“How to Kill It” – Music Director in சங்கத் தமிழ்

இன்னிக்கும் ஆற்றுப்படையே:)
பத்துப் பாட்டு = இதை முழுக்க ஒரு Round வரணும்-ல்ல? அதான்!
இன்றோடு, எட்டுத் தொகை/ பத்துப் பாட்டு நூல்களை, Dosa-வில் முழுக்கப் பார்த்தாகி விட்டது; என்ன சொல்றீங்க, Quiz வச்சீருவோமா?:) Ready கா உன்னாரா Reddy காரு?:) Bottom of the Blog has these categories!

பாணன் = பண் அமைப்பவன்; Music Director!
எழுத்துக்கு, இசை கூட்டும் கலை!
Letz take known examples, to see this classification;

* கவிஞன் = கண்ணதாசன்/ வைரமுத்து
* பாணன் = MSV/ இளையராஜா
* பாடினி = சுசீலாம்மா/ ஜானகி
* விறலி = பத்மினி/ கமல்
சில சமயம், பாணர்களே பாடுவதும் உண்டு, எழுதுவதும் உண்டு;  இன்று போலவே அன்றும்:)

சிறு பாண் ஆற்றுப்படை = அது என்ன “சிறு”?
சிறு பாணன்/ பெரும் பாணன் = சாதியா? பணமா? ஏற்றத் தாழ்வா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் = சங்கத் தமிழ் நெறி; ஏற்றத் தாழ்வெல்லாம் இல்லை;

* சிறு பாணன் = சின்ன யாழை வாசிக்கிறவங்க =  7 நரம்புள்ள சீறியாழ்
* பெரும்பாணன் = பெரிய யாழை மீட்டுறவங்க = 21 நரம்புள்ள பேரியாழ்

பேரியாழ் = Piano போல, fixed;
சீறியாழ் = மத்தளம் போல, on the go:)

இன்னிக்குள்ள திண்டிவனம் – வேலூர் முதலான மண்டலங்கள் = ஒய்மான் நாட்டு மன்னன் = நல்லியக் கோடன்!
அவனிடம் ஆற்றுப்படுத்திப் பரிசு பெறும் நூல் = சிறுபாணாற்றுப்படை
நல்லியக் கோடன், கடையேழு வள்ளல்களுக்குப் பின் வந்த வள்ளல்; தமிழுக்காக வரையாது குடுப்பவன்!


நூல்: சிறுபாணாற்றுப்படை (lines 225-235)
கவிஞர்: நத்தத்தனார்

கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப,
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு; தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும், அடங்கு புரி நரம்பின்;
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,

நூல் நெறி மரபின், பண்ணி, ‘ஆனாது,
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை’ எனவும்,
‘இளையோர்க்கு மலர்ந்த மார்பினை’ எனவும்
‘ஏரோர்க்கு நிழன்ற கோலினை’ எனவும்
‘தேரோர்க்கு அழன்ற வேலினை’ எனவும்…


காபி உறிஞ்சல்:

கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப

காட்டில் பழுக்கும் குமிழிப் பழம்; அதன் நிறமுள்ள யாழ்!

புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு; தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும், அடங்கு புரி நரம்பின்;

அதன் மேல் பச்சை நிறமுள்ள போர்வை – வேலைப்பாடுகள்!
அந்த யாழிலே, தேம் பெய்து = இனிமையைக் கொட்டி
அமிழ்தத்தைப் பொதிய வச்சி, அடங்கி மடங்கும் யாழ் நரம்புகள்!

பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின், பண்ணி, ‘ஆனாது

தமிழிசையில் பாடு துறைகள் பலப்பல! பாடு துறை = மேள கர்த்தா ராகங்கள்;
ஆனா, இன்னிக்கு கொல்லிக் காவளம் என்கிற பண் போயிருச்சி;
கதன குதூகலம் -ன்னு ராகத்தைத் தான் நீட்டி நீட்டிப் பாடுறாங்க! “ரகு வம்ச சுதாம்..புதி சந்திரா – ஸ்ரீ”

ஒன்றையே பரக்கப் பேசிப்பேசி, ஊடாடிப், பிரபலமானவர்கள் மூலமா நுழைச்சி…
தொன்மையான தமிழ்ப் பண்கள் இன்னிக்கி இல்லாமப் பண்ணியாச்:(

பண்பாடு -ன்னு தமிழ்ச் சொல்லு போயி, தமிழ்க் “கலாச்சாரம்” -ன்னு ஆயிருச்சி; அது யாரு “கலா”-வோ, நாமறியோம்?
தமிழ் இலக்கணத்தில் என்னய்யா “ஏகதேச” உருவகம்?  ஏகம் – ஏக் தோ தீன் உருவகம் -ன்னு கூட மாத்திக்கிடலாம்; தப்பே இல்ல!:(  ஒருபுடை உருவகம் -ன்னு சொல்லணுமா என்ன?

ஊடாடிச் சிதைத்தல் -ன்னு சொன்னா, ஒரு சிலருக்குக் கோவம் வரும்; கலாச்சாரமாம்! கிரகச்சாரம்:(

தொன்மத்தைப் பேசினால் கூட, ஒரு சாராரைத் திட்டுறேன் -ன்னு தப்பா எடுத்துக்கிட்டு, யாரோ பின்னாலிருந்து தூபம் போட, நாம் மதிப்பு கொண்டவர்களே நம்மளைப் புடிச்சி நெருக்குவாய்ங்க!
தமிழை = டுமீல் -ன்னு பேசு/ஏசுறவனை நெருக்க முடியுமா ஒங்களால? யாரையும் தனிப்பட்ட ஏச்சாய் இல்லாது, வெறுமனே தொன்மத்தைப் பேசப் புகுந்தா மட்டும், கோவம் கெளம்புது, உம்ம்ம்? = நல்ல மனசாட்சி!:(

ஆனா, தமிழ்ப் பண், போனது போனது தானேய்யா?
புஸ்தகம் போட்டு ஒங்களால கொண்டாற முடீயுமா இந்தளப் பண்ணை?

இன்னிக்கும், தமிழ்ப் பண்ணைத் தேடனும்-ன்னா, ஆழ்வார் ஈரத் தமிழிலும், நாயன்மார் தேவாரத்திலும் தான் போய்த் தேடணும்; வேற எங்கேயும் உசுரோடு இல்ல:(
சொல்றாரு பாருங்க, இந்தச் சங்கப் பாட்டில் = நூல் நெறி மரபாம்! தனி நூலே தமிழிசைக்கு; பாடு துறை = மேள கர்த்தா ராகங்கள்;

* கூடு கொள் இன் இயம் = யாழின் கூட்டுக்குள், நரம்பின் ஒலியை வாங்கி அதிரும் Resonator; வீணை போல!
* குரல் குரல் ஆக = குரல் என்பது ஒரு சுரம் (ஸ்வரம்);
குரல் குரல் ஆக = குரல் சுரத்தையே, வாயில் குரலாக்கிப் பாட…

1) குரல் 2) துத்தம் 3) கைக்கிளை 4) உழை 5) இளி 6) விளரி 7) தாரம் = தமிழிசையின் “சப்த ஸ்வரங்கள்”

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை’ எனவும்,
‘இளையோர்க்கு மலர்ந்த மார்பினை’ எனவும்

பாட்டு கட்டி, என்ன பாடுறாங்க?
* முதியவர்களுக்கு = வணக்க இன்பம் தரும் கை உடைய மன்னா
* இளையவர்களுக்கு = சண்டை இன்பம் தரும் மார்பு உடைய மன்னா

‘ஏரோர்க்கு நிழன்ற கோலினை’ எனவும்
‘தேரோர்க்கு அழன்ற வேலினை’ எனவும்

* ஏர் ஒட்டும் ஏரோர்க்கு = நிழல் தரும் செங்கோல் உடைய மன்னா
* தேர் ஓட்டும் பகைவர்க்கு = வெப்பம் தரும் வேல் உடைய மன்னா

இப்படியெல்லாம் பாட்டு கட்டிச் செவ்வழிப் பாலையில் மீட்டும் சிறு பாணன்; சிறு பாண் ஆற்றுப்படை!

dosa 91/365

Advertisements
Comments
3 Responses to ““How to Kill It” – Music Director in சங்கத் தமிழ்”
 1. அருமையான விளக்கம்… நன்றி…

  Like

 2. amas32 says:

  குழலினிது யாழினிது என்பர் தம மக்கள் மழலைச் சொல் கேல்லாதவர் என்ற வள்ளுவன் வாக்கு போல குழந்தையின் மழலையோடு ஒப்பிடும் அளவு இனிமை நிறைந்தது யாழின் இசை!

  யாழின் விவரிப்பு அழகு. இட்டுக் கட்டிப் பாடும் பாடல்கள் எப்பொழுதுமே மிகவும் இரசிக்கும்படியாக இருக்கும். ஒரே மன்னன முதியவர்களுக்கு ஒரு மாதிரியும், இளைஞர்களுக்கு வேறு மாதிரியும் உதவி செய்கிறார். விவசாயிகளை கவனிக்கும் முறை வேறு, பகைவர்களை கவனிக்கும் முறை வேறு! இவை அனைத்தையும் பாணன் அழுகுற பாட்டில் புகழ்ந்து இசைக்கிறார்!

  amas32

  Like

 3. Shruthi says:

  Nalla pagirvu. Romba nalla ezhuthi irukeenga. 7 swarangalukku thamizh peyar koduthadu arumai. Siru paanaatruppadai enda century le ezhudappattadu?

  Na oru Music student. Seeriyaazh than parinaama valarchi petru violin ah vandirukku nu na padichirukken. Violin oru “Pan Indian” Instrument than nu solradukku neraiya proofs irukku. Adula neraiya researches pannirkanga.

  Thamizh Panngal patri pesumbodu, enakku 2 vishayam nyabagam vandadu,
  1. Gnana sambandar oda Yaazh muri pann incident (tharpozhuthu Ataanaa ennum ragam)
  2. Thamizhisai le, mudalla 5 swarangal konda ragam thondri, pinnar “Kural thiribu” athaavathu “Graha bedham” moolamaga pala raagangal vandadu nu aaraaichigal solvadhu.

  ஆனா, தமிழ்ப் பண், போனது போனது தானேய்யா?
  Illai KRS sir, innum “Thamizh isai sangam” le aaraichigal nadanduttu irukku.

  I once again thank you for this post.

  Shruthi

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: