Physics in சங்கத் தமிழ்!

சின்ன வயசில் இதைப் பார்த்ததுமே, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வரும் = கரும்புச் சாறு வண்டி! * இனிப்பான சாறு, * கூடவே புளிப்பான எலுமிச்சை, காரமான இஞ்சி = அதன் மணமே சுண்டி இழுக்கும்! அதை விட, ஒரு வியப்பு = பல்லுப் பல்லாச் சக்கரங்கள்! கரும்பு இந்தாண்ட போயி, அந்தாண்ட சக்கையா வரும் காட்சி; அந்தச் சக்கரங்கள் சுத்துற காட்சியே, ரொம்ப நேரம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பேன்! அட, இதப் பார்த்துத் தான் … Continue reading

தொட்டாச் சிணுங்கி, தோட்டத்துல முள்ளங்கி!

“தொட்டாச் சிணுங்கி” பாத்து இருக்கீங்களா? = ஈங்கை -ன்னு தமிழ்ப் பேரு, அதுக்கு! எங்கூரு வாழைப்பந்தல்-ல்ல இல்ல! ஆனா பக்கத்தூரு திருவண்ணாமலை-ல பாத்து இருக்கேன்; அந்தூரு Girls High School பொண்ணுங்க அப்படித் தான் = தொட்டாச் சிணுங்கி:)) School Trip-ல்ல, பசங்க வேணும்-ன்னே போய்ச் சீண்டுவானுங்க; இலைகள் கூம்பிக் கொள்ளும்!:) “சிணுங்கு” = என்ன பொருள்? சிலுக்கு = சில சமயம் சினிமாவில் செஞ்சிக் காட்டுவாங்க! “பாவா.. உஹும் உஹும் உஹும்”:) “சிணுங்கு” = இதுக்கு … Continue reading

மண்புழு வள்ளுவர்!

இன்னிக்கி #dosaவில் ஒரு சின்ன புதிர்ப்போட்டி:) மேலும், இந்தக் குறளின் பொருள் எனக்குச் சரியாப் பிடிபடலை; எந்த உரையாசிரியர்களும் அத்தனை நுட்பமா விளக்கலை! எனவே, வாசக உரையாசிரியர்கள் = உங்க கிட்டயே வந்துட்டேன்:) போட்டிக்குச் செல்வோமா? என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்! அறத்துப்பால், அன்புடைமை, குறள் 78 கவிஞர்: வள்ளுவர் உரை: எலும்பு இல்லாது வாழும் புழுவை, வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். காபி உறிஞ்சல்: … Continue reading

கம்பன் போட்ட Maths

என்னாது? “கணிதக் கம்பனா”? sin2θ + cos2θ தெரியுமா? (a+b+c)3 தெரியுமா? எந்தக் கல்லூரியில், M.Sc. Maths படிச்சான்? -ன்னுல்லாம் கேக்காதீக:) பாட்டுக்குப் போவோம்! How much is 5 + 50 + 1 ? சூழல்: கிட்கிந்தையின் அரசன் ஆகி விட்டான் சுக்கிரீவன்; கார்த்திகை மாசம் சீதையின் தேடல் துவங்கலாம்-ன்னு சொல்லிட்டு,  இப்போ காலம் தாழ்த்துகிறான்.. இராகவன், அவனை எச்சரித்து வருமாறு, இலக்குவனை ஏவும் காட்சி! நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து, ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, … Continue reading