சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”

வாசகர்களுக்கு வணக்கம்! பல மாதங்களாய், Dosa (எ) இந்த வீடு பூட்டியே கிடந்தது; இன்று திறக்கிறேன் – முருகனை முன்னிட்டு! ஆம்… இன்று, “கந்த சட்டி” (எ) சொல்லப்படும் நாள் (Nov 8-2013) Dosa-வில் வரும் சில பதிவுகள், “தீவிர சமயப் பற்று” கொண்டவர்களுக்குப் பிடிக்கலை போலும்; ஏகப்பட்ட குடைச்சல்கள் – இழிவு/இளக்காரங்கள்! அதனால் தான் பூட்டும் படி ஆயிற்று; பல முறை சொன்னது தான்: இன்று வேறு, தொன்மம் வேறு! இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும் … Continue reading

ஊமைச் செந்நாய்: Jemo சைவமா? அசைவமா?

“ஊமைச் செந்நாய்” – ஜெமோ நாவல் -ன்னு மட்டும் நினைச்சிக்காதீங்க:) சங்கத் தமிழில் உள்ள விலங்கு; பாலை நிலத்து வேட்டையாடி விலங்கு! – காதே அம்புட்டு பெருசா.. பயமா இருக்கும்! மலையோரக் கிராமத்துக் காடு/புதர்களில் காணலாம்; காட்டு நாய்; தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு, பெரிய மாட்டையே கூட அடிச்சீரும்;  ஆனா ரொம்பத் திங்காது; அதான் வேட்டைக்கு உதவி; Type Typeஆ சத்தம் போடும் –  அழுகை, கேவல், சீழ்க்கை-ன்னு; வேட்டை விலங்குகளில் Mega Star:) குறுகலா முகம், கருப்பா மூக்கு, பழுப்பாக் கண்ணு; … Continue reading

சிலம்பு கழி நோன்பு – என் கொங்கை, நின் அன்பரல்லார் தோள் சேரற்க!

கிராமத்துப் பக்கம் ஒரு சொலவடை = நோகாம, நோன்பு கும்புட முடியாது; எங்க வீட்டிலும் அப்படியே! உலர்ந்த அரிசியை உலக்கையால் மாவு இடிப்பது, பாகு காய்ச்சுவது, அதிரசம் தட்டுவது, காப்பு கட்டுவது -ன்னு…. முதுகு வளைஞ்சே போகும்:) ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை நோன்பு; கிராமத்தில், தீபாவளி அவ்வளவு சிறப்பு கிடையாது; நோன்பே முக்கியம்! (சங்கத் தமிழிலும் தீபாவளி கிடையாது; திரு ஓணம், கார்த்திகை விளக்கீடு முதலிய விழாக்களே!) தீவிரச் சைவக் குடும்பத்தில் இருந்து … Continue reading

Makeup – பெண் அழகாவது எப்படி?

அவ Makeup பண்ணிக்காமயே அழகா இருக்கா? எப்படி? என்னென்னமோ Makeup சொல்லுறாங்களே – முகத்துக்கு மட்டுமில்லாம… கை/கால் – இவற்றுக்குக் கூட ஒப்பனையா? Manicure, Pedicure, Paraffin Wax, Gel Color, Nail Art – இன்னும் என்னென்னமோ; இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் -ன்னு கேட்டுறாதீக; Me Know Only சங்கத் தமிழ்:) நூல்: ஐங்குறுநூறு (229) கவிஞர்: கபிலர் திணை: குறிஞ்சி அம்ம வாழி, தோழி! நாம் அழப் பல் நாள் பிரிந்த அறனிலாளன் … Continue reading

Physics in சங்கத் தமிழ்!

சின்ன வயசில் இதைப் பார்த்ததுமே, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வரும் = கரும்புச் சாறு வண்டி! * இனிப்பான சாறு, * கூடவே புளிப்பான எலுமிச்சை, காரமான இஞ்சி = அதன் மணமே சுண்டி இழுக்கும்! அதை விட, ஒரு வியப்பு = பல்லுப் பல்லாச் சக்கரங்கள்! கரும்பு இந்தாண்ட போயி, அந்தாண்ட சக்கையா வரும் காட்சி; அந்தச் சக்கரங்கள் சுத்துற காட்சியே, ரொம்ப நேரம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பேன்! அட, இதப் பார்த்துத் தான் … Continue reading