Bible – முன் பெருகல்? பின் சிறுகாமை?

அப்பாடா, No more backlogs!
Sunday Post Publishing Sunday:)

புனித விவிலியம் = Book of Proverbs (Solomon) வாசிச்சி இருக்கீங்களா?
இன்றைய பாடல் = முதுமொழிக் காஞ்சி;
திருக்குறள் ஆச்சும் இரண்டடிகள்; இது ஒரே வரி – ஒரே அடி – நச்! Twitter Type Song, 1500 yrs back!

“ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்” -ன்னு ஒவ்வொரு அதிகாரமும் தொடங்கும்! மக்களே கேட்டுக்கோங்க என்பது போல்:)
* காஞ்சி = மணிகள் கோத்த இடுப்பு அணி
* முதுமொழிக் காஞ்சி = பல முதுமொழிகள் கோத்த வாழ்க்கை அணி

மொத்தம் பத்து அதிகாரங்கள் = 10*10 = 100 Proverbs! பதினெண் கீழ்க் கணக்கு நூல்!


நூல்: முதுமொழிக் காஞ்சி
கவிஞர்: மதுரைக் கூடலூர் கிழார்
(சங்கப் புலவர், கூடலார் கிழார் வேறு; அவர் மதுரை அல்ல; அவரு புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்)
அதிகாரம்: சிறந்த பத்து

ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை (1)
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று (8)
முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று (10)


ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை

கல்வியை விட, ஒழுக்கமே சிறப்பு!
(கல்வியின் பயனே ஒழுகுதல் தான்; கடைப்பிடித்தல்; வெறுமனே படிப்பு அல்ல!

* தமிழைக் கற்றல் வேறு = பண்டிதன்
* தமிழைக் கடைப்பிடித்தல் வேறு = தமிழ் அன்பன்
* கற்று, ஆனால் கடைப்பிடியாதவன் = Hypocrite/அரசியல்வாதி

கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று

கற்றலை விட, கற்றாரை “வழி-படுதல்” சிறப்பு!
வழி-படுதல் = பூசை/முகத்துதி அல்ல!
அவர் சொல்லிய வழியில்-படுதல் = வழியில் செல்லல்!

முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று

செல்வம், இளமைக் காலத்தில் பெருகலை விட,
பிற் காலத்தில் சுருங்கி விடாமையே சிறப்பு!

செல்வம் நிலை இல்லாதது தான் = செல்வம் செல்வம் செல்வோம்; Cash Flow, Not Cash Stay:)
* டாம்பீகப் = பெருகு செல்வத்தைக் காட்டிலும்,
* எளிமை = சுருங்காத செல்வமாய்ச் சேர்த்துக் கொள்ளணும்!

dosa 88/365

Comments
2 Responses to “Bible – முன் பெருகல்? பின் சிறுகாமை?”
  1. பிடித்த பத்து நண்பர்கள்… (பிடித்த மூன்று)

    நன்றி…

    Like

  2. amas32 says:

    The purpose of education is character building. அது இல்லாமல் வெறும் கல்வி பயனற்றது. நாம் எத்தனையோ மெத்தப் படித்த மேதாவிகளைப் பார்க்கிறோம். இன்னொருவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாமால் உலகம் தன்னையே சுற்றி உழளுவதாக எண்ணிக் கொண்டு எத்தனை எத்தனைப் பேர் உள்ளனர்! நாம் படித்த கல்வி மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.

    சான்றோர் சொல் படி நாமும் நடக்க வேண்டும். அதற்கு அவர்களும் they should live by example. பெற்றோர் சொல் படி கேட்டு வாழ்வதை விட அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்த்து தான் குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்கின்றனர்.

    சிறுகக் கட்டிப் பெறுக வாழ் என்பது ஆன்றோர் மொழி. We need a nest egg. அதற்கு வீண் செலவைத் தவிர்த்து எளிய வாழ்க்கைக்குப் பழகிக் கொள்ள வேண்டும்.

    அறிவுரைப் பாடல்! :-) சிறந்த பத்தில் மூன்று மணிகளை தந்துள்ளீர்கள், நன்றி.

    amas32

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: