Makeup – பெண் அழகாவது எப்படி?

அவ Makeup பண்ணிக்காமயே அழகா இருக்கா? எப்படி?

என்னென்னமோ Makeup சொல்லுறாங்களே – முகத்துக்கு மட்டுமில்லாம…
கை/கால் – இவற்றுக்குக் கூட ஒப்பனையா?
Manicure, Pedicure, Paraffin Wax, Gel Color, Nail Art – இன்னும் என்னென்னமோ;

இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் -ன்னு கேட்டுறாதீக; Me Know Only சங்கத் தமிழ்:)


நூல்: ஐங்குறுநூறு (229)
கவிஞர்: கபிலர்
திணை: குறிஞ்சி

அம்ம வாழி, தோழி! நாம் அழப்
பல் நாள் பிரிந்த அறனிலாளன்
வந்தனனோ, மற்று இரவில்?
பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே!

சூழல்:
மனம் ரெண்டும் கூடல் – ஆழ்ந்த உள்ள உறவு; கள்ள உறவு அல்ல!
ஆனா, கொஞ்ச நாளா, அவன் – அவள் பிரிவு;
வண்டு போல் ஓடிட்டானா? இல்லை, மீன் போல், பொருள் தேடக் கடலாழம் சென்றானா தெரியல!

இவளுக்கோ பசலை; மனம் இறப்பு!
மனசு செத்துப் போய், மேனி அழகு குலைந்து இருக்கும் இவ…,

திடீர்-ன்னு அழகு மின்னக் காட்சி அளிக்குறா – ஆயிரம் அனுஷ்காவா!
ஆகா, இது எப்படிச் சாத்தியம்? -ன்னு தோழி வினவ… அதான் இந்தப் பாட்டு!


காபி உறிஞ்சல்:

அம்ம வாழி, தோழி! நாம் அழப்
பல் நாள் பிரிந்த அறனிலாளன்

என் தோழியான தலைவியே, நீ வாழி!
என்னடீ ஒரே மாற்றமா – மாயமா இருக்கு? எப்பமே கண்ணீர் தவழும் உன் மேனியில், இன்னிக்கு பன்னீர் தவழுதே!
எத்தனை இரவு அழுதிருப்போம்? நீ அழ… அதனால் நானும் அழ…
உன்னைப் பல நாள் பிரிந்து போன அறமே இல்லாதவன்… (சரி சரி, முறைக்காத, நான் அவனைத் திட்டலை போதுமா?)

வந்தனனோ, மற்று இரவில்?
பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே!

அவன் வந்தானோ, நேற்று இரவில்?
உடம்பெல்லாம் பூரிச்சிப் போய் இருக்கே… என்னடீ மாயம் பண்ணான்?
பழுப்பான பசலை போய், பொன் மேனி உருகுதே -ன்னு உன் நெற்றி சொல்லுதே!

பொன் போல் தகதக -ன்னு அழகு; பொய்யான ஒப்பனை மாதிரி தெரியலையே;
மெய்யான அழகு = மெய் கூடியதாலா?
அவன் தந்த ஈரமா, உன் ஈர்ப்பு? அவன் பெய்த மழைக்கோ, உன் மேனி மின்னல்? ஏய்ய்ய் சொல்லுடீ!

dosa 95/365

Advertisements
Comments
5 Responses to “Makeup – பெண் அழகாவது எப்படி?”
 1. vellakaran says:

  கம்பா.. இந்த மனுஷன் கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிரு.. இல்லை என்றால் நீ சில்க் சிமிதா வின் முதல் ரசிகன் என்ற அடையாளத்துள் அடைக்கப்படுவாய்!! சரி.. suspense ஆ இருக்கே.. அனுஷ்காவின் பதிலுரை என்னவோ??

  Like

 2. amas32 says:

  எனக்கும் தெரிந்து கொள்ள வேண்டும், மேனியின் திடீர் அழகின் இரகசியம் :-)

  பசலை நோய் வந்துவிடும் அளவு தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவியிடம் ஓர் இரவில் மிகப் பெரிய மாற்றம் வந்தது எப்படி?

  அவன் வரப் போகிறான் என்ற தகவலா? அல்லது அவனே வந்து அவள் மனத் துயரத்தையும் உடல் துயரத்தையும் தீர்த்து வைத்து விட்டானா?

  ஆனால் உண்மையிலேயே ஒரு பெண்ணின் அழகு அவள் மன மகிழ்ச்சியில் தான் அடங்கி உள்ளது. அவள் ஆசைப் படுபவனுடன் சேர்ந்து இருக்கும் பொழுது ஒரு ஒப்பனையும் இல்லாதும், முகம் அத்தனை பொலிவுடன் காணப்படும்!

  amas32

  Like

 3. vellakaran says:

  அட.. எவ்வளவு பெரிய தவற பண்ணிபுட்டேன்.. நல்லவேள.. சில்க் வாழ்க.. :)
  @amas32 : அம்மா.. நான் இன்னில இருந்து வெளியூரு!! :) btw, ரொம்ப கேவலமான தப்பு நான் செஞ்சது.. will be more careful.. நன்றிம்மா..

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: