மனைவியிடம் தோற்றான் சேரன்!

நவராத்திரி நேரம்; தாண்டியா என்னும் கோலாட்டம் பார்ப்போமா?:)
கோலாட்டத்தில் பல பொண்ணுங்களும் கூட ஆடுவாங்களே?
ஆமா! ஒருவனுக்கு ஒருத்தி -ன்னா கோலாட்டம் ஆட முடியும்? என்னய்யா பேசுறீங்க?:)

பலர் பார்க்க, மற்ற பெண்களோடு ஆடுறான், அப்பாலிக்கா ஒரே பொண்ணிடம் ஓடுறான்! காலில் விழாத குறையாக் கெஞ்சல், மிஞ்சல், துஞ்சல்!
யாரு? = சேர நாடாளும் மன்னவன்; ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்!


பதிற்றுப் பத்து = பத்து * பத்து
தமிழ் இலக்கியத்தில், மிகவும் பழமையான நூல்; இசை நூல்!
பத்து தலைமுறையாப் பாடின கவிதைகளின் தொகுப்பு!

சங்கத் தமிழில்…
* ஒரு தெய்வ மரபுக்கே தனித்த நூல் = முருக மரபு (திருமுருகாற்றுப்படை)
* ஒரு மன்னர் மரபுக்கே தனித்த நூல் = சேர மரபு (பதிற்றுப்பத்து)

இன்னொரு தமிழ்த் தொன்மமான திருமாலுக்குக் கூட, தனித்த நூல் அமையலை! நிறைய பாடல்கள் தனித்தனியா வரும்; ஆனா தனி நூலா இல்லை;
அதே போல், சோழன்/பாண்டியனைப் பாடும் செய்யுள் உண்டு; ஆனா அவிங்க மரபேயே பாடும் தனி நூல் அமையலை! முருகனுக்கும், சேரனுக்குமே = இப்படி அமைந்து விட்டது!

இது சேரர்களுக்கு வாய்த்த பெருமை! ஏன்னா, சேரனின் தமிழார்வம் அப்படி!
தமிழ்க் கவிஞர்கள், அல்லாடிப் போயி, அவைக்கு வரவேணாம்!
பல ஊர்களுக்கும், சேரனே தேர் அனுப்பி அழைத்து வருவானாம்… தமிழ்ச் சான்றோர்களைத் தேடி!

தமிழ்ச் சான்றோரை, வயிறு வாடாமால் பார்த்துக் கொண்டால்
= தமிழ் வயிறும் வாடாது என்னுமோர் நெறி!

பொதுவா, பாண்டியர்களே தமிழ் வளர்த்தனர் -ன்னு பரக்கப் பேசிப்பேசி, சேரர் பேச்சு பின்னாளில் மங்கி விட்டது; ஆனா உண்மை நிலை அப்படியல்ல! பத்துத் தலைமுறைச் சேரர்களையும் ஒருசேரப் பாடும் நூல்;
சேரத் தமிழ் = பதிற்றுப்பத்து!
யவனர்கள்(Greek), தண்டம் (ஜாமீன்-பிணை) -ன்னு பலப்பல சமூகச் சேதிகள் வரும்!


பெண் கவிஞர்!

பாடல்: பதிற்றுப்பத்து (6ஆம் பத்து, 2ஆம் பாடல்)
கவிஞர்: காக்கைப் பாடினியார் – நச்செள்ளையார்
சேரன்: ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் – வானவரம்பன்

துறை: குரவை நிலை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பாடல் பெயர்: சிறு செங் குவளை


சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,
முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆக,
சிலைப்பு வல் ஏற்றின் தலைக் கை தந்து, நீ
நளிந்தனை வருதல், உடன்றனள் ஆகி;

உயலும் கோதை, ஊரல்அம் தித்தி,
ஈர் இதழ் மழைக்கண், பேர் இயல் அரிவை
ஒள் இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி,
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்
எறியர் ஓக்கிய சிறு செங் குவளை

‘ஈ’ என இரப்பவும், ஒல்லாள்; நீ எமக்கு
யாரையோ?’ எனப் பெயர்வோள் கையதை:
கதுமென உருத்த நோக்கமொடு, அது நீ
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ- வாழ்க, நின் கண்ணி!

அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்;
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட
வான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே?


காபி உறிஞ்சல்:

சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,
முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆக,
சிலைப்பு வல் ஏற்றின் தலைக் கை தந்து, நீ
நளிந்தனை வருதல், உடன்றனள் ஆகி, உயலும் கோதை…

பாண்டில் = தெருக் கூத்தில் ஏற்றப்படும் விளக்கு!
(படம் காண்க, முன்பு 365paa க்கு வரைஞ்சிக் குடுத்தது)

துணங்கை எனும் கூத்து நடக்குது; மிக்க ஒலியோடு, கை கோத்து ஆடும் கூத்து!
பாண்டில் ஒளியில், அற்புதமான கூத்து!
மக்களோடு மக்களாக, நீயும் கை கோத்து ஆடினாய் சேர மன்னா!
நளிந்து நளிந்து ஆடினாய்! உன் கோதை (மாலையும்) நளிந்து நளிந்து ஆடியது!
————————-

ஊரல்அம் தித்தி, ஈர் இதழ் மழைக்கண், பேர் இயல் அரிவை
ஒள் இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி,
பல் சில கிண்கிணி, சிறு பரடு அலைப்ப
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று..

பொண்ணுங்க கை புடிச்சி நீ ஆடினாய்; உன் மனைவி கோச்சிக்கிட்டா:)
இரண்டு இதழுள்ள அழகிய கண்ணி; பசலை-தேமல் (ஊரல்) வந்துருச்சி அவளுக்கு;
ஒள் இதழ் அவிழும் பூ போல அவ காலடி!
அதில், கிண்கிணி அலைப்ப, கரையில் மோதும் அலை போல, அவ நடுங்குறா man!:)
————————-

நின் எறியர் ஓக்கிய சிறு செங் குவளை
‘ஈ’ என இரப்பவும், ஒல்லாள்; நீ எமக்கு
யாரையோ?’ எனப் பெயர்வோள் கையதை

உன் மேல, செங் குவளைப் பூ எடுத்து… அடிப்பது போல், ஒன்னை நோக்கி வந்தா;
நீயோ, சிரிச்சிக்கிட்டே, “தா, தா” ன்னு கெஞ்ச…
ஒனக்கு, அந்தப் பூவை அவ தரவே இல்லை! நீ யாரோ?-ன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டா!:)

கதுமென உருத்த நோக்கமொடு, அது நீ
பாஅல் வல்லாய் ஆயினை, பாஅல்
யாங்கு வல்லுநையோ- வாழ்க, நின் கண்ணி!

டேய் சேரா, உனக்கு ஒருத்தன் தர மறுத்தால், கதும் என்று கோபப் பார்வையோடு…
அவர்களிடம் இருந்து பறிப்பாயே, போர்க்களத்தில்?
இப்போ எங்கே போச்சு அந்தக் கதும் எனும் வீரம்?:)
அவளிடம் பறிக்காமல், தேமே -ன்னு நிக்குறியே சேரா! வாழ்க உன் மாலை!:)
————————-

அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்;
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட
வான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே?

பெரிய வானத்தில் (விசும்பு) படரும் ஞாயிறு; அதுக்குப் பல (ஏழு) வண்ணங்கள்!
ஆனா, எல்லா வண்ணமும் ஒன்றாகி ஒளிரும்! அது போன்ற சேரனே…

மன்னர்களின் மதிலை (எயில்) எல்லாம் பறித்துக் கொள்ளும் நீ,
ஒரு சின்ன செங் குவளைப் பூவை அவ கிட்ட இருந்து பறிக்க முடியாம முழிக்கிறியே! இது எதனாலோ?
————————-

சிறு செங் குவளை, ‘ஈ’ என இரப்பவும்…
ஒல்லாள்; நீ எமக்கு யாரையோ?
Who are u man? Why u beg my kuvaLai poo? Podaa:))

dosa 69/365

இந்தப் பாடலை இட்டமையால்…
Dosa-வில் இன்றோடு, எட்டுத்தொகை எட்டையும் பார்த்தாகி விட்டது!
வலப்பக்கம், Tag/சிட்டை காண்க! இலக்கிய வகைகள் தெரியும்!

Advertisements
Comments
13 Responses to “மனைவியிடம் தோற்றான் சேரன்!”
 1. சொ.வினைதீர்த்தான் says:

  எட்டுத்தொகையின் பதிற்றுப்பத்து பாடலை மிக அருமையான விளக்கத்துடன் தந்தமைக்கு நன்றி. ஆடலும் ஊடலும் ஊடல் தணிப்பும் மறுப்பும் வீரமும் விரவி நிற்கும் சித்திரம்.
  வாசகர்களுக்குத் தமிழ் இலக்கியங்கள் சரியாக அறிமுகப்படுத்தப்படவில்லையோ அல்லது என் போன்றோர் தேடவில்லையோ தெரியவில்லை. ஆனால் செல்வங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பது உண்மை.
  இளைஞரான தங்கள் ஈடுபாடும் வெளிப்பாடும் கவர்கின்றன.
  தொடருங்கள் நண்பரே.
  சொ.வினைதீர்த்தான்.

  Like

  • இது இசைப்பா சொ.வி; I like music, thatz why ஈடுபாடு:)

   //வாசகர்களுக்குத் தமிழ் இலக்கியங்கள் சரியாக அறிமுகப்படுத்தப்படவில்லையோ//

   அப்படியெல்லாம் இல்லை! Taste differs with Generations!
   So, Even Tamizh has to be generation-tuned!:)

   இலக்கிய அறிமுகம் = திரு.வி.க புத்தகங்கள் வாசிச்சா, அப்படியே மூழ்கீறலாம்!
   கிவாஜ, ராபிசே, உவேசா போன்ற பலரையும், நயத்தில் மிஞ்சிடுவாரு திரு.வி.க
   But, For every generation, this has to be re-tuned! with bit english too, in our generation:)

   தமிழை, எடுத்த எடுப்பிலேயே concentrated ஆக குடுத்தா, எவ்ளோ பெரும் இனிப்பும், கசக்கும்!
   காவிரி ஆத்துத் தண்ணி தான் வாழ்வாதாரம்! ஆனா, அதுக்காக ஆறே, வயலில் நேரடியாப் பாஞ்சிறக் கூடாது:)
   சிறுகச் சிறுக, ஆறு, கால்வாய், மடை-ன்னு, வயலுக்குள்ளாற வரணும்!

   Like

 2. rAguC says:

  மன்னவனாய் இருந்தாலும் மனம் கொண்ட பெண்ணவளிடம் கெஞ்சித்தான் ஆகணும். அதுவும் இந்த பெண்களுக்கு கணவன் தங்களை தவிர யாரையுமே ரசிக்க மனம் ஒப்புவதில்லை. காரணம் : அத்தனை அன்பு. அதே போல் அவன் மொத்த அன்பும் அவளுக்கே வேண்டும், விளையாட்டுக்கு கூட அடுத்தவளுக்கு அவன் அதை கொடுத்து விடக்கூடாது.

  Like

 3. amas32 says:

  எனக்கு சற்றே சிரமமான (புரிந்து கொள்ள) பாடல். அதையும் அவ்வளவு எளிதாக புரிய வைத்திருக்கிறீர்கள், நன்றி.

  //சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,// ஆரம்ப வரியே அமர்க்களமாக உள்ளது. மின்சார விளக்கை விட எண்ணை விளக்கு தரும் ஒளி very romantic and subtle. நிழலும் ஒளியுமாக தெருக் கூத்து நடனங்கள் பார்ப்பவர்களை கிறங்க செய்யும். அதற்கேற்ற இசை அங்கு கூடியிருப்பவர்களை சுண்டி இழுத்து நடனம் ஆடச் செய்யும். மக்களோடு ஒன்றாக கலக்கும் எளிய உள்ளம் படைத்த சேர அரசன் அவர்களுடன் சேர்ந்து நடனம் புரிவது அவன் பெருமையை பறை சாற்றுகிறது.

  // ஈர் இதழ் மழைக்கண்,// //ஒள் இதழ் அவிழகம் //
  இவ்விரு வரிகளும் கவி நயம் மிக்கவை, பெண்ணின் மென்மையை காட்டுகிறது.

  பெண்களே ஒரு பொது இடத்தில் தான் தன் தலைவனிடம் உள்ள நெருக்கத்தைக் காட்டிக் கொள்ள விரும்புவர். அந்த பொது இடத்தில் இந்த மட அரசன் அவளை விட்டு விட்டு பிற பெண்களுடன் கூத்தாடினால் எந்த பெண் தான் பொறுத்துக் கொள்வாள்? :-)

  //கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று..// ரொம்ப hurt ஆயிடறா!

  // நீ எமக்கு
  யாரையோ?’ எனப் பெயர்வோள் கையதை// பெண்ணின் உச்சக் கட்ட கோபமே பாராமுகம் தான் :(

  இனி பணிவது ஒன்று தான் தலைவனின் option! மற்றவர்களிடம் காட்டும் வீரத்தை இங்கே தலைவியிடம் காட்டமுடியாது.

  //அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்;
  தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று// என்ன ஒரு அருமையான உவமை!
  அரசனை பெருமைப் படுத்தி புலவர் பெருமை அடைகிறார் தன் கற்பனை வளத்தால்.

  தலைவியிடம் கோபமாக நடந்து கொள்ளாமல் இருத்தல் மூலம் அவன் பெண்ணை நன்கு புரிந்து கொண்டிருக்கிறான் என்று தெரிகிறது.

  amas32

  Like

  • I am glad, u brought this up:)
   //சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,// ஆரம்ப வரியே அமர்க்களமாக உள்ளது

   I cannot tell every nuance in a post; Only comments are the place for magic & marvel!
   சுடரும் பாண்டில் “திரு நாறு விளக்கு”
   = விளக்கு நாறுதாம் (நாற்றம் = மணம்)
   = அதுவும் என்ன வாசனையாம்? திரு வாசனை!

   விளக்கு சுடரும், அலைபாயும் அழகு -ன்னு சொல்லலாம்! சுடரும் பாண்டில் ன்னு சொல்லீட்டாரு!
   ஆனா விளக்கு எப்படிய்யா மணக்கும்? = திரு நாறும் விளக்கு! Anyone?:))

   Like

   • பொதுவாக எண்ணையில் விளக்கேற்றுவார்கள். செல்வச் செழிப்பு மிகுந்திருப்பின் நெய்யில் ஏற்றுவார்கள். நெய் எரியும் போது மணம் கமழும். ஆகவே மணம் மிகுந்த விளக்கு என்பது நெய் விளக்கைக் குறிக்கலாம்; நெய் விளக்கு செல்வம் (திரு) மிகுந்திருப்பதைக் குறிக்கலாம்.

    அன்றியும், திரவியங்களைக் கலந்து ஏற்றப்பட்ட விளக்கு என்றும் கொள்ளலாம். இதுவும் செல்வத்தின் வெளிப்பாடே.

    ஊகம் சரியா?

    Like

    • Nice oogam Karuna!:)
     திரு=செல்வம்; திரு நாறும்= செல்வம் மணக்கும் விளக்கு! நல்ல கற்பனை!

     சற்று மேலதிகமாக,
     நெய் என்பது இன்னிக்கி Ghee ன்னு ஆயிருச்சி; ஆனா சங்கத் தமிழில், எரிபொருள் பலவுமே “நெய்” தான்!
     எள் + நெய் = எண்ணெய்; வெள் + நெய் = வெண்ணெய்
     பல நெய்கள் கொண்டு விளக்கேத்தினா மணக்கும் தான்!

     ஆனா, இது தெருக்கூத்து! பாண்டில் = மண்ணில், கொம்பால் நிறுத்தப்படும் விளக்கு/விளக்கம்!
     அதுக்கு நெய்/வாசனைத் திரவியமெல்லாம் ஊத்துவாங்களா? ன்னு தெரியல!
     நான் என்ன நினைச்சேன் -ன்னும் சொல்லுறேன்; சரியா? -ன்னு பாருங்க!

     திரு = செல்வம்!
     எது செல்வம்? = செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; கலைச்செல்வம்!
     அந்தக் கலைச்செல்வம் மணம் பரப்பது, பாண்டில் விளக்கு ஏற்றிய கூத்திலே! = திரு நாறு விளக்கம்!

     Like

     • இந்தா பாருங்க:
      http://agarathi.com/word/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

      இங்கு நாறு என்பதற்குத் தோன்றும் என்ற பொருள்படக் கொடுத்திருக்கிறார்கள். எனில் “தோன்றும் ஒளி” என்ற பொருளில் வரும். ஆனா எனக்கென்னவோ “நாறு = மணம்” என்ற புரிதலே பிடித்திருக்கிறது. அப்போதானே இன்னும் நிறைய கற்பனை கிடைக்கும்! :-)

      Like

 4. psankar says:

  Why Kanni = maalai in last line ?

  Like

  • கண்ணி = தலைமாலை, short!
   சேரனுக்கு = பனம்பூ மாலை அடையாளம்! அது ஒரு மரபுச் சின்னம்; அதான்!
   பெரும் மரபான பனம்பூ, காதலியின் குவளைப்பூ கிட்டக்க கெஞ்சுது:)

   Like

   • psankar says:

    கம்பராமாயணத்தில் கண்களை உடையவள் என்ற பொருளில் சீதையைக் கண்ணி என்று படித்ததால் இதில் கொஞ்சம் குழம்பி விட்டேன். நன்றி.

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: