கல்லணை – நெல் அறுத்தல் Technique?

இன்னிக்கி, ஒரு வேளாண் பொண்ணு பாடிய, பொருநர் ஆற்றுப்படையைப் பாக்கலாமா?
1) முருகு ஆற்றுப்படை 2) பெரும்பாண் ஆற்றுப்படை 3) கூத்தர் ஆற்றுப்படை (மலை படு கடாம்)
இவற்றை முன்னமே பாத்துட்டோம்; இன்னிக்கி, பொருநரைப் பார்ப்போம்…

* பொருநன் = போர் வீரன் (அ) போர்க் களத்துக்கே சென்று பாடும் கவிஞன்
* ஆற்றுப் படை = ஆறு + படு = வழிப் படுத்து

இந்த மன்னன் இங்கிட்டு இருக்கான்; இந்த வழியில் (ஆறு) சென்று பார்த்தால்…
அவன் கலையை மதிச்சி, வாழ்வுக்கும் வழி செய்குவான் -ன்னு 2000 yr old Referral தான் ஆற்றுப்படை!:)

“ஆற்றுப்படை” தான், “ஆறுபடை” வீடு -ன்னு பின்னாளில் மருவி விட்டது;
எண்ணிக்கையும் ஆறா இருக்கா? நம்ம மக்கள் மருவிட்டாங்க; இதுக்கெல்லாஞ் சொல்லிக் குடுக்குணுமா என்ன?:)
ஆறு படை வீடு = 6 Battle Camps -ன்னு கதை சேத்துட்டாய்ங்க;
சாமி மலையில் ஏதுய்யா Battle Camp?:) பாவம் முருகாச் செல்லம்; Dont worry honey, These ppl are always like that:)


நூல்: பொருநர் ஆற்றுப்படை (lines 242-248)
கவிஞர்: முடத் தாமக் கண்ணியார்

* தாமம் = மாலை; முடத் தாமம் = முன் பக்கம், செண்டு கட்டி இணைக்கப் படாத மாலை
* கண்ணி = தலை மாலை
தொங்கும் மாலையும், தலை மாலையும் சூடிக் கொள்ளும் அழகுணர்ச்சி மிக்க பெண் கவிஞர் போல!

பேரே அழகா இருக்கு-ல்ல? சிலரு, இவரு ஆண் கவிஞர்-ன்னும் சொல்லுவாய்ங்க;
ஆனா, பொதுவா ஆண் கவிஞர்கள், மலர் அலங்காரங்களைப் பேரா வச்சிக்குறது இல்ல!

இந்தக் கவிஞர் ஆற்றுப் படுத்தும் மன்னன் = கரிகால் சோழன்;
முன்னரே பட்டினப் பாலையிலும் இவனைப் பாத்தோம்-ல்ல?
கல்லணை என்னும் வேளாண்மைக் கோயில் கட்டிய = Golden Era & Golden King, for Tamizh Land!

கூனிக், குயத்தின் வாய் நெல் அரிந்து,
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்,
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும்
சாலி நெல்லின், சிறை கொள் வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆக,
காவிரி புரக்கும் நாடு கிழவோனே


காபி உறிஞ்சல்:

கூனிக், குயத்தின் வாய் நெல் அரிந்து

கூனுதல் = வளைதல்; குயம் = கூர்மையான கருவி (அரிவாள்)
வளைஞ்சி நின்னு நெல்லு அறுக்குறாங்க!

எதுக்குய்யா அப்படி வளையணும்? = முதலமைச்சரைச் சக அமைச்சர்கள் வணங்குறாப் போல?:)
அப்பத் தான் நெல்லு சிதறாது; இல்லீன்னா, மண்ணுல சிதறி விழுந்துரும்!
மண்ணில் சிதறினாப் பொறுக்க, இது என்ன காயா பழமா? நெல்மணி சிதறச் சிதற, மொத்த உழைப்பும் வீணாயிரும்!

அறுவடைக்குத் தயாரா இருக்கும் நெல்லைத் = தாள் -ன்னு சொல்லுவாங்க!
அதை அறுக்கப், பல்லு பல்லா இருக்கும் குற்று அரிவாள்;
முன்னாடியே சாணை புடிச்சிக் கூரா வச்சிருப்பாங்க; ஒரே வீச்சில் அறுக்கணும்!

சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை

அறுத்துக் கத்தையாக் கட்டணும் =  சுமை/சூடு-ன்னு இதுக்குப் பேரு!
சுமையை வச்சே எத்தனை மூட்டை -ன்னு சொல்லீறலாம்!

இந்தச் சுமையைத் தான், களத்துக்கு எடுத்துட்டுப் போய், கதிர் அடிக்கணும்!
நெல்லு மணி களத்தில் குவியும்!
போர் அடித்தல் -ன்னு சொல்வது இதைத் தான்;
மாடு கட்டிப் போரடிச்சா மாளாது செந்நெல் என்று, ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை -ன்னு பாட்டு!
அதாச்சும், மாடுகளை, மேலாக்க நடக்க விடுவது; நெல் மணி உதிரும்!

* சூடு கோடாகப் பிறக்கி = சூட்டை, மலை போல அடுக்கி (கோடு=மலை)
* நாள்தொறும் குன்று எனக் குவைஇய = தினமும் போரடிச்சிக், குன்று போல் குவிந்த நெல்லு

கடுந் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும்

மூடை = நெற் குதிர்
கடும் தெற்று = நெருக்கமாத் தெற்றிக் குவிச்சி இருக்காக நெல்லை!
இடம் கெட = இடமே இல்லீயாம்; So densely packed!

சாலி நெல்லின், சிறை கொள் வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆக

சாலி = நெல் வகை! இன்றைய சம்பா;
சிறை கொள் வேலி = ஒரு வேலி நிலம் = Approx 6 acres
அதுல விளைஞ்சது எவ்ளோ? = 1000 கலம் = 96,000 படி!
(1 ௧லம் = 96 படி)

காவிரி புரக்கும் நாடு கிழவோனே

இப்படிப் பொன் விளையும் பூமி! யாரால?
1) காவிரியால!
2) அந்தக் காவிரி, கடலில் வீணாகாம, 2000 year old கல்லணை கட்டிய கரிகாலனால!
The King who didn’t build Religion & Temple, but built Tamizh & People Welfare

கிழவன் = உரிமை உடையவன்; (கிழார்)
நக்கீரர், முருகனை = பழமுதிர் சோலை மலை கிழவோனே -ன்னு முடிப்பாரு!
முடத்தாமக் கண்ணியார், கரிகாலனை = காவிரி புரக்கும் நாடு கிழவோனே -ன்னு முடிக்குறாரு!

dosa 90/365

Comments
3 Responses to “கல்லணை – நெல் அறுத்தல் Technique?”
  1. அருமையான விளக்கம்… நன்றி…

    Like

  2. amas32 says:

    நீங்களும் குக் உங்கள் கிராமமும் குக்கா (MMKR Kamal & Urvasi) என்பது போல நெல் மணியை சிதறாமல் அறுக்க ஆளும் வளைந்து இருக்கணம், அரிவாளும் வளைந்து இருக்கணம் :-)

    நீங்கள் தந்திருக்கும் புகைப்படத்தில் இரு கை நிறைந்த நெல் மணிகள் பார்ப்பதற்கு தங்க மணிகள் போல உள்ளன. பொன்னை விட உயர்ந்ததல்லவோ உழவர் நமக்கு அளிக்கும் நெல் சோறு!

    //The King who didn’t build Religion & Temple, but built Tamizh & People Welfare// உண்மை, அதுவே மக்களுக்கு நன்மை!

    இப்போ தமிழ் வழக்கில் “பெரிசு” என்பது, மூத்தோரை விளிக்கும் ஏளனச் சொல்லாக உள்ளது. அதுவே அன்றைய தமிழில் கிழவன் என்பது மரியாதையைத் தரும் உரிமையாளனைக் குறிக்கும் சொல்லாக இருந்திருக்கிறது. நிலக்கிழார் என்பது நிறைய நிலத்துக்குச் சொந்தக்காரர். சேக்கிழார் என்பது அவர் பெயரா அல்லது வேறு பொருள் உண்டா?

    காவிரி ஆறு கரை புரண்டு ஓடும்(டிய) சோழ நாட்டின் பெருமை இந்த ஒரு பாடலில் நன்கு தெரிகிறது.

    அருமையான விளக்கம் KRS :-)

    amas32

    Like

  3. Arvind Krishnamoorthy says:

    “குன்றாக் குப்பை” என்பதன் அர்த்தம் என்ன ஐயா

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)