காதலா? காமமா? How to Know It?

foreplayIn today’s world….., காமம் -ன்னா ஒரு meaning; காதல் -ன்னா ஒரு meaning!
* அவன் காதல் புடிச்சவன் -ன்னு சொன்னா = ஒரு பொருள் தோனும்;
* அவன் காமம் புடிச்சவன் -ன்னு சொன்னா = வேற பொருள் தோனும்:)

KamaSutraBookஆனா, சங்கத் தமிழில்/ இலக்கியத்தில், காமம் = விருப்பம் என்றே பொருள்;
= கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
= கற்றவர்களைக் கற்றவர்களே “பலானது” பண்ணுவாங்க – அப்படீன்னா எடுத்துக்கறோம்?:)
= கற்றவர்களைக் கற்றவர்களே “விரும்புவர்” என்று தானே பொருள்!

சரி டா மச்சி; அப்படீன்னா… திருக்குறளில், காமத்துப் பால்?
= அது என்ன விருப்பத்துப் பாலா?:)
சும்மானா அடிச்சி வுடாத ரவி:) இதுக்குப் பதில் சொல்லேன் பார்ப்போம்!:)
குறளில், மலரினும் மெல்லிது காமம் -ன்னு வருதே! அது “பலான” காமம் தானே?:)


ஆமாம்!
ஆனா, “அந்தக்” காமத்திலும், அது “விருப்பம்” என்னும் பொருளில் தான் வரும்!

edward-bella-bed--large-msg-130766066038காதலில் விளையும் உடல் விருப்பம்
= மெய்யுறு புணர்ச்சி = அதுவும் காமமே!

சங்கத் தமிழில், அந்தக் களவு இன்பம்/விருப்பத்தை = “காமம்” என்றே அழைத்தனர்;
So, காமம் நல்லது!:) & கறை நல்லது:)

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
– இது காதலில் விளையும் காமம் (விருப்பம்)

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
– இது கல்வியில் விளையும் காமம் (விருப்பம்)

Good; அப்படீன்னா “காமம் புடிச்சவன்” -ன்னு, பேச்சு வழக்கில் பொருள் ஏன் மாறிச்சு?
ரவிக்கு இருப்பது காமமா? காதலா?:)
= எப்படிக் கண்டு புடிப்பது? பார்க்கலாமா?:) Letz go குறுந்தொகை – 4 lines!


நூல்: குறுந்தொகை 42
கவிஞர்: கபிலர்
திணை: குறிஞ்சி

காமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி
விடர் அகத்து இயம்பும் நாட!- எம்
தொடர்பும் தேயுமோ, நின் வயினானே?

சூழல்:
இரவில் வரும் தலைவன்; ஆனா முன்பு போல் வர முடிவதில்லை;
போச்சு; அவ்ளோ தான்! காதல் புட்டுக்கிச்சா?
இங்கிட்டு தான் தோழி சொல்கிறாள்: காதல் – காமம் வேறுபாட்டை!


காபி உறிஞ்சல்:

midnight rainகாமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென

காமம் ஒழிவது = காமம் போயிருச்சோ? விருப்பம் போயிருச்சோ?
நடு யாமத்திலே, மா மழை பெய்வது போலடா, இது!

யாமம் என்பது தூய தமிழ்ச் சொல்;
அதை “ஜா”மம் -ன்னு ஆக்கிட்டாங்க, தமிழிலே கலப்பு செய்வோர்;
“ஜா”மம் என்பதால், தமிழ், வடமொழியிடம் கடன் வாங்கிய சொல்லு போல ஆயிருச்சி-ல்ல?
Thatz the Trick:( Take your own word, prefix & push it back to u; You never know:(

யா, யாமை = கருமை;
அதான் யாமம் (நள்ளிரவு), யாமளை (அன்னை கொற்றவை)
But, யாமம் chg to ஜாமம்; யாமளை chg to ஷ்யாமளா

சரி விடுங்க; உவமையைப் பார்ப்போம்!
நடு யாமத்திலே மழை பெஞ்சா? = காமமும் அப்படித் தானாம்!
யாமத்தில் பெய்த மா மழை! = What does it mean? No Double Meanings:)

அருவி விடர் அகத்து இயம்பும் நாட!- எம்
தொடர்பும் தேயுமோ, நின் வயினானே?

டேய் குறிஞ்சி – அருவி நாடனே,
* ஒரு பெருக்கால பெய்த மழை, பின்னாளில், மலை முழைஞ்சு எல்லாம் சொட்டிக்கிட்டு இருக்கும்;
* ஒரு பெருக்கால பெய்த காமம், பின்னாளில், மன முழைஞ்சு எல்லாம் சொட்டிக்கிட்டு இருக்கும்;

avan avaL kaamamஇவளுக்கு வெறும் காமம் -ன்னு நினைச்சிட்டியா?
காமம் = மெய் உறு புணர்ச்சி = உடல் விருப்பம்!  நல்லது தான்;
ஆனா, அந்தக் காமமே நின்னு போனாலும், இவ தொடர்பும் தேயுமோ, உன் மேலே?

தொடர்பு” -ன்னு அற்புதமான சொல்லைப் போடுறாரு பாருங்க!
* தொடர்பு = Not just association
* தொடர்ந்து வரும் = அதனால் தொடர்பு

kaamam - kaathalஉன் காமமே நின்னு போனாலும், இவ “தொடர்பு” தொடரும்!
=  மனசால் அவனையே தொடர்ந்து வாழ்வது!
= “தொடல்” நின்னுருச்சி; ஆனா “தொடர்பு” நிக்கலைடா; நிக்கவே நிக்காது!

இப்போ புரியுதா?
* காமம் = நம் மேல் உள்ள “விருப்பம்”; நம் இன்பத்துக்கு இருப்பது
* காதல் = அவன் மேல் உள்ள “விருப்பம்”; அவன் இன்பத்துக்கு-ன்னே இருப்பது
காமம் ஒழிவது ஆயினும்,
உன் வயின், தொடர்பும் தேய்மோ? – யாமத்து மழையே!

dosa 102/365

Advertisements
Comments
8 Responses to “காதலா? காமமா? How to Know It?”
 1. Murugaprabu says:

  I don’t get the exact idea what the author is trying to convey. Can you please be more elaborate ?

  Like

 2. Your favourite poet! :-)

  யாமளை மிகவும் அழகான பெயராக பெண் குழந்தைக்கு இனி வைக்கலாம் :-)

  //காமம் ஒழிவது ஆயினும்,
  உன் வயின், தொடர்பும் தேய்மோ? – யாமத்து மழையே!//
  இந்த இரு வரிகளையும் சேர்த்துப் படிக்கும் பொழுது அதன் பொருள் நன்கு விளங்குகின்றது. உடல் மேல் உள்ள விருப்பம் தீர்ந்துவிட்டாலும் தொடரும் அவன் மேல் உள்ள காதல்.

  உடல் இன்பம் துய்க்க முடியாமல் போவதற்கு பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணம், வயது முதிர்ந்த பின் அந்தத் தேடல் குறைந்தும் போகலாம். ஆனால் துணை மேல் உள்ள அன்பும் பற்றும என்றும் தொடர்ந்து இருப்பதே தூய காதலின் அடையாளம். அருமையான பாடல்!

  மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று சொல்வார்கள், அது துன்ப சூழல் முடிந்த பிறகும் இன்னும் தொடர்ந்து தொல்லைகள் வருவதைக் குறிக்கும் பேச்சு. அது இங்கே காதலுக்கும் பொருந்தும். யாமத்து மழை பொழிந்த பின்னும் நீர் சொட்டிக் கொண்டிருப்பது போல இன்னும் தொடர்கிறது காதல்.

  amas32

  Like

 3. ஆகா ஆகா கேயாரெஸ் – அலசி ஆய்ந்து இடப்பட்ட அழகான பதிவு – கற்றாரைக் கற்றாரே பலானது ப்ண்ணூவாங்கன்னு எடுத்துக்கக் கூடாது ( கொல்ஸ்ட்ரால் ஜாஸ்தி ரவிக்கு ) – தொடர்ந்து வருவது தொடர்பு – யாமம் பற்றிய விளக்கம் – அத்த்னையும் அருமை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 4. இடுகைகளை எல்லாம் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பேருந்தில் வரும்போது மடிக்கணியில் படிப்பது வழக்கம். அப்படியே இந்த இடுகையையும் அனுப்பிவிட்டேன். இதில் இருக்கும் படங்களைப் பார்க்காமல். என் வேலை போனால் நீங்கள் தான் அதற்குக் காரணம்! :)

  Like

Trackbacks
Check out what others are saying...
 1. […] சொல்லி இருக்கிறார். காதலா காமமா எப்படி அறிவது என்பதிலும் காமெடியாக சங்க […]

  LikeLeave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: