“அணி” வள்ளுவம் or “சமய” வள்ளுவம்?

இன்னிக்கி, வள்ளுவத்தில் சில அணிகளைப் பார்க்கப் போறோம்!
வள்ளுவமே ஒரு “அணி” தானே தமிழுக்கு!

= நிரல்நிரை அணி,  இல்பொருள் உவமை அணி.. இதெல்லாம் எட்டாப்புல படிச்ச ஞாபகம் இருக்கா?:))
= ஆனா, அதுக்கும் முன்னாடி, ஒரு “பார்வை”!
= “வள்ளுவரின் சமயம்” -ன்னு மெத்தப் படித்த “பண்டிதர்கள்” பலவாறு பேசுவதைக் கேட்டிருப்பீங்க! நீங்க என்ன நினைக்கறீங்க? பார்க்கலாமா?:)


வள்ளுவர் பற்றி ஒன்னுமே சொல்ல முடியாது!
அவர் = இவரோ? அவரோ?
அவர் சமயம் = இதுவோ? அதுவோ?  வெறுமனே வெட்டிப் பேச்சு! = ஏன்?

ஏன்னா…
* திருமுருகாற்றுப்படை = நக்கீரர் முருக அன்பர் -ன்னு சொல்லீறலாம்! நூலின் “நோக்கமே” முருகன் தான்!
* திருப்பாவை = கோதை திருமால் அன்பள் -ன்னு சொல்லீறலாம்! நூலின் “நோக்கமே” திருமால் தான்!
* திருக்குறள் = என்னா-ன்னு சொல்வீங்க?:) அந்த நூலின் “நோக்கம்” என்னங்க?

சங்கப் பாடல்களில், இனக்குழுத் தமிழ்த் தொன்மம் = முருகன்-திருமால் சேதி வரும்! அதுக்காக, அவை “பக்தி நூல்கள்” ஆகி விட மாட்டா:)
அவை, சங்க கால “மக்கள் வாழ்வியல்” = அதைக் காட்சிப் படுத்தும்; அவ்வளவே!

* காதலன், தன் காதலை நிரூபிக்க, திருமால் மேல் சூள் (சத்தியம்) செஞ்சான் -ன்னு மிகப் பழமையான கலித்தொகை!
* ஒடனே கலித்தொகை = “வைணவ நூல்” ஆயீறாது:) மருதன் இள நாகனாரை = “வைணவர்” ஆக்கீறது “மகா பாவம்” :(


சமயத்தை = “நோக்கமாக” வச்சி எழுதாத நூலை வைத்துக் கொண்டு, படைப்பாளியை “முத்திரை குத்தல்”
= அறமும் அன்று! ஆண்மையும் அன்று!  (இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே)

சென்னை மைலாப்பூரில், திருவள்ளுவர் சிலைக்கு, நெற்றியில் பட்டை அடித்து, கழுத்தில் கொட்டை போட்டு, அதன் கீழே..
“மேன்மை கொள் சைவ நீதி ஓங்குக உலகமெல்லாம்” -ன்னு எழுதி வச்சிருப்பாய்ங்க :(

வள்ளுவர் தேவஸ்தானம்

ஒரு உயர்ந்தவரின் கொள்கை ஒன்னும் இல்லாமப் போவணும் -ன்னா..
அவருக்குச் சிலை வைச்சி, “அபிஷேகம்” பண்ணாப் போதும் போல இருக்கே? அடக் கடவுளே!:(

அதை விடப் பெருங்கொடுமை: “வள்ளுவர் தேவஸ்தானம்”
மூலவர் = ஏகாம்பரேஸ்வர – வள்ளுவ நாயனார்:)

450px-Inside_Thiruvalluvar_Temple (navagraha)

“நவகிரஹ” வள்ளுவர்:(

யாரு கட்டினாங்களோ தெரியாது; சுமார் 100-200 ஆண்டுக்குள்ள தான் இருக்கும்! நவகிரஹம் கூட உண்டு!
பாவிங்களா.. “நவகிரஹத்துக்கும்” வள்ளுவருக்கும் என்னய்யா சம்பந்தம்? :((

இப்படித் தான், சிறந்த தமிழ்க் கவிஞரான கபிலர்-பரணரை, கபில தேவ நாயனார் – பரண தேவ நாயனார்-ன்னு ஆக்கி…
அவங்க எழுதாத “இரட்டை மணிமாலை”, திருமுறையில் வேறு வைக்கப்பட்டு விட்டது!


திருவிளையாடல் “புராணம்”
= இது, இன்னொரு படி மேலேயே போகும்:(
ஒரு சங்கத் தமிழ்க் கவிஞன் (நக்கீரன்) மேல்… “தருமி என்னும் பொய்க் கதையை” ஏற்றி…

= ஈசனோடு வாதாடிய “பாவம்” தீரணுமே..
= கருத்தளவில் பேசுறது  ஒரு “பாவமா”-ய்யா?? அதுவும் தமிழுக்காக?
(இன்னிக்கும் இப்படித் தான் இருக்காக, சில மக்கள்)

நக்கீரன், பொற்றாமரைக் குளத்தில் இருந்து “எழுந்து” வந்துட்டாலும்…
ஈசனைப் “பழித்த பாவத்துக்கு”…
பிற்பாடு நோயில் வாடி, கெஞ்சிக் கூத்தாடி…

“காளஹஸ்தி – கோபப் பிரசாதம்” பாடியதாக,  செய்யுள் செஞ்சி வைச்சிட்டாங்க சமயத் தமிழ்ப் பண்டிதாள்:(
ஆனா, நக்கீரரின் காலத்தில், “பிரசாதம்” -ன்னு வடசொல்லு புழங்குமா? -ன்னு கூட யோசிக்கலை; Gap in Logic;

இந்தப் புருடாணக் கதையை “ஆதாரமா” வச்சிக்கிட்டு…திருவிளையாடல் படமும் எடுக்கப்பட்டு விட்டது;
நான் மிக விரும்பும் இயக்குநர் AP Nagarajan;
பாவம், அவரு மேல தப்பில்லை; தமிழில் “புராணம்” எழுதுனது = பரஞ்சோதி முனிவர் தானே!

“அ முதல் ஹ” = 48 சம்ஸ்கிருத எழுத்து; அதான் 48 சங்கப் புலவர்கள் ஆச்சாம்;
கூட, சிவபெருமானே 49-வதா வந்து சங்கத்தில் உட்கார்ந்தாராம்!  சொல்லுறது: அதே “தருமி-திருவிளையாடல்” தான்!

திகழ்தரு அகார ஆதி , ஹாகாரம் ஈறாச் செப்பிச்
புகழ் தரு நாற்பத்து எட்டு, நாற்பத்து எண் புலவர் ஆகி

சங்க மண்டபம் உண்டாக்கித், தகைமை சால் சிறப்பு நல்கி,
அங்கு அமர்ந்து இருத்திர் , என்ன இருத்தினான் அறிஞர் தம்மை!

(சங்கப் பலகை கொடுத்த படலம் 2401; followed by தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்;)
————–

ஆக, சங்கப் புலவர்களுக்கே = சம்ஸ்கிருத எழுத்து தான் மூலம்? புரியுதோ?:(

ஒரு சங்கத் தமிழ்ப் புலவனை, இப்படியெல்லாம் கேவலப்படுத்தி…
நாமளும் “திருவிளையாடல்” படம் பாத்துட்டு, Sooper -ன்னு கை தட்டீருவோம்:(

ஆனா… கூந்தலை மோப்பம் புடிச்ச “செண்பகப் பாண்டியன்” = இவன் வரலாற்றிலேயே இல்ல!
நக்கீரர் காலத்து மன்னன் = (இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய) நன்மாறன்!
இதெல்லாம் மக்களுக்குத் தெரியவா போவுது? அவுத்து வுடு புராணத்தை:)

* சங்கத் தமிழ் = இயற்கை வழிபாடு! சுத்த “போர்”:)
* இப்படியெல்லாம் கதை பண்ணாத் தானே மக்கள் “குஷியா” இருப்பாக?:)

Let Mythology be Mythology; No issues!
But to mix it on Living Tamizh Poets & Tamizh asking Pardon… Shame!

இதெல்லாம் ஈசன் கேட்கலை; அவர் கருணை = தனிப்பெருங் கருணை;
சமய நிறுவல் மக்கள் தான் இதைச் செய்யுறது:(
நல்ல வேளை, கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், “திருவடிகள்” நிறைய வருவதால்…எவனும் வள்ளுவருக்கு “நாமம்” போடாம வுட்டானே!  வயிறு எரிஞ்சித் திட்டி இருப்பேன்!:(


“தமிழ் இலக்கியத்தில் சமய அரசியல்” -ன்னு ஆராய்ச்சியே பண்ணீறலாம்!

அக நானூறுக்கெல்லாம், பின்னாளில், கடவுள் வாழ்த்து -ன்னு எழுதிச் சொருகுனாங்க!
= தொன்மத்தில் சிதைத்தல்:(
இத்தனைக்கும் படிச்ச பண்டிதர்கள் தான்! ஆனா புத்தி?

பெரும்பான்மைச் சமூகமே, மரபில் முந்தி இருக்கணும் -ன்னு அடிமனசு எண்ணம்!
சிறுபான்மையா? சமணமா? = அடக்கி வாசி (அ) அழிச்சீருவோம்;
மரபில் கிட்டக்க வந்துறாதே – நாங்களே, நாங்களே!
19th CE பதிப்பகம் எல்லாம் எங்க கிட்டத் தான் இருக்கு; தொல் தமிழையே வேற மாதிரி மாத்தீருவோம்:)

குறளில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வரும் சொற்களை வச்சிக்கிட்டு..அவரோ? இவரோ? -ன்னு கிளம்பினா?
= யானையை அளந்த குருடர்கள் கதையாத் தான் முடியும்:)
= ஆனாலும் சிலருக்குக் “குருட்டுத்தனம்” தான் பிடிச்சிருக்கு, என்ன செய்ய?:(

வள்ளுவரோ, ஒரு வகையில், தமிழையே “மீறி”,
பொது மறை” -யாத் தான் செய்யறாரு!

காமத்துப் பால், அகத்திணை தானே? = ஆனா எங்காவது முல்லை, குறிஞ்சி -ன்னு குறளில் வருதா?
தமிழ் நில அமைப்புக்குள் மட்டும் அடக்காம = உலகப் பொது நூல்!
அப்படிப் பட்டவரா, சமயம் சார்ந்து, குறள் எழுதப் போறாரு???


இதுல தான், என் உள்ளத்துக்கு உவப்பான = திரு. வி. க!
தனிப்பட்ட அளவில் சைவப் பழம்; முருக அன்பரும் கூட!
ஆனா, தமிழைத் தமிழாக மட்டுமே அணுகுவாரு;
பலதும் துணிஞ்சி சொல்லி, “பண்டிதர்” பகையைச் சம்பாதிச்சிக்கிட்டாரு:)

ரொம்ப மென்மையே உருவான = திரு.வி.க
பெரியாரே கிண்டல் அடிப்பாராம், “பொண்ணாப் பொறந்துருக்க வேண்டியவருய்யா நீ” -ன்னு:))

மனித நேயம் மிக்க தொழிற்சங்கத் தலைவரும் கூட!
திரு.வி.க என்னும் தமிழறிஞனே – உன் உள்ளம் எனக்குத் தா!

மயிலாப்பூரில், வள்ளுவரைப் பாக்கவே பாவமா இருக்கும்:(
செல்லம் முருகா, வள்ளுவரைத் தயவு பண்ணிக் காப்பாத்து!


For a Change, இன்னிக்கு…
அணி இலக்கணமாவே, குறளைப் பார்க்கலாமா?

எடுத்துக்காட்டு உவமையணி:
தொட்டு அனைத்து ஊறும் மணற்கேணி – மாந்தர்க்குக்
கற்று அனைத்து ஊறும் அறிவு (396 – கல்வி)

இல்பொருள் உவமையணி:
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை – வன்பால் கண்
வற்றல் மரம் தளிர்த்து அற்று (78 – அன்புடைமை)

பல்பொருள் உவமையணி:
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சி பழம் (1120 – நலம் புனைந்து உரைத்தல்) 

தெரிதரு தேற்ற உவமையணி:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது (1201 – நினைந்தவர் புலம்பல்)


காபி உறிஞ்சல்:

அணிகளில் தலை சிறந்தது = உவமை அணி!
மிக எளிது, ஆனா மிக நுட்பம்!
நம்ம பேச்சு வழக்கில் கூட உவமை தெறிக்கும் = “உக்கும், இவன் கண்ணகிக்குக் கசின் பிரதரு போல”:)
அதான் இதன் வெற்றியே! மொத்தம் 24 உவமை அணிகள் உள்ளன; நம்ப முடியுதா?:)

1) எடுத்துக்காட்டு உவமையணி:

உவமையை எடுத்துக் காட்டி, பொருளைச் சொல்வது; ஆனா உவம உருபு வராது;

* உவமை: தோண்டத் தோண்ட மணலில் ஊற்று ஊறும்;
* (அது போல = உவம உருபு வரவில்லை)
* பொருள்: கற்கக் கற்கத் தான் அறிவு ஊறும்!

இன்னோரு முக்கியமான குறிப்பை, பல உரையாசிரியர்கள் தவற விட்டுறாங்க;
ஊற்றைத் தோண்டிட்டு, அப்படியே விட்டுட்டா = மணல் மூடிக்கும்;
அதே போல், கற்கத் துவங்கிட்டு, பாதியிலேயே விட்டுட்டா = மூடிக்கும்:) So, கல்வி = இறுதி வரை! (கற்று அனைத்து ஊறும் அறிவு)
————————————–

2) இல்பொருள் உவமையணி:

உலகத்தில் இல்லாத பொருளை, உவமையாச் சொல்வது;
(கற்பனை / நடக்க முடியாத ஒன்றை, உணர்ச்சி மிகுதியால் உவமை ஆக்குவது)

* கொடுமையான பாலை நிலத்தில், பட்ட மரம் தளிர்ப்பது போல்..
(தளிர்க்குமா? = தளிர்க்காது)
* அன்பே இல்லாத மனசை வச்சிக்கிட்டு, வாழ்க்கை வாழ்வதும்! (அந்த வாழ்க்கை தளிர்க்காது)
————————————–

3) பல்பொருள் உவமையணி:

ஒரே பொருளுக்குப் பலப்பல உவமை சொல்வது (அ) ஒரே உவமையில் பல பொருளை ஏற்றிக் கூறுவது

* அனிச்ச மலர் + அன்னத்தின் இறகு..
* அவை கூட, அவ காலுக்கு, நெருஞ்சி முள் தான்! Sooo Soft:)

இப்படி, பொண்ணு காலுக்கு, இரண்டு உவமை காட்டுவதால் = பல்பொருள் உவமை;

————————————–

4) தெரிதரு தேற்ற உவமையணி:

தெரி தருதல் = தெரியத் தருதல்
தேற்றல் = ஐயம் நீக்கல்

* கள்ளு = இதைக் குடிச்சாத் தான் இன்பம்; போதை இறங்கி விடும்
* ஆனா இவ நினைப்பு = நினைச்சாலே இன்பம்; இறங்கவும் இறங்காது

முதலில் வருவது ஐயம் = கள்ளு இனிதா?
அப்பறம் தெரி தருதல் = இல்லல்ல, கள்ளை விடக் காமமே இனிது:) வர்ட்டா?:))

dosa 14/365

Advertisements
Comments
15 Responses to ““அணி” வள்ளுவம் or “சமய” வள்ளுவம்?”
 1. சொ.வினைதீர்த்தான் says:

  என்னை DOSA அடிக்ட் ஆக்கிவிட்டீர்கள்!
  கற்பிதங்களையும் சமயங்களையும் தவிர்த்து வாழ்க்கையை, மனித உறவுகளை எழுதுகிற தங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன. பாராட்டுகள்.
  வள்ளுவ ஆர்வலன் என்ற முறையில் இந்தப் பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. நான் காப்பீடு, தன் முயற்சிப் பயிற்சியாளானாகப் பல ஆண்டுகள் பணியாற்றிய பொழுது “கற்க கசடற..” குறளில் எத்தனை கற்க இருக்கின்றன என்று கேட்டு கீழ்க்கண்டவாறு விளக்குவதுண்டு.

  1.கற்க – பாரதிதாசனின் பாடல் –படி, சங்கத் தமிழ் நூலைப் படி, காலையில் படி…
  2.கசடறக் கற்க
  3.கற்பவை கற்க — குறிக்கோள் இன்றிக் கண்டதைப் படிக்காமல் தேர்வு செய்து பயன் பெறப் படிக்க வேண்டும்.
  4.கற்றபின் கற்க — நீங்கள் கொடுத்துள்ள மணற்கேணி விளக்கத்திற்கு இணங்க மண்மூடாமல் நினைவுபடுத்திக் கொளல்.
  5. நிற்கக் கற்க – படித்துவிட்டு விட்டுவிடாமல் அதன்படி ஒழுகக் கற்க வேண்டும்.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  Like

  • ha ha ha
   no addiction, only seduction:)

   //வள்ளுவ ஆர்வலன் என்ற முறையில் இந்தப் பதிவு என்னை மிகவும் கவர்ந்தது//
   நன்ற! பலரும் மின்னஞ்சலில் இதே போல் சொல்லி இருக்காங்க!
   ஆனா, சமயம் சார்ந்த ஒரு சிலரு கோபத்திலும் இருக்காங்க:)
   எதுவாயினும், திரு.வி.க வழி… தமிழைத் தமிழாக அணுகி!

   //கற்க கசடற//
   செம விளக்கம், வினைதீர்த்தான்!
   இதுக்குத் தாப்பிசைப் பொருள்கோள் -ன்னு பேரு! ஒரு சொல்லு, கவிதையின் பல இடங்களுக்குச் சென்று, பொருள் குடுக்கும்!
   பாருங்க கற்க என்னும் சொல், ஊஞ்சல் ஆடுது, வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று!

   Like

  • amas32 says:

   அருமையான விளக்கங்கள் அளிக்கிறீர்கள் சொ.வி :-) நன்றி!

   amas32

   Like

 2. amas32 says:

  நாம பேச்சு வழக்கில் சொல்லும் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பதும் எடுத்துக்காட்டு உவமை அணியா?

  //* கொடுமையான பாலை நிலத்தில், பட்ட மரம் தளிர்ப்பது போல்..
  (தளிர்க்குமா? = தளிர்க்காது; அற்று = உவம உருபு)
  * அன்பே இல்லாத மனசை வச்சிக்கிட்டு, வாழ்க்கை வாழ்வதும்! (அந்த வாழ்க்கை தளிர்க்காது)//

  அருமையான விளக்கம்! சிலர் மனங்கள் அவ்வாறு தான் உள்ளது. இறைவனின் கருணையால் அவை மாற வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

  இரண்டு இரண்டு வரிகளில் எவ்வளவு பெரிய உலக தத்துவங்களை நம் முன் எடுத்து வைக்கிறார் வள்ளுவர். அவர் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் தான். வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய நன்னெறியை எடுத்துச் சொன்னவர். அவர் தொடாத துறையே இல்லை. ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் அவர் சொன்னது இன்றைய சமுதாய சூழலிலும் நூறு சதவிகிதம் ஏற்புடையதாக உள்ளது. எத்தனையோ உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகிற்கே பொதுவான திருமறையை தந்தவர் ஒரு தமிழர் என்று நினைக்கும் பொழுது பெருமை படாத தமிழ் நெஞ்சமும் இருக்கமுடியுமா?

  KRS எப்பவும் போல நல்ல படங்களுடன் சூப்பர் விளக்கம் :-) நன்றி :-)

  amas32

  Like

  • //நாம பேச்சு வழக்கில் சொல்லும் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பதும் எடுத்துக்காட்டு உவமை அணியா?//

   Not fully, But kind-of ma!
   இங்கே உவமை -ன்னு நேரடியா இல்லை! ஆனா கை போல் அளவு; உலகு போல் அளவு ன்னு எடுத்துக்கிட்டா… எ.கா உவமை அணியே!

   //அவர் தொடாத துறையே இல்லை//

   Yes, Including Risk Management & Financial Life Cycle:)

   //உலகிற்கே பொதுவான திருமறையை தந்தவர் ஒரு தமிழர் என்று நினைக்கும் பொழுது பெருமை படாத தமிழ் நெஞ்சமும் இருக்கமுடியுமா?//

   Very true!
   But, “பொதுமறை” என்பதால் doesnt mean every one has to accept!

   குறளில் பெண்கள்-பெண்ணியம் பற்றி எதிர்மறைக் கருத்துக்கள் இருக்கத் தான் செய்யுது!
   Also on Vegeterian & Alcohol – So itz not an Universal Code Book, But பொதுமறை = Generic Principles!

   Like

 3. //பெரும்பான்மைச் சமூகமே, மரபில் முந்தி இருக்கணும் -ன்னு அடிமனசு எண்ணம்! //

  இதை நீங்கள் சொல்லாது விட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன்…ஆனால் நீங்கள் சொல்லாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை. உண்மை தான். இப்போதும் கூட தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறையோ / தவறோ இருந்தாலும் சில தமிழ் “வெறியர்கள்” நேர்மையற்று அந்த தவறை மறைத்து விடுகிறார்கள். இது மிக தவறு. நேர்மை எங்குமே முக்கியம். நம்மது தவறுகளையும், இயலாமைகளையும் நேர்மையற்று மறைப்பது எவ்வகையான செயல்பாடு? இல்லாததை இருப்பது போல சொல்வது மிகவும் பழிப்புக்கு உள்ளாக வேண்டிய செயல்.

  // மணல் மூடிக்கொள்ளும் // மிக அருமையான மூன்றாம் கோண விளக்கம்.. கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு என்பது எவ்வளவு எளிமையாக சொல்லப்படுகிறது.

  வழமை போல் அருமை முருகா

  -rAguC

  Like

  • இதை எழுதியது = என் தீவினையே!
   இத்தனை படங்கள் – வள்ளுவருக்கு நேர்ந்த கொடுமை – கண் முன்னே காட்டியும் கூட…
   “சிவன் கோயிலை இடிக்கும் காக்கா”, “உத்தமக் காக்கா”, “மானங் கெட்ட காக்கா”, “கப்சா கண்ணுஸ்வாமி” என்று பொதுவில்/ ட்விட்டரில் ஏச்சு:((

   இதையே தான் டாக்டர் மா. இராசமாணிக்கனார், திரு.வி.க, ஞா. தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் எழுதியுள்ளார்கள் – இன்னும் கடுமையாக!
   அதைச் சற்றே தணிவித்துக் குடுத்தேன்
   இவர்களை எல்லாம் பொதுவில்/ ட்விட்டரில் ஏசமுடியுமா?
   இல்லை, இவர்கள் எல்லாம் = “வைஷ்ணவக் குஞ்சுகளா”?
   திரு.வி.க = சிவப் பழம், முருக அன்பர்; அவரும் “வைஷ்ணவக் குஞ்சா?”:(

   ஆனா, என்னைத் தான் அடித்துச் சிதைக்க முடியும்!

   பிறப்பால் சைவன்; அண்ணாமலையார் கோயிலைச் சுற்றிச் சோறூட்டப்பட்ட பிள்ளை;
   இருப்பினும், நாம் சார்ந்ததேயானாலும், தவறைத் தவறென்று திருத்திக் கொள்வது = பெரியார் தந்த பாடம்!
   இதே போல் வைணவக் குறைகளையும் மறைக்காது எழுதியுள்ளேன் (தசாவதாரம் படம் உட்பட)…

   தில்லையில் நந்தனார் சிலையை மீள் நிறுவிய முயற்சி,
   அனைத்து திருப்புகழ்களையும் ஒரே Map-இல் திரட்டிய murugan.org முயற்சி
   இதெல்லாம் தெரிஞ்சும்… “சிவன் கோயிலை இடிக்கும் காக்கா”, “மானங் கெட்டவனே” ஆகிப் போனான் ரவி!
   யார் வாயால் சொல்லக்கூடாதோ, அவன் வாயாலேயே, அத்தனை பேரும் பார்க்க… பொதுவில்:( திருப்பிச் சொல்லடி அடிக்கத் தெரியலை!

   இதுக்கு ஈசனே, என்னை அழித்துச் சிதைத்துக் கொள்ளட்டும்!
   முருகா என்று ஓதுவார் முன்!

   Like

   • சொ.வினைதீர்த்தான் says:

    இன்று பின்னூட்டங்கள் பார்த்தேன்.
    பல வேண்டாத மன வேதனைகளையும் உளச்சிக்கல்களையும் டிவிட்டர் போன்றவை தரும் என்பதை அறிந்துகொண்டேன். நேர்மையில்லாத விமர்சனங்களைப் புறந்தள்ளி தங்கள் அருமையான பணி தொடருங்கள். தெளிந்த, செறிந்த சிந்தனை தங்கள் இலக்கியப் பணியில் மிளிர்வதைக் காண்கிறேன்.
    என்றும் ஒருவுதல் வேண்டும் புகழ்
    நன்றி பயவா வினை. (652)
    நேர நிர்வாகத்தில் நேரம் கடந்து சென்று கொண்டே இருப்பதால் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் நமது செயல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ளுதலே நேர நிர்வாகம் என்பார்கள். வினை நலமே நேர நிர்வாகம்.
    ஒரு செயலில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெற்றால் புகழ் வரும். அல்லது ஒரு செயல் பிறருக்குப் பயன்பட்டால் நன்றி கிடைக்கும். வள்ளுவன் வாக்குப்படி புகழோ நன்றியோ தராத செயலை என்றும் விட்டுவிட வேண்டும். டிவிட்டர் போன்ற தொடர்புகள் பெரும்பாலும் புகழோ நன்றியோ நல்காதவை என எண்ணுகிறேன்.
    மிக்க அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    Like

   • rAguC says:

    நேர்மைக்கு கட்டியம் கூற வேண்டிய தேவையில்லை முருகா. பொய் தான் ஊர் கூட்டி தேர் ஏறி வரும். “நேர்மையாய் எதிர்க்கத் தெரியவில்லையா? உண்மையை விட்டு விட்டு உண்மை சொல்பவனின் உள்ளாடை வரை கேலி பேசு” – தற்கால சாணக்கியர்களின் தந்திரம். இவர்களுக்கு தேவை உண்மையை முடக்க வேண்டும், குறைந்த பட்சம் உண்மை பேசுபவனையேனும் முடக்க வேண்டும். தங்களுக்கு சாதகமானதை மட்டும் இந்த உலகம் நம்பினால் போதும், உண்மை பற்றி ஒரு கவலையுமற்ற “காவாளிகள்”, நாம் சொல்வது உண்மையல்லாத பட்சத்தில் அதை கூட நேர்மையாய் எதிர்க்க திராணியற்றவர்கள்.

    இவர்கள் இப்படித்தான். பேசும் எல்லோர் குரலையும் முடக்க வேண்டும், முடங்கித்தான் போக வேண்டுமா? என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டுமே அன்றி ஒருபோதும் அவர்கள் அல்ல முருகா.

    -@rAguC

    Like

 4. திரைப்படம் எடுப்பவர்கள் தங்கள் செயலுக்கு தாங்களே பொறுப்பாளிகள் என்பதை ஒரு போதும் மறுதலிக்க முடியாது. உண்மைக்கு புறம்பான கற்பனையான சேதிகளை மக்களிடம் கொண்டு செல்வதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளவேண்டும். அப்படி முடியாத தருணங்களில் தாங்கள் திரைக்குள் சொல்லும் பொய்களை, திரைக்கு வெளியே அது பொய் என்பதை உரக்க சொல்ல வேண்டும். ஒரு சமூகத்தை / ஒரு பரம்பரையை போயின் வழியில் நடத்துவதோடு அதை உண்மை என்று நம்பும் படியும் செய்வது சமூக போருப்ற ஒரு செயலே

  Like

 5. Sivakami Sabarathinam says:

  Oh my god, I was searching for “uvamai aNi” and I hit this site. What a wealth of information.
  To a 3rd generation Canadian Tamil like me, this is like going back to my roots and learning Tamil, not in a classroom way, but fun and interactive way.
  You are writing as if, directly speaking to the heart of reader. félicitations

  Although the introductory part was a bit intriguing, as I belong to eelam saivaite family, but I can reason your arguments. Yeah, somethings were overdone in the name of religion. Better stand corrected, for the sake of Tamil.

  s’il vous plaît continuer a écrire, I mean, please continue writing; For me, French comes in handy:)

  Like

 6. Sivakami Sabarathinam says:

  Let me copy and paste the information, that you gave on the other post. It should be here, for, this post is also uvamai aNi. i never knew so many uvamai aNis existed. merci

  Kannabiran Ravi Shankar (KRS) says:
  September 10, 2012 at 12:05 pm
  மொத்தம் 20+ உவமை அணிகள் உண்டு:))

  1. விரி உவமை
  2. தொகை உவமை
  3. இல்பொருள் உவமை
  4. எடுத்துக் காட்டு உவமை

  5. பல்பொருள் உவமை = ?? :))
  6. கூடா உவமை
  7. ஐய உவமை
  8. தெரிதரு தேற்ற உவமை

  9. புகழ் உவமை
  10. நிந்தை உவமை
  11. உண்மை உவமை
  12. மறுபொருள் உவமை

  13. இன்சொல் உவமை
  14. இயம்புதல் வேட்கை உவமை
  15. பலவயிற் போலி உவமை
  16. ஒருவயிற் போலி உவமை

  17. பொது நீங்கு உவமை
  18. மாலை உவமை
  19. இதரவிதர உவமை
  20. விகார உவமை

  These imported from Sanskrit in latter day books & not much used
  21. நியம உவமை
  22. அநியம உவமை
  23. சமுச்சயம்
  24. விபரீத உவமை
  25. மோக உவமை
  26. அபூத உவமை

  Like

  • devarajan says:

   3ம் உவமையாகக் காட்டும் இல்பொருள் உவமையும்,26ம் உவமை அபூத உவமையும் ஒன்றேதான்

   Like

 7. magentiran nawamani says:

  உங்களின் இடுகை ஒவ்வொன்றும் தமிழின் மீதான புதிய பரிமாணத்தையும் அதற்கான எனது தேடலையும் தொடக்கி வைத்துள்ளது. எளிமையான இலக்கிய அணுகுமுறை புரிதலை வளப்படுத்துகிறது.

  மகேந்திரன் நவமணி, மலேசியா.

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: