ஊமைச் செந்நாய்: Jemo சைவமா? அசைவமா?

“ஊமைச் செந்நாய்” – ஜெமோ நாவல் -ன்னு மட்டும் நினைச்சிக்காதீங்க:) சங்கத் தமிழில் உள்ள விலங்கு; பாலை நிலத்து வேட்டையாடி விலங்கு! – காதே அம்புட்டு பெருசா.. பயமா இருக்கும்! மலையோரக் கிராமத்துக் காடு/புதர்களில் காணலாம்; காட்டு நாய்; தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு, பெரிய மாட்டையே கூட அடிச்சீரும்;  ஆனா ரொம்பத் திங்காது; அதான் வேட்டைக்கு உதவி; Type Typeஆ சத்தம் போடும் –  அழுகை, கேவல், சீழ்க்கை-ன்னு; வேட்டை விலங்குகளில் Mega Star:) குறுகலா முகம், கருப்பா மூக்கு, பழுப்பாக் கண்ணு; … Continue reading

சிலம்பு கழி நோன்பு – என் கொங்கை, நின் அன்பரல்லார் தோள் சேரற்க!

கிராமத்துப் பக்கம் ஒரு சொலவடை = நோகாம, நோன்பு கும்புட முடியாது; எங்க வீட்டிலும் அப்படியே! உலர்ந்த அரிசியை உலக்கையால் மாவு இடிப்பது, பாகு காய்ச்சுவது, அதிரசம் தட்டுவது, காப்பு கட்டுவது -ன்னு…. முதுகு வளைஞ்சே போகும்:) ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை நோன்பு; கிராமத்தில், தீபாவளி அவ்வளவு சிறப்பு கிடையாது; நோன்பே முக்கியம்! (சங்கத் தமிழிலும் தீபாவளி கிடையாது; திரு ஓணம், கார்த்திகை விளக்கீடு முதலிய விழாக்களே!) தீவிரச் சைவக் குடும்பத்தில் இருந்து … Continue reading

ஆண்மையுள்ள பெண்!

ஆண்மையுள்ள பெண்! பெண்மையுள்ள ஆண்! = என்னய்யா அநியாயம் இது? ஒரு பொண்ணு எப்பிடிய்யா ஆண்மையோடு இருக்கலாம்? அதை விடக் கேவலம்! ஒரு ஆணு… பெண்மையா-மென்மையா இருப்பதா? இதானா சங்கத் தமிழ் சொல்லுது? சேச்சே!:)) * ஆண்மை தவறேல் -ன்னு பாரதி சொன்னது = இரு பாலருக்கும் தான்! * கற்பும் அப்படியே = இரு பாலருக்கும்! ஆண்மை-பெண்மை = உடலுக்குத் தான்! உயிருக்கு அல்ல! * ஆளுமை = ஆண்மை! (ஆள்) * பேணுவது = … Continue reading

கன்னிப் பொண்ணு, பூச்சூடாதே:)

என்னாது, சங்க காலத்தில், கன்னிப் பெண்கள், பூச்சூடக் கூடாதா? “கூடாது”-ன்னு இல்ல! ஆனா, “பொதுவா” மாட்டார்கள்! :) இது என்னடா அநியாயமா இருக்கு? கைம்பெண்கள் பூச்சூடக் கூடாது -ன்னு மதம் தான் சட்டம் போடும்! தமிழ் கட்டுப்பெட்டி இல்லையே!  இது என்ன புதுக் கதை? அதாச்சும், அக்காலத்தில், கன்னிப் பெண்கள் பூச்சூடுவது, காதலின் போது:) ஒரு கன்னிப் பொண்ணு, திடீர் -ன்னு பூச்சூடிப் பார்த்தாங்க-ன்னா, ஊருல “வம்பு” பேசுவாய்ங்க!:) அதான்,  பொதுவில் பூச்சூடாமைக்குக் காரணம்! நற்றிணை!  பார்க்கலாமா பாட்டை? ஐதே … Continue reading