சீர் கெழு செந்தில்! நீங்கா வேல்!!

கடந்த மூன்று பதிவுகளும் முன்பே எழுதி, schedule செய்யப்பட்டவை;
இதுவும் அப்படியே;
ஆனா Airport இல் பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டு… திருச்செந்தூருக்கு நேரில் வந்து…

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து… ஏங்கி…
வாசல் படியாய்க் கிடந்து, என் முருகன் பவழ வாய் காண்பேனே!!


நூல்: சிலப்பதிகாரம்
கவிஞர்: இளங்கோவடிகள்
(வஞ்சிக் காண்டம், குன்றக் குரவை)

சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே-
பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!

சூழல்:
கண்ணகி, எல்லாம் முடிஞ்சி, மதுரை நீங்கி, கேரள மலைகளுக்கு வருகிறாள்;
அங்கே குன்றக் குறவர்கள், அவளை விசாரித்து, அந்தத் தமிழ்ப் பெருங் கதையை அறிந்து கொள்கிறார்கள்! பின்னர், தங்கள் சேரிக்குத் திரும்புகிறார்கள்;
பெண்கள், நல்ல திருமணம் அடைய வேண்டி, பாட்டு மடை எடுத்து, கண்ணகிக்குப் பூசை வைக்கிறார்கள்;
கூடவே, தங்கள் குறிஞ்சிக் கடவுளான முருகனுக்கும் பூசை வைக்கும் பாட்டு மடை = அதுவே குன்றக் குரவை!

இதே போல் ஆயச்சியர் குரவையும் உண்டு, மதுரைக்கு புகும் முன்னர் = அது திருமாலைப் பற்றியது!
* ஆயர்க் குரவை = திருமால்
* குன்றக் குரவை = முருகன்
மக்கள் வாழ்வியலில் கூத்து;

சமயச் சார்புகள் இல்லாமல், மக்கள் வாழ்வியலை, வாழ்வியலாய்த் தொகுத்தளிக்கும் இளங்கோவின் தமிழ் நெஞ்சம்;


காபி உறிஞ்சல்:

“வரைவு முடிதல் வேண்டித் தெய்வம் பராயது”
(கண்ணகி போலவே மனம் வேண்டி, நல்ல மணம் வேண்டி, தெய்வம் போற்றியது
குறவர்-குறத்திகளின் பாட்டு மடை)

சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்

சீர் மிக்க செந்தில் = திருச்செந்தூர்
செங்கோடு = திருச்செங்கோடு
வெண் குன்று = சுவாமி மலை என்பது அரும்பத உரை; ஆனால், எவ்விடம் என்று உறுதியாக அறியவில்லை;

ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே!

ஏரகமே = சுவாமிமலை என்பது இன்றைய வழக்கு!
ஆனால், அது வேறொரு மலைநாட்டுத் திருப்பதி என்பது நச்சினார்க்கினியர் உரை!

எந்தத் தலமோ, ஆனா கந்தத் தலம்!
இறைவன் கையிலே = நீங்கா வேல்!

image

வேல் = உடம்பிடித் தெய்வம்!
வேல் வேறு, வேலன் வேறு அல்ல! இரண்டும் ஒன்றே!
வேல், நடுகல், கந்து என்றே இயற்கை வழிபாடு;  ஆதியில், புராணங்கள் இல்லை;
சங்கத் தமிழில் வேல் வழிபாடு = murugan.org இங்கே!

பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!!

உலகினைச் சூழ்ந்த பெரும் நீரிலே (கடலிலே) புகுந்து, முன்பொரு நாள்…
சூரனைத் தடிந்த வேல்; சுடர் இலை போல் ஒளிரும் வேல்; என் வேளே!

ஏர் அகமும் நீங்கா வேல் அன்றே!
நானும், அவ்வேல் போல்,…
உன்னை நீங்காது நிறைந்தேலோர் எம்பாவாய்!

dosa 92/365

Advertisements
Comments
2 Responses to “சீர் கெழு செந்தில்! நீங்கா வேல்!!”
 1. வேல்-வேலன் அருமை…

  நன்றி…

  Like

 2. amas32 says:

  நாம் சொல் வழக்கில் முருகா துணை என்று சொல்லாமல் வேலும் மயிலும் துணை என்று தான் சொல்கிறோம்!

  வேல் வேறு வேலன் வேறல்ல. பல தலங்களில் வேல் மட்டும் நட்டு வைத்து வழிபடும் வழக்கத்தைப் பார்த்திருக்கிறேன், குறிப்பாக மலேசியாவில், மரத்தாண்டவர் கோவிலில்.

  முற்பிறவி வாசனையால் பல பயங்களோடு இப்பிறவியில் வாழ்கிறோம். அந்த பயத்தை எல்லாம் போக்க வல்ல அருமருந்து வேல்/வேலவன். நம் வினை தீர்க்கவல்ல ஆயுதம் வேல்.

  அரக்கர்களும் கொடியவர்களும் பிறந்து பிறரை துன்பப் படுத்தும் பொழுது இறை அம்சமாக அவதாரங்களும் கடவுள்களும் தோன்றுகின்றனர். அரக்கர்களை/கொடியவர்களை அழிக்கும் ஆயுதங்கள் பிற்பாடு நாம் தொழுது பிறவியின் பயனை உணரும் தன்மையை நமக்கு அளிக்கின்றன. பெருமாளின் ஐந்து ஆயுதங்களும் இறை தன்மை நிறைந்தவை ஆகின்றன. திருமாலின் சக்க்ராயுதத்தையே சக்கரத்தாழ்வாராய் வழிபடுகிறோம். மற்ற ஆயுதங்கள் ஆழ்வார்களாகப் பிறந்து நம்மைப் பிறவி பெருங்கடலை கடக்கக் கற்றுத் தருகின்றனர்.

  We are ourselves like Dr Jekyll and Mr Hyde. அதனால் நம்முள்ளே இருக்கும் அரக்க குணத்தை மாற்றும் தன்மை இந்த வேலுக்கும், சக்ராயுதத்திற்கும் இன்ன பிற இறைவன் பயன் படுத்திய ஆயுதங்களுக்கு இருக்கிறது.

  நல்ல ஒரு சங்கப் பாடல். இந்தியா வருகை தந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன் KRS :-)

  amas32

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: