கரிகால்: பட்டினம் or பட்டணம்?

தமிழ் நாட்டு மன்னர்களில் “பொற்கால” மன்னர் யார்?
= பலரும் ராஜராஜ சோழன் -ன்னு தான் சொல்லுவாய்ங்க:)
பாண்டியன்-சேரன், will be nowhere in the picture, Not even some names will be known!

ஏன்? = ஒன்றை மட்டுமே பேசிப்பேசிப் பரவல்;
பொன்னியின் செல்வன், உடையார், வேங்கையின் மைந்தன் -ன்னு…
வரலாறு + கற்பனை கலந்த பிம்பம் நம் மனங்களில்!

ஆனா, வினவு போன்ற சமூக ஆர்வலர்கள் கிட்டக் கேட்டுப் பாருங்க;
தேவதாசித்தனம், அந்தண மேட்டிமைத்தனம், தமிழைத் தீய்த்த கிரந்த வளர்ச்சி, கட்டாயச் சைவப் பரவல், வரி கட்ட முடியாக் கீழ்த்தட்டு மக்களை கோயில் அடிமை ஆக்கியது -ன்னு ஒரு List-யே போடுவாய்ங்க!:))


(குறிப்பு: இராசராசன் மிகச் சிறந்த மன்னவனே, ஐயமில்லை!
ஒரு எடுத்துக்காட்டுக்குச் சொன்னேன்; Surely, he is one of the “influentials”)

ஆனா, சங்கத் தமிழ் இப்படியல்ல! ஒன்றையே பரக்கப் பேசாது;
தன் பிடித்தங்கள் மட்டுமே இலக்கியத்தில் ஏற்றாது!

* பதிற்றுப் பத்து = சேரர் தமிழை, மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு இணையாக் காட்டும்
* மதுரைக் காஞ்சி / நெடுநல் வாடை = பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆட்சியைப் பேசும்
* பட்டினப் பாலை / பொருநர் ஆற்றுப்படை = கரிகால் சோழன் வணிகத்தைக் காட்டும்
* பாரி, பேகன், தொண்டைமான் -ன்னு சிற்றரசர்கள் மேலக் கூட Focus Light அடிக்கும்

இப்போ புரியுதா சங்கத் தமிழின் நேர்மை?
சமயம், குடி, மன்னர் -ன்னு குறுக்கிக் கொள்ளாத…
தமிழைத் தமிழாய் அணுகும் ஒரே இலக்கியம் = சங்க இலக்கியம்!


“பொற்கால” மன்னரை விடுங்க; “கரிகால” மன்னரைப் பற்றித் தெரியுமா?

சோழ மன்னர்களின் பெருமை = கரிகால் பெருவளத்தான்
இன்று ஏனோ, அதிகம் பேச்சில்லை! தீ விபத்து – காலில் கரி; அவ்ளோ தான் தெரியும்:)

பின்னாடி, ராஜராஜன் காலத்தில், கிரந்தம் சிம்மாசனம் ஏறிய போது…
கரி + காலன் = யானைக்கு எமன் (காலாந்தகன்) -ன்னு…
பண்டிதாள் மாத்திப் புட்டாங்க:) ஆனா, இரும் பிடர்த் தலையார், இளஞ் சேட் சென்னி
= இந்தத் தமிழ்ப் பேரையெல்லாம் எப்படி மாத்துறது? Loose-ல விட்டாச்:)

இளஞ் சேட் சென்னி என்ற அழகிய பேரோ, சிறை இருந்த சின்னப்பையன் சோழத்தைக் கைப்பற்றியதோ,
மெல்-வரி விதிப்போ, மக்கள் பணியோ – ஒன்னும் நமக்குத் தெரியாது! இவன் கோயிலைக் கட்டலையே;
ஆனா, உழவுக் கோயிலைக் கட்டினான் = கல்லணை!

இன்னிக்கி காவிரிப் பிரச்சனையே இவனாலத் தான்:))
கடலில் வீணான காவிரி = கால்வாய் கால்வாயாப் பிரிச்சி விட்டு…
ஒரு Delta-வையே உருவாக்கியவன்; இதான் உண்மையான கோயில் பணி!
இதெல்லாம் எப்போ? = 2nd CE! ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி, Concept of a Dam!

பெரு-வளத்தான், திரு-மா-வளவன் -ன்னு பேரு!
அன்றைய ஸ்டாலின் & அழகிரி = நலங்கிள்ளி & நெடுங்கிள்ளி = கரிகாலனின் பிள்ளைகளே!:)


நூல்: பட்டினப் பாலை (lines 213-220)
கவிஞர்: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
திணை: பாலை

பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த, முது வாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு,
மொழி பல பெருகிய,  பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்
வார் இருங் கூந்தல், வயங்கு இழை ஒழிய,
வாரேன்; வாழிய நெஞ்சே!


சூழல்: இதில் “பாலை”-ன்னு பேரு இருந்தாலும், அகத்திணை அல்ல!
கரிகாலனே கருப்பொருள் என்பதால், புறத் திணை என்றே கொள்ளல் நலம்!

தலைவன் தலைவி = பொருள் தேடவோ, போரோ, வேற பிரிவோ…
* பிரிதல்/ பிரிய எண்ணுதலைக் காட்டினா = பாலை
* பிரிவை ஆற்றி இருத்தலைக் காட்டினா = முல்லை

பிரிந்து செல்லும் காடு = கரிகாலன் வேலை விடக் கொடியது;
என் காதலியின் தோள் = கரிகாலன் பூம்புகாரை விடக் குளிர்ச்சி;
இப்போ நான் போவதா? வேணாமா?
வேணாம்! வாடீ என் காதலியே, இனி உன் கூடத் தான் -ன்னு முடிவுக்கு வரும் காட்சி!:)


காபி உறிஞ்சல்:

பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த, முது வாய் ஒக்கல்

பல வணிக மன்றங்கள் கூடப் பழகி, பல ஊர்களுக்குச் சென்று செய்யும் வணிகம்;
முதுவாய் ஒக்கல் = பாட்டால் சேதி சொல்லுவோர்
(முரசு, பாணர், குறி சொல்லும் பெண்டிர்)
இப்படிப் பலப்பல மக்கள், ஒன்னாக் கலந்து பேசி வாழும் ஊரு = காவிரிப் பூம் பட்டினம்!

சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு,
மொழி பல பெருகிய, பழி தீர் தேஎத்துப்

சாறு அயர்தல் = விழா எடுத்தல்
விழாக்கள் நிரம்பிய ஊரு; Always something happening, like New York City:)
பல மொழிகள் பேசும் மக்கள், கலந்து வாழும் ஊரு = காவிரிப் பூம் பட்டினம்!

புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்

புலம் பெயர் “மாக்கள்” = Immigrants
ஆகா! All Immigrants are Animals -ன்னா சொல்லுறாரு கவிஞரு?:))
மக்கள்-மாக்கள்; இரண்டும் ஒரே பொருள் தான்;
மாக்கள் அஃறிணை அல்ல; வாழ்த்துக்கள் தவறு-ன்னு எவனோ கிளப்பி விட்டது போலத் தான்:)

காவிரிப் பூம் பட்டினம் is an Immigrant Paradise!
கலந்து + இனிது = உறையும் நகரமாம், like New York City:)
முட்டாச் சிறப்பின் பட்டினம் = முட்டிக் கொள்ளாத Different Cultures!

வார் இருங் கூந்தல், வயங்குஇழை ஒழிய,
வாரேன்; வாழிய நெஞ்சே!

அந்தப் பட்டினமே கிடைச்சாலும் Me Not Going!
அழகான கூந்தலில் சாஞ்சிக்கிட்டு, வளைக் கை கோதி விடும் செல்லமே…போகலைடீ!
மனசே, போதும் யோசிச்சது; நான் இவளை விட்டுப் போகலை, போகலை!

dosa 82/365

பி.கு: தலைப்பு பத்திச் சொல்லலையே! = பட்டினமா? பட்டணமா?
* திருச்சி = பட்டணம்
* சென்னை = பட்டினம் & பட்டணம்
கடற்கரை ஊரு = பட்டினம்; பெரு நகரம் = பட்டணம்

கடலுக்குள், காவிரிப் பூம் என்பதால் = “பட்டினப்” பாலை!

Comments
3 Responses to “கரிகால்: பட்டினம் or பட்டணம்?”
  1. சொ.வினைதீர்த்தான் says:

    முட்டிக்கொள்ளாது மக்கள் கலந்து வாழ்ந்த, இனிது உறைந்த, சிறந்த நாடு!
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்

    Like

  2. நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன்…

    நன்றி…

    Like

  3. //) ஆனா, இரும் பிடர்த் தலையார், இளஞ் சேட் சென்னி
    = இந்தத் தமிழ்ப் பேரையெல்லாம் எப்படி மாத்துறது? Loose-ல விட்டாச்:)//
    You have a very nice sense of humour :-))

    பூம்புகார் அன்றைய cosmopolitan city :-) பலதரப்பட்ட மக்கள், அவர்களின் கலாச்சாரக் கலவை, வியாபார நிமித்தமாக பலரும் வந்து கூடியிருந்ததால், பல மொழிகள் பேசியிருக்கின்றனர், இருந்தும் சண்டையிட்டுக் கொள்ளாத சமூகம் – இதை நடைமுறை படுத்திய பெருமை அரசனுக்கு தானே?!! :-)

    ஆனால் காதலியின் தோள் சாய்ந்து சுகம் காணும் காதலன் அந்த பூலோக சொர்க்கமான காவிரிப் பூம் பட்டினம் செல்லும் வாய்ப்பையும் தவிர்த்து உன்னுடனேயே இருப்பேன் என்கிறான்! காதலி மேல் அத்தனை அன்பு, அவள் தரும் சுகம் மேல் அத்தனை ஆசை!

    ஆனால் நான் இந்தப் பாடலைப் படித்த பின் கலகலவென இருக்கும் அந்த காவிரிப் பூம் பட்டினத்திற்கு டைம் மிஷினில் சென்று பார்க்க ஆவல் வந்துள்ளது :-)

    amas32

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)