கம்பன்: ஆன்மீகப்-பகுத்தறிவுக் குரங்குப் பெண்!

* கூர் அறிவுள்ள பெண், ஆனால் அரசியல் செய்யாப் பெண்;
* ஆன்மிகம் தோய்ந்த பெண், ஆனால் பகுத்தறிவு மிக்க பெண்
* சாத்திரங்களைக் கண்மூடித்தனமாய் ஏற்காத பெண்

வாலி மாண்டாலும் தான் மாளாது,
அவனையே பற்றி வாழ்ந்த காதல் மனைவி = தாரை!

தாரை -ன்னா விண்மீன்!
நட்சத்திரம் போல் ஒளிர்பவள் = தாரை! ஏதோ வெறும் குரங்குப் பொண்ணு அல்ல!


வால்மீகி என்னும் ஆச்சாரம் மிக்க வடமொழிச் சாத்திரத்தோடு, 14 இடங்களில் துணிந்து முரண்படும் கம்பன்;
கொண்ட தமிழ்க் கொள்கை அன்றி, வேறு எந்தச் சாராருக்கும் அஞ்சாத கம்பன்! = நான் இது தமிழ்ப் பாவினால் உணர்த்திய பண்பு அரோ!

தாரை புலம்புறு படலம்

‘வரை சேர் தோள் இடை நாளும் வைகுவேன்
கரை சேரா இடர் வேலை காண்கலேன்;
உரை சேர் ஆர் உயிரே! என் உள்ளமே!
அரைசே! யான் இது காண அஞ்சினேன் (4202)

‘நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின்
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம்
அறியாரோ நமனார்? அது அன்று எனின்
சிறியாரோ உபகாரம் சிந்தியார்?

‘அணங்கு ஆர் பாகனை ஆசை தோறும் உற்று
உணங்கா ஒண் மலர் கொண்டு உள் அன்பொடும்
இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும்
வணங்காது இத்துணை வைக வல்லையோ?

ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
ஏயா வந்த இராமன் என்று உளான்
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம்
ஈயாயோ? அமிழ்தேயும் ஈகுவாய்!

‘சொற்றேன் முந்து உற; அன்ன சொல் கொளாய்
“அற்றான் அன்னது செய்கலான் ” எனா
உற்றாய் உம்பியை; ஊழி காணும் நீ
இற்றாய்; யான் உனை என்று காண்பெனோ?

‘அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார்
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்;
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்
கருமம் கட்டளை என்றல் கட்டதோ?


வால்மீகி காட்டுவது:

தாரையைப் பின்னர் சுக்கிரீவனே மணந்து கொண்டான் என்பதே!
பிறன் மனை நயத்தல் என்பதைத் தானே குற்றமாச் சொல்லி, இராமன் வாலியை வதைக்கிறான்?
அப்பறம் இது எப்படி? = இந்தக் கேள்விக்கு வால்மீகியிடம் விடையில்லை!
வடமொழியில் பதில் இல்லை! கம்பன் தமிழே பதில் சொல்கிறது!

சூரியன் மகனும், மானத்
துணைவரும், கிளையும் சுற்ற,
தாரையை வணங்கி, அன்னாள்
தாய் என, தந்தை முந்தைச்
சீரியன் சொல்லே என்ன,
செவ்விதின் அரசு செய்தான்

அயில் விழி, குமுதச் செவ்வாய்,
சிலைநுதல், அன்னப் போக்கின்,
மயில் இயல், கொடித்தேர் அல்குல்,
மணி நகை, திணிவேய் மென்தோள்,
குயில் மொழி, கலசக் கொங்கை
மின் இடை, குமிழ் ஏர் மூக்கின்,
புயல் இயல் கூந்தல், மாதர்
குழாத்தொடும் தாரை போனாள்

* கூர் அறிவுள்ள பெண், ஆனால் அரசியல் செய்யாப் பெண்;
* ஆன்மிகம் தோய்ந்த பெண், ஆனால் பகுத்தறிவு மிக்க பெண்
* சாத்திரங்களைக் கண்மூடித்தனமாய் ஏற்காத பெண்

வாலி மாண்டாலும் தான் மாளாது, அவனையே பற்றி வாழ்ந்த காதல் மனைவி = தாரையை வணங்குவோம்!

dosa 99/365
kamban 15/52

Advertisements
Comments
2 Responses to “கம்பன்: ஆன்மீகப்-பகுத்தறிவுக் குரங்குப் பெண்!”
 1. விளக்கம் அருமை… நன்றி…

  Like

 2. n_shekar says:

  எவ்வளவு பெரிய பாட்காஸ்ட் கே ஆர் எஸ்! எத்தனை உழைப்பு அதற்கு பின்னால், நன்றி. முழுவதும் மனதில் பதிய பலமுறை கேட்கவேண்டும்.

  ஆண், பெண் தனக்கு அடங்கி இருக்கவேண்டும் என்று தான் நினைக்கிறான். அப்படி இல்லாவிட்டால் அவனுக்கு நிம்மதி இல்லை.

  தாரை மனைவியாய் கிடைத்தது வாலி செய்த நல்வினையே. கணவனுக்கு அறிவுரை சொல்லும் திறம் படைத்த அறிவாளி, பின்னர் சுக்ரீவனையும் அந்த நல்லறிவால் காப்பாற்றி வழி நடத்துகிறாள். இந்த மாதிரி பெண்கள் தான் பாரத பூமியை புண்ணிய பூமியாக மாற்றுகிறார்கள்.

  One of your best, KRS! since you cannot stand injustice of any form you have done justice to this particular portion of Kamban’s contribution in your expression and explanation.

  amas32

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: