வில் கோலிற்று வானம்!

ஒரு குறும் மழைக் காட்சி!
Oppice to Home, You are rushing in the train, not to get caught in the rain…

But, when u get out, Lo… “வில்லை வரைந்தது வானம்”!
உங்களை வரவேற்க, வானத்தில் கோலம் இட்டாள் காதலி!
இனி என்ன? என்னைப் போலவே, வானத்துக்கு “ஆ” காட்டி, அவள் தரும் துளிகளைப் பருகுங்கள்!:)


Thursday Post, Publishing on Saturday

நூல்: ஐந்திணை எழுபது
கவிஞர்: மூவாதியார்
திணை: முல்லை

கொன்றைக் குழல் ஊதிக், கோவலர் பின் நிரைத்து,
கன்று அமர் ஆயம் புகுதர, இன்று
வழங்கிய வந்தன்று, மாலை; யாம் காண,
முழங்கி, வில் கோலிற்று, வான்!


காபி உறிஞ்சல்:

கொன்றைக் குழல் ஊதிக்

கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள் -ன்னு அலைபாயுதே சினிமாப் பாட்டு;
கொன்றை = சிவபெருமானுக்கு உகந்த பூ!
அந்தக் காய்/பழம், நீட்டு நீட்டாத் தொங்கும்! பார்க்கப் புல்லாங்குழல் போல ஒட்டிக்கிட்டு இருக்கும்!
அதான் கொன்றைப் பழம் போல நீளமாப் புல்லாங்குழல் -ன்னு சொல்லுறாரு;

கோவலர் பின் நிரைத்து

குழல் ஊதும் கோவலர்கள்; ஆயர் குலம்!
ஊதிக் கொண்டே, வரிசையில் (நிரை) வர…

கன்று அமர் ஆயம் புகுதர

கன்றுகளைப், பசுக்களோடு புகுமாறு, ஆயர்கள் ஓட்டி வர…
இளங்கன்றுகள் நனையக் கூடாது; மழைக்கு முன்பே, வேகம் கூட்ட…

இன்று வழங்கிய வந்தன்று, மாலை; யாம் காண

மாலை மழை! பெய்யத் துவங்கிருச்சி!
நான் ஏக்கமாப் பார்க்கின்றேன் (கார்காலத்தில் வருவேன் -ன்னு சொல்லிச் சென்றவன் இன்னும் வரலையே!)

முழங்கி, வில் கோலிற்று, வான்!

திடீர்-ன்னு மேகம் முழங்குது… ஆகா! என் மேலே போரா?
வில்லை வளைத்தது வானம்! = எதிரே காதல் வானவில்!
அந்தப் பக்கத்து வில், இந்தப் பக்கத்துத் தூறல் அம்புகளை, வளைச்சி வளைச்சி விடுதோ?
ஏ வானமே, காதல் பேதையை, வில்லால் தாக்குவதோ உன் நியாயம்?


முன்பே ஐந்திணை ஐம்பது -ன்னு கீழ்க்கணக்கு நூலைப் பாத்துருக்கோம்! இது ஐந்திணை எழுபது!
கவிஞர் மூவாதியார் = சமணர்; அழகிய தமிழ் உணர்ச்சி உள்ளவர்;
சுனையில் இருக்கும் சொற்பத் தண்ணியைப், பெண் மான் குடிக்கணுமே -ன்னு, ஆண் மான் குடிப்பது போல் நடிக்கும் பாட்டு = இவர் எழுதியதே!

ஆனா, இந்த நூலுக்கு, விநாயகர் கடவுள் வாழ்த்தை எழுதிப், பின்னாளில் சேர்த்துட்டாங்க:(
இதை எடுத்துக் காட்டுறேன் -ன்னு, ஒரு சாரார், என் கிட்ட கோச்சிக்காதீக!
ஒங்க மனசாட்சியவே கேட்டுப் பாருங்க – ஒரு காதல் நூலுக்கு, அதுவும் சமணர் ஒருவர் எழுதிய நூலுக்கு, இப்படியெல்லாம் செய்யலாமா?

சமயம் கடந்து, தமிழைத் தமிழாய் அணுகும் தன்மை
= அது நம் உள்ளத்தில் வாய்க்க, “முழங்கி, வில் கோலிற்று, வான்“!

dosa 85/365

Comments
One Response to “வில் கோலிற்று வானம்!”
  1. amas32 says:

    //முழங்கி, வில் கோலிற்று, வான்!// இராமன் உடைத்த சிவ தனுசை விட அழகானதோ இந்த நிர்த்துளி இறைத்த வானவில்? ;-)

    ஆனால் காதலனை நினைத்துக் கார் காலத்தில் உருகும் அந்த பேதைப் பெண்ணுக்கு இது மனமனதனின் வில். தாபத்தைக் கூட்டும் வண்ணமயமான வில்!

    அற்புதமானதொரு இயற்கைக் காட்சியின் வர்ணனை. கொன்றை மரத்துப் பழங்கள் புல்லாங்குழலை ஒத்து இருப்பதாகக் கவிஞரின் கற்பனை அழகு!

    சமணர் எழுதியப் பாடலாகிலும் இதைப் படிக்கும் பொழுது எனக்கு ஆயர்பாடிக்கு சென்று விட்டது போல தோன்றுகிறது. மாடுகளையும், ஒட்டி ஒட்டிச் செல்லும் அவற்றின் இளங்கன்றுகளையும், அவசரமாக வீடு சென்று சேர்க்க நினைக்கும் ஆயர் குல ஆடவர்கள் மழை பெய்யத் தொடங்கியவுடன் படும் அவச்த்தையும் கண முன் விரிகிறது.

    As usual a visual treat as well :-)

    amas32

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: