வெல் எனும் சொல்!

இன்றைய விழா நாள், “வெற்றி” என சொலப்படுவதால், வெற்றிக் குறட்பாக்கள் இன்று!
சொல்வன்மை எனும் அதிகாரம்;
வன்சொல்மை கூடாது; ஆனா சொல்வன்மை வேண்டும்! ஏன்?


சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (645)

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது (647)


சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து 

ஒரு சொல்லை, எப்படிப் பயன்படுத்தணும்?
இந்தச் சொல்லை, இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே பயன்படுத்தணும்;
= அதுவே உங்கள் சொல் வெற்றி!

We call this Self Critical Evaluation in Management Techniques…
… or Null Hypothesis-Alternate Hypotheses in Statistical Inference
அதாச்சும், பல்வேறு தரவுகளை, நீங்களே அலசிப் பார்த்து,
அவற்றில் எது நிற்குமோ (உண்மைப் பொருள்), அதையே கொள்க!

More the self critical you are, lesser the probability of others criticizing you!

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

* சொல்லாற்றல் படைத்தவனாகவும், (word)
* சோர்வு அறியாதவனாகவும், (action)
* அஞ்சா நெஞ்சம் கொண்டவனாகவும் (Heart)
ஒருவன் இருப்பின், அவனை எதிர்த்து வெல்லல் அரிது அரிது!

dosa 77/365

Advertisements
Comments
5 Responses to “வெல் எனும் சொல்!”
 1. ranjani135 says:

  மிகச் சிறந்த இரண்டு குறட்பாக்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்!

  விளக்கத்தைப் படித்தபின் வள்ளுவப் பெருந்தகையை எண்ணி வியக்கத்தான் முடிகிறது.

  அருமை, அருமை!

  Like

 2. அருமை… நல்ல விளக்கம்

  நன்றி…

  Like

 3. //சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
  வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (645)//

  அருமையான குறள்! இப்படி நாம யோசிச்சு ஒவ்வொரு வார்த்தையும் பேசினா, உலகமே அமைதிப் பூங்கா தான்! ஆனா நாம பேசிட்டு அப்புறம் தான் பேசின பேச்சில இருக்கிற தவறை உணர்ந்து, அதை மறைக்க பின் ஆயிரம் பொய்யை வேறு சொல்கிறோம். முதலில் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் தகுந்த வார்த்தைகளா இருக்கணம். சிலருக்கு இயல்பா இந்த குணம் அமைகிறது. சிலர் பட்டு தெரிந்து கொள்கின்றனர். சிலர் எவ்வளவு பட்டாலும் தன்னை மாற்றிக் கொள்வதே இல்லை.

  //சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
  இகல்வெல்லல் யார்க்கும் அரிது (647)//

  கலைஞரை இந்த குறளுக்கு நல்ல உதாரணமா சொல்லலாம். நல்ல சொல்லாற்றல் மிக்கவர், என்பத்தியொன்பது வயதிலும் சோர்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார். அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் ஓரளவு இருக்கிறார் :-) (என்ன, சில சமயம் அரசியல் சதுரங்கத்தில் சூழ்நிலைக்கு தக்கபடி சொன்னதை மாற்றிக் கொள்கிறார்.)

  உண்மை, இந்த குறள் படி இருப்பவரை வெற்றி திருமகள் விட்டு அகலமாட்டாள்!

  amas32

  Like

  • கலைஞர் எடுத்துக்காட்டா?:)
   May be true! But Anna is a much more befitting example – Bcoz no hypocrisy!
   * கலைஞரை = இகல் வென்றாகி விட்டது
   * அண்ணாவை = இகல் வெல்ல, இது வரைக்கும் யாராலும் முடியல

   சொலல் வல்லல் + சோர்விலான்… வரைக்கும் தான் கலைஞர்
   அஞ்சான் = பதவிக்காக அஞ்சிட்டாரு
   சொலல் வல்லல் + சோர்விலான் + அஞ்சான் = மூனுமே முக்கியம்!
   ஆகா! ஐயன் வள்ளுவன் தொலைநோக்கு (தீர்க்கதரிசி)

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: