சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”

வாசகர்களுக்கு வணக்கம்!

soora samharamபல மாதங்களாய், Dosa (எ) இந்த வீடு பூட்டியே கிடந்தது;
இன்று திறக்கிறேன் – முருகனை முன்னிட்டு!
ஆம்… இன்று, “கந்த சட்டி” (எ) சொல்லப்படும் நாள் (Nov 8-2013)

Dosa-வில் வரும் சில பதிவுகள், “தீவிர சமயப் பற்று” கொண்டவர்களுக்குப் பிடிக்கலை போலும்;
ஏகப்பட்ட குடைச்சல்கள் – இழிவு/இளக்காரங்கள்! அதனால் தான் பூட்டும் படி ஆயிற்று;

பல முறை சொன்னது தான்: இன்று வேறு, தொன்மம் வேறு!
இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும் = இந்தப் புரிதலே போதும்!

உங்களுக்கு இன்னிக்கு பிடிச்சிருக்கு -ன்னு, தமிழ்த் தொன்மத்தில் தேடினா = இருக்காது:)
அதுக்காக, தொன்மத்தை மாற்றி எழுதவும் முடியாது;

“அறிவியல் பூர்வமான/ தரவுகள் சார்ந்த” = மனப் போக்கை நாம தான் வளர்த்துக் கொள்ளணும்:)

Dosa (எ) இந்தத் தளம்..
= நம்ம தமிழ்த் தொன்மத்தில், நம்ம இறை-இயல் வளர்ந்த பரிமாணம் எப்படி? -ன்னு “உண்மையாக” ஆய்வு செய்யும்!devaneya paavanarthiru vi ka
= அன்றைய இயற்கை வழிபாடு vs  இன்றைய புராண/ பரிகாரங்கள்

*மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்,
*தமிழ்த் தென்றல் திரு.வி.க
= இவர்களின் ஆய்வு இதற்கு வழிகாட்டும்!
= இனி பதிவுகள், அவ்வப்போது வரும்:)


வாங்க, சூர சம்ஹாரத்துக்குப் போவோம் | கந்த “சஷ்டி” = சங்கத் தமிழ் விழா-வா?:)
= இல்லை!

முன்னர் வாசித்த பதிவுகளை ஞாபகம் வச்சிக்கோங்க!
*தமிழ்த் தொன்மத்தில், முருகன் = நம் ஆதிகுடித் தலைவன்; அவ்ளோ தான்!
*நடுகல், கந்து, கோட்டம், வேலன் வெறி
= இப்படித் தான் அவன் “இயற்கை வழிபாடு” | குடி காத்த முன்னோர் வணக்கம்

6 முகம், 12 கை, 18 கண் = இயற்கைக்கு மாறான புராணச் சங்கிலிகள், பின்னால் வந்தவை!

ஆதிகுடிகளின் முருகன் மேல் = புராணத்தையும் ஏத்திட்டதால்…
எது இருந்தது? எது வந்தது? -ன்னே கண்டுபுடிக்க முடியாதபடி, வடநெறிக் கலப்பு!

valli_vedar_murugan (1)அப்போ சூரன்? மயில்? வேல்? காவடி?

*வேல் = குறிஞ்சி நில வேடுவர்களின் ஆயுதம்
*மயில் = முல்லை/ குறிஞ்சி நிலப் பறவை
*காவடி = மலை ஏற்றத்தில், எளிதாகப் பொருள் தூக்கிச் செல்லும் காத் தண்டு

அதான்… இது அத்தனையும்… அந்த நிலப் பெரியோனுக்கும் ஆகி வந்தது!(தேனும்/தினைமாவும் கூட)
இதுக்கு மேல, இதுல ஒரு “கதையும்” இல்ல! No Puranic Unbelievables:)

அப்போ சூரன்?????
அதைச் சொல்லுய்யா… சூரன் சூரன்?.. மாட்டிக்கிட்டியா ரவி?:)



சங்கத் தமிழில் “சூர்” உண்டு | ஆனா “சூரன்” இல்லை!
அந்த அக-நானூறு தான் இன்னிக்கி பாக்கப் போறோம்! Ok-vaa?:)

*காம வெறி புடிச்ச இந்திரன் = ரொம்ப நல்லவங்கோ!
*ஆனா அசுராள் மட்டும் = ரொம்ப கெட்டவங்கோ!
*முருகன், தேவாள் -க்கு Help பண்ணறத்துக்குன்னே, “தோன்றியவன்”
= இதெல்லாம் முதல்/இடைச் சங்கத் தமிழில் இல்லை:) | கலப்புக்கு பின்னரே, எழுதி எழுதிப் பரப்பப்பட்டது:))

வீர+பாகு | பாஹூ -ன்னா தோள்! (சம்ஸ்கிருதத்தில்)
“தமிழ்க் கடவுள்”-ன்னு சொல்லிக்கறோம் | ஆனா பேரு மட்டும் எப்படி “பாஹூ”?:)
= மனசாட்சியைத் தொறந்து வச்சீங்க-ன்னா ஒங்களுக்கே பதில் கிடைச்சீரும்;

சூர் = பயம்/துன்பம் | சூர் = கடவுள்
wpid-nin-kayil-vel-potri.jpeg

Itz a “Native Land” Concept
துன்பத்தை/ பயத்தை உண்டாக்க வல்ல கடவுளே, அதைப் போக்கவும் வல்லது;
அந்த முன்னோர் நடுகல் வழிபாடே = முருக வழிபாடு!

நடுகல் = இறந்து போன முன்னோர் என்பதால், “ஆவியாய்” இறங்குவதாயும் முருகன் கற்பனை செய்து கொள்ளப்பட்டதுண்டு!
அப்போ மலை வாழ் மக்கள் எடுத்த ஆட்டம் தான் = சூர் இறக்குதல்வேலன் வெறி;

முருகனையே = “சூர்” -ன்னு சொல்லும் சில சங்கப் பாடல்கள்!
(சூர் மலை வெற்பன், சூர் மகளிர்-தெய்வப் பெண்கள்)

வேலன் வெறியாடல்

வேலன் வெறியாடல்

“சூரன்” – அவன் தம்பிக்கு ஆட்டுத் தலை, சிங்கத் தலை – இதெல்லாம் புராண கப்சா!
“சூர்” – என்பதே தமிழ் மரபு | அது என்ன “சூர்” இறக்குதல்?

பொண்ணுக்குக் காதல் முத்திப் போச்சி; ஆனா வெளிப்படையா சொல்லப் பயப்படுறா;
அவ ஒடம்புல என்னென்னமோ மாற்றம் | இராத்திரி தனியாச் சந்திச்சிக்குறாங்க-ல்ல?:)

அம்மாவுக்கோ = பொண்ணு போக்கே புரியல!
என்னமோ ஏதோ? நம்ம குடி காத்த முன்னோரைக் கும்புடுவோம் -ன்னு பூசை வைக்குறா;

அப்போ, வேலன் (எ) பூசாரி வெறி ஆடுறான் = “சூர்” இறக்குறான்
ஆனா நம்ம பொண்ணு உள்ளுக்குள்ள சிரிச்சிக்குறா:))) | அட முட்டாப் பசங்களா, I am in Love with that Guy da!

பாக்கலாமா பாட்டை?


பாடல்: ஐங்குறுநூறு 249
கவிஞர்: கபிலர்
திணை: குறிஞ்சித் திணை
துறை: வேலன் வெறி

தோழி, தலைவி கிட்ட சொல்லுறா..

பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகென மொழியும் வேலன் மற்றவன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியா தோனே

காபி உறிஞ்சல்: (ரெண்டு ரெண்டு வரியா உறிஞ்சிக் குடிங்க, பார்ப்போம்:)

velan veri kizhanguபெய்ம் மணல் வரைப்பின்  = மணல் பரப்பி வச்சிருக்காங்க, வெறியாடும் முற்றத்தில்
கழங்கு படுத்து = கழங்கு -ன்னா, மஞ்சக் கழங்கு போல; மரத்தின் கிழங்கு
பூசைப் பொருளா, இதை வைக்குறது வழக்கம்; கூடவே தேன், தினை, கடம்ப மலர், காந்தள் பூ இதெல்லாம்;
கிடா வெட்டலும் உண்டு:)

அன்னைக்கு = அம்மாவுக்கு
முருகென மொழியும் வேலன் = உம் பொண்ணு மேல “சூர் இறங்கியுள்ளது”, நம்ம முன்னோர் தலைவன் முருகனே -ன்னு சொல்லுறான் வேலன் வெறி ஆடும் பூசாரி

மற்றவன் வாழிய = மற்று அவன் வாழி | நல்லா இருடே!

kannagi kovalan love backஇலங்கும் அருவிச் சூர்மலை நாடனை = அருவி கொட்டுற, சூர் மலை நாடன் = பயம் தரும் மலைநாட்டுப் பையன்!
அவன் தான்டா எனக்குள்ள “இறங்கி”ட்டான்; ஏதோ சூர் “இறங்கி” இருக்காம்-ல்ல?

அறியா தோனே = அடேய் அறியாத பூசாரியே (-ன்னு தோழியிடம் சொல்லிச் சிரிக்குறா பொண்ணு:)

என்ன நீங்களும் சிரிக்கிறீங்களா? இதான் “சூர்” |  சூர சம்ஹாரம் எல்லாம் ஒன்னுமில்லை:)



ஒவ்வோர் ஆண்டும், வடநாட்டில் தான் இராவணன் பொம்மை செஞ்சிக் கொளுத்துவாங்க;
அதே போல, தமிழ் நாட்டிலும் = “சூர சம்ஹாரம்” | கழுத்து வெட்டு:(

என்ன தான் “கதை”-ன்னாலும்,
Repeatedly beating & burning a Person/His Memory = Not a Human Value!
இது போன்ற “சம்பிரதாயங்கள்”, பின்னாள் தலைமுறையிலாச்சும் நின்று போகட்டும்!

சூரனைக் கொல்லலை = தன் மயில் வாகனமாய் ஆக்கிக்கிட்ட “கருணை”-ன்னு சொல்லுவாய்ங்க; Repeated Propaganda! அப்பறம் ஏன் கழுத்து வெட்டு? ஏன் அசுரர் “குடி கெடுத்த” ஐயா?
ஒரு பாவமும் அறியாத அந்த நாட்டு மக்கள்/ மொத்த இனத்தையே.. கடலில் மூழ்கடிச்சான் -ன்னு கந்த “புராணம்” சொல்லும்!

= இதுவா “கருணை”? | இல்லை, இது = “புராணம்”

my_murugava_shankariமுருகன் = நம்ம தமிழ்த் தொன்ம மூதாதை | கருணை-அழகன்
அவன் முகத்தைப் பாருங்க;
இதுவா “குடி கெடுக்கும்”?:(((

அவன் யார் குடியும் கெடுக்க மாட்டான்;
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக“-ன்னு மட்டும் சொல்லாதீங்க!

*முருகனை = தமிழா வணங்கினா.. “இயற்கை வழிபாடு” மனசுக்குள் இறங்கும்!
*முருகனை = புராணமா வணங்கினா.. பரிகாரம்-தோஷம் ன்னு “சுயநலம்” தான் இறங்கும்!

உங்க மனசாட்சிக்கு எது? -ன்னு நீங்க தான் முடிவு பண்ணிக்கணும்!

தமிழ்த் தொன்ம முருகன் = சூர சம்ஹாரம் செய்ய மாட்டான்!
அவனே ஒரு “சூர்”
நம் “சூர்” (எ) மனத் துன்பத்தை இறக்குவான், இயற்கை வடிவினன்; அம்புடுதேன்!

dosa 109/365

Comments
28 Responses to “சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்””
  1. amas32 says:

    //நம் “சூர்” (எ) மனத் துன்பத்தை இறக்குவான், இயற்கை வடிவினன்; அம்புடுதேன்!//

    அவனே என், உங்கள் மனத் துன்பத்தை இறக்கட்டும்.

    திரும்ப தோசாவைத் தொடங்கியதற்கு நன்றி. இனி தினம் ஒரு சங்கப் பாடலுடன் வருவீர்களா? :-)

    amas32

    Like

    • அவனே, உங்க/என் “சூரை” இறக்கட்டுமா?:) நன்றி-ம்மா!
      தினம் இட முயல்கிறேன், ஆனால் வாரம் ஒரு முறை நிச்சயம்!
      Lemme stabilize a bit & then do everyday:)

      Like

  2. வழக்கம்போல அரிய தகவல்.

    அப்போ சமஸ்க்ருத சூரன் வேறயா? அசகாய சூரன்-னு

    சூரசம்ஹாரன் வடநாட்டுல எங்கயாவது கொண்டாடுறாங்களா?
    கௌமாரம் வேற எங்கயாவது இருக்கா என்ன? பெங்காலி முருகன் படம் ஒண்ணு ட்விட்டர்ல போட்டீங்க. நான் சரியா படிக்கலை.

    நம்மூர்ல மட்டும் தான் நடக்குதுன்னு அதை எல்லாம் நிறுத்தக்கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன்.

    எந்த மரபை overwrite பண்ணுச்சோ அதைப்பத்தின தகவல்களை – இதைப்போல – தெரிஞ்சுக்கணும். அந்த பழமையை மீட்டு கொண்டாட பண்டிகைகள் இருந்தா இயன்றமட்டும் revive பண்ணணும். அதைப் பத்திய கீழ்நோக்குப் பார்வைகளை எதிர்க்கணும். அது வரைக்கும் ஒத்துக்குறேன்.

    ஆனா இருக்குறதை எல்லாம் விடக்கூடாது. இதுவும் இப்போ நூற்றாண்டுகளா கொண்டாடுறாங்க. மக்கள் அவங்களுதா ஆக்கிக்கிட்டாச்சு.

    தசரா ராவணவதம், மஹிஷாசுரமர்த்தினி, திரிபுரம் எரித்தல் (இதுக்கு எதாவது விழா இருக்கா), நரகாசுர வதம் – இதுக்கெல்லாம் squeamish ஆகுறதில்லை (gory films பார்க்க தயங்குவேன்! ஆனா இதெல்லாம் ஒரு abstractioன்றதால ஏத்துக்க முடியுது).
    அங்காளம்மன் மாசானக் கொள்ளை எல்லாம் ‘பதப்படுத்தி’ இன்னைக்கு palatableஆ ஆக்கிட்டாங்க. வருஷம்விடாம போயிடுவேன் (அதுவேகூட இழப்பு அந்த rawnessஓடயே இன்னைக்கும் இருக்கணும்னு நினைக்கிறவங்க இருந்தா – அதுவும் சரிதான்னு சொல்லுவேன்).

    இதுக்கெல்லாம் எந்த வித எளிமையான விளக்கமும் தரத்தோணலை (தீமை அழித்து ஒளி பறப்பி etc). சுயநலம் இறங்கும்னு எல்லாம் சொல்றதுகூட மிகைஎளிமையா (simplistic) இருக்கு.

    வேண்டுதல், நேர்த்திக்கடன் இதுக்கெல்லாம் இன்னதுன்னு அறுதியிட்டுக் கூறமுடியாத பழக்கவழக்கத் தொடர்ச்சி இருக்கு இல்லையா. அது தப்புன்னு எல்லாம் சொல்லவே மாட்டேன். தமிழ் தொன்மத்துல வேண்டிக்கிட்டு ஆடு, கோழி பலி கிடையாதா என்ன? மழை வேண்டி பலி கொடுக்குறது எல்லா நாகரீகங்கள்லயும் இருந்திருக்கும். அதையெல்லாம் சுயநலம்னு சொல்லி குறைவா நினைக்க முடியுமா?

    Of course, that’s just me. என் அறிவைக் – அதுவும்என் சிற்றறிறவைக் – பண்டிகைகளை வடிகட்டும் வேலையே நான் வைத்துக்கொள்வதில்லை.

    Like

    • ஆகா நீங்களா, வாங்க வாங்க!
      இப்ப தான் மொத மொறையா வாரீகளா?:)

      Like

      • அப்படியான்ன?
        முன்னமே படிச்சிருக்கனே. தினம் ஒண்ணுன்ற வேகத்துக்கு ஈடு குடுக்க முடியாம இடைல கேப் விழுந்துபோச்சு, நீங்களும் நிறுத்திட்டீங்க.
        இந்த முறை தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

        Like

    • ஆமா,
      ஸூரன் = சம்ஸ்கிருதக் கதை தான்! (ஸூரபத்மன்)

      வடநாட்டிலும் முருகன் உண்டு; ஆனா முருகன் இல்லை; ஸூப்ரமண்யன், கார்த்திக்:)
      பல கார்த்திக் ஆலயங்களும் உள்ளன; வங்காளம், மகாராஷ்ட்ரா, காஷ்மீரம், உத்தராஞ்சல், காசி..

      அங்கெல்லாம் கூட ஸூரபத்மன் தெரியும்
      ஆனா சம்ஹாரத்தை விழாவாக் கொண்டாடுறதில்லை!

      ராவண சம்ஹாரம் மட்டுமே வடக்கில் விழா,
      ஸூர சம்ஹாரம் இங்கு விழா
      ——–

      மசான (மயானக்) கொள்ளை-ல்லாம் இப்போ நீர்த்துப் போச்சி:)

      ஸ்ம்ஹாரத்தை ஏன் நிறுத்திக்கலாம் -ன்னு சொன்னேன்-ன்னா, only for human values, nothing else:)

      சில தொன்மங்களைத் தொடரத் தேவையில்லை; என் தனிப்பட்ட கருத்து மட்டுமே:)
      சாதி = தொன்மம் தான்! தொடருவோமா?:)

      வடமொழி விட்டுருங்க.. தமிழ்லயே கூட, யானை வைத்துத் தலை இடறும் மரண தண்டனை உண்டு.. தமிழ் மரபு -ன்னு அதைத் தான் தொடர்வோமா?:)

      மனிதத்தோடு ஒன்றிய தொன்மங்களைத் தொடரலாம், அம்புட்டுத் தான்!
      சஷ்டி கொண்டாடிக்கட்டும்!
      வடநெறிக் கலப்பு-ன்னு, பண்டிகையை நிறுத்தச் சொல்லலை
      பண்டிகையில், “தலை அறுத்தல்” மட்டுமே வேணாம்-ன்னு சொன்னேன்:)
      ————

      //எந்த மரபை overwrite பண்ணுச்சோ அதைப்பத்தின தகவல்களை – இதைப்போல – தெரிஞ்சுக்கணும்//

      Exactly!
      அந்தத் “தமிழ் அறிதல்” = அதுக்குத் தான் இத்தனை மெனக்கெட்டு எழுதறது!
      அறிதல் மட்டுமே!

      திருச்செந்தூர்க் கோயில் முழுக்க = வடநெறி, சுப்ரமண்ய ஸ்வாமி தேவஸ்தானம் தான்:)
      அதுக்காக இடிச்சீற முடியுமா?:)))

      அறிதல் மட்டுமே!
      அறிய அறியப் பண்படும்; அவ்வளவே!

      Like

      • //பண்டிகையில், “தலை அறுத்தல்” மட்டுமே வேணாம்-ன்னு சொன்னேன்:)//
        புரிஞ்சுது.
        நான் நேர்ல பார்த்தது இல்லை. அதுனால எவ்வளவு வன்முறையா இருக்கும்னு தெரியலை.

        ராமாயண, மகாபாரத டிவி தொடர்கள்ல தலையை வெட்டுறதை படு ஆர்வமா பார்த்து வளர்ந்தவங்க தானே. அதுனால அவ்வளவு macabre-ஆ தோணலையோ என்னவோ.

        இன்று அதை உருவகமா பார்க்கலாம் (தீமை X நன்மை), பொம்மையின் தலையை கொய்தலும், ராவணனின் பிரம்மாண்ட உருவம் எரிந்து விழுதலும் – என்னமோ எனக்குக் கொடூரமா தெரியலை. குழந்தைகள் கார்ட்டூனே அதை விட வன்முறை நிறைந்ததா இருக்கு.

        நீங்க சொல்றது புரியுது.
        ஒவ்வொரு காலமும் தனக்கு ஏத்த மாதிரி சடங்கை sanitize பண்ணிக்கும்.
        ஒருவேளை நான் ’இன்று’ல நின்னுக்குட்டு பேசுறேன், நீங்க ‘நாளை’க்குக் கூப்பிடுறீங்களோ என்னவோ.

        எதுக்கும் நான் போய் பார்க்குற வரைக்கும் மைசூர்ல தசராவும், செந்தூர்ல சூரசம்ஹாரமும் தொடரட்டும்

        Like

  3. rAguC says:

    தமது தொன்மங்களை சிதைத்த இம்மாதிரி நிகழ்வுகளை தமிழர்கள். எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள்? தம் மரபை மறந்துவிட்டு அதன் பெயரிலேயே வேறொன்றை பின் தொடர அவர்களை செய்தது எது? எந்த புள்ளியில் இவர்கள் தோற்றார்கள்?

    அன்புடன்,
    ரகு.சி

    Like

    • எப்படி ஏற்றுக் கொண்டார்களா?
      இப்படித் தான்:) = https://dosa365.wordpress.com/2012/11/22/106/
      பழைய பதிவைப் படிக்கல போல:)) | சுருக்கமா கீழே..

      ———————
      வணிகம்-தொடர்பு காரணமாய், வடமொழி (எ) வடநெறி, தமிழ் நிலத்தின் ஓரமா வந்து குந்திக்கிட்டு இருக்கு;
      இது தொல்காப்பியருக்கும் தெரியும்; அதான் “வட எழுத்து ஒரீஇ” (ஒதுக்கு) -ன்னு எழுதினாரு;

      பண்பாடுகள் சற்று கலக்கத் தான் செய்யும்; யாரும் தனித்து வாழவியலாது; ஆனால்.. ஆனால்…
      அப்படிக் கலக்கும் போது,
      * ஒரு சமூகம், தன் வேர்களை இழந்து விடக் கூடாது;
      * மரியாதையுடன் கூடிய கொடுக்கல்-வாங்கல்; அதுவே நல்லது;

      ஆனா, அரசர்கள்-அதிகாரம் மூலமா நுழைந்து கொண்டது வடநெறி;
      மதம் (எ) சக்தி வாய்ந்த போர்வை போத்தி வந்திருக்கே?

      * பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி = பாவம்;
      * பாவத்தை ஈடு கட்டணுமா? = புண்ணியம்!
      ஹோமம், யாகம், ஸ்வர்க்கம், நரகம் = இந்த வித்து (மன மாயை) தூவப்பட்டு விட்டது;

      * முது குடிப் பெருவழுதி = பல் “யாகசாலை” முது குடுமிப் பெருவழுதி ஆனான்;
      * பெருநற் கிள்ளி = இராச சூயம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான் (இராச சூயம் = “ராஜசூய” யாகம்)
      அரச/ அதிகாரப் பரவலே முதலில்; பின்பே இலக்கிய/ சமூகப் பரவல் = அது கடைச்சங்க காலம்
      கடைச்சங்க காலம் = மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, “மதம்” பிடித்தது:(

      அரசனைக் “கொண்டது” போல், சமூகத்தை எப்படிக் “கொள்வது”?
      = வாழ்க்கையின் துன்பம் எல்லாம் விலகி ஓடணுமா? = “பூஜா-புனஸ்கார-ஜோதிட-பரிகாரங்கள்”

      “உங்க முருகனும், திருமாலும், இங்கேயும் இருக்கா பாருங்கோ;
      வெறுமனே, நடுகல்லா இல்லாம…
      எம்புட்டு Magic; எம்புட்டு *ஜாலி* யான புராணக் கதைகள்…
      * கந்தன் -> ஸ்கந்தன் ஆனான்;
      * திருமால் -> விஷ்ணு ஆனான்!
      தமிழ்த் தொன்மங்களின் மேலேயே, பலதும் ஏற்றப்பட்டன;

      நம் தொன்மங்களை, நாமே இழக்க வைக்கும் “உத்தி” = புராணம் ஏற்றுதல்;
      பிரபலம் ஆகாத வரை = எளியோரின் சமயபுரத்தாள்;
      பணம் கொழிக்கத் துவங்கியவுடன் = சமயபுரத்தில் அர்ச்சகாள் வந்து, “அம்பாள்” ஆகி, தல “புராணமும்” வந்துருச்சே! Same!
      ———————

      Like

      • //* முது குடிப் பெருவழுதி = பல் “யாகசாலை” முது குடுமிப் பெருவழுதி ஆனான்;//
        புரியலை. பிற்சேர்க்கை’ன்றீங்களா?
        புறநானூற்றுக் காலத்துலயே தமிழ்நாட்டுல யாகசாலைல்லாம் இருந்துச்சுன்றது இந்தப் பெயரை முக்கியமா குறிப்பிடுவாங்களே.
        The name is not authentic??

        //* பெருநற் கிள்ளி = இராச சூயம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான் (இராச சூயம் = “ராஜசூய” யாகம்)//

        Same as above.

        Like

        • //புரியலை. பிற்சேர்க்கை’ன்றீங்களா?//

          இல்லல்ல! பிற்சேர்க்கை இல்ல!
          வெறுமனே இருந்த பெருவழுதி = வடநெறியைத் தழுவி, “பல்யாகசாலை” பெருவழுதி ஆனான்
          வெறுமனே இருந்த பெருநற் கிள்ளி = வடநெறி தழுவி, “இராச சூயம் வேட்ட” பெருநற் கிள்ளி ஆனான்

          புறநானூற்றில், இவர்களை ஒட்டித் தான் “யாகசாலை” -ன்னு வரும்!
          என்னமோ, அதைப் பெரிய “ஆதாரமா” காட்டுவானுங்க ஒரு சிலரு:) | பாத்தீங்களா, சங்கத் தமிழ்லயே வேதம்/ஹோமம் இருக்கு-ன்னு..
          அதான் “கலப்பு” தொடங்கிய காலம்!
          அதுக்கு முன்னாடி முதல்-இடைச் சங்க காலத்தில் காட்டச் சொல்லுங்க பார்ப்போம்; பெப்பே-ன்னு முழிப்பாங்க:)

          மன்னர்கள், இப்படி மாறினாலும்.. மக்கள், தடால்-ன்னு மாறலை | மதம் எனும் ஆணி அடித்து அடித்துத் தான் மெல்ல மாற்றம்;
          சங்கத் தமிழுக்குப் பின் வந்த சிலப்பதிகார காலத்திலும், மக்கள் முழுக்க மாறலை | கண்ணகி சடங்கு செய்ய மறுப்பா!

          Like

          • Prasanna says:

            //புறநானூற்றில், இவர்களை ஒட்டித் தான் “யாகசாலை” -ன்னு வரும்!
            என்னமோ, அதைப் பெரிய “ஆதாரமா” காட்டுவானுங்க ஒரு சிலரு:) | பாத்தீங்களா, சங்கத் தமிழ்லயே வேதம்/ஹோமம் இருக்கு-ன்னு..
            அதான் “கலப்பு” தொடங்கிய காலம்!
            அதுக்கு முன்னாடி முதல்-இடைச் சங்க காலத்தில் காட்டச் சொல்லுங்க பார்ப்போம்; பெப்பே-ன்னு முழிப்பாங்க:)//

            முதல் இடைச்சங்க நூல்களே இல்லையே அப்புறம் நீங்க காட்டுங்களேன் யாகங்கள் அப்போ நடக்கவில்லைனு… என்னய்யா உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

            Like

      • Prasanna says:

        //நம் தொன்மங்களை, நாமே இழக்க வைக்கும் “உத்தி” = புராணம் ஏற்றுதல்;
        பிரபலம் ஆகாத வரை = எளியோரின் சமயபுரத்தாள்;
        பணம் கொழிக்கத் துவங்கியவுடன் = சமயபுரத்தில் அர்ச்சகாள் வந்து, “அம்பாள்” ஆகி, தல “புராணமும்” வந்துருச்சே! Same!//

        கோவில்களில் இருந்து ப்ராம்மணர்களைத் தூக்குவதற்கு இப்புடியெல்லாம் ஆதாரமே இல்லாம கப்ஸா விடலாமா? ஒரு தமிழ் மன்னன் இன்னொரு தமிழ் மன்னனிடம் போர் புரிந்த நாடு இது. சும்மா தூய தமிழ் கலாச்சாரத்தை சங்கத்தமிழ்ல இருந்து காண்பிக்கிறேன் பேர்வழின்னு பூரா பிராம்மண வெறுப்பரசியலா எழுதிக் குவிக்கிறீங்க! அரிப்பை ரொம்ப சொறிந்தால் சீழ் கட்டிப் புரையோடி பொய் விடும். உங்கள் விஷயத்தில் அது நன்றாக தெரிகிறது. உங்கள் மனா அரிப்பு. கம்பன் ஒரு பார்ப்பன அடிவருடினு சொல்றது ஓகே. ஆனால் இளங்கோவடிகள் ஒரு சமந்த துறவி தானே! அவரே மம்முது பார்ப்பனன் பற்றியும் வைதீகச் சடங்குகள் தமிழ் மண்ணிலே இருந்தது பற்றியும் பேசியிருக்காரே! திருவள்ளுவர் அந்தணர் பற்றி எழுதலையா?

        அந்தணர் என்போர் அறவோர்னும், அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் என்று சொல்லலையா? இடைச்சங்கத்துல தமிழ் நாட்டுல கோவில்கள் இல்லைநும், வெறும் நடுகல் வழிபாடும், தலைவன் தலைவி கரும்புக்கு காட்டுக்குள்ள ஜல்சா பண்றது மட்டும் தான் இருந்துச்சுனு ஏதாவது ஆதாரம் இருக்கா? சும்மா எவனும் சங்க இலக்கியம் நம்மளைத்தவிர படிக்க மாட்டான்னு நெனச்சுக்கிட்டு வெட்டி நியாயம் பேசிற்றுக்கீங்க!

        Like

  4. rAguC says:

    பழைய பதிவு முன்னமே படிச்சிட்டேன் முருகா, என்றாலும் இவையாவும் ஒரே இரவில் நடந்து விட்டிருக்காதல்லவா? அப்படி நூற்றாண்டு கால மாற்றத்தை தமிழ் பற்று கொண்ட எவரும் எதிர்க்கவல்லையா? புரட்சிக்குரல் எழுப்பிய நிகழ்வுகள் உண்டா?

    Like

    • ஒரே இரவில் நடக்கலை; சிறிது சிறிதாய்த் தான்;
      பல சான்றோர்களும் எதிர்த்தார்கள்; பதிவும் செய்தார்கள்!
      ஆனால் வலிய அரசின் முன் எம்மாத்திரம்?:(

      அரசு இயந்திரம் ஒரு பக்கம் – மக்கள் சுயநலம் மறுபக்கம்;
      ஈழப் பிரச்சனையில் நடக்கலையா?

      படுகொலை ஈரம் காயும் முன்பே, கலைஞர் குழாத்தைத் தானே மறுபடியும் நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்கள்?
      அரசு-மக்கள்: இரண்டுக்கும் நடுவில், சிறு எதிர்ப்பு மட்டும் தானே ஈழத்துக்குப் பதிவானது? அப்படியே சங்கத் தமிழிலும் நடந்தேறியது;

      என்ன, ஈழம்= உயிர்க் கொலை; பட்டவர்த்தனமாய்த் தெரியுது
      இது= பண்பாட்டுக் கொலை; அதனால் வீச்சு கம்மி!

      *கலைஞர் = முது குடுமிப் பெரு வழுதி
      *மக்கள் = முல்லை/குறிஞ்சி நீங்கி, மருத நிலத்துக்குப் புலம் பெயர்ந்த மக்கள்

      மக்களே, தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு Shortcut = ஹோம/யாகத்தில் இருக்கு-ன்னு நினைச்சா… சான்றோர் என்ன பண்ண முடியும்?:)
      *சத்ரு சம்ஹார யாகம் – எதிரி அழிவான்
      *பரிகாரம் பண்ணாச் சரியாயீரும்-ன்னு டைப் டைப்பாக் கிளப்பினா, தமிழ் என்ன செய்ய முடியும்?

      நினைவில் கொள்க:
      *சம்ஸ்கிருதத்தின் “சக்தி வாய்ந்த” ஆயுதம் = மதம்
      *அந்த ஆயுதம் = சங்கத் தமிழுக்கு இல்லை:((((

      Like

      • Prasanna says:

        முதல்ல சங்கத்தமிழை ஒரு மொழியாக மட்டும் பார்க்கணும், ரெண்டு ரெண்டு வரியாய் உறிஞ்சனும்நீங்க. இப்போ அதை ஒரு கலாச்சார மரபா சங்க இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்களில் கலந்துவிட்ட பார்ப்பனீய பண்பாட்டை தவிர்ப்பது பற்றியெல்லாம் பேசறீங்க! கொண்டையை மறைக்கவும்! தமிழன் முதற் சங்க காலத்திலிருந்தே யாகம் செய்பவன். நீரே முக்கண் முதல்வனும் ஆகுகனு நக்கீரர் சிவனுக்கு சொன்னது வெறும் புராண கப்ஸா அப்டின்னா, நீங்க வேங்கடவன் கோவிலுக்கு போய் சங்கும் படைஆழியும் ஏந்தி நிற்கும் கடவுளைக் கும்பிட்டேனு பதிவிடுறது உங்க ரெட்டை வேஷத்தை காட்டுது. ஒன்னு திருமால் வெறும் காட்டான், கன்றொட்டினு பாருங்க. இல்லை அவனை வேங்கடவன், திருவாழ்மார்பனா பாருங்க! ஏன் இப்புடியும் அப்புடியும் போட்டு சொதப்பிக்கிட்டு…..? ச்சை…

        Like

    • எதிர்பைப் பதிவு செய்த சான்றோர்கள்:

      *தொல்காப்பியர் = வட எழுத்து ஒரீஇ (ஒதுக்கு)
      *மாங்குடிக் கிழார் = நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே
      *கபிலர் = “புதிதாய் நம்மூரில் தோன்றி இருக்கும் குடுமிகள்” -ன்னு அறிவு சார் கேலி

      *கடுவன் இள எயினன்
      *மருதன் இள நாகன்
      *நல் அந்துவனார்
      *ஓதல் ஆந்தையார்
      *பெண் புலவர்கள்= காக்கைப் பாடினியார், வெள்ளிவீதியார்
      இன்னும் பலர்

      பல பாடல்களில், “புதிய நச்சுப் போக்கு” ஆங்காங்கே சுட்டிக் காட்டப்படும்!
      ஆனால் மக்கள்? = மதம் (எ) சக்தி வாய்ந்த ஆயுதம்!
      ——————

      அப்படியும், சான்றோர்கள், இலக்கியத்தில் மட்டும் அத்துணை சீக்கிரம் நுழையவே விடலை!

      கிரந்த எழுத்து கொண்டாந்தாங்க!

      தொல்காப்பிய விதிகளை மீறி, புது இலக்கணம் புகுத்தப் பாத்தாங்க (திகட சக்கரம்-வீர சோழியம்);
      முருகனே நேரில் வந்து, ழ க்குப் பதில் ட போட்டுக்கலாம் -ன்னு சொன்னதாய்ப் பரப்பல்:)

      திருவிளையாடற் புராணத்தில்: சிவபெருமான் உடுக்கை அடிச்சி, தமிழும் சம்ஸ்கிருதமும் உடன்பிறப்பாய்ப் பிறந்தன -ன்னு கதை:)
      அ முதல் ஹ வரை 48 Sanskrit Letters = took birth as 48 சங்கப் புலவர்கள்:)))
      etc etc…

      ======செம பரப்பல்:) அத்தனையும் “மதம்” மூலமாய்!

      என்ன தான் அரசன்-மக்கள் மாறினாலும்…
      தொல்காப்பிய அடிப்படையை, இலக்கியச் சான்றோர்கள் அசைக்க விடவில்லை!
      தொல்காப்பிய அடிப்படையே, தமிழின் பலதும் காத்துக் குடுத்தது!
      ——————

      Like

      • இளங்கோ அடிகளும், கண்ணகி சொன்னதைப் பதிவு செய்கிறார்:

        புருசன் மீண்டும் கிடைக்க, சூர்ய குண்டம்/சோம குண்டம் = நீராடிப் பரிகாரம் செய் -ன்னு அவள் பக்கத்து வீட்டு வடமொழித் தோழி (தேவந்தி) சொல்ல…

        கண்ணகி சொல்லும் சொல்: “அஃது எமக்குப் பீடு அன்று”
        —————–

        இப்படிப், “பதிவு செய்யப்பட்ட” எதிர்ப்புகள் பலவும் இருக்கு!

        ஆனா நம் தமிழ் வாத்திகள்/இலக்கணப் பண்டிதாள், இதெல்லாம் கடந்து சென்று விடுவார்கள்!
        ஒருபுடை உருவகம் = “ஏகதேச” உருவகம் ஆகிவிடும்:(

        இலக்கணப் பாடம் எடுப்பது போல், தமிழை=Rule Book ஆக்கியது தான் மிச்சம்:( | தமிழைக் கொண்டே, தமிழின் கண்ணைக் குத்துதல்
        **”தமிழ்-உணர்வு” வேண்டாம்
        **தமிழ் “Rule Book” போதும்
        —————–

        சிங்களத்தைக் கலந்து கலந்து…
        ஒரு கட்டத்தில், வாழ்ந்தால் போதும் -ன்னு தமிழர்களே மாறிடுவாங்க-ல்ல?

        ரெண்டு தலைமுறைக்கு அப்பறம்??
        = தமிழ்க் குழந்தையே, “தமிழும் சிங்களமும் நம் இரு கண்கள்”-ன்னு சொல்லீரும்:))))))))))))
        = வடமொழியும், தமிழும் நம் இரு கண்கள், ரெண்டு பண்பாடும் ஒன்னே!

        மதம் எனும் ஆயுதம் இல்லாததால்…
        இதையெல்லாம் மெளன சாட்சியாய்க் கடந்து வந்துள்ளது = தமிழ்!!

        Like

      • //பல பாடல்களில், “புதிய நச்சுப் போக்கு” ஆங்காங்கே சுட்டிக் காட்டப்படும்!//
        இதைப் பத்தி தோசை சுட்டிருந்தா சுட்டி, இதுவரை சுடாட்டி நேயர் விருப்பம்.

        Like

  5. உங்களின் இடுகைகள் என்னை மிகவும் பலம்பொருந்தியவனாய் மாற்றிக்கொண்டே இருக்கின்றன….!

    Like

  6. anbarasan says:

    extrordinary introductions to sangathamizh.through common man style. I dont know much about litrature.but you make me realize the kick! In highly technical explainations.

    Like

  7. இன்று தான் படித்தேன்..உங்கள் விளக்கம் மேற்கோள்களுடன் வெகு அருமை!!

    Like

  8. முருகனுக்கே வெளிச்சம்.

    Like

  9. vijay says:

    Arumai. Maelum Ezhuthavum. :)

    Like

  10. Uravae j. Roopan says:

    Neenga face book la irukkeengala. Naan ungal rasigan.

    Like

  11. Arun Prasad A says:

    தமிழ்க் கடவுள்”-ன்னு சொல்லிக்கறோம் | ஆனா பேரு மட்டும் எப்படி “பாஹூ”?:)
    = மனசாட்சியைத் தொறந்து வச்சீங்க-ன்னா ஒங்களுக்கே பதில் கிடைச்சீரும்;

    Enakku ithu vilangala ? Konjam puriyara maathiri sonningana ?

    Like

  12. mahadevan srinivasan says:

    நான் சாதாரண வாழ்வு வாழும் ஒரு மனிதன், சமீபகாலத்தில் உங்களை இணையம் வழியாக அறிந்தேன் பயன் அடைகிறேன்,
    என் மனமார்ந்த நன்றிகள்.

    Like

  13. Thomas says:

    1.கடவுள் என்றால் என்ன? 2.நம்பிக்கை என்றால் என்ன?
    3.வணங்குதல் என்றால் என்ன?
    4.வழிபாடு என்றால் என்ன?
    போன்ற கேள்விகளை சங்ககால அடிப்படையில் விளக்கவும்.
    அல்லது சங்ககால கட்டத்தில் அச்சொற்கள், இல்லையேல் தற்கால விளக்கமென்ன அச்சொற்களுக்கு?

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)