ஒரு Asst Director க்குத் தெரிஞ்சது, கம்பனுக்குத் தெரியாதா?

இராமன் அவதரிக்கப் போகும் நாட்டை வருணிக்கின்றான் கம்பன்;
உறங்கும் உறங்கும்” -ன்னு சொல்லைப் போடுறான் கம்பன் = தூங்கு மூஞ்சி வர்ணனை:)

நீங்களே யோசிச்சிப் பாருங்க; Hero ஊரைத் துவக்கக் காட்சியில் எப்பிடிக் காட்டுவாங்க?
எல்லாரும் தூங்கி வழியுறா மாதிரிக் காட்டி.. இந்த ஊருச் சிங்கம் தான் Police Inspector சூர்யா -ன்னு காட்டினா? சிங்கம் சிங்கம், Fuse போன சிங்கம்:))

ஒரு Asst Director க்குத் தெரிஞ்சது, கம்பனுக்குத் தெரியாதா?
என்னய்யா இது, கம்ப ராமாயணம் இப்பிடித் தூங்கி வழிஞ்சித் துவங்குது?:)

எதுக்கு, “உறங்கும் உறங்கும்” -ன்னு சொல்லைப் போடுறான் கம்பன்? சொல்லுங்க பார்ப்போம்!
நீரிடை வைகும் சங்கம், தாமரை வைகும் செய்யாள் -ன்னு போட்டிருக்கலாமே? அதே சந்தம் தானே! Why Kamba Why?


நீர் இடை உறங்கும் சங்கம்;
நிழல் இடை உறங்கும் மேதி;
தார் இடை உறங்கும் வண்டு;
தாமரை உறங்கும் செய்யாள்;
தூர் இடை உறங்கும் ஆமை;
துறை இடை உறங்கும் இப்பி;
போர் இடை உறங்கும் அன்னம்;
பொழில் இடை உறங்கும் தோகை

பால காண்டம் – நாட்டுப் படலம் (6)
கம்ப ராமாயணத்தில்… முதலில் ஆற்றுப் படலம்; அப்பறமே நாட்டுப் படலம்; நீர் இன்றி அமையாது உலகு!


காபி உறிஞ்சல்:

நீர் இடை உறங்கும் சங்கம் = தண்ணியில் தூங்கும் சங்கு
நிழல் இடை உறங்கும் மேதி = நிழலில் தூங்கும் எருமை

இது கடல் சங்கு அல்ல! ஆற்றில் அடிக்கும் சங்கு!
சங்கு, நீருக்கு அடியில் கிடக்கும் போது, ஒருவன் ஊதாமல், தானே ஒலி எழுப்பும்; நீர் படும் வேகத்தைப் பொறுத்து, அந்த மெல்லிய ஒலி, உம் உம்  என்னும் குறட்டை போல:)

மேதி = எருமை; எருமைகள் அசைவதே தூங்குறது போல சொகுசாத் தான் இருக்கும்! அதுங்க நிசமாலுமே தூங்கினா?:)

தார் இடை உறங்கும் வண்டு = பூ-மாலையில் உறங்கும் வண்டு
தாமரை உறங்கும் செய்யாள் = தாமரையில் தூங்கும் திருமகள்

ஆகா!!! திருமகளைத் தூங்கு மூஞ்சி -ன்னு சொல்லுறானே கம்பன்; இவனைக் கேட்பார் இல்லையா?:)
பொதுவா, இவ புருசனைத் தான் தூங்குறா மாதிரிக் காட்டுவாங்க; அரி துயில் – அறி துயில்!

பொண்டாட்டி-புருசன் ன்னு ரெண்டு பேருமே தூங்கிட்டு இருந்தா? வெளங்கிரும் குடும்பம்:)
ஏன்டா முருகா, போயும் போயும் இவுங்க குடும்பத்துல தானா நீயி பொண்ணு எடுத்த?:)

தூர் இடை உறங்கும் ஆமை = சேற்றில் தூங்கும் ஆமைகள்
துறை இடை உறங்கும் இப்பி = ஆற்றுத் துறையில் உறங்கும் சிப்பிகள்

சேற்றில் தான் ஆமைகள் அதிகம் இருக்கும் = பாதி நீர், பாதி மண் அல்லவா?
தூர் = சேறு; கிணற்றில் தூர் வாருதல் -ன்னு சொல்லுறோம்-ல்ல? சேற்றை வாரி எடுத்தல்;

போர் இடை உறங்கும் அன்னம் = வைக்கோற் போரிலே வயல் அன்னங்கள் தூங்குகின்றன
பொழில் இடை உறங்கும் தோகை = சோலையில் மயில்கள் தூங்குகின்றன!

இப்படியாக…
எல்லாரும் தூங்கும் ஊரிலே, இராகவன் அவதாரம் செய்கின்றான்!
= Super-O-Super! கம்பன் கவியே கவி:))

Can someone explain? Me busy…
அம்மா கூட உட்கார்ந்து அதிரசம் தட்டணும்; நாளிக்கி தீபாவளி/ எங்களுக்கு நோன்பு:)

dosa 94/365 kamban 14/52

Advertisements
Comments
5 Responses to “ஒரு Asst Director க்குத் தெரிஞ்சது, கம்பனுக்குத் தெரியாதா?”
 1. amas32 says:

  உறங்குதல் என்றால் தூங்குதல் அல்ல. அதனின் இருப்பிடம் அல்லது தங்கும் இடம் என்ற பொருளில் வருகிறது என்று நினைக்கிறேன்.

  நல்ல வளமோடும் செழிப்போடும் உள்ள திருநாட்டில் இராமன் அவதரிக்கிறான் .

  வண்டிலிருந்து எருமை வரை, மயிலில் இருந்து திருமகள் வரை அனைவரும் ஆனந்தமாக இருக்கிறார்கள்!

  சரியான விளக்கம் என்ன? please enlighten :-)

  amas32

  Like

 2. உறங்குதல் என்பதற்கு உறைதல் அதாவது வாசம் செய்தல் என்று பொருள் கொண்டால் சரியாக இருக்கும் வசிப்பிடம்,உறைவிடம் என்றுதான் அவர் எழுதியிருப்பார் ………

  ரவி உங்கள் தளம் வலைசரம் மூலம் அறிமுகம் தமிழை இவ்வளவு எளிமையாக சுவை குறையாமல் சுருக்கமாக கொடுக்கும் உங்கள் திறன் கண்டு வியக்கிறேன் வாழ்க உன் பணி

  Like

Trackbacks
Check out what others are saying...
 1. […] ஒரு துணை இயக்குனருக்குத் தெரிஞ்ச விஷ… […]

  LikeLeave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: