சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?

naan_nathikan_yenசங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே!
புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை!
= 10 Avtars/ 12 Hands
= இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை!

என்ன ஆதாரம்? என்ன தரவு??

கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது!
அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா:)


“விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் சில பெரியவா, தய்யா-தக்கா -ன்னு குதிச்சாங்களாம்:)
Okies; I am Very Sorry! But.. என்ன தான் குதிச்சாலும்.. விநாயகரைச் சங்கத் தமிழில் கண்டுபுடிக்க முடிஞ்சுதா? இல்லை தானே? அதான் உண்மை:)

Matter is Very Simple!
*இன்றைய நிலை வேறு; தொன்மம் வேறு!
*இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!
இந்தப் புரிதலே போதும்!

உங்களுக்கு இன்னிக்கி புடிச்சிருக்கு என்பதற்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாது!
*உங்க தனிப்பட்ட விநாயக வழிபாட்டை “இழிவு” செஞ்சா, அது தப்பு.
*ஆனா, “சங்கத் தமிழில் விநாயகர் இல்லை” -ன்னு எழுதினா? தப்பு அல்ல; அது தொன்மவியல்!


தமிழ் நிலத்தின் இறைத் தொன்மம் = “நடுகல்”!

nadukal-heroesstone+02-300x300nadu kalதமிழ் முன்னோர் தலைவர்கள், தங்கள் ஆதிகுடிகளைக் காத்த நினைவாக = கல் சமைத்துப் போற்றுவது= நடுகல்! நீத்தார் பெருமை! அதுவே இறைமை!

“கந்து” என்பதும் உண்டு= கல் தூண்!
கந்து/ நடுகல்லில்= குடி காத்தவர்களின் பெயர்/படம் எழுதி வைப்பதும் உண்டு!

முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்)
= இப்படித் தோன்றியவர்கள் தான்!
= ஆதி குடிகளின் இனத் தலைமை!

கந்தன் =  இவன் “ஸ்கந்தன்” அல்ல!
திருமால் =  இவன் “விஷ்ணு” அல்ல!

இவர்கள் ஆதி குடி நாட்டார் தெய்வங்கள். (பின்னாளில் சம்ஸ்கிருதம் கலந்து, புராணக் கதைகள் ஏற்றப்பட்டு, “பெரும்”தெய்வங்களாய் மாறிப் போனது அப்புறம் தான்.
சைவம்/ வைணவம் என்ற பேரே சங்கத் தமிழில் கிடையாது; “மத அமைப்பு” இல்லவேயில்லை)

* முல்லை = காட்டின் அடர் “கருமை” = மாயோன்maayon cheyon
*
குறிஞ்சி = மலை உச்சியின் “சிவப்பு” = சேயோன்

மால்தங்கள் கண்ணுக்குப், பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, “மால்” என்று ஆதித் தமிழர்கள் வழுத்தினர் – திரு.வி.க ஆய்வுரை!
மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” – ஈழத்து அறிஞர் கா. சிவத்தம்பி!

முருகு = பெண்கள் மேல் இறங்கும் ஒரு “ஆவி”த் தெய்வம் என்பதே சங்க மரபு!
“வேலன் வெறியாடல்” என்கிற நாட்டார் பூசை;
வெறியாடிகளின் மேல் ‘முருகு’ இறங்கல்; ஆட்டுப் பலி, “சூர் மடிதல்” -ன்னு பழங்குடி வழக்கம்.


கந்து = யானையைக் கட்டி வைக்கும் குறுந் தூண்; அதையும் அந்த யானையே தான் சுமந்து செல்லும்!
தன்னைக் கட்டும் ஒன்றையும் தானே சுமந்து செல்லுதல் போல்..
கட்டுப்படாக் கடவுளும், அன்பால் தானே கட்டுப்படல்;  அதுவே, கந்து + அன் = கந்தன்!

வள்ளி = கந்து  (எ) கல்தூணில் படரும் வள்ளிக் கொடி!

valli-amma-at-the-hill-top-temple-velloreஇது முன்னோர்களின் காதல் வாழ்வுக்கு அடையாளம்;
(மறைந்து விட்ட) தலைவன் – தலைவி = நடுகல்லும், அதில் படரும் கொடியுமாய்!
= கொடிநிலை, கந்தழி, வள்ளி  (தொல்காப்பியம்)
நினைவு போற்றுதல்! அன்பே தெய்வம்! இயற்கை வாழ்வு! புராணங்கள் இல்லை.

நடுகல்லு வச்ச இடத்தில், ஒரு காதல் காட்சி பார்க்கலாமா? வாங்க..

அவளுக்கு அவன் மேல் “மிக்க” அன்பு! ஆனா, அவனோ அவளைக் “கண்டும் காணாதது” போல் இருக்கான்.
தன் காதலை வாழ்விக்க முடியாம, அவ என்ன பண்ணுறா? = தற்கொலை? இல்லையில்லை!

சூர் நசைத் தலையாய் “நடுகல்” கண்டே
பரிந்தனென் அல்லனோ, இறை இறையானே

nadukalமுன்னோர்களே,  நீங்க தூக்கி வளர்த்த இவனுக்கு..
நீங்களே என் அன்பையும் புரிய வைக்கக் கூடாதா?”
-என்று, நடுகல்லையே அவ வணங்குறா!

தன் முன்னோர் மரபின்  மேல், அவ கொண்ட மதிப்பு!
அந்த மதிப்பால், அவன் மதிப்பில் அவ உசந்துட்டா;
அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டான்; இதழ் இழுத்து உறிஞ்சிக்கிட்டான்; இதுவே மாமூலனாரின் குறுந்தொகைப் பாடல்!

இந்த நடுகல், பார்ப்பதற்கு… இன்றைய “லிங்கம்” போல் இருந்தமையால், சில ஆய்வாளர்கள், லிங்கம் என்று பிழையாக எண்ணி விட்டார்கள்:)p8c
ஆனால், அன்றைய தமிழில் “ல” -ன்னே எழுத்து தொடங்காது; லக்ஷ்மி= இலக்குமி; லிங்கம்= இலிங்கம்!
லிங்கம் = வடமொழி; தமிழில் எழுதும் போது = இலிங்கம்!
அப்புறம் எப்படி நடுகல் = “லிங்கம்” ஆகும்?
தொன்மவியல் ஆய்விலும், ஆய்வாளரின் சைவப் பற்று; “மதம் ஆன பேய்” வந்து ஊடாடினால்? = இதான் கதி:(


தொல்காப்பியர் காட்டும் நடுகல் = “சீர்த்தகு மரபு”

காட்சி, கால்கோள், நீர்ப்படை, “நடுகல்”
சீர்த்தகு “மரபில் பெரும்படை வாழ்த்தல் (தொல். புறத்திணை)

இந்த “மரபு” தான் -> தமிழ் மரபு என்று ஓங்கி வளர்ந்தது!
* முன்னை “மரபின்” முதுமொழி முதல்வ = திருமால்
* அரும்பெறல் “மரபின்” பெரும்பெயர் முருக = முருகன்


கலப்பின் காலம்:

வணிகம்-தொடர்பு காரணமாய், வடமொழி (எ) வடநெறி, தமிழ் நிலத்தின் ஓரமா வந்து குந்திக்கிட்டு இருக்கு! இது தொல்காப்பியருக்கும் தெரியும்! அதான் “வட எழுத்து ஒரீஇ” (ஒதுக்கு) -ன்னு எழுதினாரு!

பண்பாடுகள் சற்று கலக்கத் தான் செய்யும்!
யாரும் தனித்து வாழவியலாது; ஆனால்.. ஆனால்…

அப்படிக் கலக்கும் போது,
* ஒரு சமூகம், தன் “வேர்”களை இழந்து விடக் கூடாது!
* மரியாதையுடன் கூடிய கொடுக்கல்-வாங்கல்; அதுவே நல்லது!

Grantha_ConsLigதமிழில், 5% பிற மொழிச் சொல் Okay;
ஆனால் 35% சம்ஸ்கிருதச் சொல் புகுத்தினால்?

Parasite போல்… ஒட்டி ஒட்டியே, உறிஞ்சி இழுத்து விடும்!

“சொல்/பொருள்” என்ற சொற்களே நாளடைவில் மறைஞ்சிப் போய்..
“வார்த்தை/அர்த்தம்”-ன்னே புழக்கம் ஆயீரும்!

ஆங்கிலமாச்சும் பரவாயில்லை, “பிகர்”-ன்னு எழுதினா, உங்க பாட்டி கூட Figure என்பது இங்கிலீஷ்-ன்னு சொல்லீருவாங்க:)
ஆனா சம்ஸ்கிருதச் சொற்கள்: “வார்த்தை/அர்த்தம்”?
அதுவும் தமிழ் தானோ? எ. நம்மையே நம்ப வைத்துவிடும் தலைமுறைத் தீமை, இந்த Parasite தீமை!

நம்மிடம் இல்லாத சொற்களை, பிற மொழிகளில் இருந்து பெற்றுக் கொளல் தவறில்லை.
ஆனால் இருக்கும் சொல்லை/சொத்தை அழித்து, கடன் வாங்குதல் அறிவீனம் அல்லவா?

தொல்காப்பியர், வடசொற்களும் தமிழில் புழங்க flexibility (எ) நெகிழ்வு குடுத்தாரு.
எடுத்துக்காட்டு:
*கமலம்= தற்சமம் (அப்படியே எழுதுவது)
*பங்கயம்= தற்பவம் (பங்கஜம்: தமிழ் விதிகளுக்கு உட்பட்டு, பங்கயம் என்று மாற்றி எழுதுவது)
இந்த Flexibility பெயர்ச் சொற்களுக்குச் சரிவரும்! ஆனா இதையே எல்லாத்துக்குமே நுழைக்கப் பார்த்தால்?


 

chera chozha pandiyaஅரசர்கள்-அதிகாரம் மூலமா ‘நுழைந்து’ கொண்டது வடநெறி! “மதம்” என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருக்கே? Emotional Attack!

“உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு”

இப்படில்லாம் சொன்னா, எதுக்கு வம்பு.. உண்மையோ/பொய்யோ.. கொடுத்துத் தொலைச்சிருவோம் என்று செய்வீர்கள் தானே?:)

  • பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி = பாவம்
  • பாவத்தை ஈடு கட்டணுமா? = புண்யம்
    ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் = இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது!

* முது குடிப் பெருவழுதி -> பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி ஆனான்!
* பெருநற் கிள்ளி = இராஜசூய யாகம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான்!

pic 6அரச/ அதிகாரப் பரவலே முதலில்;
பின்பே இலக்கிய/ சமூகப் பரவல்!

ஆம்!… அது கடைச்சங்க காலம்!
கடைச்சங்க காலம் = மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, “மதம்” பிடித்தது, ஜாதியும் பிடித்தது:(

முல்லை-குறிஞ்சி என்ற ஆதிகுடி காட்டு வாழ்க்கை!
புலம் பெயர்ந்து..
மருதம் என்ற வயல்வெளி/ ஆற்றோர நாகரிகம் கண்ட மக்கள்.
நாகரிகம் செழிக்கச் செழிக்க, “அந்நிய நெறிகள்” நுழைந்து, தமிழ் நிலத்தை மாற்றிப் போட்டது!


பண்பாட்டுக் கலப்புக்குப் பின்…

அரசனைக் ‘கொண்டது’ போல், ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படிக் ‘கொள்வது’?
= வாழ்க்கையின் துன்பமெல்லாம் விலகி ஓடணுமா?
= பூஜா-புனஸ்கார-ஜோதிட-பரிகாரம்
ஜோதிட மயக்கம், நம் அப்பாவி மக்களுக்குப் பெரும் மயக்கம் அல்லவா?

(கண்ணகி கிட்டவும் பரிகாரம் செய்யச் சொல்றாங்க, இழந்த புருசனை அடைய; ஆனா அவள் செய்ய மறுக்குறா)

p26a“Hello தமிழ் மக்களே.. origin-of-murugan-other-names-500x330
உங்க முருகனும், திருமாலும், இங்கேயும் இருக்கா பாருங்கோ! எங்க சம்ஸ்கிருதத்திலும் இருக்கா பாருங்கோ!
வெறுமனே  நடுகல்லா இல்லாம… Magic; ‘ஜாலி’ யான புராணக் கதைகள்”?:)

தங்கள் வேதக் கடவுள்களான.. சோமன், அக்னி, இந்திரன், அஸ்வின், மித்ரன்..
இவர்களையெல்லாம் சற்றே தள்ளிவைத்து, தமிழ்க் கடவுள்களையே -> புதிய புராணக் கடவுள்களாக உருவாக்கம்!
Local பாணியில் பேசிப் பேசியே, Local மக்களைக் கவரும் அன்றைய “பிராமண சுவிசேஷம்”:)

* கந்தன் -> ஸ்கந்தன் ஆனான்!
* திருமால் -> விஷ்ணு ஆனான்!

தமிழ்த் தொன்மங்களின் மேலேயே, பலதும் ஏற்றப்பட்டன.
நம் தொன்மங்களை, நாமே இழக்க வைக்கும் “உத்தி” = புராணம் ஏற்றுதல்!

இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?
பிரபலம் ஆகாத வரை= அவள் எளியோரின் சமயபுரத்தாள்!
ஆனால் கொழிக்கத் துவங்கியவுடன்= அர்ச்சகாள் வந்துட்டா!
“ஆத்தாள்” -> “அம்பாள்” ஆகி, தல “புராணமும்” இப்போ வந்துருச்சு அல்லவா? அதே உத்தி!
நமக்கும்.. ஆத்தாளை விட, அம்பாள் என்று சொல்வதே, Promotion அடைந்த திருப்தி:(

சிறு தெய்வம்= நம் தாழ்வு மனப்பான்மை!
அதையே மந்திரம் சொல்லிக் கொண்டாடினால்? பெருந் தெய்வம்= உயர்வு மனப்பான்மை!

உங்க நடுகல் முருகனும்/திருமாலும், Sanskritலயும் இருக்கா பாருங்கோ!
*முருகன் aka சுப்ரமண்யன்= கம்மி
*திருமால் aka விஷ்ணு= சற்று அதிகம்

CRF_3hXUwAAEhNF“விஷ்ணு”வை அங்கே அதிகம் பரவிட்டாங்க; மும்மூர்த்தியுள் ஒரு மூர்த்தி.
மோகினி + கிளுகிளு கதைகள்!
“ஸ்கந்தனை”, ஏனோ அங்கு அதிகம் பரவலை; மும்மூர்த்தி ஆக்கலை;
ஆனாலும், சுப்ரமண்ய ஸ்வாமி, தேவ ஸேனாபதி என்ற பட்டம்!

*அங்கு அதிகம் பரவாதவன் மட்டுமே = “தமிழ்க் கடவுள்” முருகன் -என்று இன்றைய கண்ணுக்குத் தெரிகிறான்;
*ஆனால், முருகனும் திருமாலும்= இருவருமே தமிழ்த் தொன்மங்கள் -என்று சங்கத் தமிழ்க் கண்ணுக்கு நல்லாவே தெரியும்!

முருகன்= தமிழ்க் கடவுள் என்று சைவப் பெருமைக்கு, இன்று சொல்லிக் கொண்டாலும்..
அந்தத் தமிழ்க் கடவுள் கதை பூராவும்= சம்ஸ்கிருத/புராணக் கதையாய் இருப்பது ஏன்?

(நெத்திக் கண்ணுல தோன்றினாரு, 6 ஒடம்பு ஒன்னாச்சு, கைலாஸ மலையில் பழம் நீ அப்பா, பிரணவ மந்திர உபதேசம்;
வீரபாஹூ Friend ஆனாரு; பாஹூ= சம்ஸ்கிருதம்; தோள் எ. பொருள்! அப்பறம் எப்படித் தமிழ்க் கடவுள்?:)
அசுரர் குடியையே கெடுத்தாரு, அசுரர் “குடிகெடுத்த” ஐயா வருக;  தூங்கும் குழந்தைகள் உட்பட அசுர பட்டணத்தையே தண்ணிக்குள் மூழ்கடிச்சாரு, தேவஸேனா கல்யாணம்)

“தமிழ்க் கடவுள்” முருகன் மேல், ஏன் பூராவும் சம்ஸ்கிருதக் கதைகள்?
இந்த எளிய உண்மை= நம் மக்களுக்கு உறைப்பதே இல்லை!:)  அதான் மதம் என்கிற மாயை!


மேலும் பேசுவோம்!

தங்கள் நடுகல்லும்/தொன்மமும் = “பெருந்தெய்வமாய்” மாறிப் போச்சு;G_L2_178
அப்போ ஆதி குடிகளின் கதி?

= கொல்லிப் பாவை, இசக்கி, சுடலை, சாத்தன்-சாத்தி…
இப்படி, முன்னோர்களை, வேறு வேறு பெயரில், வழிபட்டுக் குறுகிப் போயினர்!
(சாத்தன்-சாத்தி என்கிற தமிழ்ப் பெயர்கள்: சீத்தலைச் சாத்தனார், ஒக்கூர் மா-சாத்தியார்)

மக்களும் “மாற”த் துவங்கியாச்சி..
அட, நம்ம முருகன் தானே, அங்கேயும் சுப்ரமண்ய ஸ்வாமியா இருக்கான்?
கூடவே கிளுகிளு கதைகள்!
கல்யாண + வியாபார பரிகாரங்கள் -ல்லாம் சொல்றாங்களே, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு?

  1.  மன்னன் முதற் கட்ட மாற்றம்! மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி..
  2. அரசியல் அதிகாரம் பெருக்கி, மக்கள் இரண்டாம் கட்ட மாற்றம்!
    அரசியலும், தன்னலமும்.. எதையும் செய்யும்!

முருக-“இயற்கை” வழிபாடு குறுகி -> முருக-“புராண” வழிபாடு பெருகியது!
பொய்யான “கதைகளே” மலிந்து போய்,
இன்று, ஆலயம் தோறும்.. முருகத் தமிழ்க் கடவுள் & திருமால் தமிழ்க் கடவுள் -> சம்ஸ்கிருதக் கடவுள் ஆகி நிற்கும் கோலம்!:(


சமணம் & பெளத்தம்:

IMG_6530இவை கூட வடக்கில் இருந்து வந்த நெறிகள் தான்!
ஆனா அவர்கள் தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்கலை; “புது நெறி”-என்றே அறிமுகம் செய்தார்கள். கந்தனை -> “ஸ்கந்த தீர்த்தங்கரர்” ஆக்கலை!

சம்ஸ்கிருத நெறி மட்டுமே = தமிழ் மரபியல் சிதைப்பு செய்தது.

தொன்மத்தின் மேலேயே புராணம் ஏற்றினால்?
= எது இருந்தது? எது வந்தது?
= கண்டுபுடிக்கவே முடியாது! Thatz the Trick! Ir-reversible:(

இயற்கையான முருகனுக்கு = 6 தலை, 12 கை, 18 கண்:)
நாமளும், ஆறு-தலை/தரும் ஆறுதலை -ன்னு “வார்த்தை விளையாட்டு” விளையாடி, மகிழ்வு கொண்டு விடுகிறோம்; வெட்கக்கேடு:(

சென்னைக்கு அருகே திருப்போரூர்;
இது போன்ற பழமையான முருகன் கோட்டங்களில், இன்னிக்கும் நடுகல்லைப் பார்க்கலாம்!
உருவமோ/முகமோ இருக்காது;
ஆனா முகம் போல் எழுதி, அலங்காரத்தில் மறைச்சிருக்கும்!

யாரேனும், “ஹிந்து”  மத அபிமானிகள் வாசிக்க நேர்ந்தால் மன்னித்து விடுங்கள்.
உங்களுக்குப் “பிடிக்கலை” -ன்னு தெரியும். அதுக்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாதே?
வசையாடி/இழிவு செய்தால் கோச்சிக்குங்க; ஆனால் சங்க கால உண்மைக்கெல்லாம் கோச்சிக்காதீக, Please!

மனசாட்சி இருப்பின், நீங்களே யோசிங்களேன்.
* சமண-பெளத்தம் = பாளி மொழி -> அதன் கலப்பு தமிழில் இருக்கா?
* வேத/ பிராமணீய மதம் = சமஸ்கிருதம் -> ஏன் இது மட்டும் அதீதக் கலப்பு?
அவரவர் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்:)


சங்கத் தமிழ் வாசிப்புக்கு = “காலம் அறிதல்” இன்றியமையாதது!

yagasalaகொஞ்சூண்டு புற400 பாட்டில்… பஞ்ச பாண்டவர், இராமன் + இதர தெய்வங்களின்  குறிப்பு கூட வரும் (மிகச் சொற்பமாக)
ஒடனே, “பாத்தீங்களா பாத்தீங்களா? சங்கத் தமிழ்லயே ராமர் இருக்கார் பாருங்கோ; பேஷ் பேஷ்!
தமிழாள் ஸ்ரீ-ராமரையே கும்புட்டாங்க! Bolo, Jai Sri Ram!” -ன்னு எறங்கீறக் கூடாது:)

அப்படீ-ன்னா, “Sati” = தமிழாள் பண்பாடா என்ன?:) மாண்ட கணவனோடு, பெண்ணை நெருப்பிலே தள்ளல்! அதுவும் புற400-இல், ஒரு மூலையில் லேசா வரும்:(Sati-Ka-Yogagni-Mein-Aatmdah
இதுக்குத் தான் காலம் அறிதல் முக்கியம் -ன்னு சொன்னேன்!

* முதல்/இடைச் சங்கத் தமிழில்= இது போன்ற “புராணக் குறிப்பு” வராது!
* கடைச் சங்க காலம் = கலப்புக்குப் பின்னரே, புராணம் லேசு மாசாய் வரும்!

இவை = “தொகை” நூல்கள்; தொகுக்கப் பட்டவை! ஒரே காலத்தி்ல் எழுதப் பட்டவை அல்ல!
*முதல்-இடைச் சங்கப் பாட்டும் வரும்
*கடைச் சங்கப் பாட்டும் விரவி வரும்
ஆனா, எதுஎது, எந்தக் காலம்? -ன்னு அகச் சான்று உண்டு!

என் iPod Playlist -இல், பாபநாசம் சிவன், KV Mahadevan, மெல்லிசை மன்னர் MSV, இளையராஜா, Rahman -ன்னு “தொகுத்து” இருக்கு! எல்லோரும் ஒரே காலமா என்ன?:)

MSV போட்ட “Melody”-க்கு, இன்னிக்கி  Remix என்கிற “Tragedy” வேற:(
இதே போல், குறுந்தொகைக்கெல்லாம் “கடவுள் வாழ்த்து” -ன்னு Remix சொருகினார்கள்:(
நினைவில் வையுங்கள்:
எட்டுத் தொகையில்= 8 “கடவுள் வாழ்த்துச்” செய்யுள்களும், சைவ சமயப் பிற் சேர்க்கையே! Remix செய்யப்பட்டதே!


மக்கள் வாழ்வியல்:

mullai*குறிஞ்சி: வெறியாடும் முருகன் கூத்து!
*முல்லை: காதலர்கள், மாயோன் (திருமால்) மேல் சத்தியம் செஞ்சி, காதலை நிரூபிப்பது!
-இப்படி.. “வாழ்வியல்” (Social Life);

ஆனால், (இல்லாத) நெற்றிக் கண்ணால் எரிப்பது? பரியை நரி ஆக்குவது?
இது மக்கள் வாழ்வியல் அல்ல; புராணம்!
“வடவரின் புதுக் கதையில் வருவது போல்” -ன்னே சங்கப் பாட்டும் இருக்கு; It’s just a “Myth”

காலம் செல்லச் செல்ல..
மதம் (எ) சக்தி வாய்ந்த ஆயுதம், “நிறுவனப்படுத்தல்” ஆகி விட்டது.
ஆனா அப்போதும், தமிழ்ச் சமூகம் = தன்னை “முழுசா” ஒப்புக் குடுத்துடலை, சம்ஸ்கிருத நெறிக்கு!
Kannagi is the Proof!

கலப்புக்குப் பின்னால் எழுந்ததே சிலப்பதிகாரம்!
கோவலன் திருமணமே = “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்”  தான் நடக்குது;
அது காதல் திருமணம் அல்ல!
அரசனுக்கு இயைந்த, வணிகச் சமூகப் பெற்றோர் நடத்தும் திருமணம்!
பெற்றோர் சொற்படி, பார்ப்பனன் நடத்தி வைத்த திருமணமே ஆயினும், அதே கண்ணகி.. சடங்கு செய்ய மறுக்கிறாள்!

பிரிஞ்ச தம்பதிகள் பரிகாரம்:
பிரிந்து விட்டவனை மீண்டும் அடைய, சோம குண்டம்/ சூர்ய குண்டம் = பரிகாரம் பண்ணலாம் வாடீ-ன்னு… அவள் பக்கத்து வீட்டுப் பார்ப்பனத் தோழி தேவந்தி கூப்பிட..
கண்ணகி சொல்லும் தமிழ்நெறிச் சொல் = அது எங்களுக்குப் பீடு (பெருமை) அன்று”!


பண்பாட்டின் பரவல் | Expansion of Civilization:

mullai kurinji marutham neithalமுல்லையின் மாயோன், குறிஞ்சியின் சேயோன்
= முதலில் வைக்கிறார் தொல்காப்பியர்;
= காடு-மலை; முதலில் தோன்றிய நாகரிகம் அல்லவா?

காடு-மலை கடந்து, மக்கள் புலம் பெயர்ந்த போது.. தங்கள் தொன்மங்களையும் உடன் எடுத்தே சென்றார்கள்! மருதம்= வேளாண்மை; நெய்தல்= கடலாண்மை கண்டனர்.

  • மருத நிலம் = வேந்தன் (அரசன்); மாறிக் கொண்டே இருப்பவன்
  • நெய்தல் நிலம் = வருணன்/ வருள்நன் (கடல்காற்று); மாறிக் கொண்டே இருப்பது

முருகன்/திருமால் போல்.. வேந்தனோ/காற்றோ = ஒரு நிலைத்த அடையாளம் அல்ல!
அதனால் மக்கள் வாழ்வியலில், வேந்தன்/வருணன் அதிகம் பேசப்படலை.
துறை/கூத்து -ன்னு வேந்தன்/வருணனுக்கு.. “வாழ்வியலாய்” ஒன்னுமேயில்ல; வெறும் நில அடையாளம் மட்டுமே!

paalai kotravai 1கொற்றவை (எ) பழையோள் = இவளும் தமிழ்க் கடவுளே!
= நடுகல்லாய் உதித்து, உருப் பெற்றவள்!
= பாலை நில எயினர்கள்/ வழிப்பறிக் கள்வர்களின் தெய்வம்!

“நாகரிகம் குறைந்த” கள்வர் என்பதால்.. இவள் பேரிலே மிகுந்த இலக்கியப் பாடல்கள் இல்லீன்னாலும்..
திணை அளவில் இல்லாது, துறை அளவிலாச்சும் (கொற்றவை நிலை) குறித்து வைக்கிறார் தொல்காப்பியத்தில்! தொல்காப்பியர் பேதம் இல்லாதவர்; எவரையும் ஒதுக்காமல், “உள்ளது உள்ளபடி”.. தமிழாய்க் குறித்து வைக்கின்றார்!

மாயோன் மேய மன் பெரும் சிறப்பின்,
தாவா விழுப் புகழ் = “பூவை” நிலையும்

-ன்னு தொல்காப்பியர் சொல்லும் அந்தப் பூ-வை என்பதே => பூ-சை ஆனது;

இப்படி, இயற்கை வழிபாடாய் இருந்த ஒன்று..indra-small
* நாள் செல்லச் செல்ல, “புதிய புராணம்”= இலக்கியத்திலும் பரவத் துவங்கியாச்சு
* வேந்தன்= இந்திர பகவான், வருள்நன்= வருண பகவான் -ன்னு ஆக்கியாச்சு!


நினைவில் வைங்க; வேந்தன் = இந்திரன் அல்ல!
வேந்தன்= மருத நில மன்னவர்கள்; (மாறிக் கொண்டே இருப்பவர்கள்)
அதே போல் வருணன் = (வருள்நன்)
வருள்= சூழ்தல்; நிலத்தை வருளும் (சூழும்) கடல்!

முது “வருண்”, முந்து கிளவாச் செறிவு  -ன்னு திருக்குறளே இருக்கு!
வருள்/வருண்= சூழ்தல்!
தமிழ் “வருணம்” வேற; சம்ஸ்கிருத “வர்ணம்” வேற;
வருள்வதால்= வருணன்; வருளும் கடற்காற்று= நெய்தல் நிலத் தெய்வம்!

ஆனால், வேந்தன் = இந்திரன் -ன்னு உரைகளில் மாற்றி எழுதினார்கள்:(
இந்திர விழா என்று மன்னனும் தோற்றுவித்தான்!
வேதக் கடவுள்கள் சோமன் /இந்திரனை, Local மதப் பரப்பலுக்காக “சற்றே ஒதுக்கி வைத்து”, ஹோமம்/ யக்ஞங்களில் மட்டும் இந்திரனை விட்டுவிடாது பிடித்துக் கொண்டனர்! ஓம் இந்திராயா ஸ்வாஹா.. யாகத்தில், இந்திரனுக்கு அவிர்ப்பாகம்!

உலகெங்கும், ஆஸ்திகம்= கடவுள் உண்டு; நாஸ்திகம்= கடவுள் இல்லை!
ஆனால் சம்ஸ்கிருத/ பிராமணீயக் கொள்கையில் மட்டுமே, ஆஸ்திகம்= வேதம் உண்டு; நாஸ்திகம்= வேதம் இல்லை!(கர்ம மீமாம்சை= இறை மறுத்து, ஆனால் வேதம் மறுக்காதவர்கள்)

வேதம் மறுத்த புத்தரும், மகாவீரரும்.. இவர்களைப் பொருத்த மட்டில்= நாத்திகர்கள்:)
நீ, இறைவனை மறுத்தாலும் பரவாயில்லை; எங்கள் வேதத்துக்கு உடன்பட்டால்= நீயும் ஆத்திகனே!
என்னே இறை அன்பு! கடவுளை விடவும், தங்கள் கட்டமைப்புக்கு உருவாக்கிக் கொண்ட வேதமே பெரிது!:)
அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே! -என்று பாடும் சங்கத் தமிழ் மாண்பு எங்கே? இச் சுயநலம் எங்கே?


Grammar = The Breeding Ground

தமிழ் இலக்கணமே= இவர்கள் முதலில் கை வைப்பது; Cut at the root!
(உங்க இலக்கணத்தைத் திரித்து, உங்களுக்கே வழங்கும் பண்டிதாள்)

* ஒரு புடை உருவகம் = “ஏக தேச” உருவகம் -ன்னு.. இன்னிக்கி  பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்திலெல்லாம் நிலைச்சிருச்சே!
Why should Tamizh Grammar have “ek” & “ekam” inside it?
Does Sanskrit Grammar has, Tamizh words “Or & Eer (ஓர் & ஈர்)” in it? உங்க மனச்சாட்சியைக் கேளுங்கள்!

இது வடமொழி (எ) ஒரு தனிப்பட்ட மொழியின் குற்றமல்ல; அது நல்ல மொழி தான்.
அந்த மொழியில் ஊறிய, ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் குற்றமே இது!

tolkaDoes Sanskrit have Tamizh sounds ழ & ற?
But Tamizh “MUST” have sanskrit sounds ஸ்ரீ & ஷ!
இது தானே “நியாயம்“?:) புகுத்து, தமிழில் கிரந்த எழுத்தை!

தமிழின் சிறப்பான  ழ-க்குப் பதிலா, ட -போட்டுக்கலாம் ன்னு, தமிழ் இலக்கணத்தையே மாத்தி எழுதப் பார்த்தாங்க;
தமிழ்க் கடவுள் முருகனே வந்து  “ழ”-க்குப் பதில் “ட” போடச் சொன்னான்-னு சைவக் கதையும் புனையப்பட்டது:) கச்சியப்ப சிவாச்சாரியின் கந்த புராணம்!

ஆனால், எத்துணை “சம்ஸ்கிருத/மதம்” மிகுந்தாலும், இன்று வரை… தமிழ் மொழி இயல் = தொல்காப்பிய அடிப்படையே! அதை எவரும் அசைக்க முடியலை!
காலங் காலமாய்ப் பின்னிப் பிணைந்து… இன்று வரை..
தொல்காப்பியமே காத்துக் குடுக்கும்= நம் தமிழ்த் தொன்மம்!

<end>

Further Read/Ref:
1) ஞா.தேவநேயப் பாவாணர் – தமிழர் சமயம்
2) தொ. பரமசிவன் – பண்பாட்டு அசைவுகள்
3) மா. இராசமாணிக்கனார் – கால ஆராய்ச்சி (ebook)

சரி, பெரீய்ய்ய முன்னுரை போதும்:) வாங்க, இன்றைய பாட்டுக்குச் சுருக்கமாய்ச் செல்வோம்:)
தமிழர்களுக்கு, நைவேத்யம் செய்யும் கடவுள்கள் இல்லை!  என்ற தெளிவான எதிர்ப்புக் குரல்; சங்கத் தமிழிலேயே!
இது போல் பலப்பல அகச் சான்றுகள்!


நூல்: புறநானூறு (335)
கவிஞர்: மாங்குடிக் கிழார்
திணை: வாகை
துறை: மூதின் முல்லை

அடல் அரும் துப்பின்…..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;

துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!


காபி உறிஞ்சல்:

mullaiஅடல் அருந் துப்பின்…..
குரவே, தளவே, குருந்தே, முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;

வெல்ல முடியாத வலிமை (துப்பு) கொண்ட இனம்;
* குரவம், தளவம் (பிச்சிப்பூ), குருந்து, முல்லை
= இந்த நான்குமே இவங்க குடிப் பூக்கள்;

கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;

வரகு, தினை, கொள்ளு, அவரை = இந்த நான்குமே இவங்க குடி உணவு;

parai_performing_childrenதுடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;

துடியன், பாணன், கடம்பன், பறையன் = இந்த நான்குமே இவங்க குடி முறைகள்;

அரசின் உயர் அலுவலர் = பறையன்; But today itz an offensive word;
எள்ளல் பேர்வழிகள் கும்மி அடித்து அடித்து, “பறையன்” என்னும் செந்தமிழ்ச் சொல், தீச் சொல்லாய் மாறி விட்டது:(

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி,
ஒளிறு ஏந்து மருப்பின், களிறு எறிந்து வீழ்ந்தெனக்

பகைவர்களின் முன்னே அஞ்சாது நிற்பர்;
ஒளி வீசும் தந்தம் உள்ள யானை = அதையே சாய்க்க வல்லவர்;
அப்படிச் சாய்க்கும் போது, தாமும் சாய்ந்து இறந்தார்கள்  = குடி காத்த முன்னோர்;

nadu kal - kuda koothuகல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!

அவங்க நினைவாக இட்ட = நடுகல்!
அந்த நடுகல்லைத் தான் போற்றுவோமே அன்றி…
நெல்-அரிசியைக் கொட்டி (உகுத்து),
“நைவேத்யம்” செய்யும் கடவுள், எங்களுக்கு இல்லை! =நெல் உகுத்துப் பரவும் “கடவுளும் இலவே”!

(Strong Views recorded by maangudi kizhaar, during the “culture change” of his times)

இது போன்ற அகச் சான்று= பல சங்கத் தமிழ்ப் பாடல்கள்!
மன்னன் மாறினாலும்.. தான் மாறாது,
தமிழ்க் கொள்கைக்கு எதிரான.. சம்ஸ்கிருத/ வேத/ பிராமணீயம்; அவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்த்தமைக்குச் “சாட்சி”யாய்.. ஆங்காங்கு நிற்கும் சங்கத் தமிழ் வாழ்க!

dosa 106/365

Comments
91 Responses to “சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?”
  1. மூத்தோர் வழிபாடு இன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இறைவன் என்பவன் இருக்கிறானா இல்லையா என்பது பெரிய சர்ச்சைக்குரிய விஷயம். இறைவன் ஒரு நம்பிக்கையின் வடிவம். ஆனால் முன்னோர்கள் இருந்தார்கள் என்பதற்கு நல்ல சான்றுகள் இருக்கின்றன. என் பாட்டனாரை நான் கண்ணால் பார்த்து பழகியிருக்கிறேன். அவர், அவருடைய பாட்டனாரைப் பற்றி எனக்குக் கதைகள் சொல்லி அவரும் இருந்திருக்கிறார் என்று எனக்கு தெரியும். அது மாதிரி நூல் பிடித்தார் போல் நம் முப்பாட்டனார்களின் existence ஐயமில்லாமல் உணர்ந்து கொள்ளலாம். அதனால் இவ்வுலகை விட்டு நீத்துவிட்ட நம் குடும்பத்து முன்னோர்களை நம்பி வணங்கலாம் என்று வழிபடுகிறோம். ஆன்றோர், சான்றோர், அன்புடையோர் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் வாழ்த்து நம்மை நல்வழிப் படுத்தும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நம் முப்பாட்டனார்கள் இருந்ததற்கு சான்றுகள் இருந்தாலும் அவர்களின் ஆசிர்வாதம் நம்மை நன்றாக வாழ் வைக்கும் என்பதும் again it is belief based.

    ரொம்ப அருமையான பாடல் கேஆர்எஸ். சங்க காலத்தில் நடைமுறையில் இருந்த வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்/நெறிமுறைகள் அனைத்தும் நாம் அறிந்து கொள்ளவேண்டியவை. நம் பண்பாட்டிற்கே உரிய தனித்தன்மையை நாம் பாதுகாத்து போற்றாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?

    amas32

    Like

    • நாத்திகம்/ வடமொழி -ன்னு எழுதிட்டேன் என்ற ஒரே “குற்றத்துக்காக”… என்னைக் கடிந்து வெறுத்து ஒதுக்காமல்…
      ஒரு சாராரைத் திட்டிட்டேன் என்று தவறாகப் புரிந்து கொள்ளாமல்…
      “மன உணர்வுடன்” புரிந்து கொண்டமைக்கு நன்றி-ம்மா!

      பிடித்தம் வேறு; தமிழியல்பு வேறு

      என்னுயிர் முருகனேயானாலும், தமிழ் என்று வரும் போது,
      சுய பிடித்தங்களைக் கடந்து, தமிழைத் தமிழாய் அணுகும் குணம் = அவன் தந்த வாழ்வோ/ வீழ்வோ = அதுவும் முருகனருள்!

      Like

  2. Rie says:

    நடுகல் வழிபாட்டின் பெருமையை சொல்வதற்காக கொஞ்சம் அதிகப்படியாக போன மாதிரிதான் தெரிகிறதே தவிர, இது கடவுள் மறுப்பாகத் தோன்றவில்லை. இது போலச் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். “காலேல கிளம்பும் போது எங்க அம்மா படத்து முன்னால நின்னு கும்பிடுவேன், அது போதும் எனக்கு” இப்படிச் சொல்றவங்க கிட்ட கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

    Like

    • “கல்லே பரவின்” -ன்னு மட்டும் சொல்லி நிறுத்தி இருந்தா, Yessu, You are absolutely correct:)
      ஆனா… “நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” -ன்னு add on!:) அதான் வீரியம் உள்ள வரிகள்!

      சாமிப் படத்தை விட, எங்க ஆயா/தாத்தா படம் தான் முக்கியம் -ன்னு சொல்றவங்க உண்டு தான்;
      ஆனா, “நைவேத்தியம் செய்யும் கடவுளை விட”-ன்னு, நைவேத்தியத்தை அழுத்திச் சொன்னா?
      அப்போ, அந்தப் (புதுப்) பழக்கத்துக்கு எதிரான ஒரு மனப்போக்கு வீரியம் பெறுகிறது அல்லவா? அதையே மாங்குடிக் கிழார் பாட்டில் தெறிக்கிறது;

      நீங்கள் சொல்வதும் உண்மையே!
      “கடவுள் இல்லை” என்ற நேரடி வரிகள் தமிழ் இலக்கியத்தில் இல்லை; ஆனா… “இறை மறுப்பு” என்பதை விட “நிறுவனப்படுத்தலை மறுப்பது” பல பாடல்களில் உண்டு!
      கவிஞர்கள், பூர்வ குடியினரின் எளிமையான இறைக் கொள்கைகளை மறுப்பதில்லை!

      இது போல இன்னும் பல “மறுப்புக் கவிதைகள்”, சங்கத் தமிழில் உண்டு!:)

      Like

      • raja says:

        பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
        இறைவனடி சேரா தார்

        Like

        • ஆம் ராஜா..
          நடுகல் = இறைவன் தான்:) அந்த இறைவனடி சேராதார் – நீந்தார்!

          தமிழ்த் தொன்மத்தை அழிக்காத,
          புளுகுப் புராணங்கள் இல்லாத
          இயற்கை வடிவினன் ஆன இறைவன்:)

          Like

      • E.Bhu.GnaanaPragaasan says:

        //“கடவுள் இல்லை” என்ற நேரடி வரிகள் தமிழ் இலக்கியத்தில் இல்லை// – எப்படி இருக்கும்? தமிழர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் இல்லையே! ஆனால், எது கடவுள் என்பதுதான் இங்கு விவாதத்துக்கு உரியது. தமிழர்கள், மனிதர்களைக் கடவுளாகப் போற்றியவர்கள். அதாவது, பிறருக்கு எடுத்துக்காட்டாக, உண்மையாக, நேர்மையாக வாழ்ந்த மனிதர்களை (அவர்களை மட்டுமே), அவர்கள் இறந்த பின் கடவுளாக வழிபடுவதுதான் தமிழர் சமயம். இதைத்தான் திருவள்ளுவரும் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்கிறார்.

        இப்படி இறந்தவர்களை, அதாவது பிசாசுகளை வழிபடும் பழக்கம் உடையவர்கள் என்பதால்தான் ஆரியர்கள் நம்மைப் பைசாசிகள் என்றும், நம் மொழியைப் ‘பைசாச பாஷை’ என்றும் குறிப்பிட்டனர். புராணங்களில் குறிப்பிடப்படும் ‘அரக்கர்கள்/அசுரர்கள்’ என்பவர்கள் வேறு யாரும் இல்லை; நாம்தான். புராணங்களில் விவரிக்கப்படும் ‘தேவ-அசுர’ப் போர்கள் உண்மையில், ‘ஆரியர்-தமிழர்’ போர்கள்தாம். ஆனால், இவையெல்லாம் புரியாமல் பின்னாளில் நாமே, மேலே கண்ணபிரான் அவர்கள் குறிப்பிடுவது போல் ‘அசுரர் குடிகெடுத்த ஐயா வாழ்க’ என நம் கடவுள் நம்மையே அழித்ததாக, அதையும் பெருமையாக ஓதத் தொடங்கியதுதான் கொடுமையிலும் கொடுமை! உலக மகா விந்தை! நானும் இவையெல்லாம் புரியாமல் ஆண்டுக்கணக்காக நாள்தோறும் ‘கந்த சஷ்டி கவசம்’ படித்திருக்கிறேன்! நாக்கில் வேல்தான் குத்திக்கொள்ள வேண்டும்!

        Like

        • //தமிழர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் இல்லையே! ஆனால், எது கடவுள் என்பதுதான் இங்கு விவாதத்துக்கு உரியது//
          very true! நச்-ன்னு சொன்னீக!

          //தமிழர்கள், மனிதர்களைக் கடவுளாகப் போற்றியவர்கள். அதாவது, பிறருக்கு எடுத்துக்காட்டாக//
          குறள் சொன்ன விதம் அருமை! வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் = வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்!

          //இப்படி இறந்தவர்களை, அதாவது பிசாசுகளை வழிபடும் பழக்கம்//
          பிசாசு என்று அவர்கள் சொல்லி விட்டார்கள்; நாம் “முன்னோர்” என்றல்லவா சொல்கிறோம்!
          வேலன் வெறி என்பதில், முருகனே சூர் மடிக்கும் “ஆவி” தானே!

          //மேலே கண்ணபிரான் அவர்கள் குறிப்பிடுவது போல் ‘அசுரர் குடிகெடுத்த ஐயா வாழ்க’//
          ஏனோ, எனக்கு அந்த வரி மட்டும், கந்த சட்டிக் கவசத்தில் பிடிக்காது:) சிறு வயதில் சொல்லும் போதே, முழுங்கி விடுவேன்:)

          Like

          • E.Bhu.GnaanaPragaasan says:

            நான் பெரிதும் மதிக்கும் தமிழறிஞரான நீங்கள் என்னைப் பாராட்டியிருப்பது எனக்கு மிக மிக மிக மகிழ்ச்சியளிக்கிறது!!! மிக்க நன்றி!!

            Like

          • E.Bhu.GnaanaPragaasan says:

            //வேலன் வெறி என்பதில், முருகனே சூர் மடிக்கும் “ஆவி” தானே!// ஓ அதுவும் அப்படியோ! தெரியாது தலைவா!

            //ஏனோ, எனக்கு அந்த வரி மட்டும், கந்த சட்டிக் கவசத்தில் பிடிக்காது:) சிறு வயதில் சொல்லும் போதே, முழுங்கி விடுவேன்// – விளையும் பயிர்…!

            Like

          • சங்கர் says:

            முருகன் = நமக்கு குடி காத்தவன்.

            நாம் = அசுரர்கள்.

            கந்த சஷ்டி கவசம் சொல்வது, “அசுரர் குடி கெடுத்த…”

            எங்கயோ இடிக்குதே.

            Like

      • RAJKUMAR S says:

        “கடவுள் இலவே” என்றாலே பழந்தமிழில் கடவுள் இல்லை என்று தானே பொருள்.

        Like

  3. sakthivelrala m says:

    மிகச் சரியான பதிவு. பாராட்டுக்கள். அனைத்துமே ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றே. தமிழர்கள் அனைவரும் மூதாதையர் வழிபாட்டை பின்பற்றுபவர்களே. மொழிக் கலப்பும், மதக் கலப்பும் நம்மளது சரித்திரத்தையே மாற்றிவிட்டது என்பது உண்மையே. 1995-ம் ஆண்டுவரை, கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் என்பது, ஒரு நடுகல் மட்டுமே கொண்டதாகும். நாங்கள், எப்போது அங்கு சென்றாலும் கிடைக்கும் பூக்களை தூவி, நடுகல்லை சுற்றி வந்து வணங்கி வருவோம். ஆனால், இன்று அங்கு ஒரு கோவில் கட்டி, அவை பார்ப்பனர் வசம் சென்று விட்டது. நடுகல்லைக் காணோம். இதே நிலை தான் மருதமலைக்கும், திருசெந்தூருக்கும். எங்களது குடும்பத்தின அனைவரும் மூதாதையர் வழிபாட்டினை பின்பற்றுபவர்களாகவே உள்ளோம். மதக் கலப்பினால் இறைவழிபாடு இர்ண்டாவதாக உள்ளது. சரித்திரம் மாறட்டும்.

    Like

    • நன்றி சக்திவேல்;

      கோடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் போல் தான்…
      திருப்போரூர், பழமுதிர்சோலை போன்ற தலங்களும் இருந்தன;
      “கொழு விடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி” என்று நாட்டார் மக்கள் பழமுதிர்சோலையில் பலி குடுக்கும் காட்சியும் நக்கீரர் காட்டுகிறார்;

      இன்றும் ஈழத்தில், நல்லூர் கந்தசாமி கோயில்/ செல்வர் சந்நிதி (அன்னதானக் கந்தன்)
      இந்தத் தலங்களில் வேல் வழிபாடு தான்!
      ஆறு முகம், பன்னிரெண்டு கை என்று இயற்கைக்கு மாறான “புராண” உருவங்கள் அல்ல!

      Like

  4. chakraraj says:

    hello, is there anything about love between two men in sanga thamil ? their social status ? your blog is simply awesome !!!!!! thamil pasikku theena, niraiya therinthu konden…. thayavu seithu kaikilai yai patri eluthiyavaru, perunthinai patriyum eluthungal….. is perunthinai is called homosexuality ??

    Like

    • கைக்கிளைப் பதிவில் கேட்க வேண்டியதை, இந்தப் பதிவில் வந்து கேட்கிறீரே? நியாயமா?:))
      பெருந்திணை = அதுவல்ல!
      ஆனால் அது போன்ற சங்கப் பாடல் உள;

      பெருந்திணை -ன்னாலே ஏதோ “ஒவ்வாமை” திணை அல்ல! பிற்காலப் புராணப் புலவர்கள் அப்படி ஆக்கி விட்டார்கள்;
      “ஒவ்வாத” திணை என்றால், முதற்கண், தொல்காப்பியம்/சங்கத் தமிழில் அதை வைச்சிருக்கவே மாட்டாங்களே..
      “பெருந்திணை” என்பது சமூகத்துக்கு மாறுபட்ட ஒரு திணை; மன வலி அதிகம் உள்ள திணை;

      *மடல் ஏறுவேன் -ன்னு கலங்கிச் சொல்வது = கைக்கிளை
      *ஊரார் முன், மடல் ஏறியே விடுவது = பெருந்திணை

      Like

  5. நான் எதிர்ப்பார்த்து அழைந்தது இந்தப் பதிவில் அழகா பிட்டு வச்சிடீங்களே…படிக்கிறேன் “விநாயக”னையும்..:-)

    இவண்,
    அருண்

    Like

  6. E.Bhu.GnaanaPragaasan says:

    அட்டகாசம்! அட்டகாசம்! பிய்த்து உதறி விட்டீர்கள் வாத்தியாரே!!!

    ஆனால், பதிவில் ஓரிடத்தில் நீங்கள் மன்னிப்பு கேட்டிருப்பதுதான் எனக்குப் பிடிகவில்லை. உண்மையைச் சொல்வதற்கு எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?

    Like

    • 1st of all, how u know this site?
      Not much Panthal readers know that I am here:)

      //பதிவில் ஓரிடத்தில் நீங்கள் மன்னிப்பு கேட்டிருப்பதுதான் எனக்குப் பிடிகவில்லை//
      :)

      உண்மையின் நீர்ப் பாய்ச்சல், சில-பலரைத் தாக்கி விடுகிறது!
      ஆனால், நீரென்பது, அவர்களுக்கும் சொந்தம் அல்லவா! அதான், சற்றுக் கனிவோடு கூடிய உண்மை:)

      Like

      • E.Bhu.GnaanaPragaasan says:

        //நீரென்பது, அவர்களுக்கும் சொந்தம் அல்லவா!// – அது சரி!

        Like

        • E.Bhu.GnaanaPragaasan says:

          //1st of all, how u know this site?// – அண்மையில் ஒரு பதிவில், நீங்கள் சொல்லியிருந்தீர்கள். :-)

          Like

  7. sakthivel says:

    ஒரு அழகான பதிவு….

    Like

    • நன்றி சக்திவேல்!

      Like

      • தோழா் டி.கே.எஸ்.பாண்டியன் says:

        ஐயா,
        வணக்கம்

        இந்த சிவன், பெருமாள், பிரம்மா, சரஸ்வதி, லெட்சுமி, பிள்ளையார், இந்திரன், போன்ற கடவுள்கள் எப்போது கடவுள் அவதாரம் எடுத்தார்கள்?

        இவா்கள் தினை வழிபாட்டில் இல்லையே?

        குறிப்பாக சிவன் எப்போது கடவுள் அவதாரம் எடுத்தார்?

        சிவனுக்கு ஏன் லிங்கவடிவில்(ஆண்குறி) கோயில் அமைத்தார்கள்?

        Like

  8. tamizhan says:

    இலம்பா(டு) இழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
    விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
    செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
    அரைக்(கு)அமை மரபின மிடற்றுயாக் குநரும்
    மிடற்(று)அமை மரபின அரைக்குயாக் குநரும்
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
    வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
    செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்(கு)
    அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே

    === புறநானூறு – 378 (ஊன்பொதி பசுங்குடையார்)

    நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
    அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
    பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
    வதுவை கூடிய பின்றை…
    வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
    முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை
    வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
    பல்வீழ் ஆலம் போல
    ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே”.

    === அகநானூறு:70 (கடுவன் மள்ளனார்)

    Like

    • tamizhan says:

      தொல்காப்பியர் வடசொற்களுக்கு விதி அமைத்ததிலிருந்தே அறியலாம் – தமிழில் வடசொற்கள் அவர் காலத்திலேயே கலந்திருந்தது என்று. அப்படியென்றால் நீங்கள் குறிப்பிட்ட பாடல்களெல்லாம் அதற்கும் முந்தையனவோ?

      அதனால் “கல்” இருக்கும் பாடல்கள் பழையன என்றும் – கடவுள் இருப்பது புதியன என்றும் அர்த்தம் ஆகி விடாது.

      Like

      • tamizhan says:

        the one I mentioned as Puranaanoru-378 – that raamyana scene is different compared to valmiki. Tamil verse says – monkeys were wearing the jewels thrown by sita onto different parts of the body without knowing where to wear them.
        Wheras in valmiki – sukreev shows jewels to rama and says – sita threw these down when she saw four monkeys in the ground.

        adhu mattumalla – tholkaapiyan – “kadavuL”, “iRaivan” pondra sorKal payanpadutthiyadhu – naathigamaa?

        Like

        • tamizhan says:

          “naanmaRai” – enbadhuvum tholkaaapiyatthileye uLLadhu. silappadhikaaram pinnar vandhadhu.
          ungaLin kaRpanai vaLatthai vEndumaanaal paaraattalaam.

          Like

          • வாங்கோ Mister Tamizhan!
            Illinois (or) Chicago -வில் இருந்து, “தமிழன்” -ன்னு பேர் தாங்கி, மனத்திலே “சம்ஸ்கிருதம்” தாங்கி வந்திருக்கீங்கோ.. நல்வரவு!

            பதிவின் தலைப்பைப் பாத்து மட்டுமே பின்னூட்டம் எழுதிட்டீக போல, படிக்காமயே!
            கடவுள் இல்லை -ன்னு சொன்னது ஒரு அதிர்ச்சிக்கு தான்;

            *இந்தச் சங்கப் பாடலில் கவிஞர், “நைவேத்தியம் பண்ணுற கடவுள் எங்களுக்கு இல்லை” -ன்னு எழுதி வச்சிருப்பது = காலத்தின் பதிவு

            *அதுக்காக, சங்கத் தமிழ் முழுக்க, “கடவுள் இல்லை கொள்கையில் இருந்தாங்கோ”-ன்னு நான் எங்கும் சொல்லலை; பதிவை வாசிங்கோ – மாயோன்/ சேயோன் -ன்னு பலதும் சொல்லிருக்கேன்!

            என் “கற்பனை வளத்தை” பையப் பாராட்டிக்கலாம்!
            மொதல்ல பதிவைப் படிச்சிட்டு வாங்கோ:)

            Like

            • E.Bhu.GnaanaPragaasan says:

              சரியான பதிலடி!

              Like

              • :))

                வாங்க ஞானப்பிரகாசன்,
                இது போன்ற ஆட்களால், “பொறுத்துக்” கொள்ளவே முடியாது – தமிழ் தனித்தியங்க வல்லது-ன்னு!
                அவங்க ஒட்ட வச்ச கலப்பு;
                Fevicol பிஞ்சி வரும் போதெல்லாம், ஒட்டுதோ ஒட்டலையோ – “அழுத்திக்கிட்டே” இருப்பாங்களே – அப்படியொரு போக்கு:(

                ராமாயணம், சங்கத் தமிழ்ல இருந்துச்சாம் – நமக்கே காட்டறாரு:)))
                Sati கூடத் தான் இருக்கு;
                ராமாயணத்துக்காச்சும் ரெண்டே பாட்டு; Sati-க்கு நாலு பாட்டு!
                சொல்லுங்கோ, ராமாயணம் பெருசா? Sati பெருசா?:))

                வான்மீகியார் -ன்னே ஒரு புலவர் உண்டு; பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதியும் இருக்கான்!
                சிவன் விந்து ஆறாச் சிந்தி, அதை அக்கினி குடித்து, ஸ்கந்த பகவான் -ன்னு முருகனை “இழிவாக்கிய” சங்கப் பாடலும் உண்டு:(

                ஆனா இத்தனையும் கடைச்சங்கம் தான்!
                முதற்சங்கப் புலவர்கள், இடைச்சங்க மன்னர்களின் காலத்து எழுந்த கவிதைகளில் காட்டச் சொல்லுங்க! பெப்பரப்பே -ன்னு முழிப்பானுங்க!
                வந்துட்டாங்க.. தொல்காப்பியர் “சம்ஸ்கிருதம் கலந்து எழுதலாம்” -ன்னு விதி செஞ்சாராம்!
                காந்தியின் நூலில் கோட்சே வருவதால், இருவரும் ஒரே “மண்ணின் மைந்தர்கள்” -ன்னு சொல்வது போல!
                உண்மை போலத் தெரியும்; Factual Statements கொண்டு, True Emotions குழி தோண்டிப் புதைத்து விடும் கலை!

                Like

                • E.Bhu.GnaanaPragaasan says:

                  அப்பப்பா! எவ்வளவு சீற்றம் வருகிறது உங்களுக்கு! ஆனால், என்ன செய்வது? ஒருநாள், இரண்டு நாள் ஏமாற்றப்பட்டிருந்தால் தேவலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டவர்கள் நாம். சீற்றம் பெரிதாகத்தானே இருக்கும்? ஆனால், ஒன்று. அவர் அறியாமையால் கூடச் சொல்லியிருக்கலாம் இல்லையா?

                  Like

          • //the one I mentioned as Puranaanoru-378 – that raamyana scene//

            அடேங்கப்பா… புறநானூற்றில் ஸ்ரீமத் ராமாயணம் காட்டிய பெருந்தகையே…
            இதைப் பதிவுல நானே சொல்லி இருக்கேன், பாத்தேளா?

            //Here again, your your reference
            —————-
            சில புறநானூற்றுப் பாட்டில்… பஞ்ச பாண்டவர், சதி (நெருப்பிலே பெண் பாய்தல்),
            இராமன் + இதர தெய்வங்கள் => குறிப்பு கூட வரும் (சொற்பமா)

            ஒடனே, “பாத்தீங்களா பாத்தீங்களா? சங்கத் தமிழ்லயே ராமர் இருக்கார்; பேஷ் பேஷ்!
            தமிழாள் ஸ்ரீ-ராமரையே கும்புட்டாங்க! Bolo, Jai Sri Ram!” -ன்னு எறங்கீறக் கூடாது:)

            அப்படீ-ன்னா, “Sati” = தமிழாள் பண்பாடா என்ன?:)))
            இதுக்குத் தான் காலம் அறிதல் முக்கியம் -ன்னு சொன்னேன்!

            * முதல்/ இடைச் சங்கப் பாடலில் = இது போன்ற “புராணக் குறிப்பு” வரவே வராது!
            * கடைச் சங்க காலம் = கலப்புக்குப் பின்னரே, லேசு மாசாய் வரும்!//
            —————-

            Like

          • //தொல்காப்பியர் வடசொற்களுக்கு விதி அமைத்ததிலிருந்தே அறியலாம் – தமிழில் வடசொற்கள் அவர் காலத்திலேயே கலந்திருந்தது என்று//

            அடங்கொய்யால!

            தொல்காப்பியர், வடசொற்களுக்கு விதி அமைச்சி, தமிழ்ல அதையெல்லாம் கும்புடச் சொன்னாரு! அதானே ஒங்க புதுப் புராணம்?:))

            பதிவுல நானே சொல்லி இருக்கேன் பாருங்க
            ————–
            //வணிகம்-தொடர்பு காரணமாய், வடமொழி (எ) வடநெறி, தமிழ் நிலத்தின் ஓரமா வந்து குந்திக்கிட்டு இருக்கு;
            இது தொல்காப்பியருக்கும் தெரியும்; அதான் “வட எழுத்து ஒரீஇ” (ஒதுக்கு) -ன்னு எழுதினாரு;

            பண்பாடுகள் சற்று கலக்கத் தான் செய்யும்; யாரும் தனித்து வாழவியலாது; ஆனால்.. ஆனால்…
            அப்படிக் கலக்கும் போது,
            * ஒரு சமூகம், தன் வேர்களை இழந்து விடக் கூடாது;
            * மரியாதையுடன் கூடிய கொடுக்கல்-வாங்கல்; அதுவே நல்லது;//
            ————–

            தொல்காப்பியர், வடசொல்லுக்கு “விதி” எழுதல ஓய்!
            வடசொல்லை அதிகமாப் புழங்கக் கூடாது;
            கொடுக்கல்-வாங்கல் பரிமாற்றம் காரணமாகப் புழங்கினாலும், சம்ஸ்கிருத எழுத்துக்களைத், தமிழுக்கு ஏற்றவாறு, மாத்தித் தான் புழங்கணும் -ன்னு தான் இலக்கணம் எழுதி வச்சாரு!

            வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ -ன்னு ஒதுக்கச் சொல்றாரு!
            வட எழுத்துக்களை ஒதுக்கி,
            வட சொற்களையும் தமிழாக்கி, அப்பறமாத் தான் தமிழ் எல்லைக்குள்ளேயே விடுறாரு!
            அதுனால தான பங்கஜம் -ன்னு எழுதாம, பங்கயம் -ன்னு நாயன்மார்களும்/ ஆழ்வார்களும் கூடப் பலுக்கினார்கள்!

            வந்துட்டீங்க… அப்படியே சம்ஸ்கிருதம், ஆதிலயே, தமிழ்ல வேரோடு கலந்து, சாங்கோபாங்கமா ஒன்னா இருந்திச்சி, நன்னா இருந்துச்சி -ன்னு அடிச்சி விட!

            அதுக்கு, புறநானூற்றில் இருக்கும் கடைச்சங்க ராமாயணப் பாட்டு, ஒக்கடே ஒக்கட
            அத, இவரு தான் நமக்குக் காட்டுறாராம்.. அய்யய்யய்யோ…

            எட்டுத் தொகை ஒவ்வொரு நூலுக்கும், “கடவுள் வாழ்த்து” -ன்னு பின்னாளில் எழுதிச் சேத்தவனுங்க தானே?
            நன்னாச் சேத்துட்டு, என் “கற்பனை வளத்தை”ப் பாராட்டுங்கோ ஸ்வாமி!:))

            Like

            • Mc Rameshkumar says:

              கட்டுரையின் சொற்களில் இருக்கும் நயமும் பண்பாடும், சில பதில்களில் எதிர்மறை கருத்துக்களை அழுத்துவதற்காக குறைவதாக தோன்றுகிறது..

              பிராமணிய பாஷையில் நீங்கள் பதில் சொல்லி இருப்பது குறித்து#

              Like

  9. Vel says:

    கண்டேன், உங்கள் எழுத்தில் அடுத்த பாவாணரை கண்டேன், தமிழ் போல் வாழ்க, தமிழ் போல் வளர்க!

    Like

    • குமார் says:

      அருமையான கருத்துக்கள். ஆனால் ஏன் இந்தக் கொச்சைத் தமிழ்?

      Like

  10. Krishnan says:

    நல்ல பதிவு..ரவி சங்கரன். உங்கள் வலைதளத்தால் நான் பல அரிய சேதிகளை(தமிழ் பண்பாடு சார்ந்த, ) தெரிந்து கொண்டேன்.

    மிக்க நன்றி. :)

    Like

  11. Rabindranath says:

    nandri thamayane..neraya puriya vechirukenga..

    Like

  12. வணக்கம்,நம்மவர்கள் ஆதிபகவன் சிவனை வழிபடுவது எப்போது தொடங்கியது?சிவனை வழிபடுவதையும் ஆரியர்கள்தான் புகுத்தினதா?

    Like

    • தோழா் டி.கே.எஸ்.பாண்டியன் says:

      ஆதிபகவன் என்பது சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரை குறிக்கும்.

      Like

  13. இளங்குமரன் says:

    “விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் சில பெரியவா, தய்யா-தக்கா -ன்னு குதிச்சாங்களாம்:)
    Okies; I am Very Sorry! But.. என்ன தான் குதிச்சாலும்.. விநாயகரைச் சங்கத் தமிழில் கண்டுபுடிக்க முடிஞ்சுதா? இல்லை தானே? அதான் உண்மை:) – இந்த உண்மையைக் கூறியதற்காகவே இந்தக் கட்டுரைக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்… அருமையான தரவுகள்… அழகான விளக்கம். வாழ்த்துகள்.

    Like

  14. விக்னேஷ் says:

    எது கடவுள் ,உங்கள் மனம் ,உடல் இது மட்டுமே .
    பின் போக போக நம் ஆசையும் பெருகியது ஆணவமும் சேர்ந்துதான் ,அதுவே கடவுள் பிறக்க வழியாய் நின்றது இதுதான் உண்மை நிஜம்.
    ஆனால் உன் முழு மனதோடு எதை செய்கிறாயோ அது நடக்கும் +ive charge. அதுதான் நம்மளால் செய்யமுடியாத படி பண்ணியாச(ஆசை,அகம்,பயம்…சுயஅறிவு) இணும்மா எங்கன்னு தேட அது நடக்காது ஒன்று ,தவறாக உங்கள் மனதை கவரும் படி இருந்தாலும் மற்றும் மனம் வலிக்கும் படி இருந்தாலும் எல்லாம் நன்மைக்கே நன்றி (அழிந்த என் தமிழ் முன்னோர்களுக்கு).

    Like

  15. suman says:

    என் தம்பிதான் இந்த பதிவை காண்பித்தார்
    முடிந்தளவு(நுனிப்புல்) வாசிச்சிட்டன்அருமை

    Like

  16. dhuraivaanan says:

    முருகன் என்பவர் மலை,முகடு,கரடு போன்ற இடங்களில் இருந்து அருகில் இருக்கும் பயிர்களை மற்ற விலங்குகளிடம் இருந்து வேல் மற்றும் மயிலின் துணையோடு காவல் காத்தவர் என்று ஏதோ ஒரு நா.மு.வேங்கடசாமி நாட்டார் நூலில் படித்ததாக நினைவு.
    அந்த கூற்றுப்படி பார்த்தல் முருகன் என்பவர் பல இடங்களில் வாழ்ந்த பலர்.

    அண்ணன் இதை பற்றி எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    Like

  17. Shanker says:

    very enlightening read. thanks a lot for this blog.

    I am also interested to know about “Aseevagam” way of life followed by aboriginal tamils/indians. I suppose this was a nature-worshipping, saint-worshipping practice unlike the mythical gods. There is an argument that shiva, muruga, vishnu all were saints. Would like to know about your knowledge/research on this Aseevagam

    Like

  18. Boopesh says:

    Excellent information collected and presented precisely..!!

    Like

  19. இளங்கோ says:

    பொங்கலையும் கல் வைச்சு முருகனை உடனே கும்பிடிகிற கிராமத்து பிள்ளைகனின் உள்ளுனர்வு போதும் நாம் அவர்களின் கலப்பை ஏற்பதில்லை என்பதற்கு!!!

    Like

  20. Arun Prasad says:

    Enakku oru santhegam… Neenga sonnatha vachi konjam google panni paathen… Sanga tamizhil Vinayagar illa nu sonninga … But Avvaiyar Vinayagar Agaval paadi irukkaanga… ! So neenga athukkum munnadi kaalatha pathi solringala ?!

    Like

    • சங்க கால ஒளவை வேறு! விநாயகர் அகவல் பாடிய ஒளவை வேறு! சங்க காலத்தில் விநாயகர் எல்லாம் கிடையாது:)))

      தமிழில், மொத்தம் 6 ஒளவையார்கள்! (வெவ்வேறு காலங்களில்)

      * 2nd CE சங்க கால ஒளவை = அதியமான் நண்பர்
      * அங்கவை – சங்கவைக்குத் திருமணம் செய்து வைத்த ஒளவை = இது கதை! அப்படியொரு ஒளவையே இல்லை! கபிலரே அந்தப் பாடுபட்டவர்
      * 9th CE = விநாயகர் அகவல் பாடிய ஒளவை (சுந்தரர் – சேரமான் பெருமாள் நாயனார் காலத்து ஒளவை)

      * 12th CE = ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் எழுதிய ஒளவை
      * 17th CE = பேய் விரட்டிப் பாடிய ஒளவை
      * 18th CE = பந்தன் அந்தாதி பாடிய ஒளவை

      Liked by 1 person

      • Albert J Arulraja says:

        நீர் இவை பற்றி எதேனும் நூல்கள் வெளியிட்டது உண்டா? அன்புகூர்ந்து அறியத்தரவும்.

        Like

  21. செ . பெரியசாமி says:

    மிக அருமையான பதிவு. இக்கால இளைய தலைமுறைக்கு இது போன்ற தகவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தங்கள் மொழி மற்றும் இனத்தின் பெருமையை உணர்ந்து தலை நிமிர்வர் . தமிழ் தொன்மம் அறிவார்ந்த நம்பிக்கை, அன்பு, வீரம் என அறவழி வாழ்வியலை காட்டுகிறது . ஆனால் இடைபுகுந்து மன்னர்களை கைக்குள் போட்டு மூட நம்பிக்கைகளை வேதம், வேள்வி என மூடத்தனத்தை திணித்த ஆரியர்களின் மாயை இன்னும் தொடர்வது படுவேதனை . தொடரட்டும் உங்கள் பணி. புராண புரடைகளின் எதிர்ப்பு கண்டு துவள வேண்டாம். தமிழன்பர்கள் துணை நிற்பார்கள்.

    Like

  22. சதீசு says:

    மிக்க நன்றி.. வாழ்த்துக்கள். :)

    Like

  23. பிரதீப் says:

    ஐயா, மன்னிக்கவும் . எனக்கு நெடு நாட்களாக இருந்து வரும் சந்தோகம் என்னவெனில், முருகன் தமிழ் கடவு ள் ஆனால் அவரை புகழ்ந்து பாடபட்ட கவசத்தில் கந்த என்பது தமிழ், சஷ்டி என்பது தமிழ் அல்ல, மிகபெரும் குழப்பம். மேலும் சஷ்டி வழிபாடும் நம்மிடம் உளதே….

    Like

    • பரிதி says:

      பதிவை இன்னொருமுறை படியுங்கள் சகோதரா..
      இடைசெருகள் தமிழுக்குள்ளே சமக்கிருத்ததை கலந்துவிட்டனர் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறாரே..

      வேறு எந்த மதமும் செய்யாத கலப்படத்தை
      ஹிந்து மதம் அதாவது வைணவ சமஸ்கிருதத்தை
      தமிழுக்குள்ளே கரைத்து மடைமாற்றியுள்ளனர் என்பதை தெளிவுற பதிவு செய்திருக்கிறாரே.. இன்னொருமுறை முழுதும் வாசியுங்கள்..

      Like

  24. மிகவும் அருமையான பதிவு. தெளிவு. பணிவு.

    அருமை KRS

    Like

  25. vichaan says:

    இவற்றைப் போன்ற கட்டுரைத் தொகுப்பு நூலாக உள்ளதா ? தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. பள்ளிப்பாட நூல்களில் இருக்க வேண்டியது.

    Like

  26. Arunkumar says:

    Superb Post..please do let us know if it is released as a Book, if not please release it as a book..

    Like

  27. Vikraman says:

    மிக அருமையான கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

    Like

  28. adyar says:

    மிக சிறந்த கட்டுரை. இது போன்ற ஒன்றை படிக்க ஏங்கிக்கொண்டிருந்தேன்.

    என்னமோ தெரியல , இப்படி ஒன்றை என் ஆத்தாள் எனக்கு 20 வருடங்கள் முன்னாள் எனக்கு சொன்னால். அப்பொழுது எனக்கு புரியவில்லை. அதன் பொருள் இப்பொழுது புரிகிறது.

    அருண் முத்துவேல்

    Like

  29. Prakash says:

    அருமையான பதிவு அண்ணா

    Like

  30. Jegan P says:

    Extremely good..!! I do not know , how we are going change the society..!! Your vision is clear but I’m not sure about your mission..!! All the best.

    Like

  31. இராசா says:

    தமிழின் உயர்வையும், பிராமணிய ஆதிக்கத்தையும்,, அற்புதமாக விளக்கியுள்ளீர்… வாழ்த்துக்கள்.

    Like

  32. Napoleon says:

    //நம்மிடம் இல்லாத சொற்களை, பிற மொழிகளில் இருந்து பெற்றுக் கொளல் தவறில்லை.
    ஆனால் இருக்கும் சொல்லை/சொத்தை அழித்து, கடன் வாங்குதல் அறிவீனம் அல்லவா?//
    அருமையான பதிவு! நன்று சகோதரா.

    Like

  33. Deepika Krishnamoorthy says:

    சுடலை மாடன் என்பது யார்? அவரே நாளடைவில் முருகனாக மருவியது என்று சிலர் குறிப்பிடுகிறார்.. இதற்கு ஏதேனும் சான்று உள்ளனவா?

    Like

  34. JP says:

    அய்யா! சிரப்பான பதிவு.

    Like

  35. ஜில்லு says:

    மதம் அரசர்களோடு வந்ததா என்ற என் நீண்ட நாள் ஐயம், இதை படித்ததால் தெளிவுற்றது🙏

    நன்றி ஐயா

    Like

  36. Parthasarathy Tamilselvam says:

    அருமையான பதிவு.

    Like

  37. ramasubbuu sethu says:

    Well researched writing.

    Like

  38. palanirajan,G says:

    நல்ல கட்டுரை சமஸ்கிருதத்திற்கு முந்தியது செவ்வியல் இலக்கியம். இது தமிழுக்கு மட்டுமே உரியது. அவர்களால் சொற்களைக் கலக்க முடிந்த்தே தவிர இலக்கியத்தைப் படைக்க முடியவில்லை. உலகில் சங்க இலக்கியத்திற்கு இணையான இலக்கிம் வேறு எந்த மொழியிலும் கிடையாது. தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. இதை வரும் தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை. நன்றி, உங்கள் தமிழ் ஆய்வு சிறக்க வாழ்த்துகள்.

    Like

  39. மிரண்டு போகிறேன்.. ஆராய்ச்சியாளர்

    Like

  40. சதிஷ் says:

    மிகவும் அருமையன பதிவு

    Like

  41. இரா. ச. கோபாலன் says:

    மிகச் சிறந்த பணி; எனது உள்ளம் கனிந்த பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் ஆர்வம், பெருகட்டும் உங்கள் படைப்புகள். அனைத்தும் நன்றாக உள்ளன.

    ஆனாலும், எளிய தமிழில் இயல்பான நடையில் எழுத வேண்டுகிறேன். பேச்சு மொழியில் எழுதினால் சிறிது காலத்திற்குப் பின் இலக்கணம் என்பதே போய் விடும். தமிழ் இத்தனை நாள் உயிருடன் இருப்பதே அதன் உறுதியான இலக்கணத்தால்தான். சங்க நூல்களில் உள்ள சொற்கள் பலவும் இன்றும் புழக்கத்தில் உள்ளன என்று நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் இதுவே அவர்கள் பேச்சு மொழியை மட்டும் பயன்படுத்தி இருந்தால் இந்நேரம் அந்த நூல்களை இழந்திருப்போம். ஏனெனில் பேச்சு மொழி ஒரு நூறு ஆண்டுகளிலேயே மாறிவிடும். எனவே, நீங்கள் எழுதுவதையே நேரான நடையில் எழுதவும், பேச்சு மொழி வேண்டாம்.

    Like

  42. கலைவாணன் says:

    உங்கள் கட்டுரை படித்து வியப்பில் ஆழ்ந்தேன். உண்மையை உணர்கிறேன். வாழ்த்துக்கள்.

    Like

  43. S.Kesavan says:

    மற்ற மொழிகளை, பழக்க வழக்கங்களை எதிர்ப்பதோ, அல்லது நம்மிடம் ஒட்டிகொள்ளாமல் இருக்க செய்வதோ சுலபம்; ஆனால் நம்மால் நம்மொழி எவ்வளவு வளர்ந்திருக்கிறது, நாம் என்னப்புதிய சிந்தனையை உருவாக்கிணோம் என்று நினைத்துப்பார்க்க வேண்டும் !

    Like

  44. Mc Rameshkumar says:

    அருமையான ஆய்வு; ஐயம் தீர்க்கும் அற்புத கருத்துக்கள்.

    Like

  45. M.Karikalacholan says:

    தங்களை போன்றவர்கள் மிக அரிதாக உள்ளீர்கள் என்பது தான் குறையே தவிர தமிழினம் இன்னும் பல ஆண்டுகள் வாழும் என்பது திண்ணம்

    Like

  46. sivakumar says:

    வணக்கம் ஐயா!
    நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
    நன்றி ஐயா!
    http://www.eppoluthu.blogspot.in

    Like

  47. பரிதி says:

    மிக அருமையான பதிவு
    நீண்ட காலமாக எனக்குள்ளே ஊறிக்கொண்டிருந்த வினாக்களுக்கு உங்களது உவமைகளுடன் கூடிய இந்த பதிவு என்னை நெகிழ வைத்தது..
    தொல்காப்பியர் சிறந்த தமிழாய்வறிஞர் , பேராசான் என்பதை நான் அறிந்திருக்கிறேன்..

    இன்னும் உங்களது ஆய்வும் பதிவுகளும் தொடரட்டும்..

    Like

  48. தோழா் டி.கே.எஸ்.பாண்டியன் says:

    தோழரே,
    வணக்கம்

    குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவன் முருகனின் மனைவி குறத்தி வள்ளி தானே..
    தெய்வானை யார்?

    சிவனுக்கும், முருகனுக்கும் எதாவது சம்பந்தம் உண்டா?

    சிவனும், முருகனும்
    தகப்பன், மகன் என்று எப்போது திரிக்கப்பட்டது?

    புத்தரை ஒழிக்க தான்
    புத்தரின் தலையை வெட்டி விநாயகர் உருவாக்கபட்டதா?

    தமிழர்கள் சைவ, வைணவத்திற்கு முன்பு சமணத்திலும், பெளத்ததிலும் இருந்துள்ளார்கள் என்பது உண்மை தான?

    Like

  49. தோழா் டி.கே.எஸ்.பாண்டியன் says:

    ஆதிபகவன் என்பது சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரை குறிக்கும்.

    Like

  50. சுப்ரமணியன்.க says:

    பார்ப்பனியம் காலங்காலமாக தமிழை அழிக்க முனைந்தும் இன்னும் நிலைத்திருப்பதில் பெருமையே இவர்களை நாட்டைவிட்டே துரத்தவேண்டும்

    Like

  51. அன்பழகன் says:

    அருமையான பதிவு நீண்ட கால தேடலுக்கு விடை கிடைத்தது விட்டது இதை ஏற்கனவே மேலோட்டமாக படித்திருக்கிறேன் உங்கள் மூலமாக படித்தது அருமை கண்கள் கலங்கிவிட்டன இப்பொழுது உள்ள வழிபாட்டு முறைகள் ஏற்புடையதாக இல்லை பொய் புரட்டு சிவவழிபாடு எப்போது தோன்றியது என்று கூறுங்கள் ஆரியத்திடம் அடிமைபட்டுகிடக்கும் சமூகம் விழித்தெழவேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    Like

  52. Habibur Rahman says:

    அருமை எம் பெருமை சகோதரரே

    Like

  53. C gopalakrishnan says:

    KRS: நன்றி
    ரொம்ப விசயம் இருக்கின்றது!!

    Like

  54. Ramkumar R says:

    Hi, Need few clarification about these words from our sangam literature . Can you please clarify me?

    Veda Muthalvan (from Nattrinai)
    Maa al(Aga nanooru, Not mentioned as ‘Thirumal’)
    Jadamudi tharitha kadavul
    Maayon

    As per my understanding all these words are referring to only one god (Lord Siva) but translators have given different explanation – What you think about it?

    As per my understanding Tholkappiyam is way beyond Mahabaratha, Ramayana & Purana stories as we believed that Lord Muruga & Jadamudi tharitha kadavul(Lord Shiva) helped us to recreate our language by first Sangam which is why we got Tholkappiam.

    – What you think about this understanding of me?

    If you agreed with these pints please provide supportive evidence in our Literature.

    Like

Trackbacks
Check out what others are saying...
  1. Quora says:

    What was the religion followed by Early Cholas and Early Pandyas before Jaina/Buddhist emerged? Any possibility?

    https://dosa365.wordpress.com/2012/11/22/106/ To be precise Hinduism was not there during sangam period.

    Like



Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)