நக்கீரன் பாட்டிலே பிழை! தமிழ்ச் சங்கம் என்ன செய்யும்?

பொதுவா, பொண்ணுங்க தானே ரொம்ப ஏங்குவாங்க?
சினிமாவுல எல்லாம் அப்படித் தானே?:)
ஆனா, ஆண் ஒருத்தன், ரொம்பவே ஏங்குறான்; பசலை புடிக்கும் அளவுக்கு!

யாருடா அந்த ஆண்? = ஐயோ நான் இல்லீங்க!:)
அவன், பாண்டியன் நெடுஞ்செழியன்!

ஆகா! கண்ணகி கதையில் வரும் நெடுஞ்செழியனா?
இல்ல; அவன் பின்னாளில் = ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்!
இவன் முற்காலப் பாண்டியன் = தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்!
வாங்க பார்க்கலாம் = நெடுநல்வாடை!


Dosa-வில் எட்டுத் தொகையும் பாத்துட்டோம்! ஆனா பத்துப்பாட்டை, முழுக்கப் பார்க்கலை!
(காண்க: வலப்புற சிட்டைத் தேடல்); கூடிய விரைவில் மிச்சத்தையும் ஒவ்வொன்னாப் பாத்துறலாம்!

பத்துப் பாட்டுள் ஒன்று = நெடு + நல் + வாடை!

வாடை = காற்று (வடக்கு = வாடை; தெற்கு = தென்றல்)
வேற என்னென்ன காத்து இருக்கு? -ன்னு சொல்லுங்க பார்ப்போம்;
வாடை = வறண்ட காற்று, தென்றல் = குளிர்ந்த காற்று

தலைவன் போருக்குப் போயிருக்கான்;
வெற்றியும் பெற்று விட்டான்; ஆனா ஊருக்கு வரத் தாமசம் ஆவுது!
தலைவி, ஏங்குறா! நீண்ட வாடையாவும் இருக்கு + நல் வாடையாவும் இருக்கு!

* காதலுக்கு = நெடு வாடை
* வீரத்துக்கு = நல் வாடை
= நெடு + நல் + வாடை; தலைப்பூ சூப்பரா இருக்குல்ல? வச்சவரு யாரு?

குற்றம் குற்றமே -ன்னு முழங்க வல்ல = நம்ம நக்கீரர் ஆச்சே!
ஆனா, நக்கீரர் ஒரேயொரு தப்பு பண்ணிட்டாரு! ஆகா! அது என்னாது?


இந்தப் பாட்டு, அகப் பாடல் தான் = காதல்!

ஆனா அகப் பாட்டின் இலக்கணம்:
தலைவன்-தலைவி குடியையோ/ மரபையோ, பாட்டுல காட்டவே கூடாது!
வெறுமனே தலைவன்-தலைவி; அவ்ளோ தான்!
காதலுக்குக் குலமில்லை, இல்லவேயில்லை (எ) சங்கத் தமிழ் உறுதி!

(Note: இங்கே குலம் என்றது குடியை; சாதி அல்ல; பிறப்பின் அடிப்படைச் சாதிகள், சங்கத் தமிழில் இல்லை!)

ஆனா, நக்கீரர், பாட்டின் ஒரு வரியிலே:
வேம்பு தலை யாத்த நோன்காழ் எஃகம்” -ன்னு உணர்ச்சி வசப்பட்டுட்டாரு!
வேலிலே வேப்பம் பூ சூடியிருக்கு = பாண்டிய குலம்! மறைமுகமா வெளிப்பட்டுருச்சி!
(வேம்பு = பாண்டியனின் பூச்சின்னம்)

இப்போ, என்ன செய்வது?
* நக்கீரர் தலைமைப் புலவராச்சே, Rulesஐ மாத்தீருவோமா?:)
* தமிழ் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கலீன்னா, புது மாநாடு, சங்கத்தையே ஒடைச்சீருவோமா?:)

தமிழைத் தமிழாய் அணுகும் உள்ளங்கள் = No Hypocrisy
சமயம்/அரசு/குடி -ன்னு சிக்கிக் கொள்ளாது!
* நக்கீரர் பாடலை = அகத் துறையுள் வைக்க மாட்டோம்!
* காதலுக்குக் குலமில்லை என்னும் தமிழ் உறுதி = தமிழ்ச் சங்கம் தீர்ப்பு எழுதியது;


நக்கீரரும் பெருந்தன்மையோடு கட்டுப்பட்டார்;

தன் பாடலைப் புறத் துறை ஆக்கிப், பாண்டியன் வெற்றியைப் பாடியதாகவே மாத்திக்கிட்டாரு;
இத்தனைக்கும் இந்தப் பாண்டியனே ஒரு நல்ல கவிஞன் – மக்கள் விரும்பிய (மறைந்த) மன்னன்!
அப்போது ஆளும் நன்மாறனுக்குத் தாத்தா!

* டேய் எங்க மரபுடா! = ஊகும்! தமிழ் நெறி வளையவே இல்லீயே!
* நாங்க தான்டா மதுரைல சங்கத்தையே வைச்சோம் = ஊகும்! தமிழ் நெறி வளையவே இல்லீயே!

நக்கீரர் காலத்துப் பாண்டியன் பேரு = இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்!
“செண்பகப் பாண்டியனே” அல்ல! Shampoo கூந்தலுக்கு Scent இருக்கா? = என்பதெல்லாம் சமய கப்சா:))

தமிழ் நெறி வளையக் கூடாதுங்க!= யாருக்கும், எதற்கும்; எந்தச் சமயத்துக்கும், எந்த மன்னனுக்கும்!
என் கிட்ட கோச்சிக்காம யோசியுங்க; ஒங்க மனசாட்சிக்கே புரியும்;
வெறுமனே, பாட்டும் பொருளும் சொல்லிட்டுப் போயீற முடியும் என்னாலயும்; எதுக்கு ஊரைச் சுத்திப் பகை? முருகா!


பாடல்: நெடுநல்வாடை
கவிஞர்: நக்கீரர்
திணை: முல்லை; வாகை

வேம்பு தலை யாத்த, நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர் (176-177)
…..
நூல் கால் யாத்த, மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே (184-end)

உலகம் உவப்ப வலனேர்பு -ன்னு திருமுருகாற்றுப்படை பாடியே இதே நக்கீரர்…
வையம் பனிப்ப வலனேர்பு -ன்னு இந்த நெடுநல்வாடையும் துவங்குறாரு!


காபி உறிஞ்சல்:

வேம்பு தலை யாத்த, நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர்

வேப்பம் பூவைக் கட்டிய எஃகு வேல்!
அதைச் சுமந்து செல்லும் படைத் தளபதி (முன்னோன்);
அவன் படை வீரர்களை அறிமுகம் செய்ய, தலைவன் எல்லாரையும் நலம் உசாவுகிறான்;

நூல் கால்யாத்த, மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப

நூலால் கட்டின முத்துமாலை, தொங்கும் வெண் கொற்றக் குடை!
அது தவ்வென்று அசைஇ = உஞ்சலாடுகிறது; பாசறைத் தூசியை மறைக்குது!

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே

அதன் நிழலில் இவன்… நள் (இருள்) , பின்னிரவில் கூடத் தூக்கம் வரலை அவனுக்கு!
* அங்கோ, அவளுக்கு இவன் நினைப்பு
* இங்கோ, இவனுக்கு அவள் நினைப்பு

அதைப் போக்கச் சிலரொடு பேசித் திரிகிறான் தலைவன்!
பலரொடு போர்செய்யும் பாசறைத் தொழில் அவனுக்கு! பாவம், என்ன செய்வான்!

dosa 75/365

Advertisements
Comments
6 Responses to “நக்கீரன் பாட்டிலே பிழை! தமிழ்ச் சங்கம் என்ன செய்யும்?”
 1. //வேம்பு தலை யாத்த, நோன் காழ் எஃகமொடு
  முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர்//

  நல்ல அறிமுகம் :-) இன்றும் குடியரசு தினத்தன்று படைகளின் அணிவகுப்பை பார்வையிடும் ஜனாதிபதிக்கு முப்படைத் தலைவர்கள் அறிமுகம் செய்யப் படுவார்கள். அவர்கள் மேலும் தங்களுக்குக் கீழ் உள்ளோரை அறிமுகப்படுத்துவர். ஜனாதிபதி குசலம் விசாரிப்பார் அல்லது அவர்களின் பராக்கிரமங்களை போற்றி ஓரிரு வார்த்தைகள் அவர்களிடம் புகழ்ந்து பேசுவார். அதை நினைவூட்டுகிறது இந்த வரிகள்.

  //நூல் கால்யாத்த, மாலை வெண் குடை
  தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப//

  முத்து மாலை ஜொலிக்கும் வெண் கொற்றக் குடையின் கீழே அரசன்! படிக்கும் பொழுதே கற்பனையில் விரிகிறது அந்த சூழல்! l Mosquito net or a dust preventing net made of stringed pearls! :-)

  //நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
  சிலரொடு திரிதரும் வேந்தன்,
  பலரொடு முரணிய பாசறைத் தொழிலே//

  காதல் கோட்டை திரைப் படத்தில் வரும் “நலம், நலம் அறிய ஆவல், நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா” என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது.

  காதலில் மனம் இடம் மாறிவிடுகிறது.

  உங்கள் முதல் கேள்விக்கு பதில், தென் மேற்கு பருவ காற்று என்ற இன்னொரு பெயர் கொண்ட காற்று கேள்விப்பட்டிருக்கேன் :-)

  amas32

  Like

  • Thanks ma! Good example for today’s cadet introduction & investiture!

   //Mosquito net or a dust preventing net made of stringed pearls! :-)//
   Very costly! Tortoise or Good Knight is cheap:)

   //உங்கள் முதல் கேள்விக்கு பதில், தென் மேற்கு பருவ காற்று//
   Thesedays, U seeing too much cinema & songs:)

   கேள்விக்குப் பதில்:
   கிழக்கு = கொண்டல் காற்று
   மேற்கு = கோடைக் காற்று

   குண + திசை (கிழக்கு) = கொண்டல்
   குட + திசை (மேற்கு) = கோடை

   Like

 2. Ranganathan says:

  முனைவர் வ.சுப.மாணிக்கனார் எழுதிய தமிழ்க்காதல் நூலைப்படிக்க. நெடுநல்வாடை அகப்பாடலே என்பதைக் காரணத்துடன் விளக்குவார். வேம்புதலை யாத்த நோன்கால் எஃகம் என்ற தொடரை மட்டும் வைத்து அதனைப் புறப்பாடல் என்பது பொருந்தாது என்பார் அவர். ஏன் பாண்டியன் நெடுஞ் செழியன் என்று நக்கீரர் வெளிப்படையாகக் கூறவில்லை.அது அகப்பாடலாக இருக்க வேண்டும் என்பதே நக்கீரரின் விருப்பம். தவிர போரில் பயன்படுத்தப்படும் வேலில் வேம்பின் இழைகளைக் கட்டுவது அக்காலப் பழக்கம். உயிர் பறித்த வேலைத் தீய சக்திகள் அண்டாமல் காக்க அவ்வாறு பண்டைத் தமிழர் செய்தனர். அவ்வாறிருக்கப் பாண்டியனைக் குறித்து எழுதப்பட்டதாகக்கூறுவது எவ்வாறு பொருந்தும்?

  Like

  • மிக்க நன்றி அரங்கநாதன், வ.சுப.மாணிக்கனார் குறிப்புக்கு;
   அவரின் ஆராய்ச்சியுரை மேல் எனக்குப் பெரிதும் மதிப்புண்டு! எனினும்…

   //அகப் பாடலாக இருக்க வேண்டும் என்பதே நக்கீரரின் விருப்பம்//
   இங்கு நக்கீரரின் விருப்பம் முக்கியம் அன்று! தமிழ் மரபே முக்கியம்!

   அவர் பாண்டியன் என்று வெளிப்படையாகக் குறிக்கா விட்டாலும்,
   (அல்லது) அவர், “வேம்பு” -ன்னு மனதார எழுதியதாகவே கொண்டாலும், அது புறப்பொருளைக் காட்டி விடுவதால், வாசகர்கள்/ தமிழ் மரபைக் கருத்தில் கொண்டு, அதை “அகம்” என்று குறிக்காமல், “புறம்” என்றே குறித்தனர் போலும்! இது செந்தமிழ்ச் செழுமையே!

   //வேலில் வேம்பின் தழை கட்டுதல்//
   இப்பழக்கம் சோழ நாட்டில் இருந்ததாக இல்லையே!
   மேலும், பூசையின் போது மட்டும் கட்டினாலும், பிற நேரங்களில் இல்லாத போது, வலிந்து “வேம்பு” -ன்னு எஃகில் ஏற்றியதால், இந்தத் தமிழ் நீதி போலும் கீரனுக்கு:)

   Like

 3. தகவற்களஞ்சியமைய்யா நீர்! :-)

  //குலம் என்றது குடியை; சாதி அல்ல; பிறப்பின் அடிப்படைச் சாதிகள், சங்கத் தமிழில் இல்லை!//
  இங்கே குடி என்பது என்ன? வாழ்விடம், வாழ்முறை சார்ந்த பிரிவுகள்னு புரிஞ்சிக்குறேன் -வேளிர், எயினன், பாணன்.
  அதுக்கு உள்ள பிரிவுகள் எதுவும் இல்லையா?
  அகமண முறை மூலம் பாதுகாக்கப்பட்ட பிரிவுகளே அப்போது இல்லையா?

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: