ஈறு கெட்ட எச்சம்!

எச்சம் = இன்னிக்கி பசங்களைப் போய்க் கேட்டா…
“தூ” ன்னு துப்புவாய்ங்க:)
இதான் சார், எச்சம்/எச்சி(ல்) -ன்னு சொல்லுவாய்ங்க:)

ஆனா இலக்கணத்தில் = எச்சம் என்றால் என்ன?
எஞ்சுதல் = எச்சம்; ஒரு கிலோ அதிரசத்தில் “எஞ்சி” நிற்பது மூனே அதிரசம்
அப்படீன்னா அந்த மூனு அதிரசமும் இன்னும் “முற்று” பெறவில்லை -ன்னு தெரியுது அல்லவா?:))
முற்று பெற்றால் = முற்று; எஞ்சி நின்றா = எச்சம்!

* முற்று பெறுவது = முற்று
eg:  வந்தான் => அவன் வந்தான்; அத்தோடு முற்று பெற்று விட்டது!
* எஞ்சி நிற்பது = எச்சம்
eg:  வந்து… => அவன், வந்து வந்து -ன்னு இழுக்குது, முற்று பெறலை!

* வந்த செளமி = பேரைக் கொண்டு முடிஞ்சா, பெயரெச்சம்
* வந்து நின்றாள் = வினையைக் கொண்டு முடிஞ்சா, வினையெச்சம்

இப்போ ஞாபகம் வருதா?
பல் டாக்டர் கிட்ட போவீங்களே?  = “ஈறுகெட்ட” எதிர்மறைப் பெயரெச்சம்??:)
வாங்க, தொல்காப்பியர் எப்படிச் சொல்லிக் குடுக்குறாரு? பார்க்கலாமா?


நூல்: தொல்காப்பியம் (சொல்லதிகாரம் – எச்சவியல் 430)
கவிஞர்: தொல்காப்பியர்

பிரிநிலை வினையே, பெயரே, ஒழியிசை,
எதிர்மறை, உம்மை, எனவே, சொல்லே,
குறிப்பே, இசையே, ஆயீர்-ஐந்தும்
நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட் கிளவி

டபராவில் காபி:
எச்சம் = 10 வகைப்படும்; (ஈர்-ஐந்து);
கிளவி = சொல் (கிளத்தலால் கிளவி)
எஞ்சு பொருள் கிளவி = எஞ்சிய பொருளைச் சொல்வதால் அதுக்குப் பேரு எச்சம்!


காபி உறிஞ்சல்:

1. பிரிநிலை எச்சம் = வந்தது செளமி”யே”!
செளமி மட்டுமே வந்தாங்க -ன்னு பிரிக்குது (பிரிநிலை).. அப்படின்னா, இன்னும் சிலரு வரலை!

2. வினையெச்சம் = “வந்து” நின்றாள்
நின்றாள் -ன்னு வினையைக் கொண்டு முடியுது

3. பெயரெச்சம் = “வந்த” செளமி
செளமி -ன்னு பெயரைக் கொண்டு முடியுது

4. ஒழியிசை எச்சம் = செளமி “வரட்டும்”…பாத்துக்கறேன்!
ஒழிந்தது (முடிந்தது) போல் இருக்கும்! ஆனா ஒழியலை (முடியலை); வரட்டும், பாத்துக்கறேன் -ன்னு தொடருது:)

5. எதிர்மறை எச்சம் = செளமி”யா” செஞ்சாள்?
அப்படீன்னா செளமி செய்யலை (அ) செஞ்சிருக்கமாட்டா -ன்னு பொருள்!


6. உம்-எச்சம் = செளமி”யும்” வந்தாள்
கூடவே, ஒரு ட்விட்டர் கும்பலும் வந்துருக்கு; அவங்களோட செளமி”யும்” வந்தாள்!

7. என-எச்சம் = வா “என” வந்தாள்
Online வா, என…., வந்தாள் செளமி!

8. சொல்லெச்சம் = செளமி “யார்?” என்றாள்
யார் “என்றாள்” = யார்?”என்று கேட்டாள்”
இப்படி ஒரு சொல்லே எஞ்சி வந்தா சொல்லெச்சம்!

9. குறிப்பெச்சம் = செளமி “நன்கு” கீச்சினாள்
செம மொக்கையான கீச்சு; ஆனா அதுக்கு ஏகப்பட்ட RT:)
செம மொக்கையை “நன்கு” -ன்னு குறிப்பால் சொல்வது = குறிப்பு எச்சம்!
கல்லூரிப் பாட்டுப் போட்டியில் சும்மாவே கை தட்டுவாங்களே, அது போல!:)

10. இசையெச்சம் = செளமி “ஞங்”குனு குட்டினாள்!
ஞங்குனு = இதுக்குப் பொருள் ஒன்னும் இல்ல! சும்மா இசை/சந்தம்!
ஓங்கிக் குட்டினாள் என்பதற்கான சந்தம்! அதான் இசை எச்சம்!


கடேசீயா, பல் டாக்டர்!:) = “ஈறு கெட்ட” எதிர்மறைப் பெயரெச்சம்!

* பெயரெச்சம் = கீச்சிய செளமி
* எதிர்மறைப் பெயரெச்சம் = கீச்சாத செளமி
* ஈறு கெட்ட = கீச்சாச் செளமி

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும்; ஈறு கெட்டிருக்கு அல்லவா? அதான் வலி:)
ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சமும் உண்டு = கீச்சா (து) நின்றாள்!


இப்போ ஒரு குட்டி Musical Test:)

நிலையாக் காயம் இலையே;
இதனை, நிலையென்று எண்ணுவது என்ன மாயம்?
அருள் செய்ய வேண்டும் அய்யா – அரசே முருகய்யா!

இதுல நிலையாக் காயம் -ன்னா என்ன?
* நிலையாக் காயம் = ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(நிலைக்காத உடம்பு; நிலை இல்லாத உடம்பு)

இப்போ கூட்டிப் படிங்க!
நிலையாக் காயம் இலையே! = நிலை இல்லாத உடம்பு இல்லையே!
* நிலை இல்லாத = -ve
* இல்லையே = -ve
ரெண்டு -ve சேர்ந்தா? = “நிலை இல்லாத உடம்பு இலையே!” => நிலைக்குற உடம்பு

பொருளே மாறிடுச்சி பாத்தீங்களா?
உடம்பை நிலை-ன்னு எண்ணுவது மாயம் -ன்னு, அதே கவிஞரே அடுத்த வரியில் சொல்லுறாரு; அதான் வேடிக்கை:))

நிலை”யான” காயம் இலையே!
இதை நிலையென்று எண்ணுவது என்ன மாயம்?
-ன்னு தான் கவிஞர் எழுதி இருப்பாரு! நல்ல கவிஞரு தான்!

ஆனா, அதை #Carnatic இல் இழுத்து இழுத்துப் பாடுறவங்க பண்ண கூத்து??
(எல்லாரும் இல்ல, சிலரு)

நிலை”யான” காயம் இலையே என்பதில், “யான” வை விட்டுட்டு….
“யா” “யா” -ன்னே இழுத்துட்டாங்க:))
நிலை”யாக்” காயம் இலையே -ன்னு ஈறுகெட்ட எதிர்மறையா மாறி, பொருளே மாறிப் போச்சி:((

தாயே யசோதா, உந்தன் ஆயர் குலத்து உதித்த
= தாயே யசோதா, உந்தன் “நாயர்” குலத்து உதித்த
-ன்னு இழுத்து இழுத்து பாடிக்,
பரந்தாமன் கண்ணனை = டீக்கடை நாயர் ஆக்கினாப் போல!:)

So, ஈறுகெட்ட எதிர்மறையில், கூறுகெட்டுப் போவாம,
கொஞ்சம் விழிப்பாவே இருங்க! வர்ட்டா?:))

dosa 35/365

Advertisements
Comments
8 Responses to “ஈறு கெட்ட எச்சம்!”
 1. ranjani135 says:

  பள்ளியில் பாடமாகப் படித்தபோது புரிபடாத ‘எச்சங்கள்’ உங்கள் பதிவில் மிகச் சரியாக மனதில் பதிகின்றன.

  உங்களைப் போல அதிரசத்தையும், காப்பியையும் வைத்துக் கொண்டு சொல்லித்தர அந்த காலத்து தமிழ் ஆசிரியர்களுக்குத் தெரியவில்லையோ, என்னமோ!

  சுவாரஸ்யமான இலக்கணப் பதிவு!

  Like

  • தவறு தவறு-ம்மா!:) தமிழாசிரியர்களைப் அப்படிப் பொதுப்படையாச் சொல்லீறாதீக:)

   சிலருக்குக் கொள்கைப் பிடிப்பு; ஆங்கிலம் கலவாமல் நேர்படச் சொல்வது வழக்கம்!
   நானோ ஒரு பிடிப்பும் இல்லா அனாதை:) தமிழ்…, போய் Reach ஆனாப் போதும்-ன்னு லஞ்சம் கூடக் குடுக்குற கெட்ட பையன்:))

   என் தமிழாசிரியர் தானியேல் ஐயா (Daniel)… தகைசால் கிறிஸ்துவர்;
   ஆனா ஆழ்வார் பாசுரம் சொல்லிக் குடுக்கும் போது, வகுப்பில் அவருக்குக் கண்ணுல தண்ணி ஊத்தும்! பாடியே காட்டுவாரு!
   “ஈரத் தமிழ்”= ஆழ்வார்கள்-ன்னு ஒருத்தவங்க இருக்காங்க-ன்னு எனக்கு அறிமுகப்படுத்தியதே = ஒரு கிறிஸ்துவர் தான்:))

   எத்தனையோ தமிழ் ஆசிரியர்கள்! (எந்தரோ மகானுபாவுலு)
   அத்தனை பேருக்கும் வணக்கங்கள்! (அந்தரிகி வந்தனமுலு)

   Like

 2. cheenakay says:

  ம்ம்ம் இலக்கண வகுப்பு நடக்கிறதா கேயாரெஸ் – வாழ்க வளமுடன் – நட்புடன் சீனா

  Like

 3. ஒரு சில நாட்களில், Dosa365ல் எச்சத்தில் வினா வரும், விடை தெரிய நன்கு படித்து வைத்துக் கொண்டுள்ளேன் :-)

  எச்ச்ச கச்ச்ச என்று ரஜினி வேண்டுமானால் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்! :-)

  amas32

  Like

 4. முனைவர் டேவிட் பிரபாகர் says:

  முகம் மலர படிக்க வைக்க வைக்கும் உரை விளக்கம்.
  அப்படியானால் பழைய உரை?
  இது என்ன எச்சம் சொல்லுங்களேன்.

  Like

  • அதை முனைவர் ஐயா தான் சொல்லணும்:)

   பழைய உ”றை”யில் இருந்து தானே புதுத் தயிர் கிடைக்கும்?:)
   பழைய உரைகளின் அழகே அழகு!

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: