மாத்தாடு மாத்தாடு சிலப்பதி!

நண்பர்கள் ஒன்னாச் சேரும் போது, விளையாடுவது இருக்கே… அதுவொரு தனி சுகம்!
அதுவும், வெளையாட்டுப் போட்டியா இருந்துட்டா?
வெறும் போட்டி இல்ல; பாட்டு கட்டுற போட்டி = பாட்டுல புதிர் கட்டுற போட்டி!
இதுக்கு ராஜாவாவது? ரஹ்மானாவாது? கூப்புடு நம்ம தேவாவை = மாத்தாடு மாத்தாடு மல்லிகே:)

மூனு கிளி மூணு குணம்
கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம்
மாத்தாடு மாத்தாடு மல்லிகே

வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்ச களிப்பாக்கும்
ஒன்னாகச் சேரும்போது சிவக்கின்ற தாம்பூலம்
மாத்தாடு மாத்தாடு மல்லிகே

இந்தப் பாட்டு சிலப்பதிகாரத்தில் வருது! ஐயோவ், என்னைய அடிக்க வராதீங்க:)


விடுகதை/எடுப்பாங்கதை, கிராமங்களில் பொழுது போக்கிச் சுவை கூட்டும் விளையாட்டு
= டிவி சீரியல் வராத காலங்களில்:)
அறிவை ஒழிக்காது; கூட்டும், அதே சமயம் மகிழ்ச்சியான பொழுதுபோக்கு! போயிருச்சோ?:(

எடுப்பாங்கதையில் பொது அறிவு, சமய அறிவு, இலக்கிய அறிவு -ன்னு பல அறிவுகள் தெறிக்கும்;
= காம அறிவு உட்பட:)
புதுசாக் கண்ணாலம் கட்டப் போற அவனும் – அவளும், சுவையான விளையாட்டு!

இதை வெறுமனே விடுகதையாப் போடாம, பாடிக்கிட்டே போட்டா இன்னும் சொகம்!
அப்படியான பாடல்கள் = அம்மானை
* நாட்டுப்புறப் பாட்டாய்த் துவங்கிய இதை,
* இலக்கியப் பீடத்தில் ஏற்றும் தமிழ்க் குன்று = இளங்கோ அடிகள்!


நாட்டுப்புற மக்களின் வாய்மொழி இலக்கியம்
அம்மானை = அம்மாடி!

3 or more than three, but in odd numbers; கல்லு விளையாட்டு!

* She1: ரெண்டே வரியில் ஒன்னைச் சொல்லிக், காய் வீசணும் (2 lines)
* She2: மொத பொன்ணு சொன்னதை மறுத்துக், காய் வீசணும் (2 lines)
* She3: ஒரே வரியில் பதில் சொல்லிக், காய் வீசணும் (1 line)

அம்மானை (அம்மாடி) -ன்னு கூவிக் கூவி விளையாடல்! இளங்கோ துவங்கி வைச்ச இதை…
மாணிக்கவாசகர் கப்-பென்று பிடித்துக் கொண்டு, பல அழகிய பாடல்களைச் செஞ்சிருக்காரு!
ஊசல், வள்ளை, கந்துகம் (பந்து அடித்தல்) -ன்னு இளங்கோ, is a great inspiration for மணிவாசகர்;

அம்மானை =  சிற்றிலக்கிய வகையாவே ஆவும் அளவுக்குப், பரவல் (பிரபலம்) ஆயிருச்சி!
ஆனா, எளிய மக்களின் விளையாட்டைத், தத்துவம்/பித்துவம் -ன்னு கண்டதுக்கும் பயன்படுத்திச், சமயப் பிணக்குக்கு எல்லாம் அம்மானை பாட ஆரம்பிச்சிட்டாங்க பின்னாளில்; படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் கதையா ஆயிருச்சி!:(

நல்ல வேளை, பின்பு வந்த வீரமாமுனிவர் போன்றோர், இதை ஓரளவு மீட்டெடுத்து, மீண்டும் கையாள,
கிறித்துவ அம்மானை, இஸ்லாம் அம்மானை -ன்னு சமயம் கடந்து, இன்று அம்மானை நிக்குது!

ஆனா, அம்மானை in pure & pristine form: இளங்கோவின் வாய்மொழியில், வாங்க பார்ப்போம்;


நூல்: சிலப்பதிகாரம் (வஞ்சிக் காண்டம் – வாழ்த்துக் காதை)
கவிஞர்: இளங்கோவடிகள்

She1: கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையாக் காண,
வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன் யார், அம்மானை?

She2: வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடைநிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை!

She3: கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை!


காபி உறிஞ்சல்:

She1: கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையாக் காண,
வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன் யார், அம்மானை?

* கடவரை = எண் திசை யானைகள்; கண் இமைக்காமல் பார்க்க
* வடவரை = வட மலை மேல(இமயம்), புலி(கொடி) ஒற்றியவன் யாரு அம்மானை?
(வரை = மலை & திசை; dbl meaning)

கடம் (மதநீர் – யானை); மலை படு கடாம் ஞாபகம் வருதா?
வரை (திசை/எல்லை); வரை-யறுத்தல் = கொள்கையின் திசை/எல்லை நிறுவுதல்

கடவரை – வடவரை;
இப்போ புரிஞ்சுச்சா, தமிழ் விளையாட்டு?:)

She2: வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடைநிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண், அம்மானை!

* வடவரை = இமயமலையில் புலிக்கொடியை ஒற்றினாலும்…
* கடவரை = எட்டுத் திசைகளையும், தன் வெண்குடை நிழலில் காக்குறான்டீ, அம்மானை!

அவள், கடவரை-வடவரை -ன்னு பாட
இவள், வடவரை-கடவரை -ன்னு எசப்பாட்டு:)

She3: கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை!

கொற்றவனாம் சோழனின், பூம்புகாரைப் பாடுடீ அம்மானை!
* கொற்றவன் = கொல் + தவன் (வடதிசை இமயத்துக்கு)
* கொற்றவன் = கொற்றம் + அவன் (எண்திசை மக்களுக்கு)

பூம் புகார் = காவிரி + பூம் + பட்டினம்
சோழர்களின் பண்டைத் தலைநகரம்; கடல் கோளால் அழிந்து பட்டது;
அதை வாழ்த்திப் பாடேலோர் அம்மானை!

பாடு + ஏல் + ஓர் = Sing, Accept & Think
பாடேலோர் அம்மானை, பாடேலோர் எம்பாவாய்
Hey Copy Cat கோதை, எங்க இளங்கோ கிட்ட காப்பி அடிச்சிட்டியாடீ? ஒன்னை… :))

dosa 81/365

Advertisements
Comments
4 Responses to “மாத்தாடு மாத்தாடு சிலப்பதி!”
 1. நல்ல சொல் விளையாட்டு. தமிழ் vocabulary நன்றாக இருந்தால் தான் புரிந்து கொண்டு விடை கண்டு பிடிக்க முடியும்.

  //அவள், கடவரை-வடவரை -ன்னு பாட
  இவள், வடவரை-கடவரை -ன்னு எசப்பாட்டு:)//
  முதல் இரண்டு பெண்கள் மாற்றி மாற்றிப் பாடுகிறார்கள். மூன்றாவது பெண் விடையை அளிக்கிறாள், கொற்றவனாம் சோழன் என்று. தலைநகராம் பூம்புகாரை பாடடி தோழி என்கிறாள் மூன்றாமவள்.. சரித்திரம், பூகோளம், இலக்கியம் எல்லாம் வருகிறது ஒரே பாடலில் :-)

  amas32

  Like

  • ranjani135 says:

   பாடேலோர் எம்பாவாய் – மூலம் கண்டுபிடிச்சாச்சு!

   தமிழ் மொழிக்கு உண்டான ஏற்றங்கள் ஒவ்வொன்றும் எத்தனை இனிமை!
   தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் வாங்க விரும்புபவர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்க வேண்டும்.

   amas32 அவர்களில் கருத்துரை மிகவும் அருமை. உங்கள் பதிவுகளின் ரசிகை இப்படி அல்லவோ இருக்க வேண்டும்?

   பாராட்டுகள் திருமதி சுஷீமா!

   Like

 2. ranjani135 says:

  அச்சச்சோ! நான் அங்க இல்லையே நீங்கள் வெட்கப் படுவதை பார்க்க!

  நீங்களே வெட்கப் பட்டால் நாங்கள் எல்லாம் – அறிவிலிகள் – எங்க போக சுஷீமா?

  நீங்களும் இதைப் போல எழுதுங்களேன். உங்கள் மூலமும் நல்ல தமிழ் கற்கிறேன்.

  KRS, கோவிச்சுக்காதீங்க! உங்க தளத்துல நான் சுஷீமா வுடன் பேசுகிறேன்.

  நல்ல தமிழ் தெரிந்திருந்தால் ‘மாத்தாடு மாத்தாடு’ பாடியிருக்கலாம், இல்லையா?

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: