கம்பன்: ஆன்மீகப்-பகுத்தறிவுக் குரங்குப் பெண்!

* கூர் அறிவுள்ள பெண், ஆனால் அரசியல் செய்யாப் பெண்; * ஆன்மிகம் தோய்ந்த பெண், ஆனால் பகுத்தறிவு மிக்க பெண் * சாத்திரங்களைக் கண்மூடித்தனமாய் ஏற்காத பெண் வாலி மாண்டாலும் தான் மாளாது, அவனையே பற்றி வாழ்ந்த காதல் மனைவி = தாரை! தாரை -ன்னா விண்மீன்! நட்சத்திரம் போல் ஒளிர்பவள் = தாரை! ஏதோ வெறும் குரங்குப் பொண்ணு அல்ல! வால்மீகி என்னும் ஆச்சாரம் மிக்க வடமொழிச் சாத்திரத்தோடு, 14 இடங்களில் துணிந்து முரண்படும் … Continue reading

ஒரு Asst Director க்குத் தெரிஞ்சது, கம்பனுக்குத் தெரியாதா?

இராமன் அவதரிக்கப் போகும் நாட்டை வருணிக்கின்றான் கம்பன்; “உறங்கும் உறங்கும்” -ன்னு சொல்லைப் போடுறான் கம்பன் = தூங்கு மூஞ்சி வர்ணனை:) நீங்களே யோசிச்சிப் பாருங்க; Hero ஊரைத் துவக்கக் காட்சியில் எப்பிடிக் காட்டுவாங்க? எல்லாரும் தூங்கி வழியுறா மாதிரிக் காட்டி.. இந்த ஊருச் சிங்கம் தான் Police Inspector சூர்யா -ன்னு காட்டினா? சிங்கம் சிங்கம், Fuse போன சிங்கம்:)) ஒரு Asst Director க்குத் தெரிஞ்சது, கம்பனுக்குத் தெரியாதா? என்னய்யா இது, கம்ப ராமாயணம் இப்பிடித் தூங்கி … Continue reading

கம்பன் – சிவத்திருமால்?

வெள்ளிக்கிழமை -ன்னா #dosa கிடையாதே! #kamban52 அல்லவா? வேகமாப் பார்க்கலாமா, Sandy பின்னோட்டப் பதிவுகள்:) இதுவும் மழைப் பாடலே:) கம்பன் மழையை வருணிக்கும் காட்சி = சிவத் திருமால்!  Friday Post, Publishing on Sunday கம்ப ராமாயணம் – பால காண்டம், ஆற்றுப் படலம் (13th song) இது, கம்ப ராமாயணத்தின் ரெண்டாம் பாட்டு (கடவுள் வாழ்த்தை நீக்கிப் பார்த்தால்) நீறு அணிந்த கடவுள் நிறத்த வான் ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில் … Continue reading

இலக்குவன் மனைவியோ சானகி?

இலக்குவன் மனைவி = ஊர்மிளை! அவளும், ஒரு ஆண்டாளைப் போலவே! கோதைக்கு, அவ மொத்த வாழ்வே ஒரு கற்பனையா முடிஞ்சிருச்சி; எதை உள்ளுறையா வச்சி, அப்படிப் பொழிஞ்சி ஏங்கினாளோ? அந்த வலி, அந்தக் கற்பனை! = இலக்குவன் மனைவிக்கும் அப்படியே! 14 வருசக் கற்பனை வாழ்க்கை, காதலனுடன்! ஊர்மிளை = இவளே உண்மையான சானகி! = சனகனுக்குப் பிறந்தவள்; கண்டெடுக்கப்பட்டவள் அல்லள்! ஊர்மிளை -ன்னா வடமொழியில் “அலை” -ன்னு பொருள்! Waves of Passion = திருச்சீர் … Continue reading

One in 1000 = கம்பன்-சடையன் நட்பு!

இராமாயணம் எப்பவோ நடந்துச்சி! அதுல எப்படிச் சடையப்ப வள்ளல் வருவாரு? ஆனாலும் பாடிக் காட்டினான் கம்பன்; அன்றைய  இலக்கிய உலகில், இது யாருமே செய்யாத புரட்சி! பார்க்கலாமா இன்னிக்கி? புரட்சிக் கவி = எங்கள் கம்பன்! ஆரிய அடி வருடி அல்ல! = நான் இது தமிழ்ப் பாவினால், உணர்த்திய பண்பு அறோ! காவியம், வடக்கின் கதை என்றாலும், அது பிரபலமாகி விட்டதால், அதையே களமாகக் கொண்டான் கம்பன்; ஆனா, தமிழ் நிலத்துக்கு ஒத்தவாறு, மாற்றி இசைத்தான்! … Continue reading