Love Failure > கைக்கிளை > Love Success!

one_sided_love_by_curlytops-d3feaj9சங்கத் தமிழின் திணைகளுள் = “கைக்கிளை” என்ற ஒன்று உண்டு!

கைக்கிளை = One Sided Love என்று இன்னிக்கி ஆக்கிட்டோம்…
நாம தான் ஒன்றையே பேசிப் பேசி, அதை மட்டுமே உண்மை போல் ஆக்கீருவோமே?:) ஆனா உண்மை அதுவல்ல!

கை = ஒழுக்கம்;
கைந்-நிலை, கைக்-கோள் -ன்னு அற நூல்கள் இருக்கு அல்லவா?

கை = ஒழுக்கம்; காதலொழுக்கம்; அது கிளை விட்டுவிடுவது = கை + கிளை;
அதாச்சும் காதலர்கள், “ஒத்த எண்ணமாய்” வளராது, இரு வேறு எண்ணங்களாய்க் “கிளை விடல்” = கைக் கிளை;

* காதலர்களிடையே தோன்றும் கருத்து வேறுபாடு, புரிந்து கொள்ளாமை…
* அப்படியே புரிந்து கொண்டாலும், வீடு/சமூகம் ஒப்புக் கொள்ளாததால், இடைக்காலப் புரியாமை
* மடல் ஏறுதல்
* முன்பு ஒத்துப் பழகி, பின்பு ஒருவரால் மட்டும் பிரிய முடியாமை
* ஒரு பக்கம் மட்டும் காதல்/ இன்ப உணர்ச்சிகள் அதிகமாய் இருத்தல்
= இவை எல்லாமே கைக்கிளை தான்!

one sided love kai kiLaiநாம, Last Pointஐ மட்டுமே, One Sided Love = கைக்கிளை -ன்னு ஆக்கீட்டோம்!
ஆனா, எந்தவொரு காதலும், கைக்கிளையில் தானே துவங்குது? = ஆகா! அது எப்படி?

முதல் விநாடியே, “அந்தக் காதல் எண்ணம்”, instantly simulataneous ஆக உறுதி ஆவதில்லையே; Proposal (எ) காதலைச் சொல்லிடும் வரை, அது கைக்கிளை தானே?:)
அதான், Human Psychology நன்கு உணர்ந்த தொல்காப்பியர், கைக்கிளையே முதல் திணையாச் சொல்லுறாரு, அகத்திணைகளில்; What an intrinsic study of human & humane emotions by Tholkaap:)

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப

கைக்கிளை, அப்பறம் தான் முல்லை, குறிஞ்சி.. ; கடேசீயா பெருந்திணை;
= இதுவே தொல்காப்பியர் அமைத்துக் குடுக்கும் 7 அகத் திணைகள்
= பின்னாளில் தான் சில பண்டிதாள், அகத்திணையை  5-ன்னு ஆக்கீட்டாங்க, கைக்கிளையைச் சரியாகப் புரிஞ்சிக்காம;

* முருகன் ஏற்றுக் கொள்வானா -ன்னு கூடத் தெரியாது, அவனே அவனே -ன்னு கற்பனையில் தவங் கிடந்தாள் = கைக்கிளை வள்ளி -ன்னு சொல்ல மனசு வருமா?:)
* ஆண்டாள் பாசுரங்கள் அத்தனையும் = கைக்கிளை என்று முத்திரை குத்தலாமா? வாங்க:)


இந்த உளவியல் நுட்பம்;

இதை நன்கு உணர்ந்து இருந்தனர் சங்கத் தமிழர்கள்; மதங்கள் இல்லாமல், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவங்க இல்லீயா! = “மனிதத்தில் எதையும் ஒதுக்குவதில்லை”; வகைப்படுத்தினர்!

One-Sided-Loveமனித உணர்ச்சிகள் = அதைத் தமிழ், மதிக்குமா? மிதிக்குமா?

* பெரும்பான்மை உணர்வே = மனிதம்;
* சிறுபான்மை உணர்வு = மனிதம் அல்ல -ன்னு சொல்லாது சங்கத்தமிழ்!

இன்றைய One Sided Love, மாற்றுப் பாலினம், ஓரினக் காதல் கூறுகள் கூடச் சங்கத் தமிழில் உண்டு
ஒங்களுக்குத் தெரியுமா?:) இதை எப்படிப் பதிவாப் போடுறது -ன்னு தெரியலையே, முருகா!:)

கைக்கிளைக்கு வருவோம்!
தொல்காப்பியரும் இதைச் சொல்லிச் செல்கிறார்;
அன்பின் ஐந்திணை = முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை; (புணர்தல் முதல் பிரிதல் வரை)
ஆனா அதுக்கும் முன்னாடியே தான் கைக்கிளையும் வைக்கிறாரு;

* காதலுக்குப் பின்னர், “அவனே”-ன்னு காத்திருந்தால் = முல்லை
* காதலுக்கு முன்னர், “அவனே”-ன்னு காத்திருந்தால் = கைக்கிளை

ஆண்பாற் கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை -ன்னு இரண்டுமே உண்டு!
வெள்ளிவீதியார் என்னும் துணிவுள்ள Woman Poet;
ஆண்கள் மட்டுமே பாடிய “முலை/அல்குல்” சொல்லாட்சிகளை, பெண்ணும் துணிந்து பாடிக் காட்டியவர்; ஆண்டாளுக்கும் முன்னோடி; அவள் மனசால் கொண்ட காதல் வாழ்வு – கைக்கிளை – பாடல்கள் கொட்டிக் கிடக்கும் சங்கத் தமிழ்!


1 sided luvபின்னாளில் தான், கைக்கிளை/ பெருந்திணை இரண்டையும் = “புறத் திணை” என்று ஆக்கினார்கள்;
“தொகுத்தவர்கள்”, அகநானூற்றில் வைக்காமல், புறநானூற்றில் தொகுத்து வைச்சிப்புட்டாங்க;

ஆனா அதையும் மீறி, கலித்தொகை என்னும் புரட்சி நூல்/இசை நூல்,
கைக்கிளையை, அகத்திணையில் கொண்டாந்து வைக்கும்!:)

பின்பு வந்த திருக்குறளும், காமத்துப் பாலில் கைக்கிளையை வைத்தது!
தகை அணங்கு உறுத்தல், குறிப்பறிதல் ஆகிய அதிகாரங்களில், கைக்கிளையைக் காணலாம்!

கைக்கிளைக் காமம் = இறுதி வரை, ஒருதலையாகவே இருந்து விடுவது அன்று!
* தலைவனுடைய மாறிலா “வேட்கையை”…
* தலைவி பின்னர்ப் புரிந்து கொள்ளும் போது, அது “அன்பாக” மலரும்.
ஆகவே “கைக்கிளை = காதலின் தொடக்கம்” எனவும் கொள்வார்கள்!

Haiyo, Above Statement நானா அடிச்சி விடல:) சொல்வது நம்பி அகப் பொருள்; “அன்பின் ஐந்திணைக் களவு முந்துற கைக்கிளை நிகழ்வது ஒன்றும் இயல்பே” எனும் நம்பியகப்பொருள் நூற்பா சொல்லும்;

வாங்க, இன்னிக்கி அப்படியொரு காதல் தோல்வி -> காதல் வெற்றியான கதையைப் பார்ப்போம்! My fave murugu poet:)


நூல்: கலித்தொகை 62
கவிஞர்: கபிலர்
(இசை: சுரிதகம் பெற்று வந்த கொச்சகக் கலிப்பா)

தலைவன் (மனசுக்குள்):
“மேவினும், மேவாக் கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான்
புல் இனிது ஆகலின், புல்லினென்” எல்லா!தலைவி (மனசுக்குள்):
“அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,
கூறும் சொல் கேளான், நலி தரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?”


காபி உறிஞ்சல்:

தலைவன் மனசுக்குள் சொல்வது:
A Tear In Your Eyesa-tear-is-made-ofமேவினும், மேவாக் கடையும்,
அஃது எல்லாம் நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்;

தலைவியே, நீ என்னைக் கொண்டாயோ? கொள்ள வில்லையோ?
அதெல்லாம் நீயே அறிவாய்; நான் அறியேன்!

பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்!
நின்னை யான் புல் இனிது ஆகலின், புல்லினென்” எல்லா!

ஆனா, எங்கோ என் உள்ளுக்குள் உள்ளுக்குள் = ஓர் இன்பம்!
(உன்னைக் கூட வேண்டும் என்றில்லை); உன்னை நினைக்கும் போதே = இன்பம் வந்து விடுகிறது;
அதான் உன்னையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன் = புல் இனிது;

“புல் இனிது”; புல் = small;
புல்லுதல் = think/nearness
நினைப்பு = சிறு சிறு பொறியால் உருவாகும் Reflex Action! அதான் தமிழில், புல்லுதல் = நினைத்தல்!

PAR00316RM-00235318-001பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்
= பூங்கொத்திலே, மெல்-அழகா சம்மணம் போட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்கு பூக்கள்; (பூ அமன்ற இணர்)
= ஆனா அந்தப் பூங்கொத்துக்குள் செல்ல முடியாத கொடி போன்றவளே!

நடுவுல, சம்மந்தா சம்பந்தமே இல்லாத வருணனை வரும்-ப்பா சங்கத் தமிழ்ல -ன்னு சிலரு சொல்லுவாய்ங்க:) அதென்ன “பூங்கொத்துள் செல்லாக் கொடி”?

= என் மனசுக்குள் பூத்த பூங்கொத்து; அது ரொம்ப மெல்லீசு;
= அதுக்குள்ளாற ஒரு கொடி (நீ), செல்ல முடியாதா என்ன? செல்ல முடியும்;
= மலருக்குள், கொடி, எளிதா ஊடாட முடியும்; அதான் இயற்கை;
= ஆனா, உன் பிடிவாதம்? அடியே, இது என்ன இயற்கையோ?:)

இதான் மறை பொருள் வருணனை:) இதுக்கு இறைச்சிப் பொருள் -ன்னு பேரு சங்கத் தமிழில்!


தலைவி மனசுக்குள் சொல்வது:
அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,
கூறும் சொல் கேளான், நலி தரும்;

கொஞ்சம் கூட தருமமே இல்லாம நடந்துக்கறானே! புரிஞ்சிக்கும் திறமையைத் தொலைச்சிட்டானோ?
கூறும் சொல் கேளான்!
இப்படியே இவன் மொத்த வாழ்க்கையும் பாழ் ஆயிருமோ? ஐயகோ! இது அவனுக்கு நலிவு தருமே!

பண்டு நாம் வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்;
அவனொடு மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?”

reunitedஇவன் இப்படி உறுதியாக என்னை மனசால் தாங்குவதைப் பார்த்தால்…
பண்டு நாம் வேறு அல்லம்
= சென்ற பிறவியில், விட்ட குறையோ தொட்ட குறையோ?

முற் பிறவியில் நாங்கள் வேறு வேறு அல்ல! ஒன்றே! ஒன்றானவன் உருவில் ரெண்டானவன்!
அவனொடு மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு? = அவனிடம் ஏன் நெஞ்சமே உனக்கு இந்த மாறுபாடு?

ஏய் மனசே, அவனொடு மாறுபாடு எதுக்கு?
= வேணாம்;
= உன்னோடு மாறுபடு; அவனோடு ஈடுபடு!

dosa 107/365

Advertisements
Comments
8 Responses to “Love Failure > கைக்கிளை > Love Success!”
 1. //பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்// என்ன அருமையான ஒரு வரி! பூங்கொத்து மேல் அமர்ந்த பூக்கள், அதனின் உள் புக முடியாத கொடி!

  எல்லா காதல்களுக்குமே ஒரு முற் பிறவி தொடர்ச்சி இருப்பது நிச்சயம். ஆனால் அங்கும் ஒற்றுமையில் வேற்றுமையும், வேற்றுமையில் ஒற்றுமையும் இருப்பது இயல்பு தானே! அதனால் பார்த்த மாத்திரத்தில் இரு மனம் ஒரு மனமாக மாறுமா? இல்லை கொஞ்சம் புரிதல் தேவையா? வெளி தோற்றத்தால் ஈர்ப்பு வரலாம் அல்லது குணமே ஒருவரை ஈர்க்கலாம். அதற்கு நேரமும் சரியான செயலும் கை கூடி வர வேண்டும். அதனால் சம்மந்தப் பட்ட இருவருக்கும் ஒரே எண்ணம் வரும் பொழுது தான் ப்ரபோசல் வெற்றி பெரும். Will you marry me என்ற கேள்விக்கு yes என்ற பதில் அனைவருக்கும் உடனே கிடைத்துவிடுவதில்லையே :-)

  //நடுவுல, சம்மந்தா சம்பந்தமே இல்லாத வருணனை வரும்-ப்பா சங்கத் தமிழ்ல -ன்னு சிலரு சொல்லுவாய்ங்க:)// இதை படிக்கும் பொழுது சமந்தா ஞாபகம் தான் எனக்கு வந்தது :-)

  amas32

  Like

 2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_15.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  Like

 3. மிகவும் அருமை…
  படிக்க, படிக்க ..இனிமை…
  ஆனால் இதில், ‘பிறவி’ பற்றி கூறப்படுகிறது, எனில் சங்ககால மக்களிடம், ‘எழுபிறப்பு’ பற்றியான நம்பிக்கைகள் உண்டா…?

  நன்றி..

  Like

  • முதல்-இடைச் சங்க காலங்களில் “ஏழு பிறவிகள்” போன்ற ஹிந்து ஜென்மா நம்பிக்கையெல்லாம் இல்லை:)
   எழு பிறவி என்பது = பிறவி எழும் தொறும், எழும் தொறும்!

   இம்மை/மறுமை -ன்னு நம்பிக்கை மட்டுமே உண்டு; அதுவும் காதலில் அதிகம்:)
   இம்மை மாறி, மறுமை ஆகிணும், நானே உன் நெஞ்சு நேர்பவளே -ன்னு “அவள்-அவன் உறவை” மட்டுமே சொல்ல வந்தது;
   ஜென்மா, பித்ரு கடன், கர்ம பலன், பிறவி அழிஞ்சி மோக்ஷம் = இதெல்லாம் பின்னாளில் தான்! வடநெறிக் கலப்பால் வந்தவை!

   Like

 4. Vno says:

  அருமை.!

  Like

Trackbacks
Check out what others are saying...
 1. […] உண்மையல்ல, கைக்கிளை என்பது வேறு சில பொருளும் கொண்டது என […]

  LikeLeave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: