யாதெனின் யாதெனின் Sandy!

கடந்த 4 நாட்களாக Dosa-வில் பதிவுகள் வரவில்லை;
தமிழ் அன்பர்கள் – வாசகர்கள் மன்னிக்க!

New York ஐத் தாக்கிய = Sandy புயல்!
St Barnabas Hospital – Volunteer நிவாரணப் பணிகளுக்குச் சென்று விட்டேன்;
4 நாட்கள்… தொடர்ந்து இருள் – முருகன் அருள்!

மின்சாரம், இணையம், கைப்பேசி -ன்னு ஏதுமில்லாமல்…
இயற்கையின் முன் அமெரிக்க வல்லரசு மண்டியிட்டது:)

கடற்கரையோர மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை மாற்றும் பணி எனக்கு! – மறக்க முடியாது… இளம் பிஞ்சுகளின் அவலத்தை!
அதுவும் ஒரு நாளுக்கு முன்னரே பிறந்து, Incubator -இலேயே மாற்றிய “அமுதன்” & “கிறிஸ்டி” குழந்தைகளை!

துன்பத்திலும், அந்த இந்தியத் தம்பதிகளின் அன்னோன்னியம்!
காதலாம்; பெற்றோர் உதவிக்கு வரவில்லை:(
தமிழ்ப் பேராகச் சூட்டியதை நேரில் பார்த்தேன் – “அமுதன்” – நல்லா இருக்கு-ல்ல?:)

குழந்தையைச் சரியாக ஏந்துவேனோ? -ன்னு அந்தப் பொண்ணுக்குப் பயம்:)
Madam, I am a trained volunteer, All kids easily come to me; Dont worry:)

இப்போ தான் வீடு வந்து சேர்ந்தேன்;
நல்ல வேளை, திங்கள் & செவ்வாய் மட்டும் பதிவுகளை schedule செய்து வைத்துப் போயிருந்தேன்!
விடுபட்ட பதிவுகளை = குறும் பதிவுகளாய் இடுகிறேன்;

இது போன்ற நேரங்களில்,
தமிழைக் காட்டிலும், முருகனைக் காட்டிலும் = மனிதமே முன்னுரிமை…
என்பது என் தாழ்மையான கொள்கை! எனினும் வாசகர்கள் மன்னிக்க!:)


Wednesday Post, Publishing on Saturday

திருக்குறள்: அறத்துப் பால், துறவு (341)

யாதனின் யாதனின் நீங்கியான் – நோதல்
அதனின் அதனின் இலன்

ஒருவன் எந்தெந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கிறானோ,
அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை!


காபி உறிஞ்சல்:

1. இது உதடு ஒட்டாத குறள் -ன்னு சொல்லப்படுவதுண்டு!
– “நீங்கி இருத்தலைப்” பற்றிச் சொல்வதால் “ஒட்டுதல்” இல்லை!
– வல்லினம் ப; மெல்லினம் ம; இடையினம் வ; இந்த எழுத்துக்கள் இல்லாமையால் ஒட்டவில்லை!

2. அதென்ன யாதெனின் யாதெனின் – அதனின் அதனின்? = அடுக்குத் தொடர்;
– எதுக்கு ரெண்டு வாட்டிச் சொல்லணும்?
– யாதெனின் ஒருவன் நீங்கியான், நோதல் அதனின் ஒன்றும் இலன் -ன்னு நம் ஐயன் சொல்லி இருக்கலாமே!

Why “யாதெனின் யாதெனின்” நீங்கியான்? – வாசகர்கள் நீங்களே சொல்லுங்க!:)

dosa 84/365

Advertisements
Comments
8 Responses to “யாதெனின் யாதெனின் Sandy!”
 1. யாதனின் யாதனின் நீங்கியான் – ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அதனின் அதனின் நோதல் இலன் – அவன் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன். (அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீங்குதல் – துறத்தல். ஈண்டுத்துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலை, அஃதன்றி ஒன்று ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து

  பரிமேலழகர் அவர்களுக்கு நன்றி…

  ‘நோதல்’ சொல்லும் போது உதடுகள் சற்றுக் குவிகிறதே… வேறு ஒரு குறள் உள்ளது… விரைவில் என் பகிர்வில் (தெய்வம் இருப்பது எங்கே…? (பகுதி 2) வரும்…

  Like

 2. psankar says:

  அதுதான் குழந்தைகளை மேய்க்கத் தெரிந்து விட்டதே :) ( மாடு மேய்த்தல் = மாடு என்றால் செல்வம் அன்றோ ;-) ) பிறகு ஏன் காலம் கடத்த வேண்டும் ! சட்டென்று திருமணம் முடித்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாமே :)

  Like

 3. ரவி, வாழ்க உங்கள் தொண்டு! நீங்கள் பாதிக்கப்படாதது குறித்து மகிழ்ச்சி.

  இயற்கையின் சீற்றத்திற்கு முன் நாம் ஒன்றுகூடி, அந்த ஒற்றுமையில் வலிமை காண்பதைத் தவிர செய்யக்கூடியது வேறொன்றுமில்லை. அச்சமயங்களில்தான் மனிதம் எவ்வளவு சிறப்பானது என்பதையும், அதே சமயம் எவ்வளவு “fragile” என்பதையும் உணருகிறோம். இதை உணர்த்த இயற்கை சீற்றம் வேண்டியிருப்பதுதான் வேதனை.

  Like

 4. amas32 says:

  கீதையின் சாராம்சம் இது தானே! நம் மனம் எதில் நாட்டம் கொள்கிறதோ அதிலிருந்து விலகியிருப்பதே வைராக்கியம். வைராக்கியமே தியாகத்திற்கு வழிகோலிடுகிறது. தியாகத்தின் மூலம் தியானம் சித்தியாகிறது. உண்மையில் தியாகமே தியான நிலையைக் கொடுத்து விடுகிறது.

  அதை நீங்கள் இந்த நாலு நாட்களில் உணர்ந்திருப்பீர்கள், if not already in the past.

  amas32

  Like

 5. amas32 says:

  // அதென்ன யாதெனின் யாதெனின் – அதனின் அதனின்? = அடுக்குத் தொடர்;
  – எதுக்கு ரெண்டு வாட்டிச் சொல்லணும்?//
  எந்தெந்த பொருட்கள் என்ற பொருளில் வருவதால் யாதெனின் யாதெனின் என்று இரு முறை சொல்லப் படுகிறது என்று நினைக்கிறேன். நிறைய பொருட்கள் மேல் நமக்கு ஆசை இருக்கும் இல்லையா? அதனால் எந்த எந்த பொருட்களில் எல்லாம் நாம் ஆசையை வைக்கிறோமோ அந்த அந்த பொருட்களில் இருந்து ஆசையை துறந்தால் என்பதற்காக இரண்டு தடவை அழுத்திச் சொல்கிறார்.

  Any way, what is the right answer? :-)

  amas32

  Like

 6. ranjani135 says:

  போன வாரம் பொதிகை தொலைக்காட்சியில் கம்பன் விழா ‘சுழலும் சொல்லரங்கம்’ ஒளி பரப்பாகியது.

  முடிவு சொல்லும்போது நடுவர் திரு இலங்கை ஜெயராஜ் இந்தக் குறளை உதாரணம் காட்டி பேசினார்.

  யாதெனின் என்பதை ‘நீங்கியான்’ என்பதற்கு முன்னும் பின்னும் போட்டுக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும் என்றும், அதே போல அதனின் என்பதையும் அதனின் நீங்கியான் அதனின் நோதல் இலன் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றார்.

  எனக்கு அவர் சொன்னதை அப்படியே எழுத வரவில்லை. என் மந்த மதிக்கு சிற்றறிவுக்கு புரிந்ததை எழுதி இருக்கிறேன்.

  Final answer is expected from KRS!

  Like

 7. ranjani135 says:

  எந்தப் பொருட்களிலிருந்து நீங்கிவிட்டானோ, எந்தப் பொருட்கள் நோவை கொடுக்கின்றனவோ, அந்தப் பொருட்களினின்று நீங்குதல் அதனால் உண்டாகும் நோவை போக்கும்… திரும்பத் திரும்ப சொல்லுவது ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும்.

  சரியாக எழுத வரவில்லை. முடிந்த அளவு சொல்லியிருக்கிறேன்.

  தவறிருந்தால் மன்னிக்கவும்!

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: