (References):

1. தமிழ் மொழி இலக்கிய வரலாறு – டாக்டர் மா. இராசமாணிக்கனார்
2. தமிழ் மொழியின் வரலாறு – பரிதி மாற் கலைஞர்
3. தமிழ் இலக்கிய வரலாறு – மு.வ
4. தமிழ் வரலாறு & தமிழர் மதம் – மொழி ஞாயிறு, ஞா. தேவ நேயப் பாவாணர்
5. வடமொழி வரலாறு – ஞா. தேவ நேயப் பாவாணர்

Advertisements
Comments
31 Responses to “சங்கத் தமிழ் For Dummies:)”
 1. சங்கத் தமிழ் பற்றி நிச்சயம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டியவை!

  Like

  • நன்றி:)
   இதை இன்னும் பொதுப் பக்கமாக வெளியிடவில்லை:)

   Like

   • Santa says:

    அன்பு இரவி
    சிறப்பான பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…..தொடருங்கள்…..சாதரணமாகவே நீங்கள் ஒவ்வொரு செயலையும் அழகாகவும் விளக்கமாகவும் மற்றும் சிறப்பாகவும் செய்வீர்கள் என்று தெரியும் ஆனாலும் ஒரு சிறு விண்ணப்பம் தாங்கள் தேர்ந்தெடுத்து விளக்க இருக்கும் பாடல்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் அருஞ்சொற்பொருள் கொடுத்து விளக்கினால் என்னை போன்றா “Dummies” க்கு பேருதவியாக இருக்கும். தங்களின் பணிக்கு எல்லாம் வல்ல இறை அருள வேண்டி வணங்குகின்ரேன். என்றும் அன்புடன்

    Like

    • Dank u Santa!
     இதென்ன விண்ணப்பம் எல்லாம்? கண்டிப்பாச் செய்யறேன்!:)
     பத்தி பிரிச்சி, ரெண்டு ரெண்டு வரியாத் தான் காபி உறிஞ்சுறேன்; நீங்க சொல்வது போல், இறுதியில் அருஞ்சொற் பொருளும் தருகிறேன்!

     Like

 2. மனோ says:

  இத்தனை நாளா இதைப் பார்க்கலியே படிக்கலியே என ஏங்கித் துடிக்கையிலே இதை எழுதிறேனடி என் இளங்கிளியே ! இலக்கிய வாசனையே அறியாத எனக்குள் வந்த புது வசந்தம் நீ. நன்றி நன்றி நன்றி.வாழிய நீ பல்லாண்டுகள்.

  Like

  • :)
   நன்றி;
   நடுவில் தடைபட்டு விட்டேன், பதிவுகள் நின்று விட்டன;

   //இதை எழுதிறேனடி என் இளங்கிளியே//

   என்னாது? “அடி”-யா? Too much:)

   Like

 3. C.Rajamanickam. says:

  Aloko alaku ,
  Kollai alaku,
  Sollath theriyuthu,
  Sonnaal putiyithu,
  Enna illai,
  Ennamirunththaal !

  Like

 4. RamK says:

  Saw this link from Dr. TRM on twitter
  Beautiful website, So much information neatly arranged and making it loveable

  There are some lines about hinduism (?) which my heart doesn’t accept, but what you tell is forceful truth and I acknowledge that
  I feel like reading all the posts & tags on this site. I can see honest tamil bubbling in your lines. Best wishes
  – Ram.K

  Like

 5. anbu says:

  Yes, Our Tamil has everything to guide human beings to lead a happy life. I am really wonder whether there is any language in the world, other than tamil to tell the world about the ways and means of leading a happy life in this world and in the other world, i.e swarkam (marumai).

  Thanks for taking this task of making every one understand the sanga tamil very easily.

  P.Anbalagan.

  Like

 6. devarajan97 says:

  >>>> தமிழ் இலக்கியத்துக்குச் சமணம் ஆற்றிய தொண்டு அதிகம்;
  ஆனால் இதன் பங்கு, சற்று அடக்கியே பேசப்படுகின்றது;
  இலக்கியத்தில் “பெரும்பான்மை மத ஆதிக்கம்” தான் காரணம்:(
  (சிறுபான்மைச் சமூகம், மரபுச் சிறப்பில் “அடக்கியே வாசிக்கணும்”
  என்ற ஆழ்மனப் போக்கு; இந்நிலை மாற வேணும்!) <<<

  பொதுவாக எதையும் இருட்டடிப்புச் செய்யும் போக்கு
  தமிழகத்தில் இல்லை, இரவிசங்கர். ஒருசிலர்
  குறுகிய மனம் படைத்தோராக இருந்திருக்கலாம்.

  பவுத்த , சமண நூல்கள் ஐம்பெருங் காப்பியங்கள்
  என்பதை யாரும் மாற்றவில்லை.

  “அடக்கியே வாசிக்கணும்” என்ற ஆழ்மனப் போக்கு
  இல்லை; சீவக சிந்தாமணி ’தரை முற்றும் போற்றிய சிந்தாமணி’
  என்று போற்றப்படுகிறது –

  கரை பெற்றதோர் பச லட்சணமான தொல்காப்பியமும்
  தரை முற்றும் போற்றிய சிந்தாமணியும் தமிழ்ச் சங்கத்தில்
  நிரை பெற்று உயர் பத்துப்பாட்டும் விளங்க நிச உரையை
  வரை நச்சினார்க்கினியன் ஐயன் பாண்டி மண்டலமே.

  நச்சினார்க்கினியர் வைதிகர்;
  மணிமேகலைக்கு உரை எழுதியவர் உ வே சாமிநாதையர்;
  உசாத்துணை புரிந்தவர் மளூர் ரங்காசாரியர்.

  Like

  • வணக்கம் தேவ் ஐயா!
   இங்கும் வந்து விட்டீர்களா?:) எப்படி? இத்தளத்தை நான் எங்கும் அறிமுகமே செய்யலீயே?:)

   //பொதுவாக எதையும் இருட்டடிப்புச் செய்யும் போக்கு தமிழகத்தில் இல்லை, இரவிசங்கர்//

   ஓ… அப்படீங்களா?:)

   //பவுத்த , சமண நூல்கள் ஐம்பெருங் காப்பியங்கள் என்பதை யாரும் மாற்றவில்லை//

   உக்கும்!
   ஐம்பெருங் காப்பியங்கள், அலமாரியில் தூங்கிக்கிட்டு இருக்கு!
   மணிமேகலை கதை என்ன? = சாதாரணப் பொதுமக்களைச் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்!
   கம்ப ராமாயணம் அன்றோ கொடி கட்டிப் பறக்கிறது! கம்பன் கழகம், கம்பன் பட்டிமன்றம், கம்பன் விழா!
   ஊருக்கு ஊரு, இளங்கோ மன்றம் காட்டுங்க பார்ப்போம்!
   ———–

   //சீவக சிந்தாமணி ’தரை முற்றும் போற்றிய சிந்தாமணி’ என்று போற்றப்படுகிறது//

   இதெல்லாம் சும்மா ஏதாச்சும் ஒத்தை மேடையில், ஒத்தை வரி பேசறதோட சரி!
   சோழன் சமணக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியில் மூழ்கிக் கிடந்தான். காப்பியச் சுவையில் ஆழ்ந்து கிடந்தான்.
   இதனைக் கண்ட சேக்கிழார் அல்லவோ, காப்பிய மயக்கத்திலிருந்து சோழ மன்னனை மீட்க எண்ணி, பெரிய புராணம் படைச்சாரு?

   ஒன்றைப் படைப்பது தவறில்லை!
   ஒன்றின் ஆளுமையைக் குறைக்கவென்றே படைப்பது?
   ———–

   //மணிமேகலைக்கு உரை எழுதியவர் உ வே சாமிநாதையர்;
   உசாத்துணை புரிந்தவர் மளூர் ரங்காசாரியர்//

   உம்…சொல்லுங்க! இவிங்கல்லாம் நல்லவங்க தான்! இல்ல-ன்னு சொல்லலை!
   ஆனா, இக்காப்பியங்களுக்கே உரிய சமணர்களைக் காட்ட முடியுமா தமிழ் இலக்கியப் பெருவெளியில்?
   ஐம்பெருங் காப்பியமெல்லாம் இருக்கு தான்; சும்மா காலி பெருங்காய டப்பா, வாசனை போல!

   சும்மா ஒப்புக்கு ஒரு வெண்பா சொல்வீங்க! அவ்ளோ தானே முடியும் ஒங்களால?
   எங்கே சென்றது தமிழ்ச் சமணத்தின் இலக்கிய ஆளுமை?
   எங்கே சென்றது தமிழ்ச் சமணத் திருப்பாவை?
   இதெல்லாம் பொது மக்கள் மத்தியில் போகவே போகாது! “தமிழ் அறிஞர்கள்” கிவாஜ முதற்கொண்டு பலரும் கம்பனையும், சேக்கிழாரையும் அல்லவா மேடை தோறும் ஏற்றுவார்கள்?

   களப்பிரர் காலம் = இருண்ட காலம் -ன்னு காலங்காலமா எழுதியே பரப்பி வந்தவர்கள் அல்லவா?:(
   ———–

   நானும் பாக்குறேன்; நான் சமணம் பத்தி எழுதும் இடமெல்லாம் வந்து, சமணம் கூடத் தான் கிரந்தம் கலந்துச்சி?-ன்னு தானே பேசுகிறீர்கள்?
   இப்போதும் பாருங்க!
   ஒரு சொல்லு சமணம் பத்தி சொல்ல வந்தாக் கூட, பொத்துக்கிட்டு வருது உங்களுக்கு?
   ஒரு சொல்லே சொல்ல முடியாம இருக்கும் இந்த லட்சணத்திலா, சமணத் தமிழ் மேடையேறப் போகிறது? பொது மக்களுக்குத் தெரியப் போகிறது?

   போங்கய்யா:((((

   Like

   • devarajan97 says:

    சீறாப்புராணம், தேம்பாவணி இவற்றை நீங்களே பேசி
    அறிமுகப்படுத்துவதில்லையே ? ஏன் அடக்கி வாசிக்கிறீங்க ?

    Like

    • devarajan97 says:

     தமிழ் மட்டுமல்லாது சமணர் பங்களிப்பு
     எல்லா மொழிகளிலும், பல துறைகளிலும்
     உள்ளதை மொழியியலார் நன்கு பதிவு செய்துள்ளனர்.
     யாரும் மறுக்கவொண்ணா உண்மை

     Like

     • Dank u for “நன்கு பதிவு செய்துள்ளார்கள்”
      நன்கு பதிவு செய்து விட்டு, புத்துக அலமாரியில் பத்தோட பதினொன்னா, தூசி தட்டித் தூங்குது!
      அதென்ன கம்பனா, மேடையேற்ற?:((

      சமணத் தமிழை மறந்தும், கி.வா.ஜகந்நாதர்கள் பேச மாட்டார்கள்!
      அவர்கள் சைவத் தமிழைப் பற்றி மட்டுமே, மேடை தோறும் சிலாகிப்பார்கள்!

      வேணும்-ன்னா, சமணர்கள் பேசிக் கொள்ளட்டுமே சீவக சிந்தமாணி பத்தி? வேணாம்-ன்னா சொல்லுறோம்? -ன்னு கேள்வி வரும்!
      ஆனா, பேசத் தான், சமண அறிஞர்கள் -ன்னு யாருமே முன்னெடுக்க முடியாம துடைச்சிட்டோமே?:(

      ஒன்னு கேக்குறேன்:
      சைவத் தமிழை நாங்க பேசறோம், சமணத் தமிழை அவங்க பேசிக்கட்டுமே -ன்னு சொன்னா…
      அப்பறம் ஒங்களுக்கு எதுக்கு “தமிழ்”அறிஞர் பட்டம்?
      வெறும் “சைவ”அறிஞர்-ன்னு வச்சிக்க்கிட்டு போங்கோ!:)

      Marginalizing religion in the name of tamizh!:((

      Like

    • Dev Sir,
     கருத்துக்குக் கருத்தாப் பதில் சொல்லாம, If u start personal references.. I will STOP replying to you hereafter!

     இந்தத் தளம் = சங்கத் தமிழ்/ சற்று பின்னுள்ள ஐம்பெருங் காப்பியங்களுக்கு மட்டுமே-ன்னு தெளிவாச் சொல்லியாச்சு!
     அதனால் சீறாப்புராணம்/ தேம்பாவணி இந்தக் கால எல்லைக்குள் வரலை!
     ஆனால், Look at the bottom of the site, for categoreies! சமணம் will be there!
     https://dosa365.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/

     சீறாப்புராணம்/ தேம்பாவணி = இங்கு இல்லாவிட்டாலும், மாதவிப் பந்தலில் பல முறை பேசப்பட்டுள்ளது!
     http://madhavipanthal.blogspot.com/search/label/Christianity
     http://madhavipanthal.blogspot.com/search/label/Islam

     So, pl stop your “personal” trolling & only focus on issues!
     If not.. I will NOT speak to u, any more, in these posts! Thank you!

     Like

   • oops, sorry, sorry, dev sir! my oversight;
    I thought i sent it out only to close friends..
    பந்தலில் சுட்டி குடுத்ததும் அண்மையில், ஈழத்து தனி நாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவின் போது;
    இப்போது புரிகிறது; நன்றி:)

    இத்தளத்தை, மாதவிப் பந்தல் போல், அத்துணை பிரபலம்/ விரிவு படுத்தவில்லை!
    அதற்குள் நின்றும் போய் விட்டது, ஒரு சிலர் கும்மியால்:(

    Like

    • devarajan97 says:

     பரவாயில்லை இரவி.
     நான் எதையும் தவறாகக் கொள்ளவில்லை.
     உங்கள் இலக்கிய ஆர்வம் எப்போதும் பாராட்டுக்குரியது.
     கம்ப ராமாயணத்துக்கு மதம் கடந்த ஆர்வலர் வட்டம் அதிகம்.
     அன்று ஜஸ்டிஸ் இஸ்மெயில் அவர்கள்;
     இன்று பெஞ்ஜமின் லெபோ அவர்கள் [France].
     ஸ்ரீ ராம சரித மாநஸமும் அப்படியே.
     இராமனை இலக்கியப் பாத்திரமாகவே பார்க்கும்
     நோக்கில்தான் பலரும் மன்றங்களில் பேசுகின்றனர்;
     குற்றம் சாட்டவும் அதில் நெகிழ்வுண்டு.
     கம்பனின் இலக்கிய நயம் வெற்றி கொள்கிறது.

     நீங்கள் என் கருத்துகளையும் ஐயப்பாடாக ஏற்கலாம்;
     மறுக்கலாம், ஏற்கலாம், தவிர்க்கலாம்.
     சீவக சிந்தாமணி வேதக் கருத்தியல்களுக்கு
     மரியாதை தந்து பேசுகிறது; வன்மையாக
     மறுக்கும் இடங்களும் உண்டு. சிருங்காரம்
     சில இடங்களில் எல்லை கடந்து விவரிக்கப்
     படுவதால் பொது மேடைகளில் பேசப்படுவதில்லை
     என நினைக்கிறேன்.

     கம்பன் கழகங்களையும் பல இடர்ப்பாடுகளையும்
     பொறுத்துக்கொண்டுதான் விடாமல் நடத்தி வருகின்றனர்

     Like

     • நன்றி தேவ் ஐயா, புரிதலுக்கு!
      இவை என் ஆற்றாமையே அன்றி, சினம் அல்ல!
      சமயம் கடந்து, “தமிழைத் தமிழாய் அணுகும்” நாள் எந்நாளோ?:(

      Like

 7. devarajan97 says:

  >>> சமணத் தமிழை மறந்தும், கி.வா.ஜகந்நாதர்கள் பேச மாட்டார்கள்!
  அவர்கள் சைவத் தமிழைப் பற்றி மட்டுமே, மேடை தோறும்
  சிலாகிப்பார்கள்; <<<<

  அவரவர் சார்ந்த துறையில்தான் கவனமும்
  ஈடுபாடும் இருக்கும். மகா வித்துவான்
  பிள்ளையவர்கள் ஏன் வைணவத் தல
  புராணம் எழுதவில்லை ?
  வாரியார் சுவாமிகள் ஏன் ஆழ்வார்களை
  மேற்கோள் காட்டவில்லை என்று
  யாரும் கேட்பதில்லை.

  வலம்புரி ஜான் அவர்கள் கல்கியில்
  விவிலியக் கதைகளைச் சுவைபட
  எழுதினார். அதைத்தான் அவரிடம்
  எதிர்பார்க்க முடியும். நாயன்மார் கதையை
  ஏன் எழுதவில்லை என அவரிடம் கேட்பது
  நியாயமாகுமா ?

  வாரியார் சுவாமிகளின் பேச்சால்
  எல்லா வயதினரும், எல்லாத் தரப்பினரும்
  கவரப்பட்டனர். ம பொ சி அவர்களின் சிலம்பு
  உரைகளுக்கு நல்ல வரவேற்பிருந்தது.
  சொல்பவர் இலக்கிய நயம் குன்றாமல்
  சொல்கிறாரா என்பதே முக்கியம்

  Like

  • தேவ் சார்
   Pl stop commenting on this post any further

   உங்களிடம் ஒன்று புரிந்து கொண்டேன்.. எதற்கும் நேரடியான பதில் கிடையாது
   முருகன், சூரனை “மறக்கருணை” கொண்டபின், மொத்த ஊரையும்/ பொது மக்களையும் கடலுள் மூழ்கடித்தது சரியா? இதான் புராணமா? என்று பல கேள்விகள் எழுப்பினேன்; எதற்கும் பதில் இல்லை! ஆனால் விளையாடிக் கொண்டே இருக்கிறீர்கள்:)

   Okay! உங்கள் வழிக்கே வந்து இதை முடிக்கிறேன்;
   நான் “திருந்தி விட்டேன்” தேவ் ஐயா – உங்கள் பின்னூட்டங்களால்!
   தமிழ் நாட்டில், தமிழ் இலக்கியத்தில் = “அரசியல்” என்பதே கிடையாது; எல்லாமே அன்பு மயம் தான்!

   *சமணம், தமிழ் இலக்கியத்திலும்/ நடைமுறையிலும் கொடி கட்டிப் பறக்கிறது;
   *கம்பன் மட்டுமல்லாமல், எல்லாமே கொடி கட்டிப் பறக்கின்றன
   *கி.வா.ஜ தமிழ்-அறிஞர்; ஆனா சைவம் பற்றி மட்டுமே எழுதுவாரு; இருப்பினும் அதற்குள்ளேயே “சமணமும் அடங்கி விடும்”
   *உ.வே.சா -ன்னா தான் எல்லாருக்கும் தெரியும்; அவர் இலக்கியம் திரட்டினாரு! அதே போல் இலக்கணமெல்லாம் திரட்டிய சி.வை.தாமோதரம் பிள்ளை – இவரும் தமிழ்த் தாத்தா தான்; ஆனா பொதுமக்கள் யாருக்கும் தெரியாது; அதனால் என்ன?
   *Cult உருவாக்கி, அப்படியே நடைபயில்வது தானே நல்லது?

   அவா அவா, எதைப் பிரியப்படறாளோ, அதையே பரவலா ஆக்கீருவோம்!
   தமிழ்ச் சூழலும், தமிழ் இலக்கியமும் = “அரசியலே” கலவாத ஓர் அமைதிப் பூங்கா! அதில் தர்மம் மட்டுமே இன்னிக்கி வரைக்கும் தழைத்தோங்குது;

   :))
   என்ன சார், திருந்திட்டேனா? திருத்தியமைக்கு மிக்க நன்றி!
   நீங்க அடிக்கடி சம்ஸ்கிருதம்-தமிழ் கலந்து கலந்து எழுதுவீங்களே! அதே பாணியில் நானும் முடிச்சிக்கறேன்: “கிருதக்ஞன்” ஆனேன்:)
   All is well, All is well
   I am stopping here; Request you too!

   Like

 8. devarajan97 says:

  >>> கம்ப ராமாயணம் அன்றோ கொடி கட்டிப் பறக்கிறது!
  கம்பன் கழகம், கம்பன் பட்டிமன்றம், கம்பன் விழா! <<<

  பட்டிமன்றப் பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா நேர்முகம் :

  கே : மறக்க முடியாத பட்டிமன்ற அனுபவங்கள்?

  ப : மறக்கவே முடியாத பட்டிமன்றங்கள் என்றால் அது
  கம்பன் கழகப் பட்டிமன்றங்கள்தான். சென்னை, காரைக்குடி,
  மதுரை, பாண்டிச்சேரி, சேலம், திருப்பத்தூர், ராஜபாளையம், ராசிபுரம், புதுக்கோட்டை என்று கம்பன் கழக மேடைகளில் நான் பேசியதை ஒருநாளும் என்னால் மறக்க முடியாது. காரணம் என்னவென்றால், எந்த ஜனரஞ்சகமான விஷயங்களுக்கு உள்ளேயும் போகாமல், இலக்கிய வரம்புக்குள்ளேயே நின்று கொண்டு – கோர்ட்டுக்குள்ளேயே நின்றுகொண்டு பந்து விளையாடுவது போல – பேசக்கூடிய மன்றங்கள் அவை. இலக்கற்ற பிரயாணமாக அல்லாமல் கட்டுப்பாட்டுடன் கூடிய
  பயணத்துக்கு வித்திட்டவை கம்பன் கழகப் பட்டிமன்றங்கள்தான்.

  Like

  • நீங்கள் இட்ட இந்தப் பின்னூட்டத்துக்கும், பதிவுக்கும் என்ன தொடர்பு ஐயா?
   பர்வீன் சுல்தானா என்ன சொன்னா எனக்கென்ன?
   அமைப்பு ரீதியான பரவல்= கம்பன் பட்டிமன்றங்கள், அவ்ளோ தானே?
   இதே போல் இளங்கோ மன்றங்கள், சங்கத் தமிழ் மன்றங்கள் காட்டுங்களேன் பார்ப்போம்?
   ஒரு Cult உருவாக்கி, அதில் பலதரப்பட்டவரையும் சேர்த்துக் கொண்டு, “அகண்ட பஜனை” செய்து கொண்டே இருப்பது வாடிக்கை தானே?

   பர்வீன் சுல்தானா, கம்பன் மன்றங்களில் பேசியதால் தான், அவர் செல்வாக்கு வளர்ந்தது-ன்னு சொல்லுவாங்க
   இன்னொருத்தன், “கிளுகிளு” கதைகள் தமிழில் எழுதியதால் தான், என் தமிழ் எழுதும் போக்கே வளர்ந்துச்சி -ன்னு கூடச் சொல்லுவான்:)

   அதெல்லாம் இங்கு தேவையில்லை!
   இங்கு சொல்லப்பட்ட ஆதங்கம்: ஒன்றையே பரவிப் பரவி, மற்ற பெரும் முத்துக்களை ஒளி குன்றிப் போகச் செய்தல்!
   Pl do not dilute this post by such comments; Thank you

   Like

 9. anbarasan says:

  it gives basic idea of tamil for a common man.because most of the times these informations are available as pandits only understand. Thanks for nice work

  Like

 10. பார்வய்: வலய்ப்பூ (tumblr.com)
  [1] தமிலரின் தேசியக் கொடி (National Flag of Tamilar)
  http://gvetrichezhian.tumblr.com/
  [2] வரிவடிவமும் ஒலிவடிவமும் (Line Format & Sound Format)
  http://gvetrichezhian01.tumblr.com/
  [3] கனினி அகரமுதலி (computer dictionary)
  http://gvetrichezhian02.tumblr.com/
  [4] கூ+தமிலு (G+TAMILU)
  http://gvetrichezhian03.tumblr.com/
  [5] சொல்லாக்கம் (Word Formation)
  http://ulikininpin04.tumblr.com/
  [6] இலக்கியக் காட்சி (Literary Scene)
  http://ulikininpin05.tumblr.com/
  [7] கூ+தமிலு பாகம்:2 (G+TAMILU Part:2)
  http://ulikininpin06.tumblr.com/
  [8] கூ+தமிலு பாகம்:3 (G+TAMILU Part:3)
  http://ulikininpin07.tumblr.com/
  [9] என விரும்பினோம் (Desired As)
  http://ulikininpin08.tumblr.com/

  Like

 11. Goms.Krishna says:

  வாசிக்க அல்ல தமிழ்
  சுவாசிக்க….
  மிக அருமை

  Like

 12. jai says:

  mikka nandri KRS … nalla padhivugal

  Like

 13. முல்லைவேந்தன் says:

  அருமை என்னை கவர்ந்தது உங்கள் தொகுப்பு வாழ்க வளர்க.

  Like

 14. Prasanna says:

  //திணைப் பெயர்களைப் பாருங்க; பலவும் பூக்களின் பெயர்கள்;
  தமிழ் இலக்கியக் கூறுகள் = இயற்கையை ஒட்டியே! Fully Nature!
  பத்துத் தலை அசுரன், பன்னிரெண்டு கை சாமி… ன்னு எல்லாம்…இருக்காது;
  இயற்கைக்கு மாறான “புராண – unbelievables”, ஆதித்தமிழில் இல்லை! பின்னாள் சேர்க்கையே//

  எதோடு எதை முடிச்சுப் போடுகிறீர்கள்? திணைகளுக்கு பூப்பெயர்கள் வைத்தனர். அதற்கு ஏன் புராணத் தொன்மங்களின் பாத்திரங்களை காட்டி ஒரு நக்கல்? இது பிரிவுகளை சுட்ட வைக்கப்பட்ட பெயர்கள், அவைகள் பாத்திரங்கள். சிலப்பதிகாரத்தில் சதுக்கப் பூதம் என்றொரு பாத்திரம் உண்டு. ஐயாவுக்கு தெரிந்திருக்க வேண்டுமே! ஏன் இந்த அரைகுறை ஊளை? பார்ப்பனர்கள் தமிழர் இல்லை என்று நிறுவ இவ்வளவெல்லாம் மெனக்கெட தேவையில்லை.

  Like

 15. Dr. R . Sethu. says:

  சிறப்பான கட்டுரை. நன்றியும் பாராட்டும். வேண்டுகோள்- முதல், இடை, கடைச் சங்கம் என்பதை விட முதல், இரண்டாம், மூன்றாம் என்று கூறினால் சிறப்பாக இருக்குமே!

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: