குறளில் களிறு!

வாங்க, ஞாயிற்றுக்கிழமை அதுவுமா, வேகமாப் பார்ப்போம்: குறளில் (ஆண்) யானை வரும் இடங்கள்!
ஒரு குறளில் யானை வீழ்கிறது,
இன்னொரு குறளில் யானை வாழ்கிறது!


காலாழ் களரில் நரியடும் – கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
(இடனறிதல்: 500)

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் – புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
(ஊக்கமுடைமை: 597)


காபி உறிஞ்சல்:

காலாழ் களரில் நரியடும் – கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு

யானை, வேல் ஏந்தும் வீரர்களையே முகக்க வல்லது (அலாக்காத் தூக்க வல்லது)
கால் ஆழ் களர் = சேற்றுக்குள், கால்கள் ஆழ்ந்து விட்ட நிலைமை!

களர் நிலம் = காரம் உள்ள சதுப்பு நிலம்;
அப்போது, தந்திரமே மந்திரமாக் கொண்ட, சிறு நரிகளும் – பெரும் யானையைச் சாய்த்து விடும்!
எனவே, எத்துணை வலிவு இருந்தும், இடம் என்பது மிகவும் முக்கியம்!

அது என்ன “கண்ணஞ்சா”? = யானையோட குட்டிக் கண்ணு அஞ்சாதா?:)
கண் = இடம்; அவன் கண் = அவன் இடம்!
காலாழ் களரில் நரி அடும் கண்/ அஞ்சா வேலாள் முகத்த களிறு! Now okay?:)

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் – புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு

புதை அம்பில் பட்டு, பாடு ஊன்றும் களிறு
= அம்பால் குத்திக் குத்தி, உருவமே புதைந்து போனாலும், யானை பாடு எடுத்து, நடக்க வல்லது!
= அதே போல், அழிகின்ற போதும், ஊக்கம் இருப்பவர்கள், ஐயோ-ன்னு தளர மாட்டார்கள்!

மாடு மனை போனால் என்ன!
மக்கள் சுற்றம் போனால் என்ன!
கோடி செம்பொன் போனால் என்ன? – கிளியே
குறுநகை போதுமடி, முருகன் குறுநகை போதுமடி! –
அப்படியான, அழிவிலும் தளராமை!

ஒல்குதல் = வளைந்து போதல்/ ஒடுங்குதல்
ஒல்காப் புகழ் தொல்கா-ப்பியம் -ன்னு சிறப்பு!

ஒல்கா -ன்னு பாடப் புத்தகத்தில் வந்தா, River Volga போல ஓடணுமா? -ன்னு கேட்டேனாம் பள்ளியில்:)
நல்ல வேளை ஆசிரியர் அடிக்கலை:) Come, Volga Murga, Letz run away!:)
Homework: மேற்கண்ட பாடல்களில், என்னென்ன “அணி” -ன்னு சொல்லுங்க!

dosa 74/365

Advertisements
Comments
9 Responses to “குறளில் களிறு!”
 1. psankar says:

  பாடப்பட்டிருப்பது இந்திய யானை. நீங்கள் இணைத்திருக்கும் புகைப்படம் ஆப்பிரிக்க யானை. குற்றம் :)

  Like

 2. You talked about River Volga at such an young age! :-)

  ஒரு பெரிய யானையையே ஒரு குள்ள நரி சாய்த்துவிடக் கூடிய சூழலை நாம் பலமுறை அரசியலில் பார்த்திருக்கிறோம். வெற்றி பெற இடம் முக்கியம்.

  அம்பால எவ்வளவு அடிபட்டாலும் போரில் முன்னேறி செல்லும் வல்லமை நிறைந்தது யானை. அதனால் தான் அரசர்கள் யானைப் படையை முன்னிறுத்தி போர் செய்வர். இன்றைய தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் மின்வெட்டு சூழ்நிலையில் மின்சாரத்தையே பெரிதும் நம்பி சிறு தொழில் செய்பவர்கள் படித்து ஊக்கம் பெற இந்த குறள் உதவும்.

  amas32

  Like

 3. ஒரு தமிழ் ஆசிரியரிடம் போய் கற்றுக் கொண்டு வந்தேன்.

  முதல் குறள் – உவமையைக் கூறி பொருளை நமக்குப் புரியவைப்பது
  பிறிது மொழிதல் அணி :-)

  இரண்டாம் குறள் – அது “போல என்பது” மறைந்து இருப்பதால் இது எடுத்துக் காட்டு உவமை அணி.

  சரியா? :-)

  amas32

  Like

  • Whoz that lovely tamizh aasiriyar?:)

   1st answer correct = பிறிது மொழிதல் (உவமை இருக்கும், உவமேயம் இருக்காது)
   2nd answer partially correct = எடுத்துக் காட்டு உவமை (போல என்னும் உருபு மறைந்துள்ளது)
   ஆனா, முதலில் உவமேயம், அடுத்து தான் உவமை!
   Order மாறி இருக்கு பாத்தீங்களா? = இதர விதர உவமை:)

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: