ஊமைச் செந்நாய்: Jemo சைவமா? அசைவமா?

oomai chenaai“ஊமைச் செந்நாய்” – ஜெமோ நாவல் -ன்னு மட்டும் நினைச்சிக்காதீங்க:)
சங்கத் தமிழில் உள்ள விலங்கு;
பாலை நிலத்து வேட்டையாடி விலங்கு! – காதே அம்புட்டு பெருசா.. பயமா இருக்கும்!

மலையோரக் கிராமத்துக் காடு/புதர்களில் காணலாம்; காட்டு நாய்;
தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு, பெரிய மாட்டையே கூட அடிச்சீரும்;  ஆனா ரொம்பத் திங்காது; அதான் வேட்டைக்கு உதவி;
Type Typeஆ சத்தம் போடும் –  அழுகை, கேவல், சீழ்க்கை-ன்னு; வேட்டை விலங்குகளில் Mega Star:)

குறுகலா முகம், கருப்பா மூக்கு, பழுப்பாக் கண்ணு;
பார்த்தாலே சொல்லீறலாம்;  கடிச்சிக் குதறும் அசைவப் பிராணி -ன்னு:)  
= டேய், அது எப்படிறாச் “சைவமா” மாறும்?:)

அட, நான் சைவத்தில் இருந்து அசைவமா மாறலீயா? அது போல Reverse:)
அம்மா வறுக்கும் மீனுக்குத் தனி மவுசு;
ஆனா, நான் சமணப் பள்ளியின் பாதிப்பால் 14 வருசமாச் சைவமாக் கிடந்தேன்;
வந்து மாத்தினான் ஒருத்தன்!  வந்தே -ஏ-மாத்தறம்:)

ஆனா, இந்தச் செந்நாய்…., காதலுக்காகச் சைவமா மாறிடுச்சாம்!
அடா, அடா, அடா – பார்ப்போமா =  சைவக் காதலா? அசைவக் காதலா?:)


நூல்: ஐங் குறு நூறு (397)
குறுந்தொகையை விடச் சிறிது; min just 3 lines

கவிஞர்: ஓதலாந்தையார்
(ஓதல் என்னும் ஊரிலே, ஆதன் தந்தை = ஆந்தை)

திணை: பாலை
துறை: உடன்போக்கு

கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்;
சுரம் நனி வாரா நின்றனள்’ என்பது,
முன்னுற விரைந்த நீர் மின்
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே!

சூழல்:
உடன் போக்கு = அதாங்க பொண்ணு, அவனோட ஒடிப் போயிட்டா:)
சங்கத் தமிழில் ஒடிப் போறதுக்கு, என்ன அழகான சொல்லு-ல்ல?:)

என்ன தான் அவன் பக்கத்தில் இருக்கும் போதும், பொறந்த வீட்டுப் பாசமும் கூடவே!
வீட்டில் தேடுவாங்களோ? -ன்னு கிடந்து அடிச்சிக்குது;
வழியில், தன் ஊருக்குப் போறவங்களைப் பார்த்து, “பயப்பட வேணாம்-ன்னு சொல்லுங்க” -ன்னு சொல்லி வுடறா!


காபி உறிஞ்சல்:

chenaaiகவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்;

கவிழ்ந்த மயிருள்ள கழுத்து; ஆண் செந்நாய் (ஏறு)
அது, வழியில், பன்றிக் குட்டியைப் பாக்குது; ஆனாலும் கொல்லாமல் விட்டு விடுகிறது; ஏன்?

(குருளை = பன்றியின் சிறுசைக் குருளை-ன்னு தான் சொல்லணும்; தொல்காப்பிய மரபியல்!
யானைக் கன்று, குதிரை மறி, பன்றிக் குருளை, அணில் பறழ்…

ஆண் மயில் = போத்து, பெண் மயில் = அளகு… இதெல்லாம் மரபியல்;
ஆனா நாம இப்பல்லாம் மனுசப் பொண்ணுங்களையே, குட்டி -ன்னு தான் சொல்லுறோம்:)

ஏன், கொல்லவில்லையாம் அந்தச் செந்நாய்?
முந்தைய பாட்டில் விடை இருக்கு = “மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்
பெண் மான் – ஆண் மான் காதல்; கூடவே அந்தக் காதலுக்கு சாட்சியாப் பொறந்த மறி மான்;
இந்த இளங் குடும்பத்தைப் பாத்துட்டுச், செந்நாய்க்கே மனசு வரலையாம்!

The-Elopement-Elopeசுரம் நனி வாரா நின்றனள்’ என்பது
முன்னுற விரைந்த நீர் மின்
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே

காட்டிலே, போய்க்கிட்டு இருக்கா, காதல் வாழ்வு தொடங்க!
பயப்பட வேணாம்; பின்னாடி வருவா -ன்னு சொல்லுங்க!

நீங்கள் என் ஊருக்குத் தானே போறீங்க? சற்று விரைந்து போய்ச் சொல்றீங்களா?
யாரு கிட்ட? = என் ஆயத்தார் / மன்றத்து வீட்டார்; முறுவல் புன் சிரிப்போட சொல்லுங்க!

ஏன் புன் சிரிப்போட சொல்லச் சொல்லுறா?
அங்க தான் பொறந்த வீட்டுப் பாசத்தையும் மீறிப், புகுந்த வீட்டு மோகம்:)

டேய், என் ஆயத்தானுங்களா! என் அத்தான் கூடப் போறேன்!
வழியில், இந்த ஊமைச் செந்நாய் கூடக், குடும்ப அன்பை மதிச்சிக், கொல்லாம நிக்குது;
அதே போலக் காதலை எதிர்க்காது, நீங்களும் அன்பில் நில்லுங்க!

= சொல்லாமச் சொல்லுறா; அதான் புன்சிரிப்பு, பெண் சிரிப்பு:)
= இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே!

dosa 105/365

Advertisements
Comments
One Response to “ஊமைச் செந்நாய்: Jemo சைவமா? அசைவமா?”
 1. ஒரு பெண்ணுக்குள் தான் எவ்வளவு திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது! புன்முறுவலோடு அவள் தகவல் அனுப்புவத்தின் உள்ளர்த்தம் அருமை. மேலும் பெற்றோர்கள் தன்னைக் காணாது கவலை கொள்வார்களே என்ற உணர்வும் பெண்ணுக்கு, அதனால் அவள் ஊர் செல்லும் மக்களிடம் தகவல் சொல்லி அனுப்புகிறாள் :-)

  //இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே//
  எப்பொழுதும் பெற்றோர்களுக்கு, தங்கள் பெண் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்பது தான் ஒரே ஆசை. பணம் காசு கூட அப்புறம் தான். பெண் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது!

  பெற்றோர்களுக்கு முதலில் பெண் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டாளே என்று கோபம் இருக்கும். ஆனால் அவள் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று தெரிந்த பின் கோபம் மறைந்து விடும். அதற்கு அடிப்படையாக அன்பு மனம் தேவை. அன்புமணி போல சாதி விரோதம் பாராட்டாமல் பெண்ணின் மனதையும் அவள் காதலையும் மதித்தால் எல்லாம் நலமே. அதற்கு சான்றாகத் தான் அசைவ வேட்டை நாய் கூட சைவமாக மாறுவதை உதாரணமாக் இந்தப் பாடலில் கவிஞர் ஓதலாந்தையார் சொல்லுகிறார்.

  சங்கப் பாடலுக்கு western couple running away on horseback படமா? :-)

  amas32

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: