கொற்றவை என்னும் தமிழ்க் கடவுள்!

நவராத்திரி நேரம் அல்லவா! “அவளை”ப் பார்ப்போம்!
எவளை? = கொற்றவை!
தமிழ்க்-கொற்றவைக்கும், நவ-ராத்திரிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை;
எனினும் இந்த நேரத்தில், இங்கு Dosa-வில் அவளைக் காண்பது சிறப்பே! பார்க்கலாமா?


கொற்றவை = தமிழ்த் தொன்மம்!
சங்க காலத்துப், பாலை நிலக் கள்வர்/ எயினர்களின் தெய்வம்!

கொற்றம் + அவ்வை = கொற்றவை
* கொற்றம் = Power/வன்மை
* அவ்வை =  பாட்டி (தாய்) – மூத்தோள்

தெலுங்கில், இன்னிக்கும் பாட்டியை = “அவ்வா” -ன்னு கூப்புடுவாங்க; அந்த அவ்வா = அவ்வை!
கொற்றவைக்குப் பழையோள் என்ற பெரும் பெயரும் உண்டு!

மாயோன்-சேயோன் அளவுக்குச் இலக்கியத்தில் பயிலா விட்டாலும், இவளும் தமிழ்க் கடவுளே!
பாலை நிலக் கள்வர் முறை, நாகரிக வரம்புக்கு வெளியே இருந்தமையால்…
இலக்கியத்தில் இவளைக் குறித்து அதிகம் பாடவில்லை ஆயினும்,
உள்ளது உள்ளவாறு குறித்து வைக்கிறார் தொல்காப்பியர் = கொற்றவை நிலை என்கிற துறையில்!

மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொல்: பொருள் 62)


சூலி, அயிரை, கொற்றி  என்று பல “அச்சம் தரும்” பெயர்கள்!

இன்றைய துர்க்கா பூஜா, மகிஷாசுர மர்த்தினி போன்ற வடிவங்களுக்கும் – தமிழ்க் கொற்றவைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை! புராணக் கதைகள் எல்லாம் தமிழ்த் தொன்மங்களின் மேல் ஏற்றப்பட்டவை! நடுகல்லுக்கு ஏதுய்யா புராணம்?

தாய் வழிச் சமூகத்தின் மறுபக்கம் = கொற்றவை!
தொ.பரமசிவம் அவர்களின் “தெய்வம் என்பதோர்” நூலை வாசித்தால், இவள் தமிழ்ப் பரிமாணத்தை நன்கு அறியலாம்!

என்ன தான் கள்வர்களின் வேட்டைத் தெய்வமாக இவள் இருந்தாலும்,
பிற்பாடு பாலை நிலங்கள் பலவும் தோன்றத் தோன்ற,
அனைத்து மக்களுக்கும் பொதுவான பெண் தெய்வமாய் ஆகி, தொன்மத்திலே நீங்காது நிறைபவள்!

மாயோன் = திருமால்; சேயோன் = முருகன்!
இவர்களே இலக்கியம் முழுக்கப் பரவினாலும்…

முல்லை(காடு), குறிஞ்சி(மலை) மக்கள், இடம் பெயர்ந்து, வயல்வழிச் சமூகம் கண்டாலும் கூட, தங்கள் தொன்மங்களை உடன் எடுத்தே சென்றனர்;
அதனால் தான் மருத-நெய்தலிலும், செந்தூர்-அரங்கம் கோட்டங்கள் கண்டனர்;

* வேந்தன் = மருத நில மன்னன்; இன்னான் -ன்னு குறிப்பிட்ட தெய்வம் கிடையாது! மாறிக் கொண்டே இருப்பவன்
* வருணன் = வாரணம், கடல் காற்று; மாறிக் கொண்டே இருப்பது!
அதான், இவர்கள் அத்தனை பரவல் இல்லை; மக்கள் வாழ்வியலில் ஒரு கூத்தோ/துறையோ/கோட்டமோ இல்லை; வெறும் திணை அடையாளங்கள் மட்டுமே!

திருமால், முருகன், கொற்றவை = இவர்களே முப்பெரும் தமிழ்த் தொன்மங்கள்!


சங்க இலக்கியங்கள் கூடக் காட்டாத பல கொற்றவைச் சேதிகளை, பின்னால் வந்த சிலப்பதிகாரமே காட்டுகிறது; இளங்கோவின் பண்பட்ட மனம் அப்படி! இன்றைய பாட்டும் சிலம்பே!

நூல்: சிலப்பதிகாரம் (மதுரைக் காண்டம்)
கவிஞர்: இளங்கோவடிகள்
சூழல்: கவுந்தி அடிகளோடு, கோவலனும் கண்ணகியும், மதுரைக்குள் நுழையும் முன், வேட்டுவச் சேரி – ஐயை கோட்டத்தில் இளைப்பாறுதல்; அப்போது நடக்கும் கூத்து;

(வேட்டுவ வரி)
மரவம், பாதிரி, புன்னை, மணம் கமழ்
குரவம், கோங்கம், மலர்ந்தன – கொம்பர்மேல்,
அரவ வண்டு இனம் ஆர்த்து, உடன் யாழ் செயும்
திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே!

(வள்ளிக் கூத்து)
கொற்றவை கொண்ட அணி, கொண்டு நின்ற இப்
பொன் தொடி மாதர், தவம் என்னை கொல்லோ?
பொன் தொடி மாதர், பிறந்த குடிப் பிறந்த
வில் தொழில் வேடர்,  குலனே குலனும்!

(பாட்டு மடை)
துடியொடு, சிறு பறை, வயிரொடு துவைசெய,
வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள்;
அடு புலி அனையவர், குமரி! நின் அடி தொடு
படு கடன் இது உகு, பலி முக மடையே!


காபி உறிஞ்சல்:

மரவம், பாதிரி, புன்னை, மணம் கமழ்
குரவம், கோங்கம், மலர்ந்தன;

இதெல்லாம் மரங்கள்; புன்னை மரம், கோங்க மரம் பாத்து இருக்கீங்களா?
படத்தைப் பாத்து அனுஷ்கா, இலியானா சொல்லும் ஒங்களால, மரத்தைப் பாத்து பேரு சொல்ல முடியுமா?:))
வாழ்க்கைல, இயற்கை தொடுதல் என்பதே இல்லாமப் போயிருச்சி, இப்பல்லாம்!

கொம்பர் மேல், அரவ வண்டு இனம் ஆர்த்து, உடன் யாழ்செயும்
திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே!

இந்த மரக் கொம்புகளில், வண்டுகள் என்ன பண்ணுதாம்?
= பாட்டுப் பாடி, யாழ் வாசிக்குதாம் (ஆர்த்து, உடன் யாழ் செய்யும்)
எங்கே நடக்குது இந்தக் கச்சேரி?
= திருமாலுக்குத் தங்கச்சி; அவ முன்றில் (Lobby), ஐயைக் கோட்டத்திலே!

கொற்றவை கொண்ட அணி, கொண்டு நின்ற, இப்
பொன் தொடி மாதர், தவம் என்னை கொல்லோ?

கொற்றவை போலவே எளிமையான அணிகள் பூண்டிருக்கும் இந்தப் பெண்…
கண்ணகி! இவ தவம் எப்பேர்ப்பட்ட தவமோ?

பொன் தொடி மாதர், பிறந்த குடிப் பிறந்த
வில் தொழில் வேடர், குலனே குலனும்!

இது போன்ற பெண்கள் பிறந்த குடி = எந்தக் குடி?
வேடர்களே, பின்னாளில், வில் தொழில் மறவர்கள் ஆனார்கள்! அந்த மறவர் குடி!
———-

(இந்தப் பாட்டு இசைப்பா; வேகமா வாய்விட்டுப் படிங்க பாப்போம்:)

துடியொடு, சிறு பறை, வயிரொடு துவைசெய,
வெடி பட வருபவர், எயினர்கள் அரை இருள்

துடி = உடுக்கை! சிறுபறை, கொம்பு எல்லாம் ஓசை எழும்ப
வெடி வெடிக்குறாப் போலத் திடீர்-ன்னு வருவாங்க எயினர் (எ) ஆறலைக் கள்வர்

அடு புலி அனையவர், குமரி, நின் அடி தொடு
படு கடன் இது உகு, பலி முக மடையே!

அரை இருளில் வருவாங்க! புலி போன்ற வீரர்கள்..
தாயே குமரி, கொற்றவையே!
உன் அடி தொட்டுப் பூசை வைக்கிறோம்; இந்தப் பலி மேடையில் பூசை வைக்கிறோம்!
இந்த மடையை ஏத்துக்கோ-ம்மா! கொற்றவை திருவடிகளே தஞ்சம்!

dosa 73/365

Comments
8 Responses to “கொற்றவை என்னும் தமிழ்க் கடவுள்!”
  1. psankar says:

    Have you read http://www.southasiabooks.com/the-making-of-the-goddess-korravai-durga-in-the-tamil-traditions-p-72690.html?osCsid=bosa9u3e3e28ag1lqo1odrto67 ? Any idea how good it is ?

    BTW, please come in twitter so that we can send such things there instead of commenting :)

    Like

    • Nice; Haven’t read this book
      Looks like itz from an asst prof at JNU, Delhi

      பொதுவா, இது போன்ற ஆய்வுக் கட்டுரைகள் – தமிழ் நிலம் தோய்ந்து இருப்பவர்கள் குடுக்கும் ஊற்று – வெளியாட்களிடம் வருவதில்லை!
      They read from lines! Not between lines & lives! But still, Itz worth an effort in English!

      தொ. பரமசிவம் (அ) மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாசித்து பாருங்கள் – புதிய திறப்புக்கள் கிடைக்கும்!
      இவர்கள் அண்ணாத்துரைகளோ/பெரியார்களோ அல்லர்! ஆழ் தமிழ் ஆசிரியர்கள்! They also deep study Kamban, But we cant brand them, they are “low”:(

      Like

    • Twitter, பிறகு வருகிறேன்:)
      தற்சமயம், தமிழ் இருக்கும் இடத்தில் மட்டும் இருந்து கொள்கிறேன்!
      புண்ணுக்கு ஆறுதல் இங்கே தான், அங்கில்லை!

      அங்கே, எளியவர்களிடம் மட்டுமே நெருக்குதல்/எதிர்பார்ப்பு;
      டுமீல் என்பவர்களிடமோ, ஆழ்வார்களின் திருநங்கைத்தனம் என்றாலோ, அவர்களிடம் “low” என்று சொல்லிவிட முடியுமா?
      யாரையும் ஏசாது….. முனிவர்கள், தொல்குடிகளின் இடத்தை எடுத்துக் கொண்டனர் என்றால் மட்டும், “low” ஆகி விட்டாய் -ன்னு #fb போட்டு நெருக்க முடியும்!

      அண்ணாத்துரைகளையும், பெரியார்களையும் விடுங்கள்…
      தேவநேயப் பாவாணர், பாரதிதாசன், புலவர் குழந்தை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை,
      ஏன் வள்ளலார் கூட = “low” தான்:(

      Like

      • psankar says:

        Well, do not ignore a medium completely for misunderstandings with some people there :) You can choose to follow a different set of people :) But giving advice is easy. So I should not talk too much :) I just felt that it will be easier to connect with you if you are in twitter. I could understand when you want to stay away from it. I won’t disturb :) Sorry for the noise.

        Like

  2. மரங்கள் இலியானா மாதிரியும் அனுஷ்கா மாதிரியும் கவர்ச்சியா இல்லையே, அதனால தான் ஐடன்டிபிகேஷனும் கடினமா இருக்கு :-)

    எனக்கு மரங்களின் பெயர்கள் தெரிந்தால் தானே நான் என் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்? :(

    பெண் தெய்வங்களிடம் இரக்கத்தை அதிகமாக எதிர்பார்க்கும் மானிட நெஞ்சம். கள்வர்களின் வேட்டை தெய்வமாகக் கொற்றவை அதிகம் போற்றப் பட்டிருப்பாள்.

    பின்னாளில் அவளும் ஒரு பெண் தெய்வமாகப் போகிறவள் என்று அறியாத சூழலில் கொற்றவை போல எளிய அணிகலன்களுடன் கண்ணகி!

    இறைவன் என்பவர் அனைத்துக்கும் சாட்சியே. எத்தொழிலும் தொடங்கும் முன் போடப் படும் பூசையை ஏற்றுக் கொள்ளும் நடுநிலைமையாளர். கொற்றவையை தஞ்சம் அடைந்தோரை அவள் காப்பது நிச்சயம்.

    amas32

    Like

    • Hey Anushka/Ileana, Make your fan club attracted to trees yaa:)

      ஆமாம்-ம்மா! கொற்றவை = வேட்டைத் தெய்வம் தான் எனினும், வேட்டையர்களுக்குக் கருணை மிக்கவளே!
      தருமங்கள் மாறினாலும், தெய்வங்கள் மாறுவதில்லை!

      Like

  3. பண்டை தமிழ் அம்மை கொற்றவை பற்றி மேலும் எழுதுங்கள் அய்யா

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)