துன்பம் இன்பமாகும் குறள்!

happy-sadதிருக்குறளில், “இன்பம்” எங்கெல்லாம் வருது? = தேடிப் பாருங்க!
kural.muthu.org
துன்பமே, எப்பிடி இன்பம் ஆவுது? -ன்னு தெரிஞ்சிப் போகும்!:)

* அவன் இல்லாமல் இருப்பது = துன்பம்
* ஆனா, அவன் இல்லாத போது, அவனையே எண்ணியெண்ணி ஏங்குதல் = இன்பம்:)

சரியான, லூசுப் பொண்ணா இருப்பாப் போல!
டேய் முருகா, நான் அப்படியெல்லாம் இல்ல; நான் உன்னை நினைக்கவே இல்ல! இல்லவே இல்ல:)


துன்பம் உற வரினும் செய்க – துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை;
(பொருட்பால் – வினைத் திட்பம் – 669)

இன்பம் கடல் மற்றுக் காமம் – அஃது அடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது;
(காமத்துப் பால் – படர் மெலிந்து இரங்கல் – 1166)

அடிக்கோடு இட்டவை – என்ன தொடை? -ன்னு சொல்லுங்க:)


காபி உறிஞ்சல்:

1) துன்ப-இன்பம்

துன்பம் உற வரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

(முடிவிலே) இன்பம் தரப்போகும் ஒன்றைச் செய்யும் போது
(துவக்கத்திலே) துன்பம் மிக வந்தாலும், துணிவு மேற்கொண்டு, அதைச் செய்து முடிக்க வேண்டும்!

2) இன்ப-துன்பம்

இன்பம் கடல் மற்றுக் காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது

காமம் = மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது;
காமம் = வருத்தும் போது அதன் துன்பமோ கடலை விடப் பெரியது;

இப்பிடி, ஒரே உவமை (கடல்),
இரண்டுக்கும் ஆகி வருவது என்ன அணி? I dunno, u tell me plz:)

dosa 103/365

Advertisements
Comments
3 Responses to “துன்பம் இன்பமாகும் குறள்!”
 1. எந்த செயலும் ஆரம்பிக்கும் பொழுது கடினமாகத் தான் இருக்கும். அரிச்சுவடி பாடத்தில் இருந்து, புதிய மொழிகள், புதிய தொழில்கள், புதிய உறவுகளை கையாளும் முறையை அறிந்து நடந்து கொள்ளும் வரை அனைத்தும் முதலில் எளிதன்று. ஆனால் முயற்சியை கைவிடாமல், எத்தனை சிரமமாக இருந்தாலும் தொடர்ந்து பயிலும் பொழுது வெற்றியும் புலமையும் பெறுகிறோம்.அந்த நிலை மகிழ்ச்சி நிலை. அதை அடைய முதலில் துன்பப்படுவது இயல்பு நிலை.

  துணையுடன் இன்பம் துய்க்கும் பொழுது அந்த பேரின்பம் கடலைப் போன்றது. அளவற்றது என்பதை வேறு எப்படி சொல்ல முடியும்? அதே துணையைப் பிரிந்து வாடும் போது துன்பமும் அளவில்லாதது, கடலைப் போலவே.

  எந்த அணி என்று நேற்று, தெரிந்த அணிகளை எல்லாம் ரிவைஸ் பண்ணிப் பார்த்தேன் குருவே. சரியாகத் தெரியவில்லை, விளக்கவும் ப்ளீஸ் :-)

  amas32

  Like

  • குருவே-வா?
   அம்மா, This is too too much:)

   இந்தக் காலத்தில் மனித குரு = அபூர்வம்;
   போலி குருக்கள், Corporate குருக்கள் தான் நெறைய; நான் ஏற்பதும் இல்லை:)
   குருவாய் = வருவாய் அருள்வாய் குகனே:)
   ——–

   ஒரே உவமை பலதுக்கும் ஆகி வந்தால் = பல் பொருள் உவமை அணி
   இங்கிட்டு கடலின் நீளம்… இன்பத்துக்கு ஆகி வருது; துன்பத்துக்கும் ஆகி வருது:)

   Like

 2. அன்பின் கேயாரெஸ் – குறள இன்பம் அருமை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: