கானல் வரி – யாழும் ஊழும்!

சிலப்பதிகாரத்தின் முக்கியமான கட்டம் = கானல் வரி!
கோவலன்-மாதவி = பிரிவுக் கட்டம்!
அக அழகு அன்றி, முக அழகு அதிக நாள் நில்லாது என்பதற்குச் சாட்சி!
காதல் அல்லாது, காமம் அதிக நாள் நில்லாது என்பதற்குச் சாட்சி!

இந்திர விழா – கடலாடு காதை!
கடலில் ஓடிப் பிடிச்சி விளையாடும் கோவலன்-மாதவி = Beach Romance!
மாதவி, யாழைக் கோவலனிடம் நீட்ட, அவன் காமம் ததும்பப் பாடுறான்;

= ஆண்கள் -ன்னா அப்படி இப்படி  இருப்பாங்க -ன்னு Double Meaning உள்ள பாட்டு!
= சேரல் மடவன்னம் சேரல் நடை ஒவ்வாய் -ன்னு மடக்கு அணியால் மடக்கும் பாட்டு!

மாதவி துணுக்கு உறுகிறாள்; அந்த யாழை வாங்கித் தானும் போட்டியாப் பாடுறா!
= பெண்கள் மனசிலும் ஏக்கங்கள் – தாபங்கள் -ன்னு பாட்டு!
= சோழனால் மட்டும் தானா காவிரிப் பெண்ணுக்கு இன்பம்? -ன்னு பாட்டு!

அவன் பாட்டை விட.., அவ பாட்டு = கருத்தாழம்- Double Meaning மிக்க பாட்டு!
அவ்ளோ தான்; பொத்துக்கிட்டு வருது கோவலனுக்கு = காமம் மிக்க கழிபடர் கிளவி!

தானும் தானே அப்படிப் பாடினோம்? – என்ற நியாயம் உறைக்கவேயில்லை அவனுக்கு!
கானல் வரி யான் பாட,  தான் ஒன்றின் மேல் மனம் வைத்து…,
மாயப் பொய் கூட்டும் மாயத்தாள்
-ன்னு பொது இடத்திலேயே ரொம்பவே எகிறுகிறான்! முருகா!:(

மாதவியிடத்திலும், கண்ணகியை எதிர்பார்த்தானோ?
எது-ன்னாலும் அவனே! = கண்ணகியின் வரம்பிலா அன்பு!

கிளம்பி விட்டான்!
முன்பு மாதவியிடம் சொன்ன உன் ஒயில் உடம்பின் ஒவ்வொரு பாகத்திலும் துடிப்பு
= எதுவுமே இப்போ நிற்கவில்லை!

“யாழ் ஏறி வந்த ஊழ்” = அதுவே கானல் வரி!

பாட்டில் சோகம் இல்லை! பாட்டுள்ள கதையில் மட்டுமே சோகம்!
இக்கவிதை காம இன்பம் மிக்கது:)
முன் கதையை மறந்து, பாட்டின் சொல்லழகில்-இசைநடவில் மனத்தை வையுங்கள்!


நூல்: சிலப்பதிகாரம் (புகார்க் காண்டம்) ; காதை: கானல் வரி
கவிஞர்: இளங்கோவடிகள்
துறை: பாங்கன் கேட்ப, தலைமகன் உற்றது உரைத்தவை
பண்: முரி வரி (எடுத்த இயலும் இசையும் தம்மின், முரித்துப் பாடுதல் முரி எனப் படுமே)

கோவலன் பாடுகிறான்:

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே!

திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே!!


காபி உறிஞ்சல்:
(வாய்விட்டு வாசித்துக் கொண்டே படியுங்கள்;
முரி வரிச் சந்தம் – அதாச்சும் வளைஞ்சி வளைஞ்சி வரும் சந்தம் தெரியும்)

பொழில்தரு நறுமலரே = சோலையில் பூக்கும் வாசமுள்ள மலரே
புதுமணம் விரிமணலே = அதனால் மணலும் மணக்குது (அவ உடம்பு அழுக்கும் மணக்குதே)
பழுதறு திருமொழியே = குற்றமில்லா இன்பப் பேச்சே
பணைஇள வனமுலையே = திண்-ணென்று மூங்கில் போல், இளமையாய், காட்டுச் செழிப்பு முலையே!

முழுமதி புரைமுகமே = முழு நிலவு போன்ற முகமே
முரிபுரு வில்இணையே = வில்லுக்கு இணையாய் வளையும் புருவமே
எழுதரும் மின்னிடையே = எழுகின்ற மின்னலைக் கொண்ட இடையே
எனையிடர் செய்தவையே = என்னைத் துன்புறுத்தியவை இவையே!


திரைவிரி தருதுறையே = அலைகள் வீசும் சல-சல துறையே
திருமணல் விரியிடமே = மணல் பரந்த நெடு-நெடு இடமே
விரைவிரி நறுமலரே = மணம் கமழும் நறு-நறு மலரே
மிடைதரு பொழிலிடமே = மகரந்தம் சிந்தும் கிளு-கிளு சோலையே!

மருவிரி புரிகுழலே = வாசனை விரிக்கும் சுருள் கூந்தலே
மதிபுரை திருமுகமே = நிலவை ஒத்த திரு முகமே
இருகயல் இணைவிழியே = இரண்டு மீன்கள் ஆடும் கண்ணே
எனையிடர் செய்தவையே = என்னைத் துன்புறுத்தியவை இவையே!

மிடல்புக்கு அடங்கா வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடை – இழவல் கண்டாய்

* அன்பே, பாரம் தாங்காது உன் இடுப்பு ஒடிந்து விட்டால் என்னாவது?
= எனக்குக் கீழே படுக்க இடம் வேணுமே!
* எனவே, உன் முலைப் பாரத்தை என் தோளில் ஏற்றி வை
= உன் இடையைப் பாதுகாத்து, என் இடத்தைப் பாதுகாப்பாய்!

dosa 40/365
Twitterஇல் எப்பவோ நான் இட்ட இந்த வரிகளை – நேற்று மறுபடியும் RT செய்து, இப்பாட்டின் தமிழ் இனிமையில் மகிழ்ந்த நண்பர்கள் @gpradeesh, @iashaan @vaanmugil @shakings8 = நன்றி:)

Advertisements
Comments
10 Responses to “கானல் வரி – யாழும் ஊழும்!”
 1. அன்பின் கேயாரெஸ் – சங்கத் தமிழிலக்கியங்க்ளில் காம உணர்ச்சி சாதாரணமாக பாடல்களில் உண்டு – ஆனால் இவ்வளவு விபரமாக விளக்கங்களும் காமரசம் சொட்டும் படங்க்ளும் தேவையா ? வயதுக் கோளாறா ? காதல் இல்லாத காமம் நிற்காதென்பது சரிதான். சிந்தனை நன்று – இருப்பினும் படங்கள் படுத்துகின்றன. எடுத்து விடலாமே ! நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

  • தவறு இருப்பின் மன்னிக்கவும் சீனா சார்
   பாடலை ஒட்டி வருமாறு தான் படங்கள் இடுகிறேன்..
   இனி கவனத்தில் கொள்கிறேன் – நன்றி:)

   //வயதுக் கோளாறா ?//
   :)))))
   சில சமயம், சங்கத் தமிழை இளைஞர்களிடம் கொண்டு செல்ல, இது போன்ற விரசமில்லா, ஆனா, “தூண்டும்” படங்களும் உதவுகின்றன:)

   Like

 2. நன்றாகத் தான் வர்ணிக்கிறான் கோவலன். ஆனால் ஊழ்வினை, பிரிய வேண்டிய கட்டம் வருகிறது அவன் வாழ்க்கையிலும்!

  //பழுதறு திருமொழியே // என்று பாடிய வாயால் அவள் சொன்ன சொற்களில் உடனேயே பழுதை பார்க்கிறானே! :(

  //முரிபுரு வில்இணையே // கோ படத்தில் நடித்த கார்த்திக்காவின் வில் போன்ற புருவம் போல! :-)

  ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகான அழகின் வருணனை.

  மாதவியின் முழு மதியும், மின்னல் இடையும், வாசனை மிகுந்த சுருள் கூந்தலும், இரண்டு மீன் போன்ற கண்களும் கோவலனை ரொம்ப துன்புறுத்துகின்றன.

  வரிக்கு வரி இளமை துள்ளுகிறது. கற்பனை இறக்கை கட்டி பறக்கிறது.

  அங்கே கண்ணகி அவனை காணாது தவித்து உருகிக் கொண்டிருக்கிறாள், இங்கே இவன் காம வேட்கையில் உருகி தவிக்கிறான்.

  amas32

  Like

  • அதாம்மா, யாழ் ஏறி வந்த ஊழ்:)

   //பழுதறு திருமொழியே // என்று பாடிய வாயால் அவள் சொன்ன சொற்களில் உடனேயே பழுதை பார்க்கிறானே! :(//
   Sometimes Men are Hypocrites, like this;
   Chol onnu, Cheyal onnu

   //கோ படத்தில் நடித்த கார்த்திக்காவின் வில் போன்ற புருவம் போல! :-)//
   இதெல்லாம் அநியாயம்; பாருங்க சீனா சார் சொல்லி இருக்காரு! நானே படங்களைக் கொறைக்கப் பாக்கலாம்-ன்னா, நீங்க உசுப்பேத்தி விடறீங்களா?:))

   //அங்கே கண்ணகி அவனை காணாது தவித்து உருகிக் கொண்டிருக்கிறாள், இங்கே இவன் காம வேட்கையில் உருகி தவிக்கிறான்//
   :(
   Yes… Only when the heart sees, eyes will see!
   Until then, itz misery!:(

   Like

 3. rAguC says:

  சந்தம் அழகாக வருகிறது பாட்டில்- இது போன்ற பாடல்கள் ஏன் மனப்பாட செய்யுள்களாக பாடப்புத்தகங்களில் வைக்கப்படவில்லை. மனப்பாட பாடல்கள் மனனம் செய்யும் பொழுது மொழியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி மேலும் கற்கத் தூண்டும் விதமாய் இருக்க வேண்டும். படித்து மதிப்பெண் எடுக்க வேண்டிய விதமாய் இருந்தால், அமுதத்தமிழ் மீது எரிச்சல் தான் வரும்.

  இப்படி ஒரு பாட்டு தான் எனக்கு தமிழார்வத்தையே தூண்டியது ( அதுவும் மனனச் செய்யுள் இல்லை என்பது தான் துன்பியல் நிகழ்வு)

  எந்த நூல் என்று தெரியாத சிவனை பாடும் அந்த பாடல் இதோ…

  “நதியாடிய செஞ்சடையாய் நகைவென் மதியாய், மதியாதவர் தம் மதியிற் பதியாய் பதினெண்கணமும் பரவும் துதியாய் படரும் சுடரே சரணம்”

  Like

  • சந்தம் என்பது தமிழிசைச் சொத்து! அருணகிரி காலத்தில் உச்சம்!

   * பரி-பாடல் = Melody
   * கலி-தொகை = Rock
   இப்படி ஆரம்பிச்சி, சிலம்பு/மேகலையில் இன்னும் வரி-முரி ன்னு விரிஞ்சி..
   திருமழிசை ஆழ்வார் காலத்தில் = திருச் சந்த விருத்தம் -ன்னே நூல்!

   சம்பந்தர் போன்ற நாயன்மார்களில் கொஞ்சும் சந்தம், கம்பனிலும் கொஞ்சும்!
   ஆனா உச்சத்துக்குச் சென்றது = அருணகிரியின் திருப்புகழில் மட்டுமே!
   பிற்பாடு மக்கள் இலக்கியம் = பள்ளு/ குறவஞ்சியில்
   ———

   நீ சொன்ன பாட்டு, திருவிளையாடற் புராணம்!:)
   ஈசன் சிவபெருமானை அப்படியே சந்தத்தால் கொஞ்சும் பாட்டு!

   பெரியாய் சரணம் சிறியாய் சரணங்
   கரியா கியவங் கணனே சரணம்
   அரியாய் எளியாய் அடிமாறி நடம்
   புரிவாய் சரணம் புனிதா சரணம்

   நதியா டியசெஞ் சடையாய் நகைவெண்
   மதியாய் மதியா தவர்தம் மதியிற்
   பதியாய் பதினெண் கணமும் பரவுந்
   துதியாய் சரணம் சுடரே சரணம்

   நதியா-ன்னு தொடங்குவதால், சினிமாக் கிளி நதியா-ன்னு நினைப்பாக்கும்?:))

   Like

 4. devarajan97 says:

  சிருங்காரம் இலக்கியத்தின் முக்கிய அங்கம்.
  அதையும் பாங்குறப் பகிர்ந்துள்ளார் இரவி சங்கர்.
  வாழ்த்து(க்)கள் . ‘க்’ போடலாம்னா சேத்துப் படிங்க,
  வேண்டாமுன்னா எடுத்துப்போட்டு படிங்க

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: