விளக்கேத்து விளக்கேத்து Women Warriors!

முல்லைப் பாட்டு
= பத்துப் பாட்டுள், இன்ப நினைவுப் பாட்டு; இன்பப் பாட்டு அல்ல!
= ஒரு சிலர் வாழ்க்கையில், இன்ப நினைவுகள் மட்டுமே = இன்பம்!

காதல்; அதுக்காக வாழ்க்கையே ஒப்படைச்சிட்டுக், காஆஆஆஆத்து இருத்தல்!
* அவனுக்காக = இருந்தலும் இருத்தலும் நிமித்தமும் (முல்லை)
* அவன் வந்த பின் = புணர்தலும், புணர்தலும் நிமித்தமும் (குறிஞ்சி)


பல பேரு, இது பாண்டியன் நெடுஞ்செழியன் மேல் பாடப்பட்டதோ -ன்னு லேசா ஐயப்படுவார்கள்;

சென்ற பதிவில் பார்த்தோம்-ல்ல? தமிழ்த் தலைமகன் நக்கீரரும் முல்லைத் திணையில் அழகாக எழுதினாரு;
ஆனா உணர்ச்சிவசப்பட்டு, “வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்” -ன்னு…
பாண்டியன் அடையாளச் சின்னத்தை ஊடால காட்டியதால், அகப் பாடல் -> புறப் பாடல் ஆயிருச்சி-ன்னு தமிழ்ச் சங்கம் தீர்ப்பு எழுதிய கதையை?

முல்லைப்பாட்டின் கவிஞர் நப்பூதனார், அப்படிச் சின்னக் குறிப்பு கூட வைச்சி மாட்டிக்கலை!
போருக்குப் போனவன் இன்னும் வரலை; ஏக்கத்தின் களம்!
முல்லைப் பாட்டின் அழகிய Theme:
தமிழ்த் தொன்மம் திருமால் பேரைச் சொல்லித் துவங்குது!

* திருமால் கோட்டத்தில், பூ விரிச்சிக் குறி கேக்குறா பொண்ணு
* அவளை, எல்லாரும் தேற்றுகிறார்கள்
* பாசறைக் காட்சிகள் – அவனைச் சுற்றி மெய்க்காப்பாளர்கள் – நாழிகைக் கணக்கர்கள்
* போரில் வெற்றி – எல்லாருக்கும் இன்பம் – அவனுக்கு? = ஒரே ஞாபகம்!
* தேர், ஊருக்கு வர, வென்றவன் தோற்கிறான் – அவள் அடியைப் பற்றிப் பஞ்சணையில்!


பாடல்: முல்லைப்பாட்டு (lines 45-49)
கவிஞர்: நப்பூதனார்
திணை: முல்லை
சூழல்: பாசறையில், அரசனின் கூடாரத்தில், பெண்கள் விளக்கேற்றுதல்

குறுந் தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து,
இரவு பகல் செய்யும், திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய் உமிழ் சுரையர், நெடுந் திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட…


காபி உறிஞ்சல்:

(பாருங்க: பெண்களும், ஆண்களோடு களத்துக்குச் செல்லும் வழக்கம் இருந்துள்ளது! பெண் வீரர்கள், பெண் அலுவலர்-பணியாளர்களைச், சங்கத் தமிழ்ப் போர்க்களங்களில் காண முடியும்!)

குறுந் தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து

தொடி = வளையல் போல, ஆனா வளையல் இல்ல!
இன்னும் குறுகலா, மணிக்கட்டில் கட்டும் Bracelet போல வச்சிக்குங்களேன்! (குறுந் தொடி முன் கை)
பொன் தொடி, ஒள் தொடி, ஆய் தொடி, குறுந் தொடி -ன்னு பல தொடிகள் உண்டு!

கூந்தல் நன்கு கட்டப்பட்டு இருக்கு – சிறு புறமாய்!
போர்-ல்ல? கலகல -ன்னு ஓசையெழுப்பிக் கவனம் சிதையலாமா?
அதான் வளையல் போடாம, குறுந்தொடி; கூந்தலும் சிறு புறம் = Military Rules & Women Haircut:)

இரவு பகல் செய்யும், திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்

இரவைப் பகலாக்க வல்ல ஒளி விளக்கு, ஒவ்வொன்னா ஏத்துறாங்க!
உறுதியான பிடி வச்சிருக்கும் வாள்; அதை இடுப்புக் கச்சையில் கட்டியுள்ள பெண்கள்;

நெய் உமிழ் சுரையர், நெடுந் திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட…

நெய் உற்றும் திரிக் குழாய்! அதை உயரமான கோலில் கட்டி…
விளக்கு அணையும் தருவாயில் உள்ள போதெல்லாம் (நந்து தொறும்),
அதை எக்கி, ஊற்றி உற்றி, விளக்குக்கு உயிரூட்டும் பெண்கள்!

வாள் வரிக் கச்சின் மங்கையர்
கை அமை விளக்கம், நந்து தொறும் மாட்ட!
அழகான Night Shift – Office Environment for Women :)

dosa 78/365

Advertisements
Comments
7 Responses to “விளக்கேத்து விளக்கேத்து Women Warriors!”
 1. P.Pandiyaraja says:

  திரு.கண்ணபிரான் அவர்களுக்கு,
  நெடுநல்வாடையை முல்லைத்திணைக்குரியது எனக் கூறியிருக்கிறீர்கள். வேம்புதலையாத்த என்று வருவதனால், அது அகம் ஆகாது என நச்சினார்க்கினியர் கூறுவதையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நச். இப் பாடலைப் பாலைத்திணைக்குரியது என்றுதான் கூறி, பின்னர் அதனையும் மறுத்துள்ளார். “தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந்தலைவிக்கு 2ஒருபொழுது ஓரூழிபோல நெடிதாகிய வாடையாய்ப் பாலையாகிய உரிப்பொருளுணர்த்திற்று” என்பது அவர் கூற்று.
  அன்புடன்,
  ப.பாண்டியராஜா

  Like

  • வணக்கம் முனைவர் ஐயா, ஊருக்கு வந்தாச்சா?:)

   ஆமாம்; தாங்கள் சொல்வது சரியே!
   நச்சினார்க்கினியர் பாலையோ என்றும் கொண்டுள்ளார்; (ஓருழி பாலையோ)

   திணையில், சில சமயம் இரண்டும் கலந்து வருவதுண்டு
   பிரிவுக்கு வருந்தல் = பாலை
   ஆற்றி இருத்தல் = முல்லை
   இங்கே தலைவி, ரெண்டுமே செய்கிறாள்:)

   Like

 2. விளக்கத்திற்கு நன்றி…

  Like

 3. இன்னும் கூட போர்க்களத்தில் பெண்கள் நேரடியாக சென்று சண்டையில் ஈடுபடுகிறார்களா என்று தெரியவில்லை. Fighter plane pilots, field support like radio operators and of course in the field of medicine, இந்தத் துறைகளில் தான் பெண்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

  ஆனால் சங்க காலத்தில் ஆண் வீரர்களோடு பெண் வீரர்களும் களத்துக்கே சென்றுள்ளனர்! என்ன விவரமான வர்ணனை! கையில் தொந்தரவு தராத கையணி, தூக்கிக் கட்டப்பட்ட கூந்தல், இடுப்புக் கச்சையில் நல்ல பிடியுள்ள வாள், நல்ல தைரியமான பெண்கள் தான். தீப்பந்தத்தை ஏற்றுவது அவர்கள் இரவுப் பணி! நல்ல பாடல். நன்றி KRS :-)

  amas32

  Like

  • ஜான்சி ராணி, மங்கம்மாள் -ன்னு போர்ப் பெண்கள், நாம் அறியாததா?

   //Fighter plane pilots, field support like radio operators and of course in the field of medicine//
   உம், அன்று நேரடி ஈடுபாடே இருந்துச்சி;
   இன்று இல்லையோ? இத்தனை பெண்ணுரிமை பேசியும், இராணுவம் மட்டும் விதிவிலக்கோ?

   Like

   • சொ.வினைதீர்த்தான் says:

    உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன தளத்தில் நெடுநல் வாடைச் சிக்கலும் நாட்டுப்ப்றவியல் மூலம் தீர்வும் என்ற கட்டுரை படித்தேன். வேம்பு பற்றியும் அகப்பாடல் உரையாசிரியால் புறப்பாடல் ஆனதும் அருமையாக விளக்கப்பட்டுள்ளது. சுட்டி கொடுத்துள்ளேன்.
    http://www.ulakaththamizh.org/JOTSpdf/034097120.pdf
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்

    Like

   • சந்திரகுப்த மௌர்யனிடம் (கி.மு.320) பெண்கள் மட்டுமே அடங்கிய மெய்க்காப்பாளர் படை இருந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது!

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: