துப்பாக்கி தூஉம் விஜய்…

தீபாவளிக்கு முன்னர், சற்றே சுருக்கப் பதிவு:)
(கிராமத்தில் இருந்துக்கிட்டு, இவ்ளோ தான் முடியும், Net Connection;
எது எப்படியோ, விஜய் படமும் பாத்தாகணும்-ல்ல? என்ன சொல்றீங்க? :))

நூல்: திருக்குறள்
கவிஞர்: திருவள்ளுவர்
(அறத்துப் பால் – வான் சிறப்பு: குறள் 12)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


காபி உறிஞ்சல்:

(துப்பு = பொருள்)
துப்பு இல்லாதவன், துப்பு துலக்குதல்
-ன்னு இன்னிக்கும் பல Context-இல் இச் செந்தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தறோம்!

துப்பு இஸ்தாவா? என்பது தான் டப்பு இஸ்தாவா -ன்னு ஆச்சா? யாம் அறியோம்:))
ஆனா துப்பு-ன்னா பொருள்;
செல்வமோ, அறிவோ, உணவோ… ஒரு சிறப்பான பொருள்!

துப்பார்க்கு = பொருளை உட்கொள்வார்க்கு (உண்பவர்க்கு)
துப்பாய துப்பாக்கி = தக்க பொருளாக, உணவுப் பொருளை விளைவித்து…

துப்பார்க்கு = பொருளை உட்கொள்வார்க்கு
துப்பாய = தானே ஒரு உணவுப் பொருளாகவும்
தூஉம் மழை = மழை தூவுகிறது!

மழை = உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு மட்டுமில்லாமல்… தானே ஒரு உணவாயும் ஆகிறது (குடிக்க நீர் எனும் உணவாய்)
உணவு = உண்பன, தின்பன, பருகுவன, நக்குவன என்று நால் வகை விளைபொருட்கள்,

* உண்பன = சோறும் களியுமாகச் சமைக்கப் பெறுவன;
* தின்பன = காய்கறிகள்;
* பருகுவன = பால், பதனீர் etc;
* நக்குவன = தேன் etc;

மழை = மேற்சொன்ன அனைத்தையும் விளைவிக்க உதவும் + தானும் நீராக உண்ணப்படும்;
துப்பு, துப்பு, துப்பு, துப்பு, துப்பு = அதான், ஐந்து முறை சொன்னார் =  1 Water + 4 விளைபொருளைக் காட்ட!

சொற் பொருள் பின்வரு நிலையணி = அதே சொல், அதே பொருளில் மீண்டும் மீண்டும் வருவது!
தூஉம் = இசைநிறை அளபெடை! இசைக்காக அளபு எடுக்கும் “உ” என்னும் எழுத்து;

முக்கியமா, துப்பாக்கி என்னும் விஜய் படம் இன்று வெளியாவதற்கும்…
இந்தப் பதிவு இட்டமைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லா:))
Iam(not)Karki:) அனைவருக்கும் இனிய விழாக்கால/ தீபாவளி வாழ்த்துக்கள்!

dosa 96/365

Advertisements
Comments
7 Responses to “துப்பாக்கி தூஉம் விஜய்…”
  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

    Like

  2. ranjani135 says:

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    Like

  3. amas32 says:

    வள்ளுவரின் குறட்பாவிற்கு விஜயின் துப்பாக்கி ஸ்டில்! :-)

    வளமான வாழ்க்கைக்கு ஆதாரமே மழை தான். நம் புராணங்களின் அடிப்படையில் பார்த்தால் ஆத்மாவின் பிறப்பும் மழையோடு சம்பந்தப் படுத்தப் பட்டிருக்கிறது. அந்தந்த பருவ காலத்தில் மழை பொழிந்து பயிர் செழிப்பாக வளர உதவ வேண்டும். அது பொய்த்துப் போனால் பஞ்சம் பட்டினி தான். மழையே ஒரு அரும்பெரும் உணவு. நம் உடலே 60% நீரால் ஆனது. அதனால் நீரின்றி வாழ்க்கை அமையாது.

    amas32

    Like

  4. ஊரில் இருக்கீங்க? பண்டிகை அதுவுமா நண்பர்களையும், உறவினர்களையும் பார்க்க கொடுத்து வெச்சிருக்கணும். மகிழ்ச்சியா இருங்க.

    உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: