பொண்ணு தோளில் Beer!

சங்க இலக்கியத்தில் = Beer?
பீர் நீர்மை கொண்டன தோள் = ஒரு பொண்ணு தோளுக்கு உவமை, பீரா?
என்னய்யா வெள்ளாட்டு காட்டுறீக? பிச்சிருவேன் பிச்சி:)

பொதுவா, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் = நீதி நூல்கள் என்று இருந்தாலும்,
அகம்-புறம் கூட உண்டு-ன்னு முன்பு பார்த்தோம் அல்லவா?
அதுவும் வெண்பாக்களில் அகம் பாடுவது, மாறுபட்ட அழகு! எட்டுத் தொகை – பத்துப் பாட்டு மரபில் இருந்து மாறுபட்ட பழக்கம்!

அதில் ஒன்னு தான் ஐந்திணை ஐம்பது -ன்னு நூல்!
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை = 5 * 10 = 50 காதல் வெண்பாக்கள்!
அதில் ஒன்னு தான், பொண்ணு தோளில் Beer! பார்க்கலாமா?


நூல்: ஐந்திணை ஐம்பது
கவிஞர்: மாறன் பொறையனார்
திணை: முல்லை
துறை: பருவம் கண்டு அஞ்சிய தலைவி, தோழிக்குச் சொல்லியது

அணி நிற மஞ்ஞை அகவ இரங்கி,
மணி நிற மா மலைமேல் தாழ்ந்து – பணிமொழி
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்,
பீர் நீர்மை கொண்டன தோள்


காபி உறிஞ்சல்:

அணி நிற மஞ்ஞை அகவ இரங்கி

மஞ்ஞை -ன்னா மயிலு; (செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க!)
பாருங்க, என்னவன் முருகனின் மயிலு,
அப்பா திருமாலின் முல்லைக்குக் கருப்பொருள்!:)

அணி நிற மஞ்ஞை = அழகான நிறங்கள் உடைய மயிலு; Always Colorful!
மயிலின் சிறப்புக் குரல் = அகவல்! சிலருக்குப் புடிக்காது, ஆனா எனக்குப் புடிக்கும்:)
ஒரு மாதிரித் தான் இருக்கும்; மயிலின் அழகு = திறலில் தான், குரலில் இல்லை! குயிலுக்கு நேரெதிர்!

மணி நிற மா மலைமேல் தாழ்ந்து

அந்த மயிலின் அகவலுக்கு, மனமிரங்கி, மழை வருதாம்! எப்படி?
நீலமணி முகடுகளில், தவழ்ந்து தவழ்ந்து வருதாம் மேகம்!

பணிமொழி், கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்

பணிமொழி = Soft Voice உள்ள என் தோழியே
அந்தக் கார் கால வானத்தைப் பாக்கும் போதெல்லாம்…

பீர் நீர்மை கொண்டன தோள்!

ஆகா! இந்தப் பொண்ணு, பீர் Over-ஆக் குடிச்சி,
அது தோள்ல்ல வழியுது -ன்னு சொல்லுறாளா?:) இல்லை!
No Beer! பீர் = பீர்க்கங் காய்;

பொரியல் அம்மா வைப்பாங்களே! அதே! பீர்க்கங்காப் பொரிச்ச கூட்டு நல்லா இருக்கும்; என்ன, சற்றுத் தண்ணியா இருக்கும்! வழ வழா:)
பீர்க்கங் காய் = ஒரு வகையில், வெள்ளரிக்காய் போலத் தான்! தண்ணி நிறைய உள்ள காய்!
கிராமத்தில் குளிக்கறச்ச, தோலை உடம்பு தேய்ச்சிக்கப் பயன்படுத்துவோம்! சொர சொர சுகம்:)

இந்தப் பொண்ணு சொல்லுறது: பீர்க்கங் காய், தண்ணி வத்திப் போய் நிறம் மாறுவது போல்,
அவள் தோலும் தோளும் நிறம் மாறி விட்டதாம்! பசலை! காதல் நோய்!
மழைக் கால வானத்தைப் பாக்கும் போதெல்லாம்…
அவன் இன்னும் வரலையே, எப்போ வருவானோ? எப்போ தருவானோ?:)

ஏங்குவதால் = பீர் நீர்மை கொண்டன தோள்! Not Amstel or Schwazbier, Black Lager :)

dosa 80/365

Advertisements
Comments
One Response to “பொண்ணு தோளில் Beer!”
 1. மயில் படம் அழகோ அழகு! :-) கண்ணைப் பறிக்கும் வர்ண ஜாலம்!

  மழை வரப்போகிறது என்பதை மயிலின் அகவலில் இருந்தும் அது கொண்டாட்டமாக சிறகை விரித்து ஆடுவதிலும் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் கவிஞர் இங்கே மயிலின் அகவலுக்கு மனம் இறங்கி மழை வருகிறது என்கிறார் :-)

  soft spoken என்று சொல்லலாமோ? ரொம்ப நாகரீகம் தெரிந்த பொண்ணுன்னு நினைக்கிறேன். ஆனால் அவள் குளிர்சாதனப் பெட்டியில் கவரில் வைத்து பாதுகாக்காத பீர்க்கங்காய் போல தோல் சுருங்கி நிற்கிறாள், காதலனை நினைத்து ஏங்கி! அதோடு பசலை நோய் வேறு!

  கார் காலத்தில் தான் காதல் ஏக்கம் அதிகம் ஆகும். பாவம் அந்தப் பெண்.

  amas32

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: