இலக்குவன் மனைவியோ சானகி?

இலக்குவன் மனைவி = ஊர்மிளை!
அவளும், ஒரு ஆண்டாளைப் போலவே!

கோதைக்கு, அவ மொத்த வாழ்வே ஒரு கற்பனையா முடிஞ்சிருச்சி;
எதை உள்ளுறையா வச்சி, அப்படிப் பொழிஞ்சி ஏங்கினாளோ?

அந்த வலி, அந்தக் கற்பனை! = இலக்குவன் மனைவிக்கும் அப்படியே!
14 வருசக் கற்பனை வாழ்க்கை, காதலனுடன்!


ஊர்மிளை
= இவளே உண்மையான சானகி!
= சனகனுக்குப் பிறந்தவள்; கண்டெடுக்கப்பட்டவள் அல்லள்!

ஊர்மிளை – இலக்குவன்
குடந்தை ஓவியம் – ஆழ்வார் பாசுரச் சுவரில்

ஊர்மிளை -ன்னா வடமொழியில் “அலை” -ன்னு பொருள்!
Waves of Passion = திருச்சீர் அலை வாய்!

நீர் உள எனின் உள, மீனும் நீலமும்;
பார் உள எனின் உள, யாவும்; பார்ப்புறின்,
நார் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய் என்றான்!

வால்மீகியாச்சும், இலக்குவன்-ஊர்மிளை கல்யாணத்தைக் காட்டுறான்!
கம்பன் அது கூடக் காட்டுவதில்லை; இவ பேரையே சொல்லுவதில்லை!
ஏன்?  = நீங்களே ஒலிப்பகிர்வில் கேட்டுப் பாருங்க!


இப்படித் தனி அறையில் ஒதுங்கி, ஒண்டிப் போய் வாழும் ஊர்மிளை = For 14 years!
தன் அத்தான் இலக்குவனோடு கற்பனையில் குடும்பம் நடத்தும் இன்னொரு ஆண்டாள்!

அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் = அங்கதன் & தருமகேது!

ஊர்மிளையின் வைர நெஞ்சம் – பெண்ணடிமை அல்ல! அவளே விரும்பி ஏற்கும் வரம்;
அவனின் மகிழ்ச்சிக்கு இருக்கத் தானே எனக்கு ஆசை?

நானில்லாத போது தான் அவன் மகிழ்ச்சி -ன்னா…
அவன் கடமையில் தான் அவன் மகிழ்ச்சி -ன்னா…

* என் உடம்பு அவன் உடம்பில் தேயும் மகிழ்ச்சியை விட,
* என் உள்ளம் அவன் உள்ளத்தில் தேயும் மகிழ்ச்சியே,
எனக்கு நிறைவு -ன்னு, ஆண்டாள் உள்ளத்தைக் காட்டிலும் மேலானவள்!

இவள் கதையைச் சொல்லக் கம்பனுக்கே அச்சமோ? குற்ற உணர்வோ?

ஆனால், கிராமத்துப் பெண்களுக்கு, இந்த இலக்கிய வரையறை எல்லாம் இல்லீங்க!
வாழைப்பந்தல் கிராமத்தில், எனக்கு ஊர்மிளையின் கதையை, நாட்டுப் பாட்டாய்ச் சொல்லிய…
எங்க ஆயா (பாட்டி) = ஜனகவல்லி, எங்க ஆயா பேரு!

* உண்மையான ஜானகி = ஊர்மிளையே!
* அவளே ஜனகவல்லி!
அவள் மனசை என் உள்ளத்தில் இருத்துகிறேன் இவ்வேளையில்;
சனகவல்லியாம் ஊர்மிளைத் திருவடிகளே தஞ்சம்!

dosa 79/365

Links:
TV Ramayana Serial – How Lakshmana feels guilty on Seeing Urmila!
http://www.youtube.com/watch?v=HdxRLbLA6Ks But this got deleted in the serial:(

Advertisements
Comments
7 Responses to “இலக்குவன் மனைவியோ சானகி?”
 1. விளக்கத்திற்கும் ஒலிப்பகிர்வுக்கும் நன்றி…

  Like

  • ஒலிப் பகிர்வு எளிமையா இருக்கு; எழுத வேணாம் பாருங்க:)
   ஆனா, கூகுளில் தேடினா, ஒலிப் பகிர்வு வராது:(
   அதான் பேசிட்டு, முன்னுரை/பின்னுரை மட்டும், சொன்னதையே சுருக்க எழுதீறேன்!

   Like

 2. The voice sounded like those telling bagavatham in TV. A scandulous title and a good explanation!

  Like

 3. Some are unsung heroes. Urmila is one of them. Not just unsung, but an ignored character. இலக்குவனின் தியாகமும் அண்ணன் மேல் உள்ள அபிமானமும் பெரிதாக என்றும் பேசப்படுகிறது. நிச்சயம் அவன் பங்கு இராமயானத்தில் சிறிதல்ல பெரிதே! ஆனால் அவன் செயல் பட உந்துதலாகவும் இடர் கொடுக்காமால் துணையாகவும் இருந்தவள் ஊர்மிளை.

  தவ வாழ்வு வாழ்கிறாள் ஊர்மிளை. நித்திரா தேவியை அவளை தழுவிக் கொள்ள வைத்து, இலக்குவனை பதினாலு வருடங்கள் விழிப்புடனும் உறங்க விடாமலும் காத்து நின்றாள். எப்பேர்பட்ட செயல்!

  அசல் அரசகுமாரி, சனகனின் சொந்த மகள். இன்னொரு பெரும் அரசகுமாரனை மணந்து பல கற்பனைகளுடன் அயோத்தி வருகிறாள். ஆனால் அவை கற்பனையாகவே பதினாலு வருடங்கள் இருக்கும்படியான சூழ்நிலையை விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்கிறாள்.

  சில சமயம் நமக்கு துன்பம் வருவது பிறர் துன்பத்தை நாம் புரிந்து கொள்ளவே என்று நினைப்பவள் நான். சீதை அசோக வனத்தில் இருக்கும்பொழுது தான் அவள் தன் தங்கையின் தியாகத்தை புரிந்து கொள்ள முடிகிறது. கணவனைப் பிரியும் துயரம் எத்தனை கொடியது என்று உணருகிறாள்.

  //நீர் உள எனின் உள, மீனும் நீலமும்;// நல்ல உவமை.

  இராவண காவியம் பற்றி இன்று தெரிந்து கொண்டேன்.

  amas32

  Like

  • //சில சமயம் நமக்கு துன்பம் வருவது பிறர் துன்பத்தை நாம் புரிந்து கொள்ளவே என்று நினைப்பவள் நான்//

   wow! me too ma; same pinch:)
   it will make u think! thatz why i never complain to murugan abt thunbam:)

   பாவம், அவன் என்ன பண்ணுவான்? என் வினைகள் அப்படி!
   எனக்காக, Rules மாத்தி இன்பம் குடுப்பான்; ஆனா வேணாம்;
   அவன் சார்பு நிலை எடுக்குறான்-ன்னு மக்கள் தப்பாப் பேசிருவாங்களே! வேணாம்! அவன் கம்பீரமா இருக்கணும், அது போதும்;
   துன்பம் எல்லாம் சும்மாக் காகதிக் கப்பல், விளையாடிக்குறேன்:)

   மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டு அம்மா – உன்
   ஆளாக என்றென்றும் பார்த்திருப்பேன் அடியேனே

   Like

  • //சீதை அசோக வனத்தில் இருக்கும்பொழுது தான் அவள் தன் தங்கையின் தியாகத்தை புரிந்து கொள்ள முடிகிறது//
   well said , ma

   //நீர் உள எனின் உள, மீனும் நீலமும்;// நல்ல உவமை
   yes, both are inseparable from water.
   but fish; water doesn’t need it; but fish needs it; diff way of inseparable

   //இராவண காவியம் பற்றி இன்று தெரிந்து கொண்டேன்//

   புலவர் குழந்தை; Hez NOT low!
   அவர் “ஒரு சாராரைத்” திட்டல; ஆனா மாற்றுக் கருத்தை முன் வைச்சாரு;
   அவர் அழகுத் தமிழ் அப்படி! அவரை வெறுமனே “திராவிடம்” -ன்னு அடைச்சீற முடியாது;
   ஆனா, அடைச்சிட்டாங்க:( lobby in literature these days:(

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: