ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்?

her dream about him - velli veedhiyarகாதல் கைகூடிய பின், வரும் முதல் கேள்வி என்ன?
= நம் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?:)

இந்த உணர்ச்சி = ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகம்!
ஏன் -ன்னு தெரியுமா?
சொல்லுங்களேன் பார்ப்போம்:)

இந்தக் குறுந்தொகைப் பாட்டை எழுதியதும் ஒரு பெண் கவிஞர் தான்!
= என் மனசுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச கவிஞர்
= இவ தனிப்பட்ட வாழ்வு ரொம்ப துயரம் மிக்கது;
= “காதலே” -ன்னு வாழ்ந்து (?) விட்ட பெண்

சங்க காலப் பெண் கவிஞர்களில்…
இவ பாட்டில் மட்டும் = உணர்ச்சி + துணிவு = ரெண்டுமே தெறிக்கும்!
= ஆண் கவிஞன், “முலை-அல்குல்” -ன்னு பாடினா, “கவிச் சுவை”-ன்னு ஏற்கும் சமூகம்;
= பெண், அதே போல், ஆண்களைப் பாடினா???
“சரியான Case-டா” -ன்னு சொல்றவங்க, 21st CE-லயும் உண்டு = Ilakkiya Hypocrisy:)

ஆனா, இவ = 2000 years back “கட்டுடைத்தவ”;
தோழி கோதை (எ) ஆண்டாளை விட இவளே முன்னோடி!

kandrum unnathuகன்றும் உணாது, கலத்தினும் படாது…திதலை அல்குல் என் மாமைக் கவினே
= எழுதியவ இவ தான்!
காதலன் புரிதல் கை கூடலை; பெண்ணின் அந்தரங்கத்தில் வீணாகுதே; “வெள்ளைப்” படுதே -ன்னு “பச்சையா” எழுதினவ;

என் மனத்துக்கு இனியாள்; சங்கத் தமிழ் மொழியாள்!
அவ பாட்டு தான் இன்னிக்கி Dosaவில்; பார்ப்போமா?


நூல்: குறுந்தொகை
கவிஞர்: வெள்ளிவீதியார்
திணை: குறிஞ்சி
துறை: தமர் வரைவு மறுத்தல்

அம்ம வாழி, தோழி! – நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
‘நன்று நன்று’ என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே

சூழல்:

velli_veedhiyarகனாக் கண்டேன் தோழீ நான் – ன்னு பாடுனவ ஆண்டாள்; ஆனா அவளுக்கும் முன்னாடியே…
தன் தனிப்பட்ட காதல் (எ) துன்பத்தை,
கனவு (எ) இன்பம் ஆக்கி மகிழ்ந்தவள் = வெள்ளிவீதியார்

தாமதமானாலும்… தலைவன் தன்னைத் புரிஞ்சிக்கிட்டான்; இப்போ பொண்ணு கேட்டு வந்திருக்கான்;
ஆனா, அவன் பேசுகின்ற பேச்சு, சற்று வீறுள்ள பேச்சு;
எங்கே அவன் பேசக் கேட்டு, தன் வீட்டில், கல்யாணம் மறுத்து விடுவார்களோ? -ன்னு கவலையாம் பொண்ணுக்கு:)
= தலைமகன், தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, வரைவு மறுப்பவோ? எனக் கவன்ற தலைமகள்;

அவளுக்குத் தோழி ஆறுதல் சொல்வது போல் களம்!
இப்படி, விதம் விதமான கனவுகளை, ஒவ்வொரு பாத்திரத்தின் மேலேற்றி எழுதும் வெள்ளிவீதியார்!

ஆனா, வெள்ளிவீதியின் உண்மைக் காதல் பத்தி நமக்கு எப்படித் தெரியும் -ன்னு பாக்குறீங்களா?
அவள் பட்ட அல்லாடல்களை – சொல்லாடல்களை,
சக நண்பர்கள்-கவிஞர்கள், வேறு வேறு சங்கக் கவிதையில் எழுதிப், பதித்து வச்சிட்டாங்க:(

(Further Read/Ref : முனைவர். தாயம்மாள் அறவாணன் – மகடூஉ முன்னிலை ; பெண்புலவர் களஞ்சியம்)


காபி உறிஞ்சல்:

அம்ம வாழி, தோழி! – நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?

ஏன்டியம்மா தோழீ, நம்மூருல…
பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் நல்லவர்கள்/நண்பர்கள் இருக்காங்கடீ!
= பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?

ayothidasarதண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்

தண்டு கையில் உடையவர்கள்;
வெள்ளைத் தலை; அதில் சிதவல் (தலைப்பாகை) கட்டினவங்க!

= பெருசு -ன்னு இன்னிக்கி சொல்றோமே…
= தலை நரைத்தாலும், அறிவு நரைக்காதவர்கள்
= தூய காதலின் முன்…, குலம்/ கோத்ரம்/ சாதி/ சவரன் பேசாதவர்கள்; பெண்ணை ஏசாதவர்கள்

nesavu thaRiசிதவல் = சிதறிய துணி;  நெசவுத் தறியிலே…
* ஓரமாச் சிதறி எடுப்பதால் சிதவல் = தலைப்பாகை/ துண்டு
* வெட்டி எடுப்பதால் = வேட்டி;
எந்தப் புண்ணியவான், தமிழ்ச் சொல் வேட்டியை, வே’ஷ்’டி ஆக்கினானோ?

‘நன்று நன்று’ என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே!

நன்று நன்று -ன்னு சொல்கின்றனர் = தலைவனோடு வந்த உற்றார்; (மாக்கள் = மக்கள்)
இன்று, உங்கள் வரவால், பெருமை சேரும் -ன்னு, தலைவனின் உறவுகளை வரவேற்கும் மக்கள்!

kanda naal muthalஇந்த அவை – இந்த மக்கள் இருக்கும் போது, நீ ஏன்டீ பயப்படுற?
ரெண்டு வீடும் முட்டிக்காமப் பேசுவாங்க;

சும்மாக் கிடந்து கவலைப்படாதே தலைவியே! பிரிந்த நீங்கள், ஒன்னு சேரும் நேரம் நெருங்கிருச்சி = பிரிந்தோர்ப் புணர்ப்பர்; பிரிந்தோர்ப் புணர்ப்பர்!
(முருகனருள் – கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்)

இப்படிக் கனவுகளாய்…
தமிழ் எழுதியே, வாழ்க்கை வாழ்ந்த தையலாள் = வெள்ளிவீதியார்!
நின் அகம் வாழி; புறம் வாழி;
துணிவும் தமிழும் வாழி வாழி!

dosa 104/365

Advertisements
Comments
7 Responses to “ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்?”
 1. murugprabum says:

  Can you please elaborate more on the content. It is very hard to get the meaning since, there are many unknown words. It would be better if you could please explain the meaning in simple tamil that can be understood by all. Please somebody explain what the author is trying to convey.

  Like

  • dear sir,
   can u exactly specify, what you are looking for? (I saw your previous comment too)
   * if u need an அருஞ்சொற்பொருள் for difficult words
   * or a word-by-word meaning of lines

   //It is very hard to get the meaning since, there are many unknown words//
   pl give an example of where u found it hard

   சங்கத் தமிழ் வரிகளின் நடை = 2000 yrs back!

   அதுக்குத் தான் காபி உறிஞ்சல் -ன்னு,
   பாட்டின் கீழே, I am splitting into 2-2 lines & tell the crux/feel of it, in conversational/local lingo:)
   For example, “சரியான Case-டா” -ன்னு சொல்றவங்க, 21st CE-லயும் உண்டு = Ilakkiya Hypocrisy:)”
   or… இப்படி எழுதறது தான் கடினமா இருக்கா? :))

   Like

 2. suresh says:

  excellent job. my best wishes. i think he talks about wordbyword meaning only. even i feel there shud be one after kaapi urinjal

  Like

 3. அன்பின் கேயாரெஸ் – சிதவல், வேட்டி – பெயர்க்காரணம் அருமை – நெசவுத் தறி – கண்ட நாள் முதல் – படங்கள் இரசித்தேன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 4. Uma Chelvan says:

  KRS, It is an excellent, excellent ( it is extremely good that’s why I used excellent twice) post. I am one of your regular reader for very long time may be around 10 years i think. You may not know me, but, I know many people. Anyway very nice post as usual. பாயசம் இனிப்பா இருக்குனு யாரும் சொல்லமாட்டாங்க , ஏன்னா அதுதான் அதன் சுவையே. ஆனால். ரொம்ப இனிப்பா இருக்குனு வேணா சொல்லலாம் உங்க பதிவை போல :))

  Like

  • நன்றி உமா..
   உங்களைப் பந்தலில் பார்த்துள்ளேனா?
   மாதவிப் பந்தல்-ல்ல எழுதத் தொடங்கும் போது ரொம்ப சின்னப் பையன்; இப்ப கொஞ்சமே சின்னப் பையன்:))

   இந்தப் பதிவைக் கொஞ்ச நாள் நிறுத்தி வச்சிருந்தேன்
   இப்ப தான் மீள் துவங்கி இருக்கேன்..
   சங்கத் தமிழ் in common man’s language is my goal | With extra tags at the bottom of this site for Nature, Women In Sanga Tamizh etc!

   Like

 5. நல்லா எழுதுறீங்க….என்னப் போல மக்குப் பிள்ளைக்கும் புரியற மாதிரி….நன்றி

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: