சிலப்பதிகாரம் – வேங்கட மலையில் நிற்பது யார்?

ஊருக்கு வந்த நாளே, கிராமத்துக்குக் கிளம்பிட்டேன்!
நோன்பு முடிஞ்சி, சென்னைக்குத் திரும்பி வரும் வழியில்…
வேலூர் தானே… பாதி வழியில் Opposite Direction, திருமலை-திருப்பதி செல்ல நேர்ந்தது;
அதான் இந்தப் பதிவு! அரை நாள் பயணம் – நான் மட்டும்:)

பொதுவா, பாமர மக்களிடையே… சமயம் சார்ந்து, சில குழப்பங்கள் ஏற்படுத்துவது வாடிக்கை!
திருப்பதி மலை மேல் இருப்பது = அவரோ? இவரோ?
என்னும் குழப்பமும் அப்படித் தான்; எது ஓய்ந்தாலும், இது ஓயாது; வீண் கிளப்பி விடல்:)

ஆனால், சமயம் கடந்த, தமிழ்ச் செல்வரான இளங்கோவடிகள்! (3rd CE)
என் ஆசை முருகனின் பண்டைத் தலங்களை எல்லாம் காட்டுவாரு;
அதே இளங்கோ, வேங்கடம் என்னும் மலையையும் பாடுறாரு! எப்படி?

= சமயம் கடந்து, தமிழைத் தமிழாய் அணுகி!
= துதிப் பாட்டாய் இல்லாது, இயற்கையும் தமிழுமாய்!
= வேங்கட மலை மேல் நிற்பது யார்? அதையும் சொல்லிடறாரு இளங்கோவடிகள்!

பின்னாளில் இப்படிக் குழப்பங் கெளப்புவார்களோ என்றெண்ணித் தான்…
மிகத் துல்லியமாய்க் குறிச்சி வைக்கிறாரு போலும்!
சிலப்பதிகாரம் காட்டும் – வேங்கட மலையில் இருப்பது யார்? = அதுவே இன்றைய பாடல்!


வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

நூல்: சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் – காடு காண் காதை (lines 41-51)
கவிஞர்: இளங்கோ அடிகள்


காபி உறிஞ்சல்:

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை

நீர் பெருகி அருவிகள் பாயும் வேங்கட மலை!
அந்த ஓங்கிய மலை உச்சியிலே…
(இன்னிக்கும் காணலாம்… மலைப் பாதையில் நடந்து செல்லும் போது, ஆங்காங்கே சில்லென்று சிற்றருவிகள்!
காசு குடுத்து, சொகுசாய் இறைவனைக் காணச் சென்றால் = இயற்கையும் தெரியாது, இறைவனும் தெரியான்)

விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து

கதிரவனும் திங்களும் மாறி மாறிக் காயும் மலை உச்சி!
ஆங்கே, இரண்டு பக்கத்து மலைக்கும் இடையே…

மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல

கோடி = புதுத் துணி
(கோடி ரூபாய் அல்ல, அது இன்றைய செல்வச் செழிப்பின் அவலம்)
பூவுக்கே வழியில்லாமல் இருந்த இறைவனுக்கு, வைரக் கிரீடம்-தங்கத் தட்டு போன்ற Capitalistic வித்தைகள்;
ஆனா, ஆழ்வார்களின் வேங்கடவன் Business வேங்கடவன் அல்லன்; குறையொன்றுமில்லாக் குன்றத்து விளக்கன்;

கோடி = திருமணக் கூறைப் பட்டு; அதை உடுத்தி, தோளிலே வில்லேந்தி…
நல்ல கருப்பான மேகம்..
மழை பொழியத் தயாராய் நிற்பது போல், மலை மேல் நிக்குறான்! = யாரு?

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி

* பகை அஞ்சும் ஆழி = (சக்கரம்)
* பால் வண்ணச் = (சங்கு)
தன் தாமரைக் கையிலே ஏந்தி = யாரு சங்கு-சக்கரம் ஏந்தி இருப்பா?
அவனே அவன்! = வேங்கட மலை மேல் நிற்பவன்!

நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய

அழகான ஆரம் – அதை மார்பிலே பூண்டு..
பொற்பூ ஆடையில், பொலியத் தோன்றும்
(இன்னிக்கும் பூ-ஆடை = பூலங்கி சேவை உண்டு; ஒவ்வொரு வியாழக் கிழமையும் “பூலங்கி தரிசனமுலு“;
பூவால் நெய்த ஆடை = பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய -ன்னு அன்றே காட்டும் இளங்கோ)

செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

செங் கண், நெடியோன்! = சங்கத் தமிழ்க் கடவுள்! முல்லை நிலத் தொன்மம்;
திருமால் என்னும் அவன் = அவனே, வேங்கட மலையில் நின்ற வண்ணமே!

ஒரு பக்கம் கதிரவன் – மறு பக்கம்  நிலவு!  நடுவால கருமேகமாம்
அதே போல்…
ஒரு பக்கம் ஆழி(சக்கரம்) – மறு பக்கம் வெண் சங்கு! நடுவால கருத்த மாயோன்
– ன்னு உவமை காட்டும் இளங்கோ அடிகளின் தமிழ்ச் சுவை, சொல் அடர்த்திச் சுவை!


இளங்கோ மட்டுமல்லாது, முற்பட்ட எட்டுத் தொகையிலும்.. “வேங்கட மலை மேல் திருமால்”!

பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த,
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாற்,
கருவி மின்ன விரி இலங்கும் பொலம்பூண்,
அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!

வேங்கடத்தின் மேல் நிற்பது = நேமியும் வளையும்/ சக்கரமும் சங்கும்..
ஏந்திய கையான் என்றே காட்டும் தமிழ்த் தகைமை!

மாயோன் என்ற முல்லை நில நடுகல்…
பிற் சங்க காலத்தில் “பெருந்தெய்வம்” ஆகி விட்டாலும்…,

அந்த ஆயர்க் குடி வழக்கங்களே இன்னிக்கும் கைக்கொள்ளும் தொன்மம்!
அந்தணர்களுக்கு முதல் தரிசனம் இல்லை;
இன்றளவும்… ஆயர்-கோனாரே, கதவம் திறப்பித்து, முதல் காட்சி காணும் முன்னுரிமை!

வேங்கடேஸ்வரன், பாலாஜி போன்ற வடமொழிப் பெயர்களால், இன்று சூழ்ந்து நின்று Capital Clout ஆக்கி விட்டாலும்…
திருவேங்கடமுடையான், திருமலை-அப்பன், முல்லையின் மாயோன்,
மலை குனிய நின்றான், மாயோன் மேயக் காடுறைக் கடவுள்…

என்பதே சங்கத் தமிழும், ஆழ்வார்களும், “ஆசையால் பராவி” அழைத்த தமிழ்த் திருப்பெயர்கள்!

* சமயம் சாராச் செந்தமிழ்ச் செல்வர் இளங்கோ காட்டும்… வேங்கடவன் யாரு? = இவனே!
* எட்டுத் தொகைச் சங்கத் தமிழும் காட்டும்… வேங்கடவன் யாரு? = இவனே!
* இவனே = அவன் எவனே?

dosa 98/365


நீ எவனாயினும், எந்தையே, என் அப்பா…
உன் அடிக் கீழ், வாழ்க்கையில் வாடி விட்டேன்;
அன்றவளை உன் மார்பில் சேர்த்துக் கொண்டது போல்,
என்னையும் என் முருகவனிடம் சேர்ப்பித்து விடு!

Advertisements
Comments
12 Responses to “சிலப்பதிகாரம் – வேங்கட மலையில் நிற்பது யார்?”
 1. ranjani135 says:

  அருமையான விளக்கம்!
  தீபாவளி நன்றாகக் கொண்டாடினீர்களா? அம்மா கையால் சாப்பிட்டீர்களா?
  வாழ்த்துக்கள்!

  Like

 2. n_shekar says:

  குன்றுதோரேல்லாம் குமரன் என்ற நம்பிக்கையால் திருப்பதியில் இருப்பவரும் முருகனே என்று ஒரு கூற்று உண்டு. ஆனால் இளங்கோவடிகள் அன்றே சிலப்பதிகாரத்தில் திருமலையில் இருப்பவர் திருவேங்கடவனே என்று கூறிய பிறகு வேறு பேச்சு எதற்கு!

  மலை ஏறும பொழுது சிறிய அருவிகள் கொட்டும் அழகே அழகு. எத்தனை யுகங்களாக இந்த ஏழு மலைகள் இருந்திருக்கின்றன!

  //விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி// மலையின் மேலே விழும் பிரகாசமான சூரிய கதிர்களும், நிழலை ஒத்த குளிர்ந்த நிலவின் கதிர்களும் அதன் நடுவே கரிய மேகத்தை போன்ற திருமாலின் திரு உருவம் கண் முன்னே விரிகின்றன :-)

  திருவேங்கடவன் நல்ல கரிய நிறம் தான். திருமஞ்சனம் செய்யும் பொழுது காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மழ மழவென்று கரிய நிறத்தில் காட்சித் தந்தான் ஏழுமலையான். சங்கும் சக்கிரமும் தனியாக இருபுறமும் அவனை அலங்கரிக்கின்றன.

  பூலங்கி சேவை எவ்வளவு தொன்மையானது என்று இந்தப் பாடலின் மூலம் தெரிகிறது.

  //சமயம் சாராச் செந்தமிழ்ச் செல்வர் இளங்கோ காட்டும்… வேங்கடவன் = இவனே!
  எட்டுத் தொகைச் சங்கத் தமிழும் காட்டும்… வேங்கடவன் = இவனே!//

  திருப்பதி பெருமாளின் பெருமையைப் பாடும் அருமையானதொரு சங்கப் பாடல்.

  amas32

  Like

 3. வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது…
  கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்…
  வாழ்த்துகள் நண்பா…
  http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_6.html

  Like

 4. npgeetha says:

  தமிழ்த் தெய்வ மாயோனது கையில் இளங்கோ, எட்டுத்தொகை காலத்திலேயே ஆழியும், சக்கரமுமா?!

  அப்போதே பெருந்தெய்வம் ஆக்கப்பட்டுவிட்டானா?

  Like

 5. srini says:

  அகநானூறு 85- ல் வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை என்று ஒரு வரி வருகிறதே. முருகன் தானே வேலை வைத்து இருப்பான்.,

  Like

  • இக் கேள்விக்கு அழுவதா சிரிப்பதா?:)

   வேல் என்று சொல் வந்தாலே முருகனா? அக400 பாடலை முழுக்க வாசியுங்கள்;
   வேங்கடப் புல்லிநாடு/ மலைநாட்டை ஆண்ட “திரையன்”; அந்தக் குறு மன்னன், திரையன் கையில் உள்ள வேலைப் பேசுகிறது அகநானூறு 85

   வேல்= வீரர்கள், மன்னன், முல்லை ஆயர்கள்/ குறிஞ்சிக் குறவர்களின் ஆயுதம்!

   *வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி= ஆண்டாள் பாசுரம்
   *கூர்வேல் கொடிந்தொழிலன்= திருப்பாவை
   “வேல்” என்று வந்துவிட்டதாலேயே, ஆண்டாள் முருகனைப் பாடுகிறாளா என்ன?:)))

   திருக்குறள்: பிழைத்த வேல் ஏந்தல் இனிது= வேல்+ஏந்தல்.. முருகனை இனியவன் என்று பாடுகிறாரா வள்ளுவர்?:)))
   கான முயலெய்த அம்பினில், யானை பிழைத்த வேல்.. ஏந்தல் இனிது என்பது குறள்!
   அக் குறள்= முருகனைக் குறிக்காது; வேல் எ. சொல் வந்துவிட்டாலே, அது முருகன் அல்ல!:)

   மதமும், புராணங்களும்.. நம்மை அவ்வளவு கெடுத்து வைத்துள்ளன!
   எதை ஒன்றையும்= மதமாகவே பார்க்கும் பார்வை:)
   ———-

   சம்ஸ்கிருதம்/ புராணம் கலவாத் தமிழ் முருகன் = குறிஞ்சி நில ஆதிகுடித் தலைவன்! அவன் நினைவாக நடுகல் தெய்வம்!

   குறிஞ்சியின் கருப்பொருட்கள், முருகனுக்கும் ஆகி வருகிறது; அவ்வளவே!
   *வேல்= குறிஞ்சிக் குறவ ஆயுதம்
   *மயில்= குறிஞ்சிப் பறவை
   *காவடி= குறிஞ்சி/ மலையில்.. பாரம் தூக்கும் கருவி

   இப்படி இயற்கையான வாழ்வியல் மேல், மதம் ஏற்றிய புராணப் பொய்க் கதைகள்; அதை “வரலாறு” என்ற Rangeக்கு நம்பி, சங்கத் தமிழைச் சிதைக்காது இருப்போம்; வேண்டுகோள்!

   அகநானூறு 85 ஆம் பாடல்
   ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி,
   கன்றுபசி களைஇய, பைங்கண் யானை
   முற்றா மூங்கில் முளைதருபு, ஊட்டும்
   வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை;

   வேங்கட நாட்டை ஆண்ட திரையன், வெற்றி தரும் வேலை உடைய மன்னன்!
   அவன் காட்டில், முற்றாத மூங்கிலை/ பிஞ்சு மூங்கிலை, பசிக்கு ஊட்டி மகிழும் யானைகள்.. இதுவே பாடல்! இப் பாட்டில் முருகனும் இல்லை! வேங்கடத்து இறைவன்= முருகனும் இல்லை!:) இளங்கோவடிகள் வாழி!

   Like

   • srini says:

    நன்றி கே ஆர் எஸ் அவர்களே.
    நான் அந்த பாடலை படிக்கும் போதே அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் திரையன் என்னும் சொல் முருகனை தான் குறிக்கிறதா என்று சந்தேகம் எழுந்தது. எனவேதான் உங்களிடம் நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.

    நான் உங்கள் ப்ளாக்(Blog) கலை படித்து வருகிறேன். மிகவும் ரசித்து எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஏன் சமஸ்க்ருதத்தை வெறுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் பார்ப்பனர்களை வெறுப்பது போல தெரிகிறது. அந்த வெறுப்பின் காரணமாக சமஸ்க்ருதத்தை வெறுப்பது போல தெரிகிறது.

    நீங்கள் கடை சங்க காலத்தில்தான் புராண கதைகள் புகுத்தப்பட்டது என்கிறீர்கள். முதல் மற்றும் இடை சங்க காலத்து நூல்களில் இல்லையென கூறுகிறீர்கள். அப்படியானால் இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது. ஆரியர்கள் எனப்படும் பார்ப்பனர்கள் வந்தார்களா?

    Like

    • வணக்கம் ஸ்ரீநி
     ஒன்றன் திணித்தல் தீமைகளை பற்றி எழுதுவதாலேயே, அதை “வெறுக்கிறோம்” என்றாகி விடாது:)
     நீங்கள் இப்படிக் கேட்பதாலேயே, நீங்க சமஸ்கிருத/ பார்ப்பனீயத்தைக் காதலிக்கிறீங்களா? எ. கேட்டால் எப்படி இருக்கும்?

     சமஸ்கிருதம் நல்ல/ ஆனால் வழக்கிறந்த செம்மொழியே!
     அது எங்கு வளரணுமோ, அங்கு நல்லபடி வளர்ந்துக்கணும்! தமிழில் ஊடாடி, சிதைத்து, Parasite போல் உறிஞ்சி அல்ல!

     திரையன்= முருகன் அல்லன்!
     புல்லி நாட்டு மன்னவன்!
     தமிழில் பல திரையன்கள் உண்டு! இளந்திரையன்= பெரும்பாண் ஆற்றுப்படை! பொலம் பூண் திரையன்!
     எதுவும் முருகனைக் குறிக்காது:)

     முருகன், என் காதலனே ஆயினும்..
     அவன் இன்று வைக்கப்பட்டுள்ள சைவ சமயம் சார்ந்து, தமிழைச் சிதைத்து விட மாட்டேன்!
     தமிழ் > முருகன்; மனிதம் > தமிழ்!

     இடைச் சங்க காலம் – கடைச் சங்க காலம், இடையே என்ன நிகழ்ந்தது?
     பல் சமய வரவு, தமிழகத்துக்குள் எப்போது?
     https://dosa365.wordpress.com/2012/11/22/106/

     Like

     • srini says:

      ஒரு மாங்குடி கிழார் சொல்லிவிட்டார் என்பதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா

      நீங்கள் கடைச்சங்க காலத்தில் புராண கதைகள் புகுத்தப்பட்டது என்கிறீர்கள். 63 நாயன்மார்கள்/12 ஆழ்வார்கள் இவர்களுக்கெல்லாம் தெரியவில்லையா? இவர்களில் எத்தனை பேர் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள். ஏன் அவர்கள் சொல்லி இருக்கலாமே கடவுள் இல்லையென்று.

      நடுகல் வழிபாடுதான் தமிழர் பண்பாடு என்றும்,ஆதி குடிகளின் இனத்தலைமை தான் நடுகல் வழிபாடு என்றும் சொல்லி இருக்கலாமே. சிலை வழிபாடு தமிழர் பண்பாடு என்றும் சொல்லி இருக்கலாமே. இவர்களை என்ன அரசர் கொன்று விடவா போகிறார்.

      பார்ப்பனர்கள் தான் அரசர்கள் மூலமாக வட நெறியை திணித்தார்கள் என்றால் ஏன் இந்த அரசர்களுக்கு சுயபுத்தி இல்லையா? தமிழர் பண்பாடு இல்லை என்று எடுத்து சொல்ல ஆள் இல்லையா?

      தமிழ் அரசர்கள் அணை கட்டினார்கள், கோவில் கட்டினார்கள் என்று பெருமிதத்தோடு கூறிகொள்ளும் நாம் இந்த ஆலய வழிபாடு விஷயத்தில் மட்டும் என்னமோ இந்த அரசர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது போல் சொல்வது ஏன். கேட்டால் பார்பனர்கள் பெண்களை காட்டி அரசர்களை மயக்கினார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இது அரசர்களை கேவலபடுத்தும் செயல் இல்லையா?

      புத்தம்/சமணம் வந்தபோது தமிழ் மொழி சிதைக்கபடவில்லையாம். புத்தம் சமணர் தோன்றுவதற்கு முன்பே எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் வடசொல் கொண்டு செய்யுள் செய்யலாம் என்று உள்ளது. எனவே இதிலிருந்து தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதும்போது ஏற்கனவே அங்கே சமஸ்க்ருதம் இருந்துள்ளது என்பது தெரிகிறது.

      ஆனால் பிறகு தோன்றிய புத்தமும், சமணமும் இங்கே பரவ தொடங்கிய போதுதான் அவர்கள் பாலியை திணித்தார்கள், அதன் காரணமாகவே கிரந்தங்கள் ஏற்படுத்தப்பட்டது. இல்லையெனில் கிரந்தத்திற்கு என்ன தேவை வந்தது? சங்க கால நூல்களில் எங்கேயாவது சமஸ்க்ருதம் உள்ளதா?.

      உண்மையிலேயே இவ்விரு மதங்கள் வந்த பிறகுதான் மதம் சார்ந்த வாதங்கள்/சண்டைகள், மக்களிடையே பேதங்கள் தோன்றிற்று.

      பார்ப்பனர் ஞானசம்பந்தர் சமணர்களை எதிர்த்து தமிழில் தான் பதிகம் பாடினார். இறந்து போன பெண்ணை தமிழில் பதிகம் பாடித்தான் உயிர்பித்தார். அவர் என்ன சமஸ்க்ருத்ததிலா பாடினார்? இல்லை சமஸ்க்ருதத்தை திணித்தாரா?

      சம்ஸ்க்ருதமும், தமிழும் இந்த நாட்டில் புழங்கி வரும் மொழிகள். தமிழ் பேச்சு வழக்கு மொழி, சமஸ்க்ருதம் நூல்கள் சூத்திரங்கள் எழுத பயன்படுத்தப்பட்ட மொழி. பிறகு தமிழ் இலக்கணம் எழுதப்பட்ட பிறகு தெய்வீக காரியங்களுக்கு மட்டும் சமஸ்க்ருதத்தை வைத்துக் கொண்டார்கள்.இந்த இலக்கணம் செய்யப்பட்ட தமிழ் மொழி புழங்கியது வட வேங்கடம் முதல் தென் குமரி வரை. இது புத்தம், சமணம் இங்கே பரவ தொடங்கியபோது அவர்கள் பாலியை திணித்ததன் விளைவாக சிதைந்தது.

      Like

      • பொய் சொல்வதையும் பொருந்தச் சொல்ல வேண்டும் சம்ஸ்கிருத ஸ்ரீநி:)

       1. ஒரு மாங்குடிக் கிழார் மட்டும் சொல்லவில்லை..
       பலப்பல கவிஞர்கள், சங்கத் தமிழில், புதிதாய் வந்திறங்கிய வேத மதத்தின் தீமைகளைச் சொல்லி இருக்கிறார்கள்:)
       *நல்லந்துவனார்
       *இளவெயினி
       *ஓரம்போகியார்
       *காக்கைப் பாடினியார்
       *சீத்தலைச் சாத்தனார்
       *கவுந்தி அடிகள் மூலமாய் இளங்கோவடிகள் (அன்று நடந்த மாற்றங்களை மறைக்காது பதிவு செய்ததால், வேத மதமும் பதிவு செய்தார் இளங்கோ; ஆனால் பீடு அன்று அதை மறுத்த கண்ணகி கூற்றையும் சேர்த்தே தான் பதிவு செய்வார்; உங்கள் வசதிக்கு இளங்கோவை இழுக்க முடியாது:)
       *etc etc..
       —–

       2. /தொல்காப்பியத்தில் வடசொல் கொண்டு செய்யுள் செய்யலாம் என்று உள்ளது/ இதுக்குப் பேரு தான் திருட்டு வேலை:)

       தொல்காப்பியம், வடசொல் கொண்டு செய்யுள் செய்யச் சொல்லவில்லை!
       ஆனா, உங்களையும் அறியாமல் ஓர் உண்மை ஒத்துக்கிட்டீங்க:)= செய்யணும் இல்லை! “செய்யலாம்”

       எல்லாவற்றுக்கும் இப்படிச் செய்.. இப்படிச் செய்.. என வகுத்துக் கொண்டே வரும் தொல்காப்பியர்,
       செய் என்றே சொல்லாமல், “செய்யலாம்” என்று சொன்னது ஏனோ?:)

       ஆனா உண்மையில், அவர் “செய்யலாம்”-ன்னு சொல்லவே இல்லை!

       வேதநெறி வரவால், அரசியல்-மத மாற்றங்கள் நிகழத் “துவங்கிய” காலம்!
       வருமுன் அறிபவராக..
       முழுக்க மாறும்/நாறும் முன்னமேயே, தமிழுக்கு அணை கட்டி வைத்த தொல்காப்பியர்!

       “கலாச்சார” பரிமாற்றம் எ. பேரில், தமிழ் வெளிக்குள் நுழையும் புராண/புருடா வடசொல்லையெல்லாம் பாத்தி கட்டித் தனியாகத் தேக்கி வைத்தார்!

       அதனால் தான்
       *வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ= ஒதுக்கு என்றார்!
       *சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்.. சம்ஸ்கிருதத்துக்கு இயைஞ்சிக் குடுக்காது தமிழ்!
       மந்த்ரமா? மந்திரம் எ. சொல்லைச் சிதைத்து விடு என்றார்!

       நாளொரு பின்ன, எது தமிழ்? எது வடமொழி என்பதற்கு, இந்தச் சிதைப்பு Data Reconciliation செய்ய உதவும்!
       என்ற தொல்காப்பிய அறிவியல்! Identification & Traceability Techniques..

       நீங்க என்ன சமர்த்து/ சாமார்த்தியம் பண்ணாலும், தொல்காப்பியத்தில் மட்டும் உங்கள் புராண புருடா நுழைக்க முடியாது:)
       தொல்காப்பிய மூலத்தின் சிதைப்பு/ பிற்சேர்க்கை மிகமிகக் குறைவே!
       —–

       3. அடேங்கப்பா.. பாளி மொழி மேல், தோசை திருப்பிட்டேளே?:)

       பாளி/ சமண நூல்களின் மொழி!
       அதைச் சமணர்கள்= தமிழில் திணிக்கவே இல்லை, உங்கள் சம்ஸ்கிருத Parasite போல!
       ஸ்ரீ புராணம் போன்ற அவர்களின் தனித்த சமய நூலில் மட்டும் தான் பாளி இருக்குமே தவிர,
       சமணத் தமிழ் இலக்கியமான சிலம்பிலோ, சிந்தாமணியிலோ, பெளத்த மணிமேகலையிலோ.. எதிலும் பாளித் திணிப்பு இருக்காது:)

       4. கிரந்தம் கொண்டாந்தது= நீங்கோ:) சமணம் அல்ல!
       பல்லவ கிரந்தம் வந்த 5-6th CE.. விஷ்ணு கோபன், சிம்ம விஷ்ணு= இவாள்லாம் சமணர்களா? ஹிந்துக்களா?:)

       கிரந்தம் கொண்டாந்ததே.. சம்ஸ்கிருத Parasiteஐ, தமிழில் ஒட்ட வைக்கத் தானே?:)
       *பல்லவன் மூலமாய், கிரந்தம் அரங்கேற்றிய வேத வித்வத் சிகாமணிகள்!
       *சோழன் காலத்தில், பொதுமக்கள் அறிவிப்புக் கல்வெட்டில் கூட, கிரந்தம் கொடி கட்டிப் பறந்தது!
       *பிற்பாடு திருமலை நாயக்கர் காலத்தில்.. Cement போட்டு உட்கார்ந்துண்டது:)

       அதிகாரம் மிக்க அரசர்கள்= உங்களின் Target
       அவர்களுக்கோ அவர்களின் சுயநலம்= Target
       Sentiment தூண்டி விட்டா, வைரவதி நெருப்பு நதியில் உன் பித்ருக்கள் தண்ணி தண்ணி-ன்னு தாகத்துக்குக் கத்துறா-ன்னா, தானா விழுவான்:)
       மனோ பயம்= அதானே உங்களின் Senti ஆயுதம்?

       ஜ்யோதிஷ்டோம யாகம்/ ஹோமம்.. அப்படி இப்படி-ன்னு Type Typeஆக் கிளப்பி விட்டு, அரசனை வீழ வைக்க ஒங்களுக்குத் தெரியாதா?:)
       பாவ கார்யங்களே செய்தாலும் பரிகாரம் உண்டு என்ற technique, இன்று சசிகலா வரை பரவி நிக்குதே?:)

       மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி!
       அதிகாரத்தில் முதலில் கை வைச்சேள்
       அப்பறம், மொத்த தமிழ் மரபிலும் கை வைச்சேள்:)
       —–

       5. ஆழ்வார்/ நாயன்மார்கள், பக்தி இயக்கம் பாடி விட்டதாலேயே, ஒங்க வேதநெறி.. தமிழில் கோலோச்சி உட்கார்ந்துற முடியாது:)

       கால நிலைமை மாறி விட்டதால்.. அதே காலத்துச் சமயவியலில், அவர்கள் பாடினார்களேயன்றி..
       அவங்க பாடிய புராணச் செய்தி கலந்த பாடல்களுக்கு, ஒட்டு மொத்த தமிழையும் வித்துற முடியாது:)

       அப்பவும் ஆழ்வார்கள்.. நப்பின்னை தான் பாடுவரே அன்றி, ஒங்க பாமா/ருக்மிணி அல்ல:)))
       ஏன்னா.. நீங்க தமிழ்க்குடித் தெய்வங்களான திருமால்/முருகன் மேலேயே, ஒங்க சுப்ரமண்ய/ விஷ்ணுவை ஏத்தியதால்.. அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது!

       தமிழினம்/ பொதுமக்கள், வேதக் கோட்பாடு என்றுமே அறிந்ததில்லை! அது உங்களோடு மட்டுமே:)
       இங்கிட்டு எவனும், வேதக் கருத்தோ/ பகவத் கீதா சுலோகமோ கொண்டு இறை வழிபட மாட்டான்!

       “மத நூல்”, தமிழனிடம் செல்லாது!

       அவனிடம் செல்லுபடியாவது..
       *அவன் குடி= அதை ஜாதி ஆக்கினேள்!
       *அவன் குடித் தெய்வம்: மாயோன்/ முருகன்= விஷ்ணு/ சுப்ரமண்யன் ஆக்கினேள்

       ஒங்க வேதக் கடவுள் சோமன்/ மித்ரன் எல்லாம் Divorce பண்ணிட்டு,
       சிறுசா இருந்த ருத்ர/ ஆதித்ய/ விஷ்ணுக்களை,
       பெரிய Balloonஆய் ஊதிவிட்டு
       தமிழ்த் தொன்மம் மேலேயே, அதுகளையும் ஏற்றினீர்கள்.. தமிழன் பக்தி மாயையில் வீழ்ந்தான்!

       மற்றபடி.. இன்னிக்கும் அத்தனை தமிழக ஹிந்துக்களுக்கு= ஜாதி தான் திரட்டலாய் இருக்கிறதே ஒழிய,
       ஒங்களால் மதத்தால் “ஒன்னு திரட்ட” முடியுதா ஹிந்துக்களை?:)

       அன்னிக்கி.. உங்க வசதிக்கு, ஜாதி விதை தூவி பிரிச்சீங்கோ!
       இன்னிக்கி.. உங்க வசதிக்கு, மதமாய்த் ஒன்னு சேர்க்கப் பாக்குறீங்கோ!
       ஆனா முடியலை:) கர்ம பலன் சும்மா விடுமா?
       —–

       6. /பார்ப்பனர் ஞானசம்பந்தர் சமணர்களை எதிர்த்து தமிழில் தான் பதிகம் பாடினார்/
       வேற எப்பிடிப் பரப்ப முடியும்? சம்ஸ்கிருதத்தில் பாடினா, இங்கிட்டு ஒரு பய சீந்த மாட்டானே?:)

       *சமணமும், தமிழில் தான் பாடியது, நீங்களும் தமிழில் தான் பாடினேள்!
       *சமணமும் வடநெறியே! நீங்களும் வடநெறியே!
       *ஒரே வேறுபாடு: சமணம், தமிழ்த் தொன்மம் சிதைக்கலை! நீங்கோ சிதைச்சேள்; முருகன் மேல் சுப்ரமண்யம் ஏற்றினேள்:)

       /இறந்து போன பெண்ணை தமிழில் பதிகம் பாடித்தான் உயிர்பித்தார்/

       இந்தப் புருடாவை நம்பிய காலமெல்லாம் மலையேறிப் போச்சி:)
       ஸ்வாமி என்ற பெயரில்.. புதுசா புதுசா புராண புருடாக்கள்!

       செத்தவ, என்னிக்கும் உசுரோட வர மாட்டா!:) அதான் அறிவியல்!
       அது ஹிந்துவோ/ இஸ்லாமோ/ கிறிஸ்துவமோ.. வேற எதுவாயினும்!

       சம்பந்தன், உசுரோட, செத்த பொண்ணைக் கொண்டாந்தானா?
       அதுவும், 8 வயசில் செத்துப் போய், அஸ்திக் குடத்தில் நிரப்பிய சாம்பலு..
       16 வயசாய் எழுந்து வந்துச்சாம்..
       Puberty பெற்று, சம்பந்தப் புள்ளையாண்டானைக் கல்யாணம் பண்ணிக்கும் வயசு வரை சாம்பலுக்கு, வயசு கூடிய கதை:)))

       வேற எங்காச்சும், பஜனை மடத்தில் போய்ச் சொல்லுங்கோ! இது சங்கத் தமிழ்! இயற்கையோடு இயைந்த தமிழ்!

       Liked by 1 person

      • இனி, இந்தப் பதிவுக்கு வராதீர்கள்.. தரவுகள் இல்லாத பொய் மூட்டைகளுடன்!
       திரையன்= சுப்ரமண்யன் என்ற உங்கள் ஆரம்பமே தரவு இன்மை தான்:)

       உங்கள் அபிலாஷைகள், உங்களோடு!
       ஆனால், அவை தமிழின் மேல் அல்ல!

       ஸத்யம் ஏவ ஜயதே!
       ஸத்யஸ்ய ஸத்யம், ஸத்யாத்மகம்.. த்வாம் சரணம் பிரபந்ந!

       இனி, உங்கள் பின்னூட்டங்களை முடக்குவேன் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! நன்றி!

       Liked by 1 person

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: