வாடும் பசலை மருந்து!

கார் நாற்பது; அட, நாற்பது Skoda Car அல்ல!:)
மழை 40 = கார் நாற்பது! பதினெண் கீழ்க் கணக்கு நூல்;
Sat Post, Publishing on Sunday

நூல்: கார் நாற்பது
கவிஞர்: மதுரைக் கண்ணங் கூத்தனார் (மதுரைச் சொக்கரும்-அழகரும் போல், கண்ணன் + கூத்தன்)
திணை: முல்லை

ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,
காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும் பருவம் – பணைத் தோளி!
வாடும் பசலை மருந்து


காபி உறிஞ்சல்:

ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள

ஆடும் மகளிரைப் போல், மஞ்ஞை (மயில்கள்) ஆடுகின்றன;
Reverse உவமை = இது என்ன அணி?:)

காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;

கடுக்கை = கொன்றைப்பூ! கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்!
காடு முழுக்க, கொன்றைப் பூ, கவின் பெறப் பூத்தன!

பாடு வண்டு ஊதும் பருவம் – பணைத் தோளி!

பூத்தவுடன், வண்டுகள் பலவும், அப்பூக்களை ஊதி ஊதிப் பாடுகின்றன!
Orchestra of Bees & Peacock – Dance Drama!
கார் காலம் துவங்கி விட்டது, வழவழப்பான/கிண்ணென்ற மூங்கில் தோள் பெண்ணே!

வாடும் பசலை மருந்து!

இந்த இசை, உன் பசலை நோய்க்கு மருந்தாகட்டும்! ஆகுமோ?:)
வந்துருவான்டீ! வந்துருவான்!

dosa 87/365

Advertisements
Comments
3 Responses to “வாடும் பசலை மருந்து!”
 1. amas32 says:

  மஞ்சள் நிறத்தில் பல ஷேட்ஸ் உண்டு. கொன்றையின் மஞ்சள் நிறம் வெகு அழகு.

  பெண்களைப் போல(!) ஆடும் மயில்கள், அந்த மயில்களின் தோகைகளில் தான் எத்தனை வர்ண ஜாலம், காடு முழுவதும் பச்சையும் மஞ்சளும் நிறைந்த இன்னுமொரு வண்ணக் கலவை, அப்பொழுதே மலர்ந்த மென் பூக்களை வட்டமிட்டு ரீங்காரம் செய்யும் கரு வண்டுகள், இப்பிடியொரு இசையுடனான கெலிடோஸ்கோப் வண்ணப் படம்!

  இந்த வர்ணனைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறது கடைசி வரியில் பெண்ணைக் குறிப்பிடும் வார்த்தைகள்! :-) //வழவழப்பான/கிண்ணென்ற மூங்கில் தோள் பெண்ணே!//

  கார் காலச் சூழலில் இவளும் பசலை நோய்க்கு ஆட்பட்டு விடுகிறாள். ஏங்கி நிற்கிறாள் தன் துணைவன் வரும் நாளை எதிர்நோக்கி.

  amas32

  Like

 2. amas32 says:

  மலரடி என்றால் உவமை அணி, அடி மலர் என்றால் உருவகம். இது தான் எனக்குத் தெரியும். More explanation please :-)

  amas32

  Like

  • ஜானு.S says:

   மலரை போன்ற பாதங்தகள்= உவமை
   பாதங்கள் மலரே தாம் ஐயமில்லை = உருவகம்.
   சரீங்களா???!!

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: