“தொடை”யில் எது-கை?

தொடை = ரொம்ப அழகானது!
தொடையில் எது-கை வைத்தல் = மிக்க இன்பம்! :)

யோவ், நான் தமிழ்த் தொடையைச் சொன்னேன்-யா!:))
மொத்தம் 4 தொடைகள் = எதுகை, மோனை, இயைபு, முரண்தொடை…

“தொடை” -ன்னா = மாலை!
மாலை போல், செய்யுளில் ஊடால வச்சித் “தொடு”ப்பதால் = தொடை!

எதுகை-மோனை -ல்லாம் ஒங்களுக்கே தெரிஞ்சது தான்!
மற்ற தொடைகள் – இயைபு, முரண் -ன்னு சேர்ந்து பாக்கலாம், வாங்க! தொல்காப்பியர் சொல்லிக் கொடுக்கும் தொடை!


நூல்: தொல்-பொருளதிகாரம்: செய்யுளியல் 392-396
கவிஞர்: தொல்காப்பியர்

மோனை, எதுகை, முரணே, இயைபு, என
நால் நெறி மரபின, தொடை வகை என்ப.

அளபெடை தலைப்பெய, ஐந்தும் ஆகும்.
பொழிப்பும், ஒரூஉவும், செந்தொடை மரபும்,
அமைத்தனர் தெரியின், அவையுமார் உளவே.


காபி உறிஞ்சல்:

நூல் நெறி மரபு = செய்யுள் இலக்கண மரபு
அதுல தொடை வகை = 1. மோனை, 2. எதுகை, 3. முரண், 4. இயைபு
வாங்க எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்!

1. மோனை
ன்பும் றனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
ண்பும் யனும் அது

முதல் எழுத்து ஒன்றி வருவது = மோனை
= “அ”ன்பும், “அ”றனும்;
= “ப”ண்பும் “ப”யனும்;
= “அ”  என்னும் அதே முதலெழுத்து,  அடுத்தடுத்த சீர்களில் ஒன்றி வந்திருக்கு பாருங்க!
= சில சமயம், இன எழுத்துக்களும் மோனையா வரும்;  அ-ஆ, ம-மா;  Eg: மச்சி – மாமூ:))

2. எதுகை
ர முதல எழுத்தெல்லாம் ஆதி
வன் முதற்றே உலகு

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது = எதுகை
(அ”க”ர,  ப”க”வ)

இதுல ஒரு Disclaimer:)
=  அகர,  ‘பா’கவ -ன்னு வரக்கூடாது; கணக்கில் சேத்துக்க மாட்டாங்க:)
=  ஒன்னு அகர,பகவ -ன்னு இருக்கணும்;  இல்லாட்டி…  ஆகர,  பாகவ -ன்னு இருக்கணும்:)
=  குறில் வந்தா குறிலே வரணும்; நெடில் வந்தா நெடிலே வரணும்!

3. முரண்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

அடுத்தடுத்து முரண்பட்டு வருவது = முரண் தொடை! (பெருக்கம், சுருக்கம்)

4. இயைபு
நந்த வனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தான்டி

கடைசி எழுத்து ஒன்றி வருவது = இயைபு;
ஆங்கிலத்தில் = Rhyming:)

Words are lovely dark and deep
But I have promises to keep
and Miles to go before I sleep


மோனை-லயே…

1. இணை மோனை,  2. பொழிப்பு மோனை,  3. ஒரூஉ மோனை,  4. கூழை மோனை
5. மேற்கதுவாய்,  6. கீழ்க்கதுவாய்,  7. முற்று மோனை -ன்னு Subdivision எல்லாம் இருக்கு!
பயந்துறாதீங்க;  அதெல்லாம் பொலவர்களுக்கு:)

இப்போத்திக்கு,  நமக்கு இது போதும்;
Enough to appreciate  கவிதை அழகு! Juz one lil’ example…

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
= இது முற்று மோனை; முதல் அடியில், முழுக்கவே து, து -ன்னு வருவதால்!
= முற்று எதுகையும்; முழுக்கவே ப், ப் -ன்னு வருவதால்!

எதுகை, மோனை, இயைபு, முரண் மட்டுமே தொடையல்ல!..
= அந்தாதி,  இரட்டை,
= அளபெடை, செந்தொடை -ன்னு இன்னும் 4 தொடை இருக்கு!  அது இன்னோரு நாளைக்கி:)

Summary Tip:

பொதுவா, தொடைகள் = 4
1. முதல் எழுத்து ஒன்றி = மோனை
2. இரண்டாம் எழுத்து ஒன்றி = எதுகை
3. அடுத்தடுத்து முரண்பட்டு வருவது = முரண்
4. கடைசி எழுத்து ஒன்றி = இயைபு

அம்புடுதேன்,  வர்ட்டா…

வீட்டுப் பாடம்:
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் = இது என்னா தொடை?
2. கீழ்க்கண்டவற்றுக்கு இலக்கணக் குறிப்பு வரைந்து, எதுகை-மோனைகளைக் காட்டுக:))

பிகரும், பிலிமும், பிள்ளைப் பருவம்
அகமும் அதனில் அனுஷ்கா உருவம்!

dosa 43/365

Advertisements
Comments
9 Responses to ““தொடை”யில் எது-கை?”
 1. ranjani135 says:

  பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றை
  பற்றுக பற்று விடல்.

  முற்று மோனை + முற்று எதுகை

  கற்க கசடற கற்பவை கற்றபின் – மோனை
  நிற்க அதற்கு தக – எதுகை

  பிகரும், பிலிமும், பிள்ளைப் பருவம்
  அகமும் அதிலே அனுஷ்கா உருவம் —-எதுகை

  Like

  • //கற்க கசடற கற்பவை கற்றபின் – மோனை//
   Sooper! சரியே!:)
   முற்று மோனை தான்!

   //பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றை//
   Sorry, இது முற்று மோனை இல்லம்மா:)

   முற்று மோனை = ஒரு அடியில் எல்லாமே மோனையா வரணும் = 1234
   இதுல 4th posn = “அப்பற்றை”-ன்னு “அ” வந்துருது
   123 -ன்னு மூனு இடங்களில் வருவதால் = இது கூழை மோனை:)

   //பிகரும், பிலிமும், பிள்ளைப் பருவம்
   அகமும் அதிலே அனுஷ்கா உருவம் —-எதுகை//

   Ok, but this has other things also; Explain all:)

   Like

  • 12 = இணை மோனை
   13 = பொழிப்பு
   14 = ஒரூஉ

   123 = கூழை
   134 = மேற்கதுவாய்
   124 = கீழ்க்கதுவாய்
   1234 = முற்று

   கோலம் போடுறாப் போலவே இல்ல?:))

   Like

 2. //பிகரும், பிலிமும், பிள்ளைப் பருவம்
  அகமும் அதிலே அனுஷ்கா உருவம் //

  1. முதல் எழுத்து ஒன்றி வருவது = மோனை
  //பிகரும் பிலிமும், அகமும் அதிலே// . ஆதலால் மோனை. இது கூழை
  மோனையா?

  2. இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது = எதுகை
  //பிகரும், அகமும்// இரண்டிலும் இரண்டாம் எழுத்து க, எதுகை.

  3. அடுத்தடுத்து முரண்பட்டு வருவது = முரண்
  //பிகரும், அகமும்// உடல்(வெளியே) உள்ளம்(உள்ளே) முரண் என்று எடுத்துக்
  கொள்ளலாமா? – முரண் தொடை

  4. கடைசி எழுத்து ஒன்றி வருவது = இயைபு
  //பருவம், உருவம்// – இயைபு.

  அனுஷ்கா மேல் பாடல் இயற்றி இரண்டே வரிகளில் இன்றைய இலக்கணப் பாடத்தை விளக்கி விட்டீர்கள். அது தான் KRS! :-)

  //But I have promises to keep
  and Miles to go before I sleep//
  I believe these were the lines Jawaharlal Nehru wrote or had it book marked just before he suffered a stroke in his bedroom at night. I think he later died of a died of hear attack. So sad.

  amas32

  Like

  • 100/100-ம்மா:) Congratulations!

   பிகரும், பிலிமும், பிள்ளை
   அகமும் அதிலே அனுஷ்கா
   = கூழை மோனை

   எதுகையும் சரியே!
   முரண் = வெளிப்படையா இருக்கணும்; இதில் இல்லை:)
   பருவம்-உருவம் = இயைபு தான்! கலக்கிட்டீங்க:)

   //அனுஷ்கா மேல் பாடல் இயற்றி இரண்டே வரிகளில் இலக்கணப் பாடத்தை
   அது தான் KRS! :-)//
   போட்டுச் சாத்திட்டீங்க! Me finger on the lips:)

   That was a poem from Robert Frost; Ranjani madam has also told paarunga!
   Stopping by Woods on a Snowy Evening – Thatz the poem, which Nehru liked.

   Like

 3. cheenakay says:

  அன்பின் கேயாரெஸ் – தொடையில் எது கை – சூப்பர் தலைப்பு – எதுகை, மோனை, முரண், இயைபு மர்ரும் முரண் வகைகள் அனைத்தையும் விள்க்கையமை நன்று. நல்வாட்ழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 4. ranjani135 says:

  But I have promises to keep
  and Miles to go before I sleep

  Written by Robert Frost.

  ஊருக்குப் போயிருந்ததால் இப்போது தான் சரியான விடையை பார்த்தேன். அடுத்த முறை முற்றிலும் சரியான விடை தருகிறேன்!

  Like

Trackbacks
Check out what others are saying...
 1. […] Source: “தொடை”யில் எது-கை? […]

  LikeLeave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: