இளையராஜா பாட்டில் “தொகை”களைக் குறிக்க:

தொகை -ன்னா என்ன? = Amount? ஆமா, இந்தியப் பயண Vacation -ன்னு கிளம்பும் முன்னாடியே, காசு சீக்கிரம் “மறைந்து” விடுகிறது; அதனால் இது சரியே:) “தொகை”தல் = மறைதல்; வினைத் தொகை = வினை மறைஞ்சி இருப்பது; ஊறு காய் = ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய்! எப்போ ஊறுச்சி-ன்னே தெரியாது:) தமிழில், மொத்தம் எத்தனை தொகை? நம்ம Boss – “ஒல்காப் புகழ்த் தொல்கா” – சொல்லிக் குடுக்குறாரு, பார்க்கலாமா?:) நூல்: தொல்காப்பியம் … Continue reading

சிலுக்கு = குற்றியலுகரமா?

பல பேரு, சின்ன வயசில் படிச்சிருப்போம்! ஒடனே மறந்தும் இருப்போம்! கழுத்து அறுக்குறானுங்கடா; குற்றிய-லுகரமாம்!:) = என்னத்த குற்றணும்? குற்றமுள்ள நெஞ்சுக்குக் குற்றியலுகரம் -ன்னு நானே பேசி இருக்கேன்:)) ஆனா அப்போ, Prof. தொல்காப்பியர் (எ) செம Interesting Party பத்தித் தெரியாது; அவரு எம்புட்டு எளிமையாக், கிண்டலாச் சொல்லிக் குடுக்குறாரு; பார்க்கலாமா இன்னிக்கி? ஒரு கதையைப் பாத்துருவோம்! சென்னை கிறித்துவக் கல்லூரி; பேராசிரியர் (Professor) = பரிதி மாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) ஒரு சின்ன … Continue reading

“தொடை”யில் எது-கை?

தொடை = ரொம்ப அழகானது! தொடையில் எது-கை வைத்தல் = மிக்க இன்பம்! :) யோவ், நான் தமிழ்த் தொடையைச் சொன்னேன்-யா!:)) மொத்தம் 4 தொடைகள் = எதுகை, மோனை, இயைபு, முரண்தொடை… “தொடை” -ன்னா = மாலை! மாலை போல், செய்யுளில் ஊடால வச்சித் “தொடு”ப்பதால் = தொடை! எதுகை-மோனை -ல்லாம் ஒங்களுக்கே தெரிஞ்சது தான்! மற்ற தொடைகள் – இயைபு, முரண் -ன்னு சேர்ந்து பாக்கலாம், வாங்க! தொல்காப்பியர் சொல்லிக் கொடுக்கும் தொடை! நூல்: தொல்-பொருளதிகாரம்: … Continue reading

ஈறு கெட்ட எச்சம்!

எச்சம் = இன்னிக்கி பசங்களைப் போய்க் கேட்டா… “தூ” ன்னு துப்புவாய்ங்க:) இதான் சார், எச்சம்/எச்சி(ல்) -ன்னு சொல்லுவாய்ங்க:) ஆனா இலக்கணத்தில் = எச்சம் என்றால் என்ன? எஞ்சுதல் = எச்சம்; ஒரு கிலோ அதிரசத்தில் “எஞ்சி” நிற்பது மூனே அதிரசம் அப்படீன்னா அந்த மூனு அதிரசமும் இன்னும் “முற்று” பெறவில்லை -ன்னு தெரியுது அல்லவா?:)) முற்று பெற்றால் = முற்று; எஞ்சி நின்றா = எச்சம்! * முற்று பெறுவது = முற்று eg:  வந்தான் => … Continue reading

ஐ ஆல் கு, இன் அது கண்

ஐ ஆல் கு, இன் அது கண்  = ஞாபகம் இருக்கா?:) இல்ல….நான் ஏதோ Rhymingஆ உளறேன் -ன்னு நினைச்சிட்டீங்களா?:) Egg – jactly! 2ஆம் வேற்றுமை,  3ஆம் வேற்றுமை -ன்னு எப்பவோ படிச்சோம்-ல்ல?:) வலி மிகும், வலி மிகாது = போங்கய்யா, ஒரே வலி:)) But, Now when u fight with your girl friend & come back home, boring = What to do? Take your 6th std … Continue reading