குறளில் களிறு!

வாங்க, ஞாயிற்றுக்கிழமை அதுவுமா, வேகமாப் பார்ப்போம்: குறளில் (ஆண்) யானை வரும் இடங்கள்! ஒரு குறளில் யானை வீழ்கிறது, இன்னொரு குறளில் யானை வாழ்கிறது! காலாழ் களரில் நரியடும் – கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு (இடனறிதல்: 500) சிதைவிடத்து ஒல்கார் உரவோர் – புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு (ஊக்கமுடைமை: 597) காபி உறிஞ்சல்: காலாழ் களரில் நரியடும் – கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு யானை, வேல் ஏந்தும் வீரர்களையே முகக்க வல்லது (அலாக்காத் … Continue reading

Physics in சங்கத் தமிழ்!

சின்ன வயசில் இதைப் பார்த்ததுமே, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வரும் = கரும்புச் சாறு வண்டி! * இனிப்பான சாறு, * கூடவே புளிப்பான எலுமிச்சை, காரமான இஞ்சி = அதன் மணமே சுண்டி இழுக்கும்! அதை விட, ஒரு வியப்பு = பல்லுப் பல்லாச் சக்கரங்கள்! கரும்பு இந்தாண்ட போயி, அந்தாண்ட சக்கையா வரும் காட்சி; அந்தச் சக்கரங்கள் சுத்துற காட்சியே, ரொம்ப நேரம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பேன்! அட, இதப் பார்த்துத் தான் … Continue reading

மலை-படு-கடாம்-கச்சேரி

வாங்க, இன்னிக்கி, 10 இசைக் கருவிகளை வேகமாப் பார்ப்போம்! இளையராஜா கச்சேரியில், வெறும் keyboardஆ இல்லாம, பலப்பல இசைக் கருவிகளைப் பார்ப்போம்-ல்ல? அது போல ஒரு மகிழ்வு!:) பத்துப் பாட்டுள், “மலைபடுகடாம்” என்னும் நூல் மிக்க அழகு! இதுவும் ஆற்றுப்படை நூல் தான்! = கூத்தர் ஆற்றுப்படை -ன்னு சொல்லுவாய்ங்க! நாம் முன்பே முருகாற்றில் பார்த்தது போல… “இந்த வழியில் சென்று, இன்னாரிடம் திறமை காட்டினால், இன்னின்னது பெறலாம் -ன்னு ஆற்றுப்படுத்தல்”; ஆற்றுப்படை = Referral; ஆறு … Continue reading

கூடங்குளம் போலீஸ்!

ஒரு நல்ல அரசு, தன் மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லும் புறநானூற்றுப் பாடல் இன்னிக்கி! தன் சொந்த மக்களையே, பகைவர்களைப் போல், இன்றைய அரசு நடத்துவதை ஒப்பு நோக்கவும்! கூடங்குளம் – இப்பாடலிலும் ஒரு குளம்! பாடல்: புறநானூறு 94 கவிஞர்: ஒளவையார் திணை: வாகைத் திணை துறை: அரச வாகை (அதியாமானை, ஒளவையார் பாடியது) ஊர்க் குறு மாக்கள், வெண் கோடு கழாஅலின் நீர்த் துறை படியும் பெருங் களிறு போல, இனியை, … Continue reading

சங்கத் தமிழில் ஊறுகாய் ’ஜா’டி

யார் வீட்டுலயாச்சும், இன்னும் ஊறுகாய் ’ஜா’டி இருக்கா? …இல்ல Bottle (எ) சிறையில் வாடும் ருசியில்லா-ருசி ஊறுகா தானா?:) கிராம வாழ்க்கையின் சுவையே சுவை தானுங்கோ! * உப்பு, புளி, ஊறுகாய் = மூனுமே, ’ஜா’டியில் தான் கொட்டி வைக்கணும்; * இல்லீன்னா எங்க ஆயா வையும்:) * ’ஜா’டி காலியானாலும், வாசம் காலியாவதே இல்லை! உப்பிட்ட மாங்காய்… உலர்த்தும் போதே, பாதி காலியாக்கீருவோம்:) Moral of the Story: ரெண்டு மடங்கா ஒலர்த்தினாத் தான், ஒரு மடங்காச்சும் … Continue reading