எது எளிது? எது அரிது?

நியூயார்க்கில் மழைக்காலம்!
ஏலக்காய் பொடிச்சி, சுடச்சுடத் தேநீர் குடிப்பது = சுகமோ சுகம்!
அதன் மணமே, இன்னொரு கோப்பைக்கும், வெட்கமில்லாமல் ஏங்க வைக்கும்!

ஏல் = ஏற்றுக் கொள்ளுதல்
ஏல்-ஓர் எம்பாவாய் -ன்னு வருவதும் இப்படியே!
பல மருந்துகளும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொருள் = ஏலக்காய்

அதை முதலாய் வைத்து, செய்யப்படும் ஒரு மருந்துச் சூர்ணம் = ஏலாதி!
ஏலம், இலவங்கம், நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு -ன்னு ஆறு கலவைப் பொருட்கள்!
ஆறு பொருட்களை உரைக்கும் ஆறுமுக நூல் இது:)

இதை எழுதிய கணிமேதாவியார், ஒரு கணித மேதை! சமணர்;
நீதிக்கு = ஏலாதி; காதலுக்கு = திணைமாலை 150
இப்படி இரண்டு நூல்களையும் ஒருசேர எழுதியவர், கீழ்க்கணக்கில் இவர் ஒருவரே!


நூல்: ஏலாதி (3)
கவிஞர்: கணி மேதாவியார்

தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,
அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா
இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன்
துன்பம் துடைத்தல் அரிது


காபி உறிஞ்சல்:

தவம் எளிது; தானம் அரிது;

இன்னொருவருக்குக் கொடுக்கும் குணம் = ரொம்பவே கடினம்;
தவம் கூட செஞ்சீறலாம்; ஆனா குடுக்கும் குணம்?
தவம் = தன்னலத்தின் பாற் செய்வது; ஈகையோ = பிற நலத்தின் பால் செய்வது!

தக்கார்க்கேல், அவம் அரிது; ஆதல் எளிதால்;

தக்கார் = சான்றோர் (கோயில் தக்கார் அல்ல:)
சான்றோர்க்கு: குற்றம் செய்தல் = கடினம்; நன்மை செய்தல் = எளிது

கோயில் கணக்கில் கை வை-ன்னா, ஏதோ செய்ய முடியாத செயல் போல நெளிவாங்களாம்:)
ஆனா, கோயில் சிற்பங்கள் அழுக்கேறிக் கிடக்கு, அத்தனையும் நீரடிச்சிச் சுத்தம் பண்ணனும்-ன்னு எளிதாப் பண்ணீருவாங்களாம்:) சிலரு அப்படி, சிலரு அப்படி!

அவம் இலா இன்பம் பிறழின், இயைவு எளிது;
மற்று அதன் துன்பம் துடைத்தல் அரிது

இன்பம் நல்லது தான்; ஆனா குற்றமில்லா இன்பமா இருக்கணும்!
இன்னொரு துன்பத்தில் நமக்கு இன்பமா இருக்கக் கூடாது! = “அவம் இலா இன்பம்”!
அவம் = குற்றம்; அவப் பெயர் -ன்னு சொல்றோம்-ல்ல?

இப்படிக் குற்றமில்லா இன்பத்தில் பிறழ்ந்து, குற்றமுள்ள இன்பத்தில் குதூகலித்தால்…
* இன்னொரு பிறவி = எளிது; ரொம்ப எளிதா வந்துரும்
* துன்பம் துடைத்தல் = கடினம்; அந்தப் பிறவியில் துன்பம் துடைத்தல் தான், ரொம்பக் கடினமாப் போயீரும்:)

Do bad yaa, Life easy yaa,
But Life problems hard yaa ன்னு கிண்டலாச் சொல்றாரோ கணிமேதாவியார்?:)

dosa 68/365

Advertisements
Comments
4 Responses to “எது எளிது? எது அரிது?”
 1. /// இன்னொரு துன்பத்தில் நமக்கு இன்பமா இருக்கக் கூடாது! ///

  அருமை… நன்றி…

  Like

 2. அன்பின் கேயாரெஸ் – இந்தத் தன்னலமில்லா இன்பம் என்பது மிகவும் அரிது. பிறர் நலன் காணூம் ம்கிழ்வு என்பதும் மிக மிக அரிது. இதில் குற்றமில்லா வாழ்வு என்பது எல்லாராலும் இயலாத ஒன்று. தன்க்கும் பிறர்க்கும் மகிழ்ச்சி தர செயல் செய்தல் உயர்வு. இதை ஏலாதி எல்லா இடங்களிலும் அறிவுறுத்தும்.

  நல்ல கருத்து – அதை எடுத்துரைத்தது மிகவும் சிறபுபு.

  நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 3. amas32 says:

  குற்றமில்லா இன்பங்கள் பலவகை உள்ளனவே! அதை அனுபவிப்பது தான் உண்மையான ஆனந்தம்! இன்னும் என்னை கேட்டால் பிறருக்கு நன்மை செய்வதில் வரும் இன்பம் அலாதியானது! ஆனால் உலகில் இவை எல்லாம் அரிதாகிப் போய் கொண்டிருக்கிறது. பிறர் துன்பத்தில் இன்பம் காண்பது சகஜமாக உள்ளது. சிலருக்கு இந்த மாதிரி சமயத்தில் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை மறைத்துக் கொள்ளக் கூட முடிவதில்லை. அந்த அளவு பிறர் துன்பத்தில் மனம் நிறைந்து விடுகிறது.

  //தவம் எளிது; தானம் அரிது;// இதில் தானம் செய்வது சிறிது கடினமானாலும் மனதிற்கு அதிக இன்பத்தைத் தரும். தவம் selfish அறம்!

  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் கூற்றில் நம்பிக்கை இருந்தால் நல்ல நெறியான வாழ்க்கையை விரும்பி ஏற்போம்.

  amas32

  Like

  • //பிறர் துன்பத்தில் இன்பம் காண்பது சகஜமாக உள்ளது.
   சிலருக்கு இந்த மாதிரி சமயத்தில் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை மறைத்துக் கொள்ளக் கூட முடிவதில்லை//

   Well Said
   :((((

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: