Physics in சங்கத் தமிழ்!

சின்ன வயசில் இதைப் பார்த்ததுமே, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வரும் = கரும்புச் சாறு வண்டி!
* இனிப்பான சாறு,
* கூடவே புளிப்பான எலுமிச்சை, காரமான இஞ்சி = அதன் மணமே சுண்டி இழுக்கும்!

அதை விட, ஒரு வியப்பு = பல்லுப் பல்லாச் சக்கரங்கள்!
கரும்பு இந்தாண்ட போயி, அந்தாண்ட சக்கையா வரும் காட்சி;
அந்தச் சக்கரங்கள் சுத்துற காட்சியே, ரொம்ப நேரம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பேன்!

அட, இதப் பார்த்துத் தான் Engineer ஆனேன் -ன்னுல்லாம் சொல்ல வரலைப்பா:))

ஆனா, அந்த எளிமை! சாதாரண தள்ளு வண்டியில் கூட, இதை நிறுவீறலாம்!
We call it “Simple Machine” = That Multiplies Human Effort!
மின்சாரம்-ல்லாம் எதுவும் தேவையில்லாம, கையால சுத்தி விட்டாலே, இயங்கும்!

A simple machine is a mechanical device that changes the magnitude of force
They provide mechanical advantage (MA) = Fout/Fin

ஐயோ! என்னைய அடிக்க வராதீங்கோ:)
ஒன்னு தெரியுமா? இது 2000+ years back, சங்கத் தமிழ்-லயே இருக்கு!


நூல்: ஐங்குறுநூறு (55)
கவிஞர்: ஓரம் போகியார்
திணை: மருதம்
துறை: தோழிக் கூற்றுப் பத்து

கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்,
தேர் வண் கோமான், தேனூர் அன்ன இவள்
நல் அணி நயந்து நீ துறத்தலின்,
பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே

சூழல்: கல்யாணமான புதுசுலயே, தலைவன்-தலைவி ஊடல்;
தலைவி கதவை அடைச்சிடுறா (வாயில் மறுப்பு)
வாயில் வேண்டி வரும் தலைவனிடம், தோழி பேசுவது!


காபி உறிஞ்சல்:

கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்,
தேர் வண் கோமான், தேனூர் அன்ன இவள்

கரும்பு எந்திரத்தில் கரும்பு முறியும் சத்தம்!
அதுக்குப் போட்டியா, களிறு (ஆண் யானை) சத்தம் போடுது! பிளிறல் = யானையின் சிறப்பு ஓசை;
இது எந்த ஊரில் தெரியுமா? = தேனூர்!
அங்கு மன்னனின் தேர்கள் திமு திமு -ன்னு ஓடும் சத்தம்!

வழியில் இளைப்பாற, கரும்புச் சாறு வண்டிகள்! அதன் அருகே யானைகள்!
சக்கை சும்மாவே கிடைக்குதல்ல? அதான் பாகன் நிறுத்தி வச்சிருக்கான் போல!
யானைப் பசிக்கு Free Food:) Whattay Joint Venture between பாகன் & கடைக்காரர்:))

அந்தத் தேனூரைப் போலக் கல கல -ன்னு இருந்தாடா இவ! ஆனா இப்போ ஒன்னால…

நல் அணி நயந்து நீ துறத்தலின்,
பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே

முதலிலெல்லாம், இவளை நயந்து நயந்து வந்து கொஞ்சுவ! ஆனா இப்போ துறந்துட்ட!
இவளுக்குப் பசலை வந்துருச்சி!
அதுவும் நெற்றியில் வந்துருச்சு; பலரும் பாக்குற படியா ஆகிப் போச்சு!

காதலில் பசலை வரும்! ஆனா நல் அணி பூட்டிய திருமணத்துக்குப் பிறகும், பசலை வந்தா?
(ஊருல என்ன பேசுவாங்க? ஒன் மனசாட்சியை நீயே கேளு)


உள்ளுறை உவமம்:

யானை, காட்டிலேயே இருந்தா, அந்தக் கரும்பை அதுவாத் தேடிக்கும்!
ஆனா, அதைத் தேனூருக்குக் கொண்டாந்து விட்டது, யார் சுயநலம்?

கொண்டாந்து விட்ட பிறகு, அவன் குடுக்கும் சக்கையே, அமுதமாய் உண்டு, அவனுக்கு-ன்னே வாழும் ஆண் யானை!
ஆனா, இப்போ ஊரையே காலி பண்ணீட்டுப் போயிட்டான்;
யானையின் கதி? = யாருக்குத் தெரியும்? [முருகனுக்கே தெரியும்!]

சம்பந்தமே இல்லாம, தேனூரைப் போயி, பொண்ணுக்கு உவமை சொல்றது போல தோனும்!
ஆனா, அந்த உவமையின் அடியிலே, இப்படியொரு உணர்ச்சி! = சங்கத்தமிழ்க் காட்சிப்படுத்தல்!

dosa 71/365

Advertisements
Comments
9 Responses to “Physics in சங்கத் தமிழ்!”
 1. கம்பர் காலத்துல கருப்பஞ்சாறு நெறைய குடிச்சிருப்பாங்க போல. பல எடங்கள்ல பயன்படுத்துறாரு:

  “ஆலைச் சாறு பாய் ஓதை”, “ஆலைவாய்க் கரும்பின் தேனும்”, “கருப்பேந்திரம் முதலாயின கண்டாள்”

  இப்படி கம்பராமாயணம் முழுக்க கரும்பு எந்திரம் வருது. கரும்புக்குள்ள கரும்பு!

  Like

  • ஆமா! சங்கக் கரும்புக்குள்ள கம்பக் கரும்பு:)
   கருப்பேந்திரம் முதலாயின கண்டாள் – Looks like sugarcane crop & this little machine was so popular!

   Like

 2. amas32 says:

  இப்போ கோவிலில் யானைகளைக் கட்டி வைப்பது போல அந்த காலத்திலேயே யானைகள் ஊருக்குள் பிடித்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.

  கரும்பு சடசடவென முறியும் சத்தமும், யானையின் பிளிறலும் ஒன்று போல என்ற உவமை அழகு. கரும்பு வண்டிக்கு அருகே யானையை நிறுத்தி win win situation for waste disposal and healthy food for the elephant! ஆனால் கட்டுண்ட அதுக்கு வேறு என்ன choice?

  புது மனைவி கணவனை வெளியே நிறுத்த, அந்த கணவன் நிச்சயம் பெருந்தவறு செய்திருக்க வேண்டும். பசலை நோயில் வேறு வாடுகிறாளே, பாவம். அப்போ மணமான உடனேயே பிரிவு துயரம் அனுபவித்திருக்கிறாள்.

  கணவனை நம்பி வரும் பெண்ணுக்கு அவன் செய்யும் துரோகமே பெண் பாவம் எனப்படுவது.

  amas32

  Like

 3. psankar says:

  “எந்திரம்” vadamozhi already vandhuduchchaa ?

  Like

  • எந்திரம்/இயந்திரம் = தமிழே!

   ஆனா, நாம் இன்னிக்கி அன்றாட வாழ்க்கையில் காண்பது = குபேர யந்திரம், பூஜைத் தகடு, Yantra, Mantra:)
   அதனால் எந்திரம்/இயந்திரம் = சம்ஸ்கிருதமோ? -ன்னு ஒரு மாயை:)

   குறிப்பு: இப்படிச் சொல்வதால், “ஒரு சாராரை” பழிச்சிப் பேசிட்டேன் -ன்னு அவசரப்பட்டு அடிச்சிறாதீக!
   ட்விட்டரில், சரளமாய்ப் புழங்கும் “நாதாறி” போன்ற சொல்லே கூட எனக்குக் கூச்சம் தான்; யாரையும் பழிக்கும் நோக்கம் அல்ல!
   உள்ளத்துக்கு உண்மையாய் இருப்பின், இதற்கான காரணிகள் விளங்கும்!
   ———

   இயம் + திரம் = இயந்திரம்
   * இயம் = இயக்கம்
   * திரம் = திண்மை
   இயக்கும் ஆற்றல் உள்ளது இயந்+திரம்

   திரம் = திண்மை; திரம் + ஆணி = திராணி;
   திராணி இருக்கா? -ன்னு கேக்குறோம்-ல்ல?

   இறைவனை = இயவுள் -ன்னு சொல்லுவாங்க!
   இயம் + உள்; பெரும்பெயர் இயவுள் -ன்னு திருமுருகாற்றுப்படை
   எல்லாவற்றையும் உள்ளிருந்து “இயக்கு”வதால் = இயவுள்!

   இப்படி, இயக்கும் + திரம் = இயந்திரம்;
   முன்னின்ற உயிர் திரிந்து = எந்திரம்!
   ———

   Sanskrit Yantra is a bit different = Instrument!

   தமிழிலிருந்தே சொல்லெடுத்து, அதன் இறுதியைத் திரித்து = யந்த்ரா(Yantra) -ன்னு ஆக்கி…
   பின்பு, நம்ம கிட்டயே கொண்டு வந்து விற்கப்பட்ட சொற்கள், இப்படிப் பல உள!
   “அம்” என்று முடிவதாலேயே, வடசொற்களோ? -ன்னு மனசுக்குத் தோனுது அல்லவா? அதுவே வடசொல் வெற்றி!

   இதை வடமொழி பண்ணல! அது நல்ல மொழி தான்; அதைச் சார்ந்தவங்க பண்ணினாங்க!
   ஏற்கனவே இருக்கும் ஒன்றின் மேலேயே ஏற்றித் தொன்மத்தைச் சிதைத்து விடுவது;
   எது வந்தது/எது இருந்தது-ன்னே தெரியாது பாருங்க! கந்தன்=ஸ்கந்தன், திருமால்=விஷ்ணு… இப்பிடியான போக்கு!

   சமணம்/பெளத்தம் கூட வடநெறிகள் தான்; ஆனா அவை “புதுசு”-ன்னே தான் உள் வந்ததே அன்றி, தொன்மத்தின் மேலேயே ஏற்றிவிடவில்லை!
   அதான் பாலி மொழி/ பிரா-கிருதம் = தமிழில் ஊடாடவில்லை;
   செங்-கிருதம்/ சம்ஸ்-கிருதம் = மட்டுமே ஊடாடல்; மதம் என்னும் பெரும் துணையால்!
   ———

   சங்க நூல்களில், கலப்பு உண்டு தான்; அந்த உண்மையை மறைக்க மாட்டேன்;
   ஆனால் மிகக் குறைந்த அளவு கலப்பே (less than 1%);
   அதுவும் கடைச்சங்க நூல்களில் மட்டுமே; ஆனா, முதல்-இடைச் சங்க நூல்களில் இல்லை!

   Even therez one song on Sati Practice of women dying with husbands in fire;
   Ramayanam/Pandavas reference in 2-3 songs; Will we conclude Sati is Tamizh Culture?:)

   தரங் கெட்டு/Too low-வாகப் பேசியிருந்தால், மன்னிப்பு கோருகிறேன்!
   ஆனால் இயந்திரம் = தமிழே!

   Like

   • சம்ஸ்ருதத்திலே யந்த்ரம், தந்த்ரம், மந்த்ரம் போன்ற சொற்களில் உள்ள “த்ர” என்ற சொல் கருவியைக் குறிக்கும்.

    யந்த்ரம் = யம் + த்ரம் = கட்டுப்படுத்தும் கருவி (controlling/restraining instrument)
    தந்த்ரம் = தன் + த்ரம் = விரிவாக்கும் கருவி (enabling instrument)
    மந்த்ரம் = மன் + த்ரம் = மனத்தின் கருவி (instrument of the mind/thought)

    [எதுலேர்ந்து எது வந்துதுன்ற வெள்ளாட்டுக்கே நான் வர்லீங்கோவ்!]

    Like

    • //எதுலேர்ந்து எது வந்துதுன்ற வெள்ளாட்டுக்கே நான் வர்லீங்கோவ்//
     ha ha ha:)

     No problems Karun! Yes, Instrument is the right word for Yantra!
     But not all instruments generate effort! இயக்கம்!
     அந்த இயங்குதல் = இயம்+திரம் என்றே சொல்ல வந்தது;

     Like

   • psankar says:

    நன்றி :)

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: