இளையராஜா பாட்டில் “தொகை”களைக் குறிக்க:

தொகை -ன்னா என்ன? = Amount?
ஆமா, இந்தியப் பயண Vacation -ன்னு கிளம்பும் முன்னாடியே, காசு சீக்கிரம் “மறைந்து” விடுகிறது; அதனால் இது சரியே:)

“தொகை”தல் = மறைதல்;
வினைத் தொகை = வினை மறைஞ்சி இருப்பது;
ஊறு காய் = ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய்! எப்போ ஊறுச்சி-ன்னே தெரியாது:)

தமிழில், மொத்தம் எத்தனை தொகை?
நம்ம Boss – “ஒல்காப் புகழ்த் தொல்கா” – சொல்லிக் குடுக்குறாரு, பார்க்கலாமா?:)


நூல்: தொல்காப்பியம்
(சொல்லதிகாரம் – எச்சவினை நூற்பா: 412)

வேற்றுமைத் தொகையே, உவமத் தொகையே,
வினையின் தொகையே, பண்பின் தொகையே,
உம்மைத் தொகையே, அன்மொழித் தொகை, என்று
அவ் ஆறு’ என்ப- தொகைமொழி நிலையே


காபி உறிஞ்சல்:

தொகை = பொதுவா 6 வகைப்படும்! (அவ் ஆறு’ என்ப – தொகைமொழி நிலையே)

1. வேற்றுமைத் தொகை: கார்க்கி முத்தம் குடுத்தாள்

முன்பே வேற்றுமை உருபுகள் -ன்னு  பாத்துருக்கோம்ல?
ஐ-ஆல்-கு; இல்-அது-கண்
கார்க்கியை – கார்க்கியால் – கார்க்கிக்கு; ஞாபகம் இருக்கா?:)

கார்க்கி முத்தம் கொடுத்தாள்;
சேச்சே! கார்க்கி பையனாச்சே; கொடுத்தாள் -ன்னு பால் மாற்றுச் சிகிச்சை செஞ்சிக்கிட்டானா?:)
ஐய்யய்யோ வேணாம்;
கார்க்கியால் பசங்க வாழ்க்கை போச்சு-ன்னு ஆவக் கூடாது; பொண்ணுங்க வாழ்க்கையே போவட்டும்:))

* கார்க்கி(க்கு) முத்தம் கொடுத்தாள்
= “கு” தொகைஞ்சி/மறைஞ்சி வருது;
= “கு”  4ஆம் வேற்றுமை உருபு; So,  4ஆம் வேற்றுமைத் தொகை

* சாமி கும்புடு
= சாமி-(ஐ)-கும்புடு
= (இரண்டாம்) வேற்றுமைத் தொகை

ரெண்டு சொல்லை வேறு படுத்திக் காட்டுவது = வேற்றுமை;
அது தொகைஞ்சி வந்தா = வேற்றுமைத் தொகை! So Easy!


2. உவமைத் தொகை: லட்டுப் பேச்சு பேசுறா!

லட்டு (போல்) பேச்சு;
“போல்” என்ற உவம உருபு மறைவதால் = உவமைத் தொகை

* புலி போல் வீரன் = உவமை
* புலி வீரன் = உவமைத் தொகை
* வீரப் புலி = உருவகம்

3. வினைத் தொகை: சிரி சிலுக்கு

சிரி(த்த) சிலுக்கு, சிரி(க்கின்ற) சிலுக்கு, சிரி(க்கும்) சிலுக்கு
= இறந்த கால, நிகழ் காலம், எதிர் காலம்
= காலம் கடந்து நிற்கும் அற்புதப் பெண்!

காலம் மறைஞ்சி, வினை உருபுகள் மறைஞ்சி வருவதால் = வினைத் தொகை
ஊறு-காய், வீசு-தென்றல், சுடு-சோறு = எல்லாமே இதான்!

வினைத் தொகையில், சிலுக்கே ஆனாலும், “ச்” குடுக்கக் கூடாது:)
சிரிச் சிலுக்கு அல்ல! = சிரி சிலுக்கு!

அதே போல், பழமுதிர்ச் சோலை அல்ல! பழமுதிர் சோலை
(பழம் உதிர்ந்த சோலை, உதிர்கின்ற சோலை, உதிரும் சோலை)


4. பண்புத் தொகை: திருச் செந்தூர்

திரு (ஆகிய) செந்தூர்;
“ஆகிய” என்னும் பண்பு உருபு தொகைஞ்சி வருவதால், பண்புத் தொகை!
செங் கரும்பு, பெருங் கடல் = இதெல்லாம் பண்புத் தொகையே!

ஞாபகம் வச்சிக்கோங்க:
* திருச்செந்தூரில், அவனுக்கு  “ச்” குடுக்கணும் = பண்புத் தொகை
* பழமுதிர் சோலையில், “ச்” குடுக்கவே கூடாது = வினைத் தொகை :))

டேய் முருகா, தமிழ் தான் முதன்மை, அப்பறம் தான் நீயி!
ஒனக்கு “ச்” குடுக்க மாட்டேன், சோலையில் மட்டும், ok-vaa? :)

5. உம்மைத் தொகை: சேர சோழ பாண்டியர்

சேர(னும்) சோழ(னும்) பாண்டிய(னும்);
“உம்” தொகைவதால் உம்மைத் தொகை

அண்ணல் அவள் = அண்ணலும் அவளும்;
அதே போல்… வெற்றிலைப் பாக்கு = வெற்றிலையும் பாக்கும்


6. அன்மொழித் தொகை:  மச்சி, உன் லட்டு வராடா

லட்டுப் (போல்) பேச்சு = உவமைத் தொகை -ன்னு பார்த்தோம்;
ஆனா லட்டு வராடா ???

= (போல்) என்ற உவம உருபு மட்டுமா மறைஞ்சி இருக்கு?
= லட்டு (போல் பேச்சுள்ள Girl Friend) -ன்னு, இன்னும் பல சொற்கள் மறைஞ்சி வருவதால் = அன்மொழித் தொகை!

அன்மொழி = அல் + மொழி = இல்லாத சொற்கள்;
லட்டு (போல் பேச்சுள்ள Girl Friend) -ன்னு, இல்லாத பல சொற்களை, நாமாப் போட்டுக்க வேண்டியிருக்கு;
அதனால் இது = அன்மொழித் தொகை;
உவமைத் தொகையும் கலந்து வருது; அதனால், உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை!

dosa 83/365

Home Work:)
கீழ்க் கண்ட இளையராஜாப் பாட்டிலுள்ள தொகைகளைக் குறிக்க:

1. மைலாப்பூர் பக்கம் மயிலைக் கண்டேனே,
கீழ்ப்பாக்கம் பக்கம் கிளியைக் கண்டேனே

2. நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா
பச்சரிசிச் சோறு, உப்புக் கருவாடு,
குருத்தான முளை கீரை, வாடாத சிறு கீரை
பொட்டுக்கடலை தேங்காய் போட்டரைச்ச துவையலு

Comments
2 Responses to “இளையராஜா பாட்டில் “தொகை”களைக் குறிக்க:”
  1. மயிலைக் கண்டேனே, கிளியைக் கண்டேனே – வேற்றுமைத் தொகை

    பச்சரிசிச் சோறு, உப்புக் கருவாடு நெல்லுச் சோறு – குணத்தை உணர்த்திப்
    பின் பொருளை உணர்த்துவதால் பண்புத் தொகை

    பொட்டுக்கடலை தேங்காய் – பொட்டுக்கடலையும் தேங்காயும் என்று வரவண்டியது இவ்வாறு வருவதால் உம்மைத் தொகை

    முளை கீரை – காலம் மறைந்து, வினை உருபுகள் மறைஞ்சி வருவதால், வினைத் தொகை

    சிறு கீரை- அன்மொழித் தொகை என்று நினைக்கிறேன்.

    அதோடு உங்களுக்குப் பிடித்தமான பாடல் பொன்மேனி உருகுதேவில் வரும் பொன்மேனி உவமைத் தொகை :-))

    Right or wrong all credit goes to you as you are the teacher :-))

    amas32

    Like

  2. விளக்கங்கள் அருமை… நன்றி…

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)