வள்ளுவன் (எ) ஆணாதிக்கவாதி?:)

முற்பதிவில் சிலப்பதிகார முருகனைப் பாத்தீங்க-ல்ல? அது வரைக்குமே scheduled…
விமானப் பயணத்தில் இருந்தேன்; அதனால் கடந்த 2 பதிவுகள் பிந்தின; ஆனால் இதோ முந்தின:)

திருக்குறளில், இந்தவொரு அதிகாரத்தின் பேரு, மிகவும் கவர்ச்சி மிக்கது = வாழ்க்கைத் துணை நலம்
* வாழ்க்கைத் துணை (எ) முக்கியமான நலமா?
* வாழ்க்கையில், (பல நலங்கள் போல்), துணை (எ) நலமா?

நீங்களே யோசிச்சிச் சொல்லுங்க:)

இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை? (53)

தற்காத்துத், தற்கொண்டாற் பேணித், தகைசான்ற
சொற்காத்துச், சோர்விலாள் பெண் (56)


காபி உறிஞ்சல்:

இல்லதென், இல்லவள் மாண்பானால்?
= மனைவி பண்பு (மாண்பு) உடையவளாய் இருந்தால், வாழ்க்கையில் இல்லாதது என்ன?
உள்ளதென், இல்லவள் மாணாக் கடை?
= அவள் பண்பு (மாண்பு) இல்லாதவளாய் இருந்தால், வாழ்க்கையில் இருப்பது என்ன?

பண்பு எல்லாருக்கும் தானே பொது?
ஏன், இங்கு மனைவிக்கு மட்டும் சிறப்பாக எடுத்துக் காட்ட வேண்டும்?
அப்போ கணவன்களுக்கு “பண்பு” தேவை இல்லீயா?
பெண்ணியவாதிகள், வள்ளுவனை ஒரு பிடி பிடிக்க ஏதுவாகும் குறள் இது!:)

ஆனா வள்ளுவன், இங்கே பெண்ணியம் தான் பேசுகிறான்!
* “தற்காத்து” = முதலில் ஒரு பெண், தன்னைத் தான் காத்துக் கொள்ளணும்,
* “தற்கொண்டான்” = அப்பறம் தான் புருசன்…

புராணங்கள் இப்படிச் சொல்லுமா? புருசன் ’அந்த’ வீட்டுக்குப் போக ஆசைப்பட்டாலும் அழைச்சிட்டுப் போவதை அல்லவா சிலாகித்துப் பேசும்?
ஆனா, தமிழ் மறை அப்படியல்ல! “பெண்ணே, முதலில் உன்னைத் தற்காத்துக் கொள்” -ன்னு முகத்தில் அறைஞ்சாப் போலச் சொல்லும் வள்ளுவனா ஆணாதிக்கவாதி?

“மாண்பு” – க்கு நமக்குச் சரியாப் பொருள் தெரியல; அதனால் நாம நினைக்கும் பொருளை, அது மேல ஏத்திட்டு, வள்ளுவனைத் திட்டுறோம்:) = இல்லது என், இல்லவள், “மாண்பு” ஆனால்?
மாண்பு = பண்பு -ன்னு, சில உரையாசிரியர்கள், தாங்களா எடுத்துக்கிட்டுப், பொருள் சொல்லீட்டாய்ங்க:) அதுக்குத் தான் மூலப் பாடலையே நேரா வாசிக்கணும்-ங்கிறது!

மாள் = மாண்;
மாட்சி -ன்னும் பொருள்/ அழிவு -ன்னும் பொருள்! (மாண்பு மிகு, மாண்டு போ)
காலத்தினால் செய்த உதவி = ஞாலத்தின் “மாணப்” பெரிது
எது மிகவும் பெரிது? = ஒருவன் அழிவில் இருக்கும் போது உதவலே, மிகவும் பெரிது;

அப்படியான “மாண்பு” மிக்கவள் மனைவி; அழிவில் உதவுபவள்!
மாள்-மாண் என்னும் தமிழ் வேர்ச்சொல் ஆழம் மிக்கது;
மாண்பு = வெறுமனே பெருமை அல்ல! அழிவிலும் அழிவில்லாப் பெருமை! அதுவே மாள்பு-மாண்பு


இப்போ குறளை வாசிங்க:

உள்ளதென், இல்லவள் மாணாக் கடை? = மனைவி, மாண்பு காட்டா விட்டால், அழிவில் உதவா விட்டால், ஒனக்கு ஒன்னுமே இல்ல! உள்ளது என்(ன)?
இதான், அந்தக் குறளின் நேரடியான கருத்து! இல்லதென், இல்லவள் மாண்பானால்?

ஆனா ஏன், பெண்ணை மட்டும் குறித்துக் காட்ட வேணும்? பொதுவா வாழ்க்கைத் துணை -ன்னு காட்டலாமே?

ஒரு Oppice-இன் சூழலைச் சொல்லும் போது, அதன் Boss-ஐ முன்னிறுத்தித் தானே பேசுறோம்?
Getting a good manager boosts your career, right? Same here!
அவரு சரியா இல்லீன்னா, Team-இல் எத்தனை திறமை இருந்தாலும், வெற்றி/பெருமை என்பது மூச்சு வாங்கும்;

Whoz the Boss? = She!
Why? = bcos, the boss, integrates all talents & mixes them together
தனித்தனி  ஆளுமைகளை ஒருங்கிணைத்து நடத்துபவள்; அதனால் அவளே மேலாளர் = “மாண்பு” ஆளர்!


A Boss has to save himself 1st, from Office Politics! Then only he will survive, to showcase his team!

* தற் காத்து = முதலில் பெண் தன்னைக் காத்துக் கொள்ளணும்
* தற் கொண்டாற் பேணித் = தன் குழுவைத் தாங்கிப் பிடிக்க…
* தகை சான்ற சொற் காத்துச் = புகழ் பெறும் நற் பெயரைக் காத்து முன்னேற

சோர்விலாள் பெண் =  எப்போதும் குறிக்கோளில் உறுதி!
Not Lazy Geek, But Lady Geek!

அலுவலகச் சூழலில் எண்ணிப் பாருங்கள் இந்தக் குறளை;
ஒங்களுக்கே புரீஞ்சீரும், வள்ளுவன் ஆணாதிக்கவாதி அல்ல என்று:)

வள்ளுவம் பொது மறை! தமிழ் மறை! – புராண புருடாண மறை அல்ல!
“மனு தர்மம்” போல், ஒரு குலத்துக்கு ஒரு நீதி, அதனிடம் கிடையாது;
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் – ஆணோ, பெண்ணோ!

வள்ளுவர் செய் திருக்குறளை மறு அற நன்கு உணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மனு ஆதி? ஒரு குலத்துக்கு ஒரு நீதி??

dosa 93/365

Advertisements
Comments
2 Responses to “வள்ளுவன் (எ) ஆணாதிக்கவாதி?:)”
 1. தலைப்பைப் பார்த்து ஒரு நிமிடம் திடுக்கிட்டேன்… விளக்கத்திற்கு நன்றி….

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

  Like

 2. amas32 says:

  பானை பிடித்தவள் பாக்கியசாலி! அதாவது இல்லத்தரசியின் திறமையினாலேயே ஒரு குடும்பத்தின் பெருமை துலங்கும்.

  இரண்டு குரள்களுமே சொல்வதற்கு இனிமையாகவும், புரிந்துகொள்வதற்கும் எளிதாகவும் உள்ளது! பெண்ணின் பெருமை பற்றியது இல்லையா, அதனால் தான் :-)

  ஒரு வீட்டின் மாண்பு பெண்ணின் கையில் தான் உள்ளது. She has the power to make or break the household. அந்த சக்தி மாமியாருக்கும் உள்ளது மருமகளுக்கும் உள்ளது. அது தான் பல சமயங்களில் பெரும் சாபமாக அமைந்து விடுகிறது.

  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கவிஞர் கண்ணதாசன் வள்ளுவரின் குரளைத் தான் வழிமொழிகிறார். கற்பு நெறியும் வரவுக்குள் செலவு செய்யும் திறனும் பெண்ணுக்கு அவசியம் தேவை. அது இல்லா மனையாள் பெற்ற ஆடவனும் அவன் குடும்பமும் சீரழிந்த கதைகள் ஏராளம்.

  விமானத்தில் கூட ஆபத்து சமயங்களில் முதலில் பிராண வாயு முகமூடியை முதலில் நாம் அணிந்து பின் குழந்தைக்குப் போட அறிவுறுத்துவார்கள். தற்காப்பு முதலில் அவசியம். தன்னைக் காத்துக் கொண்டால் தான் பிறரைக் காக்கும் தன்மை வரும். எதுவுமே உலகத்தில் team effort தான். ஆனால் அந்த குழுவைத் தலைமை தாங்கி முன்னே அழைத்துச்செல்லவும், இலக்கை அடையவும் பெண் போராட வேண்டியுள்ளது. அந்த போராட்ட வாழ்க்கையை வெற்றியாக மாற்றும் பொழுது அவள் பெருமை அடைகிறாள்.

  இந்த தளத்திற்கு வரும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் :-)

  KRS, no fun in just me commenting with you not replying :-) Please make some time to give your valued view points :-) Happy Deepavali to you :-)

  amas32

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: