கம்பன் – சிவத்திருமால்?

வெள்ளிக்கிழமை -ன்னா #dosa கிடையாதே! #kamban52 அல்லவா?
வேகமாப் பார்க்கலாமா, Sandy பின்னோட்டப் பதிவுகள்:)
இதுவும் மழைப் பாடலே:) கம்பன் மழையை வருணிக்கும் காட்சி = சிவத் திருமால்! 


Friday Post, Publishing on Sunday

கம்ப ராமாயணம் – பால காண்டம், ஆற்றுப் படலம் (13th song)
இது, கம்ப ராமாயணத்தின் ரெண்டாம் பாட்டு (கடவுள் வாழ்த்தை நீக்கிப் பார்த்தால்)

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே!

சூழல்: கோசல நாட்டின் ஆற்றினைப் பாடிக் கம்பன் துவங்குறான் காப்பிய ஓட்டத்தை!
இளங்கோவின் காவிரி போற்றுதும் போல், கம்பனின் கோசலை போற்றுதும்!


காபி உறிஞ்சல்:

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்

திருநீறு எனும் (நற்)சாம்பல்; அதைப் பூசிய கடவுள் யாரு?
= ஈசன் சிவபெருமான்; மேகம், அவன் வண்ணத்தில் இருக்காம்! சாம்பல் நிற வெண்மேகம்;

ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து

அந்தச் சிவ மேகங்கள், ஆற்றினை மாலை போல் அணிந்து கொண்டு ஓடுகின்றன;
மேலே மேகம், கீழே இருபுறமும் ஆறு; மாலையின் தொங்கலாய் மேகக் கழுத்துக்கு!
ஓடிக், கடலை அடையும் மேகம், அந்தக் கடலை ஆசையோடு மேய்கிறது! மாடு புல்லை மேய்வது போல்;

அகில் சேறு அணிந்த முலைத் திரு மங்கை – தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே!

வாசனை மிக்க அகில் குழம்பு; அதை முலையில் பூசிய, “திரு” எனும் மங்கை = இலக்குமி;
அந்த முலைத்-திரு-மங்கையைத், தன் முலையிலே வைத்துள்ளான் ஒருவன்; அவனே திரு-மால்!
அவன் கரிய ஒடம்பைப் போல, இப்போ மேகம் மாறிப் போச்சு;

ஈசன் = வெளுப்பன்; திருமால் = கருப்பன்;
மேகம் வேடத்தை மாற்றிக் கொள்கிறது; சைவ வேடம் -> வைணவ வேடம்:)
மேகம்: க.மு = சைவம்; க.பி = வைணவம்:)

குறிப்பு: ஈசன் நஞ்சை உறிந்து கொண்டான்; பின்பு, திரு-மால் எழுந்து, அமுதம் பொழிகிறது
வெண்மேகம், கடல் உப்பை உறிந்து கொள்கிறது, பின்பு கரு-மேகம் எழுந்து மழை பொழிகிறது!

#dosa 86/365
#kamban 13/52

Advertisements
Comments
One Response to “கம்பன் – சிவத்திருமால்?”
 1. amas32 says:

  ஆனந்த ராகம் படப் பாடல் தான் ஏனோ நினைவுக்கு வருகிறது :-) மேகங் கருக்குது மழை வரப் பாக்குது வீசியடிக்குது காத்து …..காத்து மழை காத்து…..

  மணம் மிகு இலக்குமியை மார்பில் சூடியவன் என்ற முகவரி தான் பெருமாளுக்கு :-)

  சிவபெருமான் கடல் நீரில் உள்ள உப்பை உறிந்துக் கொள்கிறார். திருமால் அமுதம் என்னும் மழையைப் பொழிகிறார். உலக இயக்கத்துக்குக் காரண கர்த்தாக்கள் இருவரும் வேலையைப் பகிர்ந்து கொள்கின்றனர். நிற உவமை ரொம்ப நன்றாகப் பொருந்தி வருவது தான் இங்கே சிறப்பு.

  //அந்தக் கடலை ஆசையோடு மேய்கிறது! மாடு புல்லை மேய்வது போல்;// இந்த விளக்கம் அருமை.

  amas32

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: