சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”

வாசகர்களுக்கு வணக்கம்! பல மாதங்களாய், Dosa (எ) இந்த வீடு பூட்டியே கிடந்தது; இன்று திறக்கிறேன் – முருகனை முன்னிட்டு! ஆம்… இன்று, “கந்த சட்டி” (எ) சொல்லப்படும் நாள் (Nov 8-2013) Dosa-வில் வரும் சில பதிவுகள், “தீவிர சமயப் பற்று” கொண்டவர்களுக்குப் பிடிக்கலை போலும்; ஏகப்பட்ட குடைச்சல்கள் – இழிவு/இளக்காரங்கள்! அதனால் தான் பூட்டும் படி ஆயிற்று; பல முறை சொன்னது தான்: இன்று வேறு, தொன்மம் வேறு! இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும் … Continue reading

சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?

சங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே! புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை! = 10 Avtars/ 12 Hands = இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை! என்ன ஆதாரம்? என்ன தரவு?? “கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது! அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா:) “விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் … Continue reading

கை உள்ள Guy = செந்தில்! (செந்து+இல்)

#dosa365 வாசக அன்பர்கள், என்னை மன்னிக்க! என்ன தான் “தினம்” ஒரு சங்கத் தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும்… கடந்த இரு வாரங்களாக, இங்கு பதிவுகள் வரவில்லை; இந்தியப் பயணம்; முக்கியமான கால் சிகிச்சை இருந்தாலும் கூட என்னால் எழுதியிருக்க முடியும்; முன்னொரு முறை அப்படி எழுதி/scheduled செய்தும் உள்ளேன்; உண்மையான காரணம் அதுவல்ல! அவன்! = எவன்? அலைகள் வாய்க்கும் செந்தூர் முருகவன்; மூச்சே விட முடியாமல், நிறைந்து கொண்டான் பாவி:) அவனைச் சுற்றிச் சுற்றி ஏதோவொரு … Continue reading

சிலப்பதிகாரம் – வேங்கட மலையில் நிற்பது யார்?

ஊருக்கு வந்த நாளே, கிராமத்துக்குக் கிளம்பிட்டேன்! நோன்பு முடிஞ்சி, சென்னைக்குத் திரும்பி வரும் வழியில்… வேலூர் தானே… பாதி வழியில் Opposite Direction, திருமலை-திருப்பதி செல்ல நேர்ந்தது; அதான் இந்தப் பதிவு! அரை நாள் பயணம் – நான் மட்டும்:) பொதுவா, பாமர மக்களிடையே… சமயம் சார்ந்து, சில குழப்பங்கள் ஏற்படுத்துவது வாடிக்கை! திருப்பதி மலை மேல் இருப்பது = அவரோ? இவரோ? என்னும் குழப்பமும் அப்படித் தான்; எது ஓய்ந்தாலும், இது ஓயாது; வீண் கிளப்பி விடல்:) ஆனால், … Continue reading

சீர் கெழு செந்தில்! நீங்கா வேல்!!

கடந்த மூன்று பதிவுகளும் முன்பே எழுதி, schedule செய்யப்பட்டவை; இதுவும் அப்படியே; ஆனா Airport இல் பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டு… திருச்செந்தூருக்கு நேரில் வந்து… கண்டு கேட்டு உண்டு உயிர்த்து… ஏங்கி… வாசல் படியாய்க் கிடந்து, என் முருகன் பவழ வாய் காண்பேனே!! நூல்: சிலப்பதிகாரம் கவிஞர்: இளங்கோவடிகள் (வஞ்சிக் காண்டம், குன்றக் குரவை) சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே- பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு … Continue reading